பொது அறிவு வினா விடை
ந.சி. கந்தையா
பொது அறிவு வினா விடை
1. பொது அறிவு வினா விடை
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. பொது அறிவு வினா விடை
பொது அறிவு வினா விடை
ந.சி. கந்தையா
நூற்குறிப்பு
நூற்பெயர் : பொது அறிவு வினா விடை
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 20 + 164 = 184
படிகள் : 2000
விலை : உரு. 80
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும்.
முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது.
மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை,
கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார்.
அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும்,
சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி,
நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை.
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம்.
இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
பொது அறிவு வினா விடை
முன்னுரை
ஒரு நூறு ஆண்டுகளின் முன் நமது கல்வி, இலக்கணம், இலக்கியம், சோதிடம், சமயம் போன்று சிறு அளவினதாகவும், இந்திய நாட்டுக்கு உட்பட்ட தாகவும், வெளி நாடுகளோடு சம்பந்தப்படாததாகவு மிருந்தது. இன்று நாம் உலக முழுமையிலுமுள்ள நாடுகளோடு தொடர்புடையவர்களாக இருக்கின் றோம். விஞ்ஞானம், பௌதிகம், சட்டம், பூகோளம், சரித்திரம், அரசியல் போன்ற பற்பல துறைக் கல்விகள் இன்று வளர்ச்சியடைந்துள்ளன. நாம் அவற்றுள் அறிந்து கொள்ளவேண்டிய, சிலவற்றை அறிந்து கொள்ளா விடின் உலகம் செல்லும் போக்கில் செல்ல மாட்டாதவர்களாகவும் ‘கிணற்றுள் தவளை’ போன்ற வர்களாகவும் இருப்போம். இந்நூலில் மாணவரும் பொது மக்களும் அறிந்து கொள்ள வேண்டிய பற்பல செய்திகள் கேள்வி விடை என்னும் முறையில் விளங்க வைக்கப்பட்டுள்ளன.
“கற்றது கைம்மண்ணளவு கல்லாததுலகளவு என்று
உற்ற கலைமடந்தை ஓதுகின்றாள்”
ந.சி. கந்தையா
பொது அறிவு வினா விடை
வினாக்கள்
1
1. மிக ஆழமான கடலுள் ஒரு பெட்டியைப் போட வேண்டுமானால் நீ எங்கே போவாய்?
2. சிபிரால்டர் குன்றின் (Gibraltar) உயரமென்ன?
3. கிறி°தும° (Christmas) என்பதன் பொருளென்ன?
4. கற்பனைக் கதையைக் குறிக்கும் ‘நாவல்’ (Novel) என்னும் பெயர் எப்படித் தொடங்கிற்று?
5. எப்பொழுதும் ஜனவரி ஆண்டின் முதல் மாதமாக இருந்து வருகின்றதா?
6. ஆண்டின் தொடக்கம் என்பதன் பொருள் என்ன?
7. வரிக்குதிரை, லாமா, கொரிலா, ஆர்மடிலோ என்னும் எறும்பு தின்னும் அழங்கு, கீரி, துருவக்கரடி என்பவை எக் கண்டங்களில் அல்லது நாடுகளிற் காணப்படுகின்றன?
8. எப் பறவையின் சேவல் முறையாக அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும்?
9. செத்த குதிரைக்காக வேலை செய்தல் (Working for a dead horse) என்னும் ஆங்கிலப் பழமொழியின் பொருளென்ன?
10. ஒரு மைல் உயரத்திலுள்ள ஆகாயக் கப்பலிலிருந்து குண்டு வீசினால் அது நிலத்தில் விழ எவ்வளவு நேரமாகும்?
11. போர் செய்யும் பெண்களுக்கு எப்பெயர் வழங்கும்?
12. புயல் என்று சொல்லப்படுவதற்குக் காற்று எவ்வளவு வேகத்தில் அடிக்க வேண்டும்?
13. சுத்தமான தங்கத்தில் எத்தனை மாற்று (carats)?
14. செங்கடல் என்னும் பெயர் வந்த காரணமென்ன?
15. சாம்பிராணி கரியபோளம் (Mirrh) என்பவை என்ன?
16. ஏழு கடல்கள் எவை?
17. கிரி°தும° (Christmas) என்பதை எக்°ம° (X-mas) என்று ஏன் எழுதுகிறார்கள்?
18. பாலினீசியத் தீவுகள் (Polynesian Islands) எங்குள்ளன?
19. உலகில் மிக உயர்ந்த மலைத்தொடர் எது?
20. பைசார்ந்தியம் (Byzantiam) என வழங்கிய பழைய பட்டினமெது?
21. பாலை வனங்களினிடையே உள்ள பசிய நிலங்களுக்கு என்ன பெயர்?
22. ஒரு ஓட்டகம் எவ்வளவு பாரம் சுமக்கும்? நாளொன்றுக்கு எவ்வளவு தூரம் பயணம் செய்யும்?
23. வானவில்லில் காணப்படும் நிறங்கள் எவை?
24. பற்களை நாம் ஏன் மிகக் கவனமாகக் காப்பாற்ற வேண்டும்?
25. இங்கிலீஷ் கால்வாய் எக் கடல்களை இணைக்கின்றது?
2
26. ஹாலந்தில் (Holland) ஏன் அணைக்கட்டுகள் இருக்கின்றன?
27. வெளிச்சத்தை எப்படி அளக்கிறார்கள்?
28. நன்மை உண்டாவதில் நம்பிக்கை, விசுவாசம், நற்குணம் இவைகளை உணர்த்த மேல் நாட்டவர்கள் எவ்வடையாளங்களை வழங்குவர்?
29. நூற்கனம் என்றால் என்ன?
30. நீந்த அறியாத இரண்டு விலங்குகள் எவை?
31. வரிக் குதிரையின் நிறம் வெள்ளையா, கறுப்பா?
32. நயகரா நீர்வீழ்ச்சியின் உயரமென்ன? அது எங்குள்ளது?
33. இங்கிலாந்து அரசர் இறந்தால் எங்கே புதைக்கப்படுகின்றனர்?
34. ஊங்காரப் பறவைக்கு (Humming Bird) என்ன வல்லமை உண்டு?
35. சிங்கம், கழுகு என்னும் அடையாளங்களால் குறிக்கப்படும் நாடுகள் எவை?
36. மாட்டுக்கு எத்தனை இரைப்பைகள் உண்டு?
37. கங்காரு ஒப்பாசம் (Opassum) என்னும் விலங்குகளுக்குச் சிறப்பாக உள்ள உறுப்பு எது?
38. யானையல்லாத வேறு எவ் விலங்குகளிலிருந்து தந்தம் கிடைக்கிறது?
39. அலா°கா (Alaska), சகாரா, இந்தியா, லாப்லாந்து, பெரு (Peru) என்னும் நாடுகளில் எவ் விலங்குகள் பாரம் சுமக்கின்றன?
40. ஒரு வயலில் இரண்டு ஆடுகள் நிற்கின்றன. ஒன்று வடக்கே திரும்பி நிற்கின்றது. மற்றொன்று தெற்கே திரும்பி நிற்கின்றது. ஒன்றையொன்று பார்க்குமா?
41. நாய்கள் அலையும்போது ஏன் நாக்கை நீட்டுகிறது?
42. °டேடியம் (Stadium) என்பதன் ஆதிப் பொருள் என்ன?
43. முகம் பார்க்கும் கண்ணாடிக்குப் பின்புறத்தில் என்ன உலோகம் பூசப்பட்டிருக்கிறது?
44. மின்னலுக்குப் பின் இடி உண்டாவதற்குக் காரணமென்ன?
45. அத்தர் என்பது என்ன?
46. வத்திக்கான் நகர் எங்கே இருக்கிறது? அதன் விசேடம் என்ன?
47. வத்திக்கான் அரண்மனையில் எத்தனை அறைகள் உண்டு?
48. எத்தனை கொண்டது ஒரு ‘குரோ°’ (gross)?
49. உன்னிடம் ஒரு பாத்திரத்தில் நீரையும், ஒரு அழுகிய முட்டையையும், ஒரு நல்ல முட்டையையும் தந்தால் நீ அழுகிய முட்டையையும், நல்ல முட்டையையும் எப்படிக் கண்டுபிடிப்பாய்?
50. சாக்கடலில் உயிர்கள் ஏன் வாழ்வதில்லை?
3
1. மனிதனுடைய உணவுக்காகப் பால் கொடுக்கும் எட்டு விலங்குகள் கூறு.
2. உலகில் வாழும் 1/3 பகுதி மக்களின் முக்கிய உணவு எது?
3. சாதாரண உணவுகளில் அரிதிற் கிடைக்கக் கூடிய சீவசத்து (விட்டமின்) எது?
4. சாக்லேட் எதிலிருந்து செய்யப்படுகிறது?
5. உலகில் பெரிய வனாந்திரம் எது?
6. முகமதியரின் புனிதமான நகர் எது?
7. ஐந்து பெரிய கடல்களின் பெயர் கூறு.
8. இப்பொழுது ‘ஈரான்’ என வழங்கும் நாட்டுக்குப் பழைய பெயர் எது?
9. வெண்கடல் (White sea) எங்கே இருக்கிறது?
10. ஊரல் மலைகள் (Ural mountains) எங்கே உள்ளன?
11. ஆர்ட்டிக் கடல் வடக்கிலா, தெற்கிலா உள்ளது?
12. சூய° கால்வாய் எக் கடல்களை இணைக்கிறது?
13. இன்றும் அழியாமல் இருக்கும் பழைய அதிசயங்களில் ஒன்றைக் கூறு.
14. உலகில் எல்லா இடங்களிலும் இராப் பகல் சமமாக இருக்கும் நாட்கள் எவை?
15. ஆப்பிரிக்காவில் புலிகள் உண்டா?
16. நாம் என்ன இரண்டு தாவரங்களிலிருந்து சர்க்கரையைப் பெறுகின்றோம்?
17. திமிங்கிலக் குட்டிகளின் முக்கிய உணவு என்ன?
18. பூனை முன்னங்கால்களாலா பின்னங்கால்களாலா தலையைச் சொறிகிறது?
19. பட்டுப் புழுக்களின் உணவு என்ன?
20. பாதரசத்தில் அலுமினியம், இரும்பு, ஈயம் என்பவைகளைப் போட்டால் எது மிதக்கும்?
21. மயக்கம் வந்து விழுந்தவனுக்கு முதலுதவி அளிக்கும்போது தலை மற்றப் பகுதிகளிலும் பார்க்க உயரவோ பதியவோ இருக்கவேண்டும்?
22. வால் வெள்ளி என்பது என்ன?
23. பூமி உருண்டை என்று முதல் முதல் நம்பச் செய்தவர் யார்?
24. வற்று நேரத்தில் கடல் நீர் எங்குச் செல்கிறது?
25. பெண்கள் வோட் (Vote) செய்ய முடியாத ஒரு நாடு எது?
4
1. ஒட்டக மயிர் (Camel hair) பிரஷ்கள் எதனால் செய்யப்படுகின்றன?
2. மூன்று ‘ஆர்°’ (Three R’s) என்பவை என்ன?
3. சுத்தமான இரேடியம் (Radium) எதுபோல் இருக்கும்?
4. பூமி எப்பக்கமாகச் சுழல்கிறது?
5. மனிதனுக்கு எத்தனை விலா எலும்புகளுண்டு?
6. ஒரு தலைமுறை என்பது பொதுவாக எத்தனை ஆண்டுகளைக் குறிக்கும்?
7. மூன்று மூலநிறங்கள் (Primary Colours) என்பன எவை?
8. வெள்ளி, தங்க நாணயங்களின் வெளி ஓரத்தில் ஏன் வரைகள் இருக்கின்றன?
9. கோரம் (Quorum) என்றால் என்ன?
10. வீட்டோ (Veto) என்னும் சொல்லின் பொருள் என்ன?
11. ‘நோபல் பிரை°’ என்பது என்ன? அது என்னத்திற்காகக் கொடுக்கப்படு கின்றது?
12. எகிப்திய பிரமிட்டுகள் கட்டப்பட்டதன் நோக்கமென்ன?
13. புலியின் கண்ணுக்கும், சிங்கத்தின் கண்ணுக்கும் வேறுபாடு என்ன?
14. ஒரு மைல் நீளமுள்ள புகையிரதம் ஒருமைல் நீளமுள்ள சுரங்கத்தை மணிக்கு ஒரு மைல் வேகத்தில் கடந்து செல்ல எவ்வளவு நேரமாகும்?
15. பென்குவின் (Penguin) என்னும் பறவைகள் எங்குக் காணப்படுகின்றன?
16. சூய° கால்வாய், பனாமாக் கால்வாய் இவைகளில் எது அதிக அகலம் ஆழமுள்ளது?
17. இன்று வழங்குகின்ற கால அட்டவணை (Calendar) யாரால் கொண்டுவரப்பட்டது?
18. எலுமிச்சை, ஆரேஞ்சுப் பழச்சாறுகளில் என்ன சீவசத்து (விட்டமின்) உள்ளது?
19. சின்கோனா மரத்திலிருந்து என்ன மருந்தைப் பெறுகின்றோம்?
20. கடற்குதிரையின் கண்ணும், ஓணானின் கண்ணும் எவ்வகையில் ஒத்துள்ளன?
21. எகிப்திய சமாதிகளில் பெரியது எது?
22. ஒரு புதினத்தாளின் ‘கலம்’ எத்தனை அங்குலம்?
23. ஒரு டைப்ரைட்டர் நாடாவின் நீளமென்ன?
24. ஒரு சிகரெட்டின் நீளமென்ன?
25. குட்பை (Good-Bye) எனும் சொல் எச்சொற்களின் சுருக்கம்?
5
1. பேக்கேர்° டசன் ‘(Bakers Dozen)’ என்னும் சொல்வழக்கு எப்போது உண்டாயிற்று?
2. புகையிலையை முதல் முதல் ஐரோப்பாவுக்குக் கொண்டுவந்தவர் யார்?
3. கைகுலுக்க ஏன் வலது கையைப் பயன்படுத்துகிறார்கள்?
4. நாய் படுப்பதன் முன் ஏன் பலமுறை சுழல்கிறது?
5. தொப்பியில் ஏன் நாடா கட்டுகிறார்கள்?
6. முற்காலத்தில் முகச்சவரம் செய்யும் வழக்கம் ஏன் உண்டாயிற்று?
7. பொய்யாகத் துக்கப்படுவதை முதலைக் கண்ணீர் என்பது ஏன்?
8. வெளிச்சட்டையின் (Coat) முன் கைகளில் பொத்தான்கள் வைக்கும் வழக்கம் எப்படி உண்டானது?
9. குடிக்கும் கண்ணாடிப்பாத்திரங்கள் ஏன் தமிளர் (Tumbler) எனப்படு கின்றன?
10. சட்டைப்பையில் வைத்திருக்கும் சிறிய கத்திகள் ஏன் பேனாக் கத்திகள் எனப்படுகின்றன?
11. திருடனுக்கும் கொள்ளைக்காரனுக்கும் வேறுபாடு என்ன?
12. ஒலி தண்ணீர் வழியோ அல்லது காற்று வழியோ அதிக வேகமாகச் செல்கின்றது?
13. விக்டோரியா கிரா° (Victoria cross) என்னும் வீரப்பதக்கம் எதால் செய்யப்படுகிறது?
14. சிறுத்தைப் புலிகளுக்கு வரிகளோ அல்லது புள்ளிகளோ உண்டு?
15. வாவிகளுள் பெரியது எது?
16. எந்த உலோகம் தங்கத்தையும் பார்க்க 3,000 மடங்கு அதிக விலையுள்ளது?
17. பாம்பு ஏன் கண்ணைத் திறந்துகொண்டு நித்திரை கொள்கிறது?
18. முற்காலத்தில் எப்பறவை வேட்டையாடப் பழக்கப்பட்டது?
19. தண்ணீரின் மூன்று வடிவங்கள் எவை?
20. வெப்ப நாடுகளிலுள்ளவர் கறுப்பு உடைகளைக் காட்டிலும் வெள்ளை உடைகளை விரும்புவது ஏன்?
21. முட்பன்றிகளுக்குத் தமது முட்களை எறிய முடியுமா?
22. உலகத்தைச் சுற்றி முதல் முதல் பயணஞ்செய்த ஆங்கிலேயன் யார்?
23. கோகினூர் (Kohinoor) என்பது என்ன?
24. அமெரிக்காவின் முதல் தலைநகரம் எது?
25. கி.பி. 79இல் விசூவிய° வெடித்தபோது அழிந்து போன நகரம் எது?
6
1. வட துருவத்திலிருந்து எத்திசைகளுக்குச் செல்லலாம்?
2. யானையல்லாத என்ன வேறு மூன்று விலங்குகள் தந்தம் அளிக்கின்றன?
3. ‘Buying a pig in a poke’ என்னும் ஆங்கிலச் சொற்சொடர் வழக்கின் பொரு ளென்ன?
4. வடதுருவமோ தென் துருவமோ அதிக குளிருள்ளது?
5. பழைய உரோமில் என்ன மொழி பேசப்பட்டது?
6. ஒரு கொயரில் (quire) எத்தனை தாள்?
7. சூடாக்காமல் ஓடக்கூடிய உலோகம் எது?
8. பரசூட் என்னும் விமானக்குடை எதனால் செய்யப்படுகிறது?
9. ‘வாட்டர் மார்க்’ (water mark) என்பது என்ன?
10. ஒரு தேய்க் கரண்டி நீரில் எத்தனை சொட்டுகள் உண்டு?
11. இத்தாலியிலே பைசா நகரிலுள்ள சரிந்த கோபுரத்தின் உயரமென்ன? அதன் சரிவு என்ன?
12. ஐரோப்பாவில் உயர்ந்த மலை எது?
13. காற்றுக்குப் பாரமுண்டா?
14. மணிக்கு 200 மைல் பறக்கும் ஆகாயக் கப்பல் சூரியனை நோக்கிப் பறக்குமானால் அது சூரியனை அடைய எவ்வளவு காலமாகும்?
15. பிக் பென் (Big pen) என்பது என்ன?
16. குதிரைச் சவி (Horse power) என்றால் என்ன?
17. இலெட் பென்சில் செய்வதற்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் மரம் என்ன?
18. ஹெர்குலிசின் தூண்கள் (Pillars of Hercules) என்பவை எவை?
19. பக்கிங்காம் அரண்மணையில் இருப்பவர்கள் யார்?
20. சூ (Zoo) அல்லது மிருகக் காட்சி சாலை என்பது என்ன?
21. உனது இருதயம் எந்தப் புறத்தில் இருக்கிறது?
22. மாதங்களுள் குறுகியது எது?
23. உலகில் பெரிய பட்டினமெது?
24. சேப்டி மாச்செ° (Safety matches) என்பது என்ன?
7
1. ஆகாயக் கோட்டை என்றால் என்ன?
2. உலகில் பெரிய ஆறு எது?
3. உலோகத்தினால் பேனாக்கள் செய்யப்படுமுன் மக்கள் எப்படி எழுதினார்கள்?
4. ஆமென் (Amen) என்பதின் பொருளென்ன?
5. எந்தப் பெரிய ஆங்கிலப் புலவன் குருடாகவிருந்தான்?
6. மிக நீண்ட பகல் எது?
7. மிகக் குறுகிய பகல் எது?
8. பசிபிக் கடலையும், அத்லாந்திக் கடலையும் இணைக்கும் கால்வாய் எது?
9. எப்பொழுது நீதிபதி கறுப்புத் தொப்பி அணிகிறார்?
10. விசூவிய° எங்கே உள்ளது?
11. ‘Black Sheep’ என்பதன் பொருளென்ன?
12. °பீடா மீட்டர் (Speedometer) என்றால் என்ன?
13. காற்றிலேயுள்ள முக்கிய வாயுக்கள் எவை?
14. நிலக்கரி என்பது என்ன?
15. உரோம் நகர் எரியும்போது வீணை வாசித்துக் கொண்டிருந்தவர் யார்?
16. எந்நகரத்தில் தெருக்களுக்கு பதில் கால்வாய்கள் இருக்கின்றன?
17. தாரா ஏன் நனைவதில்லை?
18. உருக்குப் பேனாக்கள் எங்கே செய்யப்படுகின்றன?
19. °பானிய சாதியினருக்குரிய விளையாட்டென்ன?
20. கடற் பறவைகளின் முட்டைகள் ஏன் நீளமாகவும், கூராகவும் இருக்கின்றன?
21. ஏன் சில பூக்கள் இராக்காலத்தில் அதிக மணம் வீசுகின்றன?
22. புழுக்கள் நிலத்துக்கு என்ன நன்மை செய்கின்றன?
23. கொக்கிப் புழு (Hook work) ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் வரையில் இடும்?
24. ஆமையின் முட்டைகள் எப்படிப் பொரிக்கின்றன?
25. முதலை எத்தனை முட்டைகள் வரையில் இடும்?
8
1. தேன் கூட்டிலுள்ள அறைகளின் வடிவமென்ன?
2. மிக வேகமாக நீந்தக்கூடிய மீன் எது?
3. ஒரு ஈக்கு எத்தனை கால்?
4. பாம்புகளில் பெரியது எது?
5. எவ்விலங்குக்கு பாம்பு அதிகம் பயப்படும்?
6. நண்டுக்கு எத்தனை கால்கள்?
7. சிலந்திப் பூச்சிக்கு எத்தனை கண்கள்?
8. நத்தைக்குக் கண்கள் எங்கே உள்ளன?
9. உலகில் மிகச் சிறிய பறவை எது?
10. வியாழனுக்கு எத்தனை உபக்கிரகங்கள் உண்டு?
11. காகிதம் செய்யும் முறையை ஐரோப்பியர் யாரிடமிருந்து அறிந்தனர்?
12. அச்சு வித்தையை முதல் முதல் அறிந்திருந்த சாதியார் யார்?
13. திசையறிகருவியை முதலில் அறிந்திருந்தவர் யார்?
14. முற் காலத்தில் மிளகு கிரேக்க நாட்டுக்குச் சென்றதென்பதற்கு ஒரு சான்று என்ன?
15. மிளகாய் என்னும் பெயர் எப்படி வந்தது?
16. கத்தரிக்காயைக் குறிக்கும் இன்னொரு பெயர் கூறு.
17. கொலம்ப° கண்டு பிடித்த புதிய நாடுகள் எவை?
18. வா°கோடிகாமா கண்டுபிடித்த நாடுகள் எவை?
19. போப் (Pope) என்பவர் யார்?
20. பாக்டீரியா (Bacteria) என்னும் அணுக் கிருமிகள் எவ்வுயிர் இனத்தைச் சேர்ந்தவை?
21. இவ்வுலகில் வாழும் அசையும் உயிர்களில் எத்தனை வரையில் அறியப்பட்டுள்ளன?
22. மறைந்து போன உயிர்களின் எத்தனை வகை கற்படி உருவங்கள் (fossil) அறியப்பட்டுள்ளன?
23. கடலின் மிக்க அதிக ஆழமென்ன?
24. உலகில் எவ்வளவு பகுதி கடலால் மூடப்பட்டிருக்கிறது?
25. காற்று மண்டலத்தின் கனம் (தடிப்பு) எவ்வளவு என்று கருதப்படுகிறது?
9
1. கடல் மட்டத்துக்கு எவ்வளவுக்கு மேல் மூச்சு விட முடியாது?
2. இங்கிலாந்தில் உயர்ந்த கட்டிடமெது?
3. முதல்முதல் போப் என்னும் பட்டம் பெற்றவர் யார்?
4. பறக்கும் குண்டு (flying bomb) என்பதென்ன?
5. அமெரிக்காவில் அடிமை ஒழிக்கப்பட்டது எப்போது?
6. ஆங்கிலேயரைக் கடை நடத்தும் சாதி (Race of Shopekeepers) என்று சொன்னவர் யார்?
7. ஐந்து மைல் என்பதற்கும், 5 மைல் சதுரம் என்பதற்கும் வேறுபாடு உண்டா?
8. கத்தோலிக்க கிறித்தவர்களின் சமயமொழி எது?
9. கிறித்துவ வேதம் ஆதியில் எம்மொழியில் எழுதப்பட்டிருந்தது?
10. இப் பூமியில் வாழ்கின்ற மக்களின் தொகை என்ன?
11. ஒருவனுடைய சரீரத்தில் எவ்வளவு இரத்தம் உளது?
12. ஒரு குண்டூசித் தலையளவு ஒரு சிறிய துளி இரத்தத்தில் எத்தனை சிவப்புக் கோளங்களும், எத்தனை வெள்ளைக் கோளங்களும் உள்ளன?
13. விட்டமின் ஏ (A) என்ன உணவுப் பொருள்களில் உள்ளது?
14. பூமியிலிருந்து கடல்நீர் ஏன் வெளியே கொட்டவில்லை?
15. பூமியின் கவரும் சக்தி என்பது என்ன?
16. பூமியிலிருந்து எவ்வளவு தூரத்தில் பூமி சூரியன் என்னும் இரண்டி னுடைய கவரும் சக்தியின் பலம் சம அளவாயிருக்குமென்று கருதப் படுகிறது?
17. பொருள்களுக்குப் பாரம் எதனால் உண்டாகிறது?
18. குழாய் மூலம் தண்ணீர் வீட்டுக்குள் வந்து விழுவது ஏன்?
19. நமது உடம்பின் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 15 இராத்தல் பாரக் காற்று அழுத்தம் இருக்குமானால் நமது உடல் ஏன் ஒடிந்து போக வில்லை?
20. ஆகாயத்தில் மேலே பறந்து செல்லும் பலூன் வெடிக்குமா?
21. புட்டியிலிருந்து தண்ணீரைக் கவிழ்த்துக் கொட்டும்போது தண்ணீர் ஏன் நின்று நின்று விழுகிறது?
22. அசையும் காற்று (Wind) எப்படி உண்டாகிறது?
23. சூரியனைச் சுற்றிவரும் கிரகங்களின் பாதைகளின் வடிவு என்ன?
24. இதுவரையிலும் எத்தனை சிறிய கிரகங்கள் (Asteroids) கண்டுபிடிக்கப் பட்டுள்ளன?
25. சந்திரன் எப்பொழுதும் பூமிக்குச் சமதூரத்தில் இருப்பதில்லை? எவ்வளவு தூரம் மாறுபடுகின்றது?
10
1. வானம் தெளிவாயிருக்கும்போது எத்தனை நட்சத்திரங்கள்வரையில் நம் கண்களுக்குத் தெரியும்?
2. செவ்வாய்க் கிரகத்தில் உயிர்கள் வாழ்கின்றனவா?
3. வான வெளியில் நாம் மிகத் தொலைவில் பார்க்கக் கூடிய பொருள் எது?
4. நட்சத்திரத்திற்கும், கிரகத்துக்குமுள்ள வேறுபாடு என்ன?
5. பூமி எப்படி உண்டாயிற்றென்று வான சாத்திரிகள் நம்புகிறார்கள்?
6. விடி வெள்ளி என்பது என்ன?
7. மிகப் பெரிய நட்சத்திரம் எது?
8. மிகவும் சமீபத்திலுள்ள நட்சத்திரம் எது?
9. மிகப் பெரிய வானக்கல் (meteorite) எது?
10. சூரியனுக்கு மிகவும் தொலைவிலுள்ள கிரகம் எது?
11. தாலமி (Ptolemy) என்னும் வானசாத்திரி எவ்வாறு புகழ் பெற்றிருந்தார்?
12. தினம் ஒன்றுக்கு எத்தனை எரி வெள்ளிகள் பூமியில் விழுகின்றன?
13. நீண்ட கூர்வடிவுடைய பூமிநிழலின் நீளமென்ன?
14. வியாழன் கிரகத்தின் பருமை என்ன?
15. பூமி தனது அச்சில் (Axis) தானே சுழல்கின்றது என்பது எப்போ அறியப்பட்டது?
16. சூரியன் பூமியிலும் பார்க்க எத்தனை மடங்கு பெரியது?
17. வியாழனுக்கு எத்தனை சந்திரர்?
18. சூரியனுடைய ஒளியையும், சந்திரனுடைய ஒளியையும் எவ்வகையில் ஒப்பிடலாம்?
19. நட்சத்திரங்களின் நிறங்களில் எதாவது முக்கியம் உண்டா?
20. வால் வெள்ளிகளின் வால்கள் ஏன் சூரியனுக்கு எதிர்ப்புறத்தில் காணப் படுகின்றன?
21. சாதாரண எரிவெள்ளியின் (shotting star) பருமன் என்ன?
22. கடலின் வற்றுப் பெருக்குகளை உண்டாக்குவதில் அதிக முக்கிய முள்ளது சூரியனா, சந்திரனா?
23. பூமிக்கு மிகக்கிட்ட உள்ள கிரகம் எது?
24. எரி வெள்ளிகளின் நிறம் பலவாறு இருப்பது ஏன்?
25. கீரீன்இச் வானோக்கு நிலையம் யாரால் எப்போது அமைக்கப்பட்டது?
11
1. பூமியின் அச்சு எத்தனை பாகை சரிந்திருக்கிறது?
2. பூமி சூரியனைச் சுற்றித் தனது பாகையில் என்ன வேகத்தில் செல்கின்றது?
3. சந்திரனிலே எத்தனை அணைந்துபோன எரிமலை வாய்கள் இருக்கின்றன என்று கணக்கிடப்படுகின்றது?
4. சூரியனின் வெப்ப அளவு என்ன?
5. நாகரிகம் என்றால் என்ன?
6. கலிலியோ என்ன குற்றச் சாட்டின் பொருட்டு விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டார்?
7. இரும்பு தண்ணீரில் தாழ்கின்றது, இரும்புக் கப்பல் ஏன் தாழவில்லை?
8. கற்படிஉருவங்கள் (fossils) என்பவை என்ன?
9. மம்மத் என்னும் யானைத் தந்தம் எத்தனை அடி நீளம் வரையில் உள்ளது?
10. விடுதலைச் சிலையைப் பற்றி என்ன அறிவாய்?
11. வெந்நீருற்று உண்டாவதற்குக் காரணமென்ன?
12. உலகில் பெரிய அணைக்கட்டு எது?
13. மிகப் பெரிய கடல் எது?
14. டீசல் இயந்திரம் (disel engine) என்றால் என்ன?
15. மம்மத் (mammoth) என்பது என்ன?
16. புகையிலையைப் பற்றி முதல் முதல் அறிந்த ஐரோப்பிய சாதியார் யார்?
17. எறும்புகளில் எத்தனை இனங்கள் வரையில் உண்டு?
18. இப்பொழுது காணப்படும் தாவர வகைகள் எத்தனை?
19. முயல், நாய், செம்மறியாடு, பன்றி, குதிரை, ஒட்டகம், யானை, கிளி, கெண்டை மீன் (carp) இவைகளின் வயது என்ன?
20. ஒரு இராணி ஈ எவ்வளவு காலம் உயிர் வாழும்?
21. இராணி எறும்பு எவ்வளவு காலம் வாழும்?
22. வானக்கல் விழுவதால் பூமியின் பாரம் எவ்வளவு அதிகமாகிறது?
23. சராசரி ஒரு மனிதனின் உயரமென்ன?
24. பக்டீரியா என்னும் அணு உயிர்களின் பருமை என்ன?
25. °டாபோ (Stabo) என்பவர் யார்?
12
1. ஒரு ஹைடிரஜன் (hydrogen) அணுவில் எத்தனை மின்னணுக்கள் (electrons) உள்ளன?
2. செ° (chess) என்னும் சதுரங்கம் எத்தேச விளையாட்டு?
3. குளோரபாம் யாரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
4. தேனீக்களைப் பூக்கள் எப்படிக் கவர்கின்றன?
5. புதன் முதல் நெப்தியூன் முதலிய கிரகங்கள் சூரியனைச் சுற்றிவர எவ்வளவு காலமாகின்றது?
6. கடிகாரத்துக்குப் பூசப்படும் ரேடியம் எவ்வகையினது?
7. இரத்தினக் கற்கள் எப்படி உண்டாகின்றன?
8. நிறக் கண்ணாடிகள் எப்படிச் செய்யப்படுகின்றன?
9. தண்ணீர் ஏன் நெருப்பை அணைக்கிறது?
10. எண்ணெயில் எரியும் நெருப்பை ஏன் தண்ணீர் அணைக்க மாட்டாது?
11. மனித உடலுக்கு வேண்டிய முக்கிய மூன்று உலோகப் பொருள்கள் எவை?
12. மாம்பழத்தில் என்ன இரண்டு உயிர்ச்சத்துகள் உள்ளன?
13. அரைப் புழுக்கிய அரிசியிலோ பச்சை அரிசியிலோ B விட்டமின் அதிகமுண்டு?
14. விட்டமின் என்னும் பெயரை முதலில் தொடங்கியவர் யார்?
15. பம்பே டக் (Bombay duck) என்பது மீனா, பறவையா, தாவரமா?
16. பால், ஆரெஞ்சுச் சாறு, இனிப்பான ரவ்வி, (toffee) மீனெண்ணெய் இவற்றில் குழந்தைகளுக்கு உகந்தது எது?
17. எருமைப்பாலிலோ மாட்டுப்பாலிலோ அதிக வெண்ணெய்க் கொழுப்பிருக்கிறது?
18. பெரி பெரி என்னும் வியாதி A, B, C, D, E, என்பவற்றில் எந்த விட்டமின் இல்லாமையால் உண்டாகின்றது?
19. இந்தியாவில் தானியம் சேர்த்துவைக்கும் இடத்தில் இடத்தின் பழுது, ஈரம், எலி, பூச்சிகள் என்பவற்றால் ஆண்டில் எத்தனை டன் தானியம் பழுதடைகிறது?
20. பால் தகரத்தில் ஒரு துவாரம் மட்டும் இருந்தால் பால் தாராளமாக வெளியே வராது ஏன்?
21. கப்பலின் பாரம் எப்படி அறியப்படுகிறது?
22. மனித உடலில் எத்தனை பங்கு தண்ணீர் உள்ளது?
23. மீன் இறைச்சி உணவுகளில் எத்தனைப் பங்கு தண்ணீர் உள்ளது?
24. உணவில் எவ்வெப்பொருள்கள் அடங்கி உள்ளன?
25. உடம்புக்கு வேண்டிய நீர் எப்படி கிடைக்கிறது?
13
1. உடல் வளர்ச்சிக்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் அமைந்த உணவுகள் எவை?
2. ஒரு வீட்டு ஈ எவ்வளவு காலம் உயிர் வாழும்?
3. ஒரு ஈ இடும் முட்டைகள் எல்லாம் பொரிக்குமானால் 6 மாதத்தில் எவ்வளவுக்குப் பெருகும்?
4. மரத்தில் ஏறும் மீன்கள் உண்டா?
5. தேளின் விஷம் வேறு எப்பிராணிகளின் நஞ்சுக்குச் சமம்?
6. பாலில் அடங்கியுள்ள சத்துப் பொருள்கள் எவை?
7. வெண்ணெயில் என்ன தன்மை உள்ளது?
8. முட்டையில் என்ன உணவுச் சத்துகள் உள்ளன?
9. உணவுப் பொருள்களை எந்த மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்?
10. தவிட்டு உரொட்டி (Brown bread) எப்படிச் செய்யப்படுகிறது?
11. எவர் அதிகம் தவிட்டு உரொட்டியை உண்ணவேண்டும்? எவர் அதிக வெள்ளை உரொட்டியை உண்ணவேண்டும்?
12. சேமியா (Vermicelli) எதிலிருந்து செய்யப்படுகிறது?
13. உருளைக் கிழங்கை ஏன் இறைச்சி வகைகளோடு உண்ணவேண்டும்?
14. பழ உணவு எவ்வகையில் சிறந்தது?
15. காய்கறி, கீரை வகைகள் எவ்வகையில் சிறந்தன?
16. தேயிலையிலும், காப்பியிலும் எந்த நச்சுப் பொருள்கள் உள்ளன?
17. தேயிலையை ஏன் அதிக நேரம் ஊறவிடுதல் ஆகாது?
18. உணவுக்குப் பின் காப்பியோ தேயிலையோ எது உட்கொள்ளத் தக்கது?
19. மிளகு எவ்வகையில் பயன்படுகிறது?
20. கடுகு எவ்வகையில் பயன்படுகிறது?,
21. வின்னாரி (Vinegar) எவ்வகையில் பயனுடையது?
22. உடம்பிலுள்ள வெப்பத்தை வெளியில் விடாமலும், வெளியே உள்ள குளிரை உள்ளே விடாமலும் தடுக்கக்கூடிய உடைகள் எவை?
23. வெப்பத்தை வெளியே விடக்கூடிய உடைகள் எவை?
24. ஒரு மனித உடம்பிலிருந்து நாள் ஒன்றுக்கு வெளிவரக்கூடிய வேர்வையின் அளவு என்ன?
25. மனிதனுடைய முதுகெலும்பு எத்தனை எலும்பு முடிச்சுக்கள் அல்லது கணுக்களாலானது?
14
1. மனிதனுடைய உடலில் ஏறக்குறைய எத்தனை தனி எலும்புகள் உண்டு?
2. மனித இரத்தத்திலுள்ள செங்கூடுகளின் (red copuscles) வடிவு என்ன?
3. இரத்தத்திலுள்ள வெண்கூடுகளின் தொழில் என்ன?
4. நீராடுதல் ஏன் அவசியம்?
5. நாம் ஏன் இயந்திரங்களுக்கு எண்ணெய் இடுகிறோம்?
6. கையை நனைத்தால் புத்தகத்தின் ஏடுகளை விரைவாகப் புரட்ட முடிகிறது ஏன்?
7. குளிர்ந்த இரத்தமுள்ள உயிர்கள் எவை, வெப்ப இரத்தமுள்ள உயிர்கள் எவை?
8. சந்திரனைச் சுற்றி சில சமயம் வட்டமான ஒளி தெரிவது ஏன்?
9. இடி என்பது என்ன?
10. இடி எப்படி உண்டாகிறது?
11. ஒரு ஊசியைக் காந்தக் கல்லில் ஒரே முகமாகச் சில முறை அழுத்தி இழுத்துவிட்டு அதைக் கிடைச்சியின் மீது வைத்து மிதக்கவிட்டால் என்ன செய்யும்?
12. அலுமினியக் கேத்திலின் கைப்பிடி ஏன் மரத்தினால் செய்யப்படு கின்றது?
13. மின்சாரக் கம்பியை ஈரக்கையால் பிடித்தாலா, ஈரமில்லாத கையால் பிடித்தாலா எது அதிக அதிர்ச்சி உண்டாகும்?
14. மின்சாரக் கம்பிகளில் வேலை செய்பவர் இரப்பரால் செய்த கையுறை அணிவது ஏன்?
15. ஹிப்பபட்டம° என்னும் நீர் யானையின் பருமை என்ன?
16. நாம் நமது படுக்கைகளை ஏன் வெய்யிலில் காயவிடுகிறோம்?
17. இ°லாம் என்பதன் பொருளென்ன?
18. யான்அவ்ஆக்கைப் பற்றி (John of Arc) என்ன அறிவாய்?
19. டெனி° (lawn tennis) ஆடும் தரையின் நீளமும் அகலமும் எவ்வளவு?
20. நீர் அட்டைகள் (leech) முற்காலத்தில் எப்படி வைத்தியத்தில் பயன் படுத்தப்பட்டன?
21. லிவி (livy) என்பவரைப்பற்றி என்ன அறிவாய்?
22. மலேரியா என்னும் சொல்லின் பொருளென்ன?
23. இராணுவச் சட்டம் என்றால் என்ன?
24. வைரக்கல்லை எரிக்க முடியுமா?
25. மரம் நிலத்தினால் வளர்கிறதோ? காற்றினால் வளர்கிறதோ?
15
1. கருப்பத்தில் இருக்கும் குழந்தையின் இருதயம் துடிக்கிறதா?
2. நியூ° பிரிண்ட் (news print) என்னும் தாள் செய்வதற்குக் கனடாவில் நாள் ஒன்றுக்கு எத்தனை ஏக்கர் காடு அழிக்கப்படுகிறது?
3. சந்திரன் தன்னைத்தானே சுற்றிவர எவ்வளவு நாள் செல்கிறது?
4. நம் கண்ணுக்குத் தெரியக்கூடிய வால் வெள்ளியின் வால் எவ்வளவு நீளமிருக்கும்?
5. பூமியைவிடப் பெரிய வால்வெள்ளிகள் உண்டோ?
6. சந்திரனுக்குள்ள வெப்பம் எத்தனைப் பாகைகள் வரையிலிருக்கும்?
7. சூரியனிலிருந்து ஒரு வெடிச்சத்தம் பூமிக்கு வருவதாக வைத்துக் கொண்டால் அது வந்து சேர எவ்வளவு காலமாகும்?
8. சூரிய மறுக்கள் எவ்வளவு பெரியன?
9. நியுயார்க் நகர் நேரத்துக்கும் இலண்டன் நகர் நேரத்துக்கும் எவ்வளவு வேறுபாடு?
10. சந்திரனில் காற்று இருக்கிறதா?
11. சனிக்கிரகத்திற்கு எத்தனை சந்திரர்?
12. சூரியன் வான வெளியில் தன் பாகையில் நொடிக்கு எவ்வளவு வேகத் தில் செல்கிறது?
13. சூரியனும், அதன் குடும்பமும் போன்று எத்தனை சூரியரும் குடும்பங் களுமுள்ளன என்று கணக்கிடப்படுகிறது?
14. பால்வீதி மண்டலத்தில் (milky way) எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன?
15. நட்சத்திரங்கள் ஏன் விட்டுவிட்டு விளங்குகின்றன?
16. D D T என்பது என்ன?
17. இது எப்படி வேலை செய்கிறது?
18. 17-ஆம் நூற்றாண்டின் இடையில் ஆட்சிபிஷப் உசர் (Archibishop Uss her) என்ன அறிக்கை வெளியிட்டார்?
19. எறும்பு இராணுவத்தில் போர் புரிவன ஆண்களா? பெண்களா?
20. பூனைகளும், நாய்களும் சில சமயங்களில் ஏன் புல்லைத் தின்கின்றன?
21. சிலந்தியின் வலையில் அதன் கால்கள் ஏன் ஒட்டுவதில்லை?
22. இலையிலிருந்து கன்றுகள் வளரும் செடியின் பெயர் என்ன?
23. உலகில் மூன்றாவது பெரிய நகரம் எது?
24. கைலாய மலை எங்கு உள்ளது? அதன் உயரம் என்ன?
25. D D T மக்களுக்குக் கெடுதியை உண்டாக்குமா?
16
1. பூமியின் நிறை எவ்வளவு?
2. கடலின் சராசரி ஆழம் என்ன?
3. எல்லோ °டான்பாக் (Yellow stone park) எங்குள்ளது? அதன் சிறப்பு என்ன?
4. சந்திரனில்லாத கிரகங்கள் எவை?
5. தென்னமெரிக்காவில் அரிசோனாவில் வானக்கல் விழுதலால் பூமியில் உண்டான துவாரம் எவ்வளவு பெரியது?
6. உலகத்தில் எத்தனை சினிமாப் படச்சாலைகள் இருக்கின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது?
7. தேயிலைப் பானம் இங்கிலாந்தில் எப்பொழுது முதன் முதல் பயன் படுத்தப்பட்டது?
8. சிலருக்கு வாயில் கெட்ட நாற்றம் இருப்பது ஏன்?
9. கொக்கோ எத்தன்மையினது?
10. உலகிலுள்ள பெரிய மக்கட்குலங்கள் ஆறு எவை?
11. இந்திய அரசாங்கத்தாரால் வெளியிடப்படும் பெரிய தொகைக் கடுதாசி நாணயம் எது?
12. மூன்று முதன்மையான நிறங்கள் எவை?
13. செயின்ட் ஹெலினாத் தீவு எதனால் பேர் போனது?
14. உணவிலுள்ள எரிபொருள் வெப்ப அளவைக் குறிக்க வழங்கும் பெயர் என்ன?
15. ஒரு பாகம் என்பதன் நீளம் என்ன?
16. ஐரோப்பாவினின்று இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டுபிடித்தவர் யார்?
17. எகிப்திலே பிரமிட்டுக் கோபுரங்கள் ஏன் கட்டப்பட்டன?
18. மணிக்கூட்டை.க் கெதியாய் ஓட்டச் செய்ய என்ன செய்தல் வேண்டும்?
19. மனிதனுக்கோ நாய்க்கோ அதிக பற்கள் உண்டு?
20. கிரீன்இச் (Greenwich) நேரத்துக்கும் இந்தியா நேரத்திற்கும் என்ன வித்தியாசம்?
21. பயோரியா என்பது என்ன?
22. கப்பற் கொடிமரத்தின் பாதியில் (நடுவில்) கொடி பறந்தால் எதை உணர்த்தும்?
23. மலேரியா, பிளேக், நெருப்புக் காய்ச்சல், காலரா முதலிய நோய்கள் எவற்றால் பரப்பப்படுகின்றன?
24. தலை மயிரை வெட்டும்போது ஏன் நோவதில்லை?
25. 13 என்ற எண் நன்மை இல்லாத எண்ணாக ஏன் கருதப்படுகிறது?
17
1. உலகில் பெரிய பட்டினங்கள் ஐந்து எவை?
2. கடல் முழுவதிலுமுள்ள உப்பு எவ்வளவு என்று கணக்கிடப்படுகிறது?
3. அதிக பரப்புடைய கடல் எது?
4. எந்தப் பருவ காலத்தில் சூரியன் பூமிக்கு அண்மையில் உள்ளது?
5. வட துருவத்தில் ஒரு பகலின் அளவு என்ன?
6. மிகச்சிறந்த காப்பி எங்கிருந்து வருகிறது?
7. இந்தியாவில் மிக நீண்ட ஆறு எது?
8. ஐரோப்பாவில் மிக நீண்ட ஆறு எது?
9. வயிரத்துக்குப் பேர்போன இடம் எது?
10. மிகப் பெரியவும் சிறியவுமாகிய கிரகங்கள் எவை?
11. வடதுருவப் பகுதியோ தென்துருவப் பகுதியோ மிகக் குளிருள்ளது எது?
12. காற்று, நீர், இரும்பு என்பவற்றுள் எவற்றின் வழியாக ஒலி மிக வேகமாகச் செல்கிறது?
13. கூழ் முட்டை ஏன் மிதக்கிறது?
14. ஒரு கன மைல் கடல் நீரில் எவ்வளவு தங்கம் இருக்கிறது?
15. மெழுகு திரி ஒளி (Candle power) என்பது என்ன?
16. ஒரு மனிதனின் மூளையின் நிறை எவ்வளவு?
17. இந்திய யானைக்கும், ஆப்பிரிக்க யானைக்கும் என்ன வேறுபாடு?
18. எப் பிராணி நெடுங்காலம் உயிர் வாழும்?
19. தேரைக்கும் தவளைக்கும் வேறுபாடு என்ன?
20. சத்தம் போடமாட்டாத விலங்கு எது?
21. கண்ணாடி எப்படிச் செய்யப்படுகிறது?
22. மிக உயரமான பறவை எது?
23. அடிப்படை ஆங்கிலம் (Basic English) என்பது என்ன?
24. கிண்டர் கார்டின் (Kinder Garten) என்பது என்ன?
25. மத்திய ரேகை என்பது என்ன?
18
1. வட சீனாவில் பெரிய மதிற் சுவர் கட்டப்பட்டது ஏன்?
2. அராபியர் எச்சமயத்தவர்?
3. “கலிவ்” என்பது யாரை?
4. இந்தியாவிலுள்ள நான்கு சமயங்களை, சனத்தொகைக்கு ஏற்றப்படி வரிசையாக எழுது.
5. இலைகளில் முள் இருப்பதால் யாது பயன்?
6. செயற்கைப்பட்டு எதிலிருந்து செய்யப்படுகிறது?
7. சென்னையில் ஆகாயவிமான நிலையம் எது?
8. பறவைகளால் மனிதனுக்கு எவ்வகை நன்மைகளுண்டு?
9. எந்த மாதங்கள் வசந்த காலம் எனப்படும்?
10. விதை முளைத்தற்கு வேண்டிய நியமங்கள் எவை?
11. ஒற்றைப் பருப்புத் தாவரம் என்பது என்ன?
12. விதைகள் எவ்வாறு பரவுகின்றன?
13. தோட்டங்களில் காணப்படும் களைப்பூண்டுகள் எவை?
14. கரடியின் உணவு என்ன?
15. சந்திரகிரகணம் எப்போது? எப்படி உண்டாகிறது?
16. காய்த்தால் அல்லது பூத்தால் பட்டுப்போகும் தாவரங்கள் எவை?
17. சங்கமித்தை என்பவள் யார்?
18. இந்தியாவில் காணப்படும் மிகப்பெரிய இலையுள்ள தாவரம் எது?
19. மாமிசம் உண்ணும் விலங்கின் குடல் எவ்வகையினது?
20. மனிதனின் குடல் எவ்வகையினது?
21. பட்சிகளில் தந்திரமுள்ளது எது?
22. மிருகங்களில் தந்திரமுள்ளது எது?
23. யானை உண்ட விளங்கனி எப்படி இருக்கும்?
24. பாம்புக்கு பகை யாவை?
25. குயில்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது எங்கே?
19
1. சாகுந்தலம் என்னும் நாடகம் எவ்வரசன் காலத்தில் யாரால் எழுதப்பட்டது?
2. பூமிக்குச் சமீபத்திலுள்ள கிரகம் எது?
3. நிலத்தை அதிகமாகக் கொத்துவதேன்?
4. இலைகள் ஏன் மஞ்சள் நிறமாக மாறுகின்றன?
5. சரித்திரத்தில் கற்காலம் என்பது எதை?
6. யூதர் எனப்படுவோர் யார்?
7. சேரன் செங்குட்டுவன் காலத்தில் நடந்த சிறந்த நிகழ்ச்சி யாது ?
8. அணுக்குண்டைவிட அபாயம் விளைக்கக் கூடிய குண்டு எது?
9. உடம்பின் சாதாரண வெப்ப நிலை எவ்வளவு?
10. பெட்ரோல், மண்ணெண்ணெய் இவை காணப்படும் நாடுகள் எவை?
11. குளத்து நீர் ஏன் சுத்தமற்றது?
12. குடிப்பதற்கு நீரை எப்படிச் சுத்தம் செய்யலாம்?
13. தாவரங்களுக்கு உரம் ஏன் இடப்படுகிறது?
14. சூரிய கிரகணம் உண்டாவது எப்படி?
15. இந்தியாவில் முதல் மு°லீம் படை எடுப்பு எப்போது நேர்ந்தது?
16. முகமது, புத்தர், மகாவீரர், கிறி°து இவர்கள் பிறந்த நாடுகள் எவை?
17. முற்கால நால்வகைப் படைகள் எவை?
18. இலெட் பென்சில் எதனால் செய்யப்படுகிறது?
19. பிராந்தி எதிலிருந்து செய்யப்படுகிறது?
20. தகரப்பாலை நமக்கு அதிகமாக அனுப்பும் இரு நாடுகள் எவை?
21. இங்கிலாந்தில் கோதுமை விளையும் மாகாணம் எது?
22. குடா நீரோட்டம் எங்கே இருக்கிறது?
23. இங்கிலாந்தில் துணி நெசவுக்குச் சிறந்த நகரமெது?
24. எந்தக் கொசு தீமையானது?
25. உலகில் அதிகமாகப் பஞ்சு விளையும் நாடு எது?
20
1. குடைக்கு ஏன் கருப்புத் துணி பயன்படுத்தப்படுகிறது?
2. நட்டாயிரம் பட்டாயிரம் என்பது எம்மரத்தை?
3. கொள்ளிவாய்ப் பேய் என்பது என்ன?
4. கொள்ளிவாய்ப் பிசாசு எங்கே காணப்படும்?
5. இலைகள் பச்சை நிறமாக இருப்பது ஏன்?
6. வானம் ஏன் விழுவதில்லை?
7. 1910-ஆம் ஆண்டில் தோன்றிய வால்வெள்ளியின் பெயரென்ன?
8. கத்திக் காயம், தீப்புண் இவற்றிற்குப் பயன்படுத்தும் மருந்துகள் எவை?
9. தண்ணீர் வெந்நீராகும்போது உண்டாகும் மாற்றங்கள் எவை?
10. மணல் என்பது என்ன?
11. தலை மன்னாருக்கும் இராமேசுவரத்திற்கும் எவ்வளவு தூரம்?
12. வண்ணாத்திப் பூச்சிகள் எவற்றிலிருந்து உண்டாகின்றன?
13. நெல்லில் எத்தனை இனங்கள் உண்டு?
14. இந்தியாவில் பெரிய அணைக்கட்டு எது?
15. இலங்கையில் வெண்கல மாளிகை யாரால் கட்டுவிக்கப்பட்டது?
16. இப்பொழுது அமெரிக்க குடிஆட்சித் தலைவர் யார்?
17. சூரியனின் ஒரு கதிரின் ஒளிவேகம் எவ்வளவு என்று கணக்கிடப் படுகிறது?
18. முகமதியரின் ஆண்டுத் தொடக்கம் எப்போது?
19. பூனை எத்தனை மாதங்களில் குட்டி ஈனும்?
20. பூசினிச் செடியின் இருவிதப் பூக்கள் எவை?
21. தாவரங்கள் எவ்வாறு எதனைச் சுவாசிக்கின்றன?
22. இராக்காலங்களில் தாவரங்களினருகில் இருத்தல் ஏன் நன்றன்று?
23. சனிக்கிரகத்தைச் சுற்றியுள்ள வளையங்கள் எவ்வாறு உண்டானவை என்று கருதப்படுகிறது?
24. கிணற்றுள் விழுந்து மூச்சு அடங்கினவன் ஒருவனை எடுத்தவுடன் என்ன செய்ய வேண்டும்?
25. செங்கற்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன?
21
1. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு மிகுதியாக அனுப்பப்படும் பொருள் எது?
2. முதலையின் வடிவுடைய வேறு இரு உயிர்கள் எவை?
3. பூவாது காய்க்கும் மரங்கள் எவை?
4. அனுராதபுர வெள்ளரசின் வயது என்ன? அது ஏன் புனிதமுடையது?
5. உருசிய நாட்டின் இராசதானி எது?
6. பிரிட்டிஷாரின் அரசரின் பெயர் என்ன?
7. உலகில் பெரிய சுயேச்சை நாடு எது?
8. நிலத்திலும் நீரிலும் வசிக்கும் உயிர்கள் எவை?
9. எந்த நூற்றாண்டில் மார்க்கோப் போலோ இந்தியாவுக்கு வந்தான்?
10. தீக்கோழியின் முட்டை எவ்வளவு பாரமுள்ளது?
11. அம்மைப்பால் குத்துவது எதற்காக?
12. புதை பொருள் ஆராய்ச்சியாளர் சிந்துநதிப் பள்ளத்தாக்கில் கண்டுபிடித்த பட்டினங்கள் எவை?
13. அப் பட்டினங்களின் நாகரிகம் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது?
14. அங்குள்ள மக்கள் வழங்கிய எழுத்துக்கள் எவ்வகையின?
15. அவ்வெழுத்துக்குரியோர் எவ்வின மக்கள்?
16. சிறுவயதில் சுருட்டு, பீடி பிடிப்பதால் என்ன தீமை உண்டாகும்?
17. சுத்தமான தங்கத்துக்கு எத்தனை மாற்று?
18. எத்தேசங்கள் இந்தியாவுக்கு அரிசி, நெல் அனுப்புகின்றன?
19. மின்னல் தெரியும்போது ஏன் முழக்கம் கேட்பதில்லை?
20. பசு எத்தனை மாதத்தில் கன்று ஈனும்?
21. ஆறு கால்களுடைய பூச்சிகள் எவை?
22. நாணயம் அடிக்கும் தங்கம் எத்தனை மாற்று?
23. சந்தன மரம் எத்தேசங்களில் மிக உண்டு?
24. ஆமை எங்கே முட்டையிட்டு எப்படி குஞ்சு பொரிக்கும்?
25. எரிமலைத் தீயைக் கக்குவதற்குக் காரணம் என்ன?
22
1. “பெட்ரோல்” எப்படிக் கிடைக்கிறது?
2. பெட்ரோலுக்கும் மண்ணெண்ணெய்க்கும் உள்ள வேறுபாடு என்ன?
3. வட இந்தியர் எந்தத் தானியத்தை உணவாகக் கொள்வர்?
4. வைரங்களைப் பற்றி வழங்கும் காரட் என்ற பதம், எதைக் குறிக்கும்?
5. சூரியன் எந்த நாட்களில் உச்சிக்கு மேல் வருகிறது?
6. ஆப்பிள் பழம் அதிகமாகக் காணப்படும் ஐந்து நாடுகள் எவை?
7. ஒரு கிராமத்தில் மலேரியாச் சுரம் உண்டாகாதபடி செய்யத் தகுந்த முயற்சிகள் எவை?
8. மலேரியா சுரநோய்க்குப் பரிகாரம் யாது?
9. விஷக் கொசுக்கள் எங்கே விருத்தியாகின்றன?
10. அமெரிக்கா, ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை அடைந்தது எப்போது?
11. தென்னை மரத்தின் வயதை அறிவது எப்படி?
12. நாம் எப்படி சுவாசிக்க வேண்டும்?
13. தன் ஆடையில் தீ பற்றிய பெண் என்ன செய்ய வேண்டும்?
14. பாழுங் கிணற்றில் இறங்குவது உயிருக்கு அபாயம் ஏன்?
15. எந்த நோய்களுள்ள பிள்ளைகள் பாடசாலைக்கு வருதல் தகாது?
16. பெரியோர்களை மரியாதையாக அழைக்க வேண்டிய இரு சொற்கள் எவை?
17. பூமி உருண்டை என்பதற்குப் பிரமாணங்களெவை?
18. சிங்கப்பூர்ப் பட்டினம் எப்போது கட்டப்பட்டது?
19. சூய° கால்வாய் எப்போது திறக்கப்பட்டது?
20. யூலியர் சீசர் கொல்லப்பட்டது எப்போது?
21. பற்களைச் சுத்தம் செய்யாவிட்டால் ஏற்படும் தீமைகள் எவை?
22. நாம் பழங்களைச் சாப்பிடுவது ஏன்?
23. ஊரில் தொற்று நோய் காணப்படில் நீர் என்ன செய்வீர்?
24. நாம் தேகப்பயிற்சி செய்வது ஏன்?
25. உமது சகோதரனுடைய கைவிரலில் கத்திக் காயம் பட்டு இரத்தம் பெருகினால் என்ன செய்வீர்?
23
1. வீதியில் வெறி நாய் வந்தால், என்ன செய்யவேண்டும்?
2. மலேரியாச் சுரம் ஒருவரிடமிருந்து மற்றவர்க்குப் பரவுமா? எப்படி?
3. வெளவால் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறதா? குஞ்சு ஈனுகிறதா?
4. காப்பிச் செடி ஆதியில் எப்படி இந்தியாவில் உற்பத்தியானது? அது எந்த நாட்டுச் செடி?
5. இந்தியாவின் காலநிலைக்கு ஏற்ற உடை யாது?
6. கொக்கிப் புழுக்கள் எப்படி மனித உடலுள் புகுகின்றன?
7. பாண்டு வியாதியினின்றும் தப்புவதற்கு என்ன செய்தல் வேண்டும்?
8. ஆகாய வசனியைக் கண்டுபிடித்தவரின் பெயர் என்ன?
9. எவ் வகையான பழங்களைப் புசித்தலாகாது?
10. ஒரு இராணி ஈ நாள் ஒன்றுக்கு எத்தனை முட்டை இடும்?
11. மாலைக்கண் (இருளிற் பார்க்க முடியாமை) எதனால் உண்டாகிறது?
12. நாய் எத்தனை மாதத்தில் குட்டி ஈனும்?
13. “பிரமிட்” என்பது என்ன?
14. புத்த சமய வளர்ச்சியைப் பற்றிப் பெருமுயற்சி கொண்ட இந்திய மன்னன் யார்?
15. முற்கால மக்கள் தேனீ வளர்த்தலைப் பற்றி அறிந்திருந்தார்களா?
16. கான்பூசிய° யார்?
17. மாலுமி கடலில் எப்படித் திசை அறிகின்றான்?
18. சிவனொளி பாதமலைக்கு வேறு பெயர்கள் எவை?
19. உலகில் உயர்ந்த கட்டடம் எது?
20. குளவிக் கூட்டுக்கு ஏன் கல் எறிதல் ஆகாது?
21. மரத்தில் ஏறும் விலங்குகள் எவை?
22. சோனகர் இந்தியாவில் எவ்வாறு பரவினர்?
23. மெக°தீன°, எந்த இந்திய அரசனின் சம°தானத்தில் இருந்தான்?
24. சாகரிடி° எவ்வாறு மரித்தார்?
25. வெட்டிவேலை என வழங்கிய பழைய சட்டம் என்ன?
24
1. முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பிராணிகளின் காது எவ்வகை யானது?
2. குட்டிபோடும் பிராணிகளின் காது எவ்வகையினது?
3. முற்காலத்தவர் பயன்படுத்திய போர்க் கருவிகள் எவை?
4. வெடிமருந்தின் பயனை இந்தியாவிலுள்ளவர் எப்போது அறிந்தனர்?
5. போர்த்துகேயர் இந்தியாவில் பரப்பிய சமயம் எது?
6. ஒல்லாந்தர் இந்தியாவில் பரப்பிய சமயம் எது?
7. கோரோசனை (ox bile) எப்படிக் கிடைக்கிறது?
8. அரிசியில் என்ன சீவசத்து (vitamin) இருக்கிறது?
9. புகையிலை எத்தனை மாதத்தில் விளையும்?
10. எந்த மாதங்களில் தென்மேற்குப் பருவக்காற்று வீசும்?
11. “இயம்பட வீடடேல்” இதன் பொருள் என்ன?
12. எந்தச் செடியை வளர்க்க அரசினர் அனுமதிப்பதில்லை?
13. புகைவண்டியை எது இயங்கச் செய்கின்றது?
14. இலங்கையில் சங்கு குளிக்கும் இடங்களெவை?
15. மோட்டார் வண்டியை எது இயங்கச் செய்கிறது?
16. இரவில் மரத்தின் கீழ் ஏன் உறங்குதலாகாது?
17. எ°.ஐ.ஆர். புகை இரதச் சந்திகள் ஐந்து கூறுக.
18. இரேடியம் என்ன குணமுடையது?
19. மக்கள் ஆதியில் ஏன் நாடோடிகளாக அலைந்தனர்?
20. கண்ட இடங்களில் ஏன் துப்புதல் கூடாது?
21. புராதன மக்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் குகைக்கு அண்மையில் காணப்படுவது ஏன்?
22. மரச் சாமான்கள் கெட்டுப் போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
23. இரும்புச் சாமான்கள் துருப் பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
24. செவ்விந்தியர் எத்தேச மக்கள்?
25. ஐக்கிய நாணய சங்கத்தைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?
25
1. உரோம இராச்சியம் யார் காலத்தில் மிகச் சிறப்புற்று இருந்தது?
2. கிரேக்க தேசம் எந்த அரசன் காலத்தில் பெருமை பெற்று விளங்கியது?
3. அலக்சாந்தரோடு போர் நிகழ்த்திய பாரசீக அரசன் பெயர் யாது?
4. மார்ட்டின் லூதர் கொண்டு வந்த சமயக் கொள்கை எதற்கு மாறானது?
5. ‘சிம்ம சொப்பனம்’ என்பதன் கருத்து என்ன?
6. எறும்பினிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளத்தக்க பாடங்கள் எவை?
7. இலைகளுக்கு நரம்பு இருப்பது ஏன்?
8. புத்தர் தமது சொற்பொழிவுகளை எம் மொழியால் செய்தார்?
9. கமுக மரத்தைக் கடையாயார் நட்புக்கு உவமித்தல் ஏன்?
10. தாமரை மலர்வது எப்போது?
11. இராக்காலத்தில் தாமரைப் பூக்கள் எவ்வாறு இருக்கும்?
12. தாவரங்களின் கால்கள் என்று கூறத் தக்கன எவை? அவற்றால் தாவரங்களுக்கு என்ன பயன்?
13. தஞ்சாவூர் பெரிய கோயில் யாரால் கட்டப்பட்டது? அதன் சிறப்பு யாது?
14. நல்ல குதிரைகள் எங்கு உள்ளன?
15. பனாமாக் கால்வாய் எங்கு உள்ளது? அது எக்கடல்களை இணைக்கின்றது?
16. கடற்கரையில் தென்னை செழித்து வளருவது ஏன்?
17. ஐந்து உலோகங்கள் எவை?
18. உடம்பில் அழுக்கு உண்டாவது ஏன்? அதனைப் போக்காவிடில் என்ன நிகழும்?
19. தென்னிந்தியாவிலுள்ள புகைவண்டிச் சாலையின் முடிவிடங்கள் எவை?
20. மாட்டுக்கு உண்டாகும் நோய்கள் எவை?
21. விலங்குகளுக்கு வாலினாலுள்ள பயன்கள் எவை?
22. மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் எவை?
23. அழகிய கூடுகட்டும் பறவை எது?
24. வேம்பின் மலராத பூ எதனுடைய கண் போன்றது?
25. குட்டி போடும் மீன்கள் எவை?
26
1. பகல் வெளிச்சத்தை வெறுக்கும் பிராணிகள் எவை?
2. யானை என்ன சுபாவம் உடையது?
3. பூமிக்குக் கவரும் சக்தி உண்டு என்று எதனால் அறியலாம்?
4. மு°லீம் தொழும் இடங்களுக்கு எப்பெயர் வழங்கும்?
5. புன்செய் நன்செய் என்பவற்றின் பொருள் என்ன?
6. செஞ்சிலுவைச் சங்கம் எப்பொழுது எங்கே தொடங்கப்பட்டது?
7. கண்ணகி வழிபாட்டை இலங்கைக்குக் கொண்டு சென்ற அரசன் யார்?
8. எகிப்தியர் எவ்வகையான காகிதங்களில் எழுதினர்?
9. அவர்கள் ‘பேனாவுக்கு’ பதில் பயன்படுத்தியது எது?
10. எல்லா நாட்டிலும் செஞ்சிலுவைக் குறி ஒரே வகையாக இருப்பது ஏன்?
11. உடும்பு என்ன சுபாவம் உடையது?
12. அளவுக்கு அதிகம் உண்பதால் என்ன உண்டாகும்?
13. நாம் பாலை ஏன் காய்ச்சிக் குடிக்கிறோம்?
14. கொடையிலே சிறந்த பழைய அரசன் யார்?
15. இலங்கையிலிருந்து ‘ரப்பர்’ எவ்விடத்துக்கு அனுப்பப்படுகின்றது? ரப்பர் எவ்வாறு கெட்டியாக்கப்படுகிறது?
16. காற்று அசுத்தமாவது ஏன்?
17. மேலே எறியும் பொருள்கள் பூமிக்கு வந்து சேர்வது ஏன்?
18. பயிரிடும் தொழில் எவ்வாறான இடங்களில் ஆதியில் தொடக்கப்பட்டது?
19. ‘சிறுகக் கட்டிப் பெருக வாழ்’ இம் முதுமொழியின் பொருள் என்ன?
20. கடலுள் ஓடும் சூடான நீரோட்டமும், குளிர்ந்த நீரோட்டமும் சந்திக்கு மிடத்தில் என்ன நிகழும்?
21. சிலருக்கு மூக்கால் இரத்தம் வடிவதை எப்படி நிறுத்தலாம்?
22. முட்பன்றி, பறவை, விலங்கு என்பவற்றுள் எவ்வினத்தைச் சார்ந்தது?
23. காக்கையிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளத் தகுந்தது யாது?
24. பூமியின் ஆழத்தில் செல்லச் செல்ல எவ்வாறு இருக்கும்?
25. உயரச் செல்லச் செல்லக் குளிர்வது ஏன்?
27
1. உலகில் கொக்கோ மிகுதியாக விளையும் நாடு எது?
2. மிளகாய் எந்நாட்டுச் செடி? அதன் பெயர்க் காரணம் யாது?
3. உழக்கு உப்பை ஒருபடி தண்ணீரில் கொட்டினால் ஒன்றேகால்படி நீர் ஆகுமா?
4. பனிக்கட்டி தண்ணீரைவிடப் பாரமானதா?
5. நெல் விதைக்கும் மாதங்கள் எவை?
6. “பாம்பின் காலைப் பாம்பறியும்” என்னும் முதுமொழிக்குக் கருத்து யாது?
7. வெறிப் பொருளை உண்டு சுறுசுறுப்பாக இருக்கப் பார்ப்பது எதற்கு நேர்?
8. பாலைவனங்களில் சூறைக்காற்று உண்டாவதற்குக் காரணம் யாது?
9. மின்மினிப் பூச்சியின் வாலில் வெளிச்சம் தெரிவது ஏன்?
10. சனநாயக ஆட்சி எவ்வகையினது?
11. எகிப்தியர் வழங்கிய எழுத்துக்கள் எவ்வகையின?
12. எகிப்தியரின் ஆடை எதிலிருந்து நெய்யப்பட்டது?
13. சித்தார்த்தர் பிறந்த இடம் எது?
14. திசையறி கருவி, வெடி மருந்தின் பயன், அச்சு இயந்திரம் என்பவற்றை ஆதியில் அறிந்திருந்த சாதியார் எவர்?
15. உலகில் ஐந்து பெரிய பட்டினங்கள் எவை?
16. அல்பக்காலாமா என்னும் தென்னமெரிக்க விலங்குகள் எவ்வினத்தைச் சேர்ந்தவை?
17. இரேடியோ அலைகள் நொடிக்கு எத்தனை மைல் செல்லும்?
18. நெய்யோடு தண்ணீரை விட்டால் இரண்டும் கலவாமல் இருப்பது ஏன்?
19. முதலை கடலில் ஏன் வசிப்பதில்லை?
20. தேயிலைச் செடி எவ்வகையான இடங்களில் வளர்கின்றது?
21. ஒரு துளி இரத்தத்தில் எத்தனை வெண்தாதுக்களும் எத்தனைச் செந்தாதுக்களும் உள?
22. புத்தருக்குச் சிறிது முன் இருந்த மத குரு யார்?
23. காக்கை எவ்வகையில் மனிதருக்கு உதவியாக இருக்கிறது?
24. காட்டுத் தீ எவ்வாறு உண்டாகிறது?
25. இராக் காலங்களில் நன்றாகப் பார்க்கக்கூடிய பிராணிகள் எவை?
28
1. நன்னெறி எவ்வகைப்பாட்டு?
2. உணவுப் பொருள்களில் உடம்புக்கு வேண்டிய பொருள்கள் எவை?
3. எந்த மாதங்களில் பனையில் பாளை தோன்றும்?
4. பூமி சுழலும் வேகம் என்ன?
5. வளர்க்கும் கிளியைத் திறந்துவிட்டால் அது என்ன செய்யும்?
6. இருதயத்திலிருந்து இரத்தம் உடலில் பரவுவதைக் கண்டுபிடித்தவர் யார்?
7. தெலிபோன் யாரால் கண்டு பிடிக்கப்பட்டது?
8. ஆந்தை தோட்டக்காரனுக்கு எவ்வகையில் பயனுடையது?
9. ஈக்கள் எவ்வாறு இரையை உட்கொள்கின்றன?
10. சிரங்கு உண்டாவதன் காரணம் யாது? அதற்கு எந்த மருந்தைப் பயன் படுத்தலாம்?
11. கறைப்பிடியாத இரும்பு எப்படிச் செய்யப்படுகின்றது?
12. புகையிரத இயந்திரத்திற்கு உபயோகப்படும் விறகுகள் எவை?
13. நீராவிக் கப்பல்களுக்கு எந்த விறகை உபயோகிக்கின்றனர்?
14. பாலில் ஆடை மிதப்பது ஏன்?
15. கடிகாரத்தைக் காந்தத்துக்கு அருகில் வைத்தால் என்ன ஆகும்?
16. தென்னிந்தியாவில் தேயிலைச் செடியும், காப்பிச் செடியும் எங்கே பயிராகின்றன?
17. எகிப்திலே மிகப் பெரிய ஆறு எது?
18. எகிப்திலே உலக அதிசயங்களாக உள்ளன எவை?
19. அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் யார்?
20. மார்க்கோ போலோவின் பிறப்பிடம் யாது?
21. நிலக்கரிச் சுரங்கங்கள் காணப்படும் இடங்கள் எவை?
22. நிலக்கரி எவ்வாறு உண்டாகின்றது?
23. “இடைச்சி மார்க்” பால் எத்தேசத்தினின்று வருகின்றது?
24. புறா முட்டை எத்தனை நாளில் குஞ்சு பொரிக்கும்?
25. இலங்கையைவிடத் தேயிலைக்குப் பேர்போன நாடு எது?
29
1. நட்சத்திரங்கள் சிறியனவாகத் தோன்றுவது ஏன்?
2. கிரகணம் இருக்கும்போது உணவு அருந்துதல் கூடாது எனப்படுவதன் காரணம் யாது?
3. கார்காலம் என்பது எம் மாதங்களைக் குறிக்கும்?
4. பூரணைக்காலங்களில் கடல் பொங்குவது ஏன்?
5. மரங்கள் எவ்வகையான காற்றைச் சுவாசிக்கின்றன?
6. எவ்விலங்குகளின் பெண் இனங்களுக்குக் கொம்பு இல்லை?
7. மாடுகளுக்கு குறிசுடும் வழக்கம் ஏன் ஏற்பட்டது?
8. அவ்வையார் ‘தையும் மாசியும் வையகத்துறங்கு’ என்று கூறியது ஏன்?
9. பாலைவனங்களில் பிரயாணம் செய்யக்கூடிய விலங்கு எது?
10. ஒலிபரப்புதல் என்பது எதைக் குறிக்கிறது?
11. பயிர்களுக்கு உண்டாகும் சில நோய்கள் கூறு?
12. கருவண்டு தென்னைகளுக்குத் தீங்கு செய்வது எவ்வாறு?
13. பறவைகளை நாம் அதிகமாகக் காணும் காலம் எது?
14. மாங்கன்றுகளை ஒட்டுவது ஏன்? எவ்வாறு ஒட்டலாம்?
15. எவ்வகையான கிணறுகளில் நல்ல நீர் ஊறும்?
16. சில கிணற்று நீர் உவராக இருப்பது ஏன்?
17. நிழலுக்காக நடப்படும் மரங்கள் எவை?
18. வண்ணாத்திப் பூச்சியின் சீவிய தோற்றங்கள் எவை?
19. யூபிராத்து தைகிர° நதிகள் எத் தேசத்தில் உள்ளன?
20. சிவப்பு நாடா (Red tape) என்பது என்ன?
21. சுமேரியர் வாழ்ந்த இடம் எது?
22. இரத்தினக் கற்கள் எப்படி உண்டாகின்றன?
23. இலங்கையில் தேவாரம் பெற்ற தலங்கள் எவை?
24. பஞ்சு எவ்வெந் நாடுகளில் விளைகின்றது?
25. நிறக்கண்ணாடிகள் எப்படிச் செய்யப்படுகின்றன?
30
1. உலகில் மிக ஆழமான மண்ணெண்ணெய்க் கிணறு எத்தனை அடி?
2. இலங்கையில் இரத்தினக் கற்கள் கிடைக்கும் இடங்களைக் கூறு.
3. கற்கண்டு எப்படிச் செய்யப்படுகிறது?
4. பல நாட்களுக்குத் தண்ணீர் குடியாமல் இருக்கக் கூடிய விலங்கு எது?
5. மிக நீண்ட கழுத்து உடைய விலங்கு எது?
6. தமிழ்நாட்டுத் தேன் அதிகமாக எங்கிருந்து கிடைக்கின்றது?
7. தூரதிருட்டிக் கண்ணாடியைக் கண்டுபிடித்தவர் யார்?
8. ஒளவையார் செய்த மூன்று நூல்கள் கூறு.
9. வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பவள் யார்?
10. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் எவை?
11. காதுக்குள் ஒரு பூச்சி புகுந்தால் என்ன செய்வீர்?
12. கிளையில்லாத ஐந்து மரங்கள் கூறுக.
13. நமக்கு அதிக பயனுள்ள விலங்குகள் எவை?
14. க°தூரி எங்கிருந்து கிடைக்கிறது? எம்மிருகத்திலிருந்து பெறப்படு கின்றது?
15. பாம்புக்குக் “கட்செவி” என்று ஏன் பெயர்?
16. இடிகேட்ட பாம்பு ஏன் ஏங்குகிறது?
17. பனி எப்படி உண்டாகிறது?
18. காற்று வீசும்போது ஏன் பனி காணப்படுவது இல்லை?
19. “குளந்தொட்டுத் தேரை வழிச் சென்றாரில்” என்பதன் பொருள் யாது?
20. பலா, மா, பாதிரி என்னும் மரங்களை எவ்வகையினவருக்குப் புலவர் உவமித்திருக்கின்றனர்?
21. நாரையின் அலகு எதைப் போன்றது?
22. அன்னப்பறவை எவ்வியல்பினது? அது இப்போது காணப்படுகின்றதா?
23. சொல் தவறாத முற்கால அரசன் யார்?
24. பாபிலோனைப் பிடித்த பாரசீக அரசன் யார்?
25. பாரசீகரின் தெய்வம் யாது?
31
1. பாரசீகர் எவ்விடங்களில் கடவுளை வணங்கினர்?
2. யவனர் எனப்பட்டோர் யார்?
3. முதல் முதல் உலகப்படம் வரைந்த தாலமி எந் நூற்றாண்டில் வாழ்ந்தான்?
4. “ஒலிம்பிக்” விளையாட்டுக்களை ஆரம்பித்தவர் யார்?
5. மரங்களின் வளர்ச்சிக்கு வேண்டப்படுவன யாவை?
6. கீழ் வயிற்றிலுள்ள பைக்குள் குட்டியை வைத்துக் கொண்டு உலவும் பிராணிகள் எவை?
7. இலங்கையில் புத்த சமய நூல்கள் எம்மொழியில் எழுதப்பட்டிருக் கின்றன?
8. எவ்வின மாடு அதிகம் பால் தருகின்றது?
9. குயில்களை “மாங்குயில்” என்று சிறப்பித்து புலவர்கள் கூறுவது ஏன்?
10. வீட்டின் முன்புறத்தில் பூமரங்கள் நடுவது ஏன்?
11. வீட்டு ஈயினால் நமக்கு எவ்வாறு தீமை நேருகின்றது?
12. காடுகளில் கிடைக்கும் உணவுப் பொருள்களுள் எவற்றை நாம் உண்கின்றோம்?
13. களிநிலத்தைத் திருத்த என்ன செய்யலாம்?
14. சூரியனைச் சுற்றிவரும் கிரகங்கள் எவை?
15. மாடப்புறா ஒரு முறையில் எத்தனை முட்டையிடும்?
16. ஆற்றின் வலப்பக்கம் இடப்பக்கம் அறிவதெப்படி?
17. உணவை நன்றாக மெல்லாது உட்கொள்வதால் என்ன தீமை ஏற்படும்?
18. கரும்பிலிருந்து பெறப்படும் மூன்று பொருள்கள் எவை?
19. வெண்கலம் எப்படிச் செய்யப்படுகிறது?
20. முற்காலத்தவர் எப்படி நேரத்தை அளந்தனர்?
21. வால் வெள்ளியின் வடிவம் எவ்வகையினது?
22. கிணறு வெட்டும்போது கீழே ஊற்றுகள் காணப்படுவது ஏன்?
23. செம்மண் நிறப் பூமியில் என்ன உலோகம் கலந்திருக்கிறது?
24. சிறு அறையில் பலர் வசிப்பதால் என்ன தீமை உண்டாகும்?
25. கடற்கரைத் தாழையின் காய் பயனற்றது என்பதை உணர்த்த வழங்கும் பழமொழியைக் கூறுக.
32
1. இலங்கையில் கிடைக்கும் உலோகம் எது?
2. தண்ணீர் எவ்வாறு நெருப்பை அணைக்கிறது?
3. மண் எப்படி நெருப்பை அணைக்கிறது?
4. காந்தத்துக்கு மாக்நட் என்னும் பெயர் ஏன் உண்டாயிற்று?
5. (1) சாக்கடல் எங்கே உள்ளது? (2) அதன் சிறப்பு என்ன?
6. சூய° கால்வாய் எங்குள்ளது?
7. மெ°மறிசம் என்னும் வித்தை யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
8. (1) இந்தியாவில் எத்தனைக் கம்பனியாரின் பெட்ரோல், மண்ணெண் ணெய் விலையாகின்றன? (2) கம்பெனிகளின் பெயர்கள் யாவை?
9. உலகில் எங்கு தங்கம் மிகக் கிடைக்கிறது?
10. இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் புகைவண்டியில் பிரயாணம் செய்யும் பிரயாணிகள் ஏன் மண்டபத்தில் மறிக்கப்படுகிறார்கள்?
11. இந்தியாவிலிருந்து புகையிரத மார்க்கமாக இலங்கைக்குச் செல்பவர்கள் மண்டபத்தில் மறிக்கப்படாமல் சென்றால் அங்கு என்ன செய்ய வேண்டும்?
12. பெரிய பட்டணங்களில் தீ அணைப்பதற்கு என்ன ஒழுங்கு செய்யவேண்டும்?
13. தீ அணைக்கும் தாபனத்திற்கு எப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது?
14. தீ அணைக்கும் மோட்டார் எவ்வகையினது? (2) மோட்டார் எவ்வகை யான நிறமுள்ளது? (3) எவ்வகையான சத்தம் செய்து கொண்டு செல்லும்?
15. சூரியன் மறையும்போது வானில் பல நிறம் ஏன்?
16. நாய், பூனை, சிங்கம், புலி முதலிய விலங்குகளுக்கு முகத்தில் நீண்ட தடித்த மயிர்கள் இருப்பது ஏன்?
17. இந்துப்பு என்பது என்ன?
18. கவரிமான் எத் தன்மையினால் மானமுடையவருக்கு உவமிக்கப்படுகிறது?
19. “டிராம்” (Tram) வண்டிகள் ஏன் அப்பெயர் பெற்றன?
20. “கல்லாதான் கற்ற கவி” எதற்கு நேர்?
21. வானவில் எப்படி உண்டாகின்றது?
22. தண்ணீரின் நிறம் என்ன?
23. பனிக்கட்டி தண்ணீரில் மிதப்பது ஏன்? அதன் எவ்வளவு பாகம் தண்ணீரின் மேல் தெரியும்?
24. எண்ணெய் தீப்பற்றினால் தண்ணீர் ஏன் தீயை அணைக்க மாட்டாது?
25. பசுக்கன்றைக் கொன்ற மகனைத் தேர்க்காலின் கீழ் நெரிப்பித்த அரசன் எவன்?
33
1. பறவைகள் தந்திக் கம்பியிலிருந்தால் அபாயமுண்டாகவில்லை. நாம் அதனைத் தொட்டால் அபாயம் உண்டாகின்றது ஏன்?
2. ஒரு கிராம் இரேடியத்தின் விலை என்ன?
3. இரேடியம் உப்பு என்பது என்ன?
4. காக்கை விரும்பும் கனி எது?
5. நண்டுக்குக் கால்கள் எத்தனை?
6. ஈயார் தேட்டை …………………. கீறிட்ட இடங்களை நிரப்பு.
7. “தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்” இயல்புடையது எது?
8. நாய் எசமானனுக்கு தனது மகிழ்ச்சியை எவ்வாறு காட்டும்?
9. அறு சுவை எவை?
10. பிரிட்டிஷ் ஆட்சியில் அடிமை வியாபாரம் எப்போது ஒழிக்கப்பட்டது?
11. ‘பூரண உணவு’ என்பதன் கருத்து யாது?
12. தமிழிலுள்ள இலக்கிய நூல்கள் ஐந்து கூறுக.
13. ‘முதலுதவி’ என்றால் என்ன?
14. நுங்கு எந்தக் காலத்திலுண்டு?
15. சங்க நூல்களில் ஐந்து கூறு.
16. பழைய உரையாசிரியர்கள் யாவர்?
17. பால் ஏன் பூரண உணவு?
18. “சீவசத்து” (Vitamin) என்றால் என்ன?
19. காசா லேசா - இதற்கு இரண்டு பொருள்கள் எவை?
20. ‘விருந்தூட்டல்’ - இதற்கு 2 பழமொழிகள் கூறு.
21. ஒரு நொட் (knot) என்பது எவ்வளவு துhரம்?
22. நிறம் பற்றி மக்கள் எத்தனை சாதிகளாக பிரிக்கப்படுவர்.
23. இடியேறு என்பது என்ன?
24. மாமிச உணவு கொள்ளும் விலங்குகளின் நாக்கு எவ்வாறு இருக்கும்?
25. மனிதனுடைய நாக்கு, எவ்வகை உணவு கொள்ளும் விலங்கின் நாக்கைப் போன்றது?
34
1. இருக்கும்போது நடக்கும் போதும் மார்பை நிமிர்த்தியும் நேராகவும் வைத்திருக்க வேண்டியது ஏன்?
2. நன்றாக வளர்ந்த மனிதனுக்கு எத்தனைப் பற்கள்?
3. பகலில் ஏன் உறங்குதல் ஆகாது?
4. சோறு படைப்பதற்கு முன் இலையில் தண்ணீர் தெளிப்பது ஏன்?
5. நெய், நீறு, ஆறு, என்பன இல்லாவிட்டால் பாழ் என ஒளவையார் கூறியன எவை?
6. “கொல்ல தெருவில் ஊசிவிற்றல்” இப் பழமொழியின் கருத்தை எழுது.
7. இந்தியாவில் அதிகம் கிடைக்கும் உலோகம் எது?
8. வெள்ளத்தினால் அழியாதது, கள்ளரால் கொள்ளப்படாதது, கொடுக்கக் குறையாதது, நெருப்பினால் அழிக்கப்படாதது என்று புலவர் புகழ்ந்து கூறும் பொருள் எது?
9. காகத்துக்குப் பகையான பறவை எது?
10. நோயற்ற வாழ்வே - - - கீறிட்ட இடங்களை நிரப்பு.
11. சந்திரனுக்கு வெளிச்சம் எவ்வாறு கிடைக்கிறது?
12. சந்திரன் எவ்வாறு உண்டாயிற்று என்று கருதப்படுகிறது?
13. வெளவால் எவ்விடங்களில் வாழும்?
14. விவசாயிக்கு உதவியான மூன்று பறவைகளின் பெயர் கூறுக.
15. தாராவுக்குத் தோலிணைப்புள்ள பாதங்கள் இருப்பது ஏன்?
16. கூகை எக் காலங்களில் சஞ்சரிக்கும்?
17. ஐக்கிய நாணய சங்கத்தில் அங்கத்தவர்களாக யார் சேரலாம்?
18. உம்முடைய உடையில் தீ பற்றிக் கொண்டால் என்ன செய்வீர்?
19. அங்கோவாட் (Ankorvat) என்ன விசேடமுடையது?
20. சேற்றுப்புண் எதனால் உண்டாகின்றது?
21. “அனோ விலி°” நுளம்பு எங்கே முட்டையிடும்?
22. “அனோ விலி°” கொசுவை அழிப்பதற்குக் கையாளும் முறைக ளெவை?
23. சிங்கோனா மரத்தின் பயன் என்ன?
24. விசுவப்பிராமணர் என்போர் யார்?
25. “போலீ°” உத்தியோக°தரின் கடமைகள் எவை?
35
1. இந்தியாவிலுள்ள போக்கு வரவு சாதனங்கள் எவை?
2. கந்தப்புராணம் செய்த புலவர் யார்?
3. எறும்புந் தன் கையால்……………….. கீறிட்ட இடங்களை நிரப்புக.
4. “வைக்கோற் போரில் நாய்” என்பதன் பொருள் யாது?
5. நீர் பொங்காமல் பால் பொங்குவது ஏன்?
6. முட்டையிலிருக்கும் குஞ்சு எவ்வாறு மூச்சு விடுகிறது?
7. முட்டைக்குள் இருக்கும் குஞ்சுக்கு உணவு எப்படி கிடைக்கிறது?
8. “வான ஆராய்ச்சி நிலையம்” (observatory) என்பது யாது?
9. கம்பியில்லாத் தந்தியைக் கண்டு பிடித்தவர் யார்?
10. சகாரா வனாந்தரம் எங்கு உள்ளது?
11. பாலைவனப் பசுந்தரைகள் என்பன யாவை?
12. கார்மேகம், வீரகேசரி, இச் சொற்களைப் பிரித்துப் பொருள் கூறுக.
13. ஒருவன் 1 மணி நேரத்தில் 4 மைல் நடப்பான்; 10 பேர் எத்தனை மைல் நடப்பர்?
14. 100 கன்று நடக்கூடிய இடத்தில் ஆடுகள் அடைக்கப் பதினாறு படல்கள் வேண்டும். 200 கன்று நடக்கூடிய இடத்தில் அடைக்க எத்தனைப் படல்கள் வேண்டும்?
15. தண்ணீரைச் சுடவைக்கும் போது ஏன் குமிழி எழுகிறது?
16. ஞானம், விவேகம், வெப்பம் என்பவற்றின் மறுதலை மொழிகள் எவை?
17. குரங்கு என்ன இயல்பினது?
18. கீறிட்ட இடங்களை நிரப்பு: “அன்னையும் பிதாவும் ____
19. 4, 5, 9, 6 என்ற இலக்கங்களைக் கொண்டு ஆக்கக் கூடிய எண்களைத் தருக.
20. கோழியைக் காலிலும் தாராவைக் கழுத்திலும் பிடித்துத் தூக்கி செல்வது ஏன்?
21. ஒரு ஊசியைக் கார்க்கில் (கிடைச்சியில்) வைத்து அசைவற்ற தண்ணீரில் விட்டால், அதன் முனை எப் பக்கத்தை நோக்கி நிற்கும்?
22. இரும்பில் காந்தம் ஏறச் செய்யலாமா? எப்படி?
23. மின்சாரக் கம்பிகளைப் பழுதுபார்ப்போர் ஏன் இரப்பரால் செய்த கையுறைகளை அணிகின்றனர்?
24. மின்சாரக் கம்பிகளைத் தொடுவது ஏன் அபாயம்?
25. மூக்குத் துவாரங்களில் மெல்லிய உரோமங்கள் காணப்படுவது ஏன்?
36
1. எப்போதும் வடக்கே தெரியும் நட்சத்திரம் எது?
2. உலகில் பெரிய கண்டம் எது?
3. திமிங்கிலங்கள் எங்கு மிகக் காணப்படுகின்றன?
4. சமாதானத்தின் அடையாளமாக எப் பறவை குறிக்கப்படுகின்றது?
5. “இலாமா” என்னும் புத்த பிக்குகள் யார்? விளக்கி எழுது.
6. திமிங்கிலம், மீன் இனத்தைச் சார்ந்ததா? இல்லையாயின் காரணம் கூறு.
7. ஒரு கப்பல் இன்ன சாதியாருக்கு உரியது என எப்படி அறியலாம்?
8. எந்த எந்த நாடுகளில் புத்த சமயம் பரவியுள்ளது?
9. “மைகாபோன்” (Micaphone) என்னும் கருவியின் பயன் என்ன?
10. பறவைகளின் எலும்புகள் ஏன் துவாரமுள்ளன?
11. “பஞ்சமர்” என்போர் யார்?
12. புகைவண்டித் தண்டவாளங்களின் பொருத்துகளுக்கு இடையில் இடம் இருப்பது ஏன்?
13. வீதியின் எந்தப் பக்கத்தில் நீர் நடந்து செல்வீர்?
14. “புத்தகயா” எங்கு இருக்கிறது?
15. வரிக்குதிரை எந்நாட்டில் காணப்படுகிறது?
16. உலகில் மிக உயர வளரும் மரம் எது?
17. ஆகாய விமானம் கட்டுவதற்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் உலோகங்கள் எவை?
18. ஈக்கு எத்தனை கால்கள் உண்டு?
19. பாரத வெண்பாச் செய்த புலவர் யார்?
20. கீறிட்ட இடங்களை நிரப்பு :
ஊசி போகும் இடம் பார்ப்பர். ……………. ……………… ……………. ……………
21. “குலவித்தை கல்லாமற் பாதி” இப் பழமொழியின் கருத்து யாது?
22. விஷப்பாம்பின் தலையின் வடிவம் என்ன?
23. கோதுமை நமக்கு எங்கிருந்து வருகிறது?
24. இங்கிலாந்து அரசர் வசிக்கும் அரண்மனைக்குப் பெயர் யாது?
25. செவிலித்தாய் என்பவர் யார்?
37
1. அரசினர் நடத்தும் வைத்தியசாலைகளில், எவருக்கு இலவசமாக வைத்தியம் செய்யப்படமாட்டாது?
2. அமெரிக்காவில் சினிமாப் படங்கள் தயாரிக்கப்படும் முக்கிய இடம் எது?
3. கெட்டுப்போன முட்டை தண்ணீரில் மிதப்பதற்கும், நல்ல முட்டை ஆழ்வதற்கும் காரணம் என்ன?
4. “வனாந்தரக் கப்பல்” என்று எவ்விலங்குக்குப் பெயர்?
5. நைல் ஆற்றின் முகத்துவாரத்திலுள்ள பட்டினம் எது?
6. கலிங்கத்துப்பரணி செய்த புலவர் யார்?
7. 18 காரட் தங்கம் என்றால் என்ன பொருள்?
8. “இராவணத்துறவு” என்பதை விளக்குக.
9. காண்டா மிருகக் கொம்புக்கு என்ன சக்தி உள்ளது என்று முற்காலத்தவர் நம்பினர்?
10. உலகில் பெரிய கடல் எது?
11. இந்தியாவுக்கு முதல்முதல் வந்த போர்த்துகேய மாலுமி யார்? அவர் எப்போது வந்தார்?
12. தென்னிந்தியாவில் பிராமண வகுப்பினர் எத்தனை சதவீதம் காணப் படுகின்றனர்?
13. கிளியின் கால் விரல்கள் எவ்விதம் அமைந்திருக்கும்?
14. தென்னிந்தியாவிலுள்ள சம°தானங்கள் எவை?
15. எந்த ஐரோப்பிய சாதிகளுக்கு இந்தியாவில் நாடுகள் உள்ளன?
16. விவசாயிகள் பயன்படுத்தும் ஆறு கருவிகளின் பெயர் கூறு.
17. “ஜான் புல்” என்னும் பெயர் எச்சாதியைக் குறிக்கும்?
18. ‘இருதலைக் கொள்ளி எறும்பு’ என்பதன் பொருள் யாது?
19. ஈ°டர் பெருநாள் எதன் ஞாபகமாக எப்போது கொண்டாடப்படுகிறது?
20. வான வில்லில் காணப்படும் நிறங்கள் எவை?
21. வெள்ளிச் சாமான்கள் கறுப்பதற்குக் காரணம் என்ன?
22. ஒரு படி நீர், ஒரு படி பனிக்கட்டி எதற்கு நிறை அதிகம்?
23. ஒலியும், வெளிச்சமும் ஒரு செகண்டுக்கு எவ்வளவு தூரம் பாயும்?
24. புகையிரத வீதியின் மேடையின் அந்தங்கள் சாய்வாக இருப்பது ஏன்?
25. நன்னெறி செய்த புலவர் யார்?
38
1. “மலையைக் கல்லி எலியைப் பிடித்தல்” இப் பழமொழியின் பொருள் யாது?
2. வட்டத்துக்கு நடுவில் செல்லும் கீற்றுக்கு பெயர் என்ன?
3. நோயற்ற வாழ்வே ………. ……………. கீறிட்ட இடங்களை நிரப்பு.
4. செர்மனியின் அரசர்க்கு என்ன பெயர் வழங்கிற்று?
5. “எக்° ரே” (X-Ray) என்பது என்ன?
6. “அறஞ் செய விரும்பு” என்று யார் சொன்னார்?
7. சிசிலியிலுள்ள பேர்போன எரிமலை எது?
8. “முயலும் ஆமையும் பந்தயம் ஓடின” என்னும் கட்டுக்கதை என்ன
படிப்பினைத் தருகிறது?
9. “பன்றிகளுக்கு முன் முத்தைச் சிந்தாதே” என்பதன் பொருள் யாது?
10. காய்ச்சிய இரும்பை எடுக்கக் கொல்லன் பயன்படுத்தும் கருவியின் பெயர் யாது?
11. ஜப்பானியத் தலைநகரின் பெயர் யாது?
12. போர்க் கப்பல்களுக்கு ஏன் நரைநிற மை பூசப் பெறுகின்றது?
13. நிலப் புழுக்களால் வயலுக்கு என்ன நன்மை விளைகிறது?
14. நவம்பர் 11-ஆம் நாள் என்ன தினத்தின் ஞாபகமாகக் கொண்டாடப் படுகிறது?
15. செல்வன், உலோபி, கீர்த்தி ………………. இச்சொற்களின் மறுதலைச் சொற்களை எழுது?
16. நவக்கிரகங்கள் எவை?
17. பல்லுள்ள பறவை எது?
18. ஈசல் எக் காலங்களில் பறக்கும்?
19. உயரத்திலிருந்து குதித்தால் பூனைக்கு நோவாமல் இருப்பது ஏன்?
20. அச்சடித்த கடிதங்களை தபாலில் அனுப்ப என்ன கட்டணம் செலுத்த வேண்டும்?
21. (1) தோணியில் சுக்கான் எங்கு உள்ளது (2) அதன் பயன் என்ன?
22. சீனர் எவ்வாறு உணவு அருந்துவர்?
23. வட தென் துருவங்களின் இராப்பகலின் காலம் எவ்வளவு?
24. கிளி, கிழி இச்சொற்களின் கருத்துக்களை எழுதுக.
25. பேரீச்சம்பழம் எந்நாட்டினின்று நமக்கு அனுப்பப்படுகின்றது?
39
1. நன்னூல் செய்த புலவரின் பெயர் யாது?
2. குரங்கு காடுகளில் வசிக்கும். இவ்வசனத்தில் எழுவாய் பயனிலைகளைக் கூறு.
3. சிலந்திகள் ஏன் வலை பின்னுகின்றன?
4. “தெலிபதி (Telepathy) என்பது யாது?
5. அச்சு வித்தையைக் கண்டுபிடித்தவர் யார்?
6. மாமிசம், நஞ்சு, முயற்சி, மூடத்தனம் - இவற்றின் மறுதலைப் பொரு ளுள்ள சொற்களைத் தருக.
7. இராமாயணம் தமிழில் செய்த புலவர் யார்?
8. பூனைக்கு இரவில் பார்க்க எப்படி முடிகிறது?
9. ‘நாளை வரும் பலாக்காயில் இன்று வரும் களாக்காய் நன்று’ இப் பழமொழியின் கருத்து என்ன?
10. மன்னனிற் கற்றோன் ………………….. கீறிட்ட இடங்களை நிரப்பு.
11. கிறித்துவ, பௌத்த, மகமதிய வேதங்களின் பெயர்களைக் கூறுக.
12. ஆசியாவையும், ஆப்பிரிக்காவையும் பிரிக்கும் கால்வாய் எது?
13. துருக்கி இராசா எவ்வாறு அழைக்கப்பட்டான்?
14. காண்டாமிருகம் எத்தேசத்தில் அதிகமாக உண்டு? அதற்குக் கொம்பு எத்தனை?
15. மேல் கோர்ட்டு விசாரணையில் எத்தனை ஜூரிமார் இருப்பார்?
16. மீன்கள் பல முட்டைகளையும் பட்சிகள் சில முட்டைகளையும் இடுவது ஏன்?
17. மனித முகமும் பசுவின் உடலும் உள்ளது என்று சொல்லப்படும் விலங்கு எது?
18. (1) இந்தியா எத்தனை மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது? அவற்றின் தலை நகரங்கள் எவை?
19. விதைகள் ஏன் தொலைவிடங்களில் பரவுகின்றன?
20. பாம்பு ஏன் படமெடுக்கிறது?
21. இந்திய அரசாங்க சபையில் எத்தனை அங்கத்தவர்கள் இருக்கின்றனர்?
22. அரசாங்க சபை அங்கத்தவர் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்?
23. அரசாங்க சபை அங்கத்தவரின் மாதச் சம்பளம் எவ்வளவு?
24. மந்திரிமாரின் சம்பளம் எவ்வளவு?
25. உள்ளூர் தந்திக்கிரயம் எவ்வளவு?
40
1. மின்சார அதிர்ச்சியைப் பரப்பக்கூடிய மீன் எது?
2. பாக்டீரியாக்களில் (Bacteria) எத்தனை வகைகள் வரையில் உண்டு?
3. அவற்றில் தீமை விளைப்பன எத்தனை வகைகள்?
4. பாக்டீரியா என்னும் கிருமிகள் எவ்வாறு பெருகுகின்றன?
5. நெருப்புக் காய்ச்சல் எவ்வாறு உண்டாகின்றது?
6. அதனைத் தடுக்க என்ன செய்தல் வேண்டும்?
7. நோயாளர் எப்படிப்பட்ட இடத்தில் படுத்திருக்க வேண்டும்?
8. களைப்பு என்றால் என்ன?
9. ஓய்ந்து இருப்பதால் களைப்பு எப்படி நீங்கும்?
10. அம்மைத்தடுப்புக்காக ஊசியால் செலுத்தும் மருந்து எது? அதைச் செலுத்துவதால் அம்மை நோய் ஏன் வராது?
11. முட்டையிட்ட கோழி ஏன் கொக்கரிக்கிறது?
12. திருக்குறள் செய்த புலவர் யார்?
13. பண்ணிய பயிரிற் …….. ……….. கீறிட்ட இடங்களை நிரப்பு.
14. “பராம்பொடு பழகேல்” இம் முதுமொழியின் பொருள் யாது?
15. பண்டார சன்னதிகள் என்போர் யார்?
16. தேனீக்கு எத்தனை இறக்கைகள் உண்டு?
17. பூமி தன்னைத் தானே சுற்றும் வேகம் என்ன?
18. ஒரு கூட்டிலுள்ள தேனீக்கள் எத்தனை வகைப்படும்?
19. இலங்கையின் தலைநகரம் எது?
20. கிறித்துவ சமய சின்னம் எது?
21. இந்தியாவில் பழைய காலக் கற்சமாதி எங்கு உண்டு?
22. ஆரஞ்சுப் பழம் (Orange) உலகத்தில் எங்கு அதிகம்?
23. நடுக்கடலில் செல்லும் கப்பல் அபாயம் வந்தால் என்ன செய்யும்?
24. சிமெண்டு எப்படிச் செய்யப்படுகிறது?
25. செனரல் பிராங்கோ என்பவர் யார்?
41
1. எவ்வகையான குற்றங்களுக்குத் கொலைத் தண்டனை விதிக்கப்படு கின்றது?
2. முடிக்குரிய (கிரௌன்) பிராசிகூடர் என்றால் என்ன?
3. மூன்றாம் வகுப்புப் பிரயாணி எவ்வளவு நிறை உள்ள சாமான்களைக் கட்டணமின்றிப் புகையிரதத்தில் எடுத்துச் செல்லலாம்?
4. பழைய அழிபாடுகள் (Ruins) காணப்படும் இரண்டு முக்கிய இடங்கள் எவை?
5. சென்னைப் பட்டினத்துக்குத் தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது?
6. அரசினர் நடத்தும் பைத்திய ஆ°பத்திரி எங்குள்ளது?
7. போர்த்துக்கேயர் இந்தியாவுக்கு எப்போது வந்தனர்?
8. சிங்கப்பூர் பட்டினம் எப்போது கட்டப்பட்டது?
9. துணிப் பெட்டிகளில் நெப்தலின் உருண்டை போடுவதின் காரணம் என்ன?
10. மீன் எப்படி மூச்சுவிடும்?
11. சீவக சிந்தாமணி செய்த புலவர் யார்?
12. “கூரம்பாயினும் வீரம் பேசேல்” இம் முதுமொழியின் பொருள் யாது?
13. வெள்ளம் வருமுன் ……………………. கீறிட்ட இடங்களை நிரப்பு.
14. பொற்காலம் என்பது எதை?
15. குடிவெறி, மூளையின் எந்தப் பகுதியைத் தாக்குகிறது?
16. தெருக்களில் இரவில் சிவப்பு வெளிச்சம் வைக்கப்பட்டிருந்தால் எதை அறிவிக்கும்?
17. க்ஷய ரோக வைத்தியசாலை எங்கே இருக்கிறது?
18. ஒருவனைப் பைத்திய நாய் கடித்தால் அவன் எங்கு சிகிச்சை பெற வேண்டும்?
19. வெந்நீருற்றுக்களில் மீன்கள் வாழ்கின்றனவா?
20. மண்பானையில் நீர் குளிர்வது ஏன்?
21. இக் காலத்தில் நீரைச் சுத்தம் செய்யும் முறைகள் எவை?
22. சாக்கடலில் (Dead Sea) விழும் ஒருவன் ஏன் அமிழ்ந்து விடமாட்டான்?
23. ஆண், பெண் மிருகங்களில் எவை அழகுடையன?
24. பசு, முயல், குதிரை, யானை இவற்றின் பிள்ளைகளைக் குறிக்கும் சொற்கள் எவை?
25. “ஈவது விலக்கேல்” என்பதன் பொருள் யாது?
42
1. பெண் கொசுக்கள் ஏன் இரத்தத்தைக் குடிக்கின்றன?
2. பிலிப்பைன் தீவுக் கூட்டத்தில் எத்தனை தீவுகள் உண்டு?
3. உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இந்தியக் கட்டிடம் எது?
4. ஒட்டகங்களின் பாதங்கள் சப்பையாக இருப்பது ஏன்?
5. கதர் ஆடை என்பது யாது?
6. கடற் காற்று பகலிலும் தரைக்காற்று இரவிலும் வீசுவதற்குக் காரணம் யாது?
7. பப்பாளி அன்னாசி எந்நாட்டுச் செடிகள்?
8. சிலந்தி ஏன் பூச்சி அன்று?
9. நெய்யரியைக் கடை மாணாக்கருக்கு உவமிப்பது எதனால்?
10. வானம் ஏன் விழுவதில்லை?
11. கடற்கரையில் ஏன் மணல் அதிகம் காணப்படுகிறது?
12. நாம் வெய்யிலில் செல்லும்போது தலை ஏன் மிகச் சூடு அடைகிறது?
13. புத்த சமயத்தவர் எவ்வகைச் சமய அடையாளத்தைப் பயன்படுத்து கின்றனர்?
14. சுட்ட சிப்பியில் தண்ணீர் விட்டால் சூடு உண்டாவது ஏன்?
15. இந்தியாவில் மிளகுக்குப் பேர்போன இடம் எது?
16. மலையாளத்திலிருந்த பேர்போன ஓவிய ஆசிரியர் யார்?
17. உலகில் பெரிய உப்பு நீர் வாவி எது?
18. பாம்பையும் மீனையும் போன்ற நீர்ப் பிராணி எது?
19. எலிக்கும் மூஞ்சூறுக்குமுள்ள வித்தியாசம் என்ன?
20. கையையும் நகத்தையும் எப்போதும் சுத்தமாக வைத்திருத்தல் ஏன் அவசியம்?
21. பிரகாசமில்லாத வெளிச்சத்தில் படித்தல் ஏன் கூடாது?
22. பிளேக் நோய் உண்டாவதற்குக் காரணம் யாது?
23. நீர் மூழ்கிக் கப்பல் என்றால் என்ன?
24. “ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதாவது” என்பதை விளக்கு.
25. வான்கோழிக்கு ‘ரேக்கி’ என்னும் பெயர் ஏன் உண்டாயிற்று?
43
1. க°தூரிமான் எங்கு காணப்படுகின்றது?
2. ஆகாயக் கப்பலின் அதிக வேகம் என்ன?
3. உலகத்திலேயே பெரிய பட்டினம் எது?
4. சாதாரணமாக ஒரு தெருவின் அகலம் எவ்வளவு?
5. சப்பாத்திச் செடிக்கு முள்ளால் என்ன பயன்?
6. வருமான வரி செலுத்தவேண்டியவர் யார்?
7. பெப்பர் என்னும் பெயர் எப்படி உண்டானது?
8. யாழ்ப் பறவை எத்தேசத்தில் காணப்படுகிறது? அதன் சிறப்பு என்ன?
9. புறாக்களில் எத்தனைவகை உண்டு?
10. பாம்பு ஏன் படமெடுக்கிறது?
11. “நாலடியார்” என்ற நூல் யாரால் செய்யப்பட்டது?
12. ஒட்டக்கூத்தர் செய்த ஒரு நூலின் பெயர் கூறு.
13. தொங்கு தோட்டம் என்பது யாது?
14. “அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் குடைபிடிப்பான்” இப் பழமொழியை விளக்குக.
15. எந் நாடுகளிலுள்ளவர்களுக்குக் கம்பளி உடை வேண்டும்?
16. மைக் கறையைப் போக்குவது எப்படி?
17. கம்பளி உடையின் சிறப்பு யாது?
18. மரங்கன்றுகளை ஒன்றோடு ஒன்று ஒட்டுவதால் என்ன பயன்?
19. வண்ணாத்திப் பூச்சிகள் சில, இலைகளின் நிறமாக இருப்பது என்ன?
20. காற்றில்லாத இடத்தில் விளக்கு எரியுமா?
21. கிணற்று நீர் எவ்வாறு அசுத்தமாகும்?
22. வீதிகளின் ஓரங்களில் ஏன் மரங்களை நடுகிறார்கள்?
23. மின்சாரம் ஒருவனைத் தாக்குதல் என்றால் என்ன?
24. மின்சார விளக்கு எப்படி எரிகிறது?
25. படிக்கும் புத்தகத்துக்கும் கண்ணுக்கும் இடையில் எவ்வளவு தூரம் இருக்க வேண்டும்?
44
1. தண்ணீரோ பாலோ மிகப் பாரமுடையது?
2. ஒரு கோழி எவ்வளவு காலம் வாழும்?
3. கோழிக்குஞ்சுகள் நடக்கும்போது ஏன் தலையை முன்னுக்கும் பின்னுக்கும் ஆட்டுகின்றன?
4. இந்தியாவின் சனத் தொகை என்ன?
5. தாவர பட்சணிகள், மாமிச பட்சணிகள் என்றால் என்ன?
6. நெருப்பு எரியப் பயன்படும் வாயு எது?
7. வியாதியைப் பரப்பும் உயிர்கள் எவை?
8. நெருப்பை அணைக்கப் பயன்படுத்தப்படும் இரு பொருள்கள் கூறுக.
9. பூனைக்குட்டிகள் பிறந்த எத்தனை நாட்களில் கண்திறக்கும்?
10. நகரங்களில் பெருந்தீ எப்படி அணைக்கப்படுகிறது?
11. ஒரு மண்ணெண்ணெய்த் தகரத்தில் எத்தனை காலன் எண்ணெய் பிடிக்கும்?
12. நடந்து செல்வோர் தெருவில் எப்படிப் போதல் வேண்டும்?
13. அசைபோடும் மூன்று பிராணிகளின் பெயர் கூறுக.
14. தண்ணீர் நீராவியாகும்போது எத்தனை மடங்காக விரிகிறது?
15. முதல் முதல் நீராவி இயந்திரத்தைச் செய்தவர் யார்?
16. நாம் சுவாசிப்பது ஏன்?
17. பிராணிகள் இடம் விட்டு இடம் செல்வது ஏன்?
18. விதையிலிருந்து உண்டாகாத மூன்று தாவரங்கள் கூறு.
19. ஈ எப்படி கண்ணாடிப் பாத்திரத்தின் மேலும் கீழும் நடக்கிறது?
20. சந்திரனில் தோன்றும் மறுக்கள் யாவை?
21. மரம் செடிகளில் ஏன் அதிக விதைகள் உண்டாகின்றன?
22. தாம் இருக்கும் இடத்தைவிட்டுப் பிரிந்தால் பயன்படாத இரண்டு பொருள்கள் கூறு.
23. கற்களின் கீழ் வளரும் புல்பூண்டுகள் ஏன் வெள்ளையாக இருக்கின்றன?
24. காப்பிரிகள் அமெரிக்காவில் காணப்படுவதற்குக் காரணம் என்ன?
25. காப்பிரிகள் எத்தேச மக்கள்?
45
1. இந்தியாவின் எப் பாகங்களில் தென்னை மிகுதியாகக் காணப்படும்?
2. உருளைக் கிழங்கில் ஏன் கண்போன்ற அடையாளங்கள் இருக்கின்றன?
3. செடி கொடிகள் மேல்நோக்கி வளர்வது ஏன்?
4. கோதுமையை அதிகமாக விளைவிக்கும் மூன்று நாடுகள் எவை?
5. அகத்தின் அழகு ……………………… கீறிட்ட இடங்களை நிரப்பு.
6. மலைகளின் இடையே உள்ள பாதைகள் ஏன் கணவாய்கள் எனப்படுகின்றன?
7. அணுவின் பரிமாணம் என்ன?
8. காகிதம் செய்யப் பயன்படும் இரண்டு பொருள்கள் கூறு.
9. சூரியனை உதயமாகவும் மறையவும் செய்வது எது?
10. குட்டி ஈனும் இரண்டு மீன்கள் கூறு.
11. அதிகமாக மந்தைகள் வளர்க்கும் மூன்று தேசங்கள் யாவை?
12. வெப்ப மண்டலக் காடுகள் எங்கு இருக்கின்றன?
13. °ரெப்°, பிறேயா° பம்மா° என்பன என்ன? எங்கு உள்ளன?
14. வாடகைக்கு விடும் மோட்டார் வண்டியையும், சொந்த உபயோகத்துக்கு உரிய மோட்டார் வண்டியையும் பிரித்தறிவது எப்படி?
15. கோடையில் ஏன் நீண்ட பகலும், மாரியில் குறுகிய பகலும் உண்டா கின்றன?
16. நாலுவேதம், நாலு உலகம், நாற்படை என்பவற்றைக் கூறுக.
17. மத்தியதரைக் கடல் பிரதேசங்களிலுள்ள வெப்ப நிலைமைக் கூறு.
18. புதிய உலகத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
19. நைல் நதி எங்கு உள்ளது? அதன் நீளம் எவ்வளவு?
20. சுழல் காற்று எப்படி உண்டாகிறது?
21. உலகத்திலுள்ள புல் வெளிகள் மூன்று கூறுக.
22. கங்கை, மகாவலிகங்கை, அமேசான் இவை என்ன?
23. கடலில் ஏன் எப்போதும் அலை காணப்படுகிறது?
24. அவிந்து போகாத எரிமலை எங்கு இருக்கிறது?
25. இலங்கையில் வசிக்கும் மூன்று சாதியார் யாவர்?
46
1. திரைகளின்மேல் ஏன் வெண்ணுரைகள் காணப்படுகின்றன?
2. நிழல் எப்படி உண்டாகிறது?
3. இங்கிலாந்தில் இரும்புத் தொழிலுக்குப் பேர்போன பட்டினம் எது?
4. தமிழில் சொற்பொருள் உணர்த்தும் பழைய நூல்களுக்கு என்ன பெயர்?
5. திருப்புகழ் செய்தவரின் பெயர் யாது?
6. கற்கை நன்றே கற்கை நன்றே ……………….. கீறிட்ட இடங்களை நிரப்புக.
7. முக் கனிகள் எவை?
8. சென்னை மாகாணத்தில் குட்டரோகிகளுக்கு வைத்தியசாலை எங்கு இருக்கிறது?
9. சூடான தேசங்களில் வெள்ளை உடை ஏன் சிறந்தது?
10. ஒரு கண்ணாடிக் குப்பியை (கிளா°) கவிழ்த்து நீருள் அமிழ்த்தினால், ஏன் அதனுள் நீர் புகமாட்டாது?
11. மண்புழுவை இரண்டு துண்டாக்கி விட்டால் என்ன நிகழும்?
12. எத்தனை ரூபாய்க்கு மேற்பட்ட இரசீதுக்கு முத்திரை ஒட்டவேண்டும்? எவ்வளவு?
13. வட அமெரிக்காவிலுள்ள துருவ நாடுகளில் வசிக்கும் மக்கள் யாவர்?
14. ஒரு குதிரைப் பலம் (Hores Power) என்பது யாது?
15. நாம் உண்ணும் உணவில் எவ்வகையான விசேட அம்சங்கள் கலந்திருக்கவேண்டும்?
16. சீவசத்து (விட்டமின்) கள் என்றால் என்ன?
பல வேறு சீவசத்தைக் கொடுக்கும் உணவுப் பொருள்கள் யாவை?
17. ஒரு வருடத்தில் எலுமிச்சை எத்தனை முறை காய்க்கிறது?
18. தேம்பாவணி என்னும் நூலைச் செய்த புலவர் யார்? அவர் எத்தேசத்தவர்?
19. வாஷிங் சோடா எதிலிருந்து செய்யப்படுகிறது?
20. கான்பியூஷிய° காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த பெரியார் யார்?
21. மேல்நாட்டு உடை அலங்காரத்துக்கு (Fashion) மத்திய இடமாகக் கருதப்படுவது எது?
22. உலகம் முழுமையிலும் காணப்படும் வண்டினங்கள் எத்தனை என்று கணக்கிடப்படுகின்றன?
23. ஹனிபல் என்பவன் யார்?
24. மலையில் ஏறுவது கடினமாகவும், இறங்குவது இலகுவாகவும் இருப்பது ஏன்?
25. கண் புருவத்தாலும், கண்ணிமையாலும் என்ன பயன்?
47
1. புத்தகாயா எதனால் சிறப்பு உடையது?
2. மகமதியரின் பரிசுத்தமான இரண்டு இடங்கள் எவை?
3. பனிக்கட்டியைத் தின்றால் ஏன் கண்வலி உண்டாகிறது?
4. சிலுவைப் போர்கள் யார் யாருக்கு இடையில் நடந்தன?
5. பிரித்தானியாவை முதல் முதல் வென்ற உரோமானியன் யாவன்?
6. உரோமர் பிரித்தானியாவை விட்டு நீங்கிய காரணம் என்ன?
7. வண்டிச் சக்கரத்துக்கு இரும்பு வளையத்தைச் சூடாக்கி இறுக்குவது ஏன்?
8. எத் திசையில் தலைவைத்து உறங்குதல் கூடாது?
9. விவாக காலத்தில் மணமகளுக்குக் காட்டப்படும் நட்சத்திரம் எது? எதற்காகக் காட்டுகின்றனர்?
10. தாவர உணவு கொள்பவர்களுக்கு நெய் ஏன் அவசியம்?
11. கலப்பையிலுள்ள உறுப்புக்களைக் கூறுக.
12. நீகிரோ சாதியாரின் குணம் குறிகள் எவை?
13. கற்பெனப்படுவது ……………… கீறிட்ட இடங்களை நிரப்புக.
14. படுக்கையினின்றும் புரண்டு தவறி விழுந்தால் ஏன் அதிகம் நோவதில்லை?
15. வியர்வை ஏன் உண்டாகிறது?
16. குளவி கொட்டினால் ஏன் கடுப்பு உண்டாகிறது?
17. சீட்டு ஆட்டம் எப்போது எங்கே கண்டுபிடிக்கப்பட்டது.
18. எகிப்திய பிரமிட் சமாதிகளின் காலம் யாது?
19. எகிப்திய பெரிய பிரமிட் சமாதியின் உயரமும் பருமனும் எவ்வளவு?
20. உடம்பில் அடிபட்டால் ஏன் வீக்கம் உண்டாகிறது? நாம் ஏன் வீக்கத்தை அழுத்திப் பிடிக்கின்றோம்?
21. பட்சிகளின் அலகுகள் பலவகையாக இருப்பதன் காரணம் யாது?
22. சிங்கம், புலி, கரடி முதலிய மிருகங்களைக், காட்டிலும் மலையிலும் காணமுடியாத தேசம் எது?
23. ஆ°திரேலியாவிலுள்ள தேன் ஈக்கள் எவ்வகையின?
24 (1) “சிலேட்” என்பது யாது (2) அது எத்தேசத்தில் கிடைக்கிறது?
25. கிறித்து வேதத்துக்குப் பைபிள் என்னும் பெயர் ஏன் உண்டாயிற்று?
48
1. (1) கடற்பஞ்சு என்பது யாது? (2) அது எவ்வாறு எடுக்கப்படுகின்றது? அது தாவரத்தைச் சேர்ந்ததா? இயங்கும் உயிரினத்தைச் சேர்ந்ததா?
2. (1) மரங்கொத்திப் பறவை எப்படி மரங்களில் ஏறுகின்றது? (2) ஏன் மரங்களைக் கொத்துகின்றது?
3. மயிர்க் குட்டிப் புழுவுக்கு மயிரினால் என்ன பயன்?
4. மாடுகள் ஏன் அசைபோடுகின்றன?
5. ஆ°திரேலிய கறுப்பு மனிதர் பயன்படுத்தும் “பூமறாங்” “வளைதடி” என்னும் ஆயுதத்தைப் பற்றி என்ன அறிவாய்?
6. இந்திய சனத் தொகையில் எத்தனை வீதத்தினருக்கு எழுதப் படிக்கத் தெரியும்?
7. ஒல்லாந்த தேசம் கடல் மட்டத்துக்குக் கீழ் உள்ளது. கடல்நீர் ஏன் உள்ளே வராமல் இருக்கின்றது?
8. இரகு வமிசம் என்னும் நூல் செய்த புலவரின் பெயர் யாது?
9. இந்தியா இரப்பர் என்பது யாது?
10. இரப்பர் என்னும் பெயர்க் காரணம் என்ன?
11. நியூ° (News) என்னும் சொல் எப்படி உண்டாயிற்று?
12. முற்காலத்தில் எவ்வகை முகம்பார்க்கும் கண்ணாடிகள் பயன்படுத்தப் பட்டன?
13. சக்கரங்களுக்கு ஏன் எண்ணெய் அல்லது கொழுப்புப் போடுகிறார்கள்?
14. சவுக்காரம் எப்படிச் செய்யப்படுகிறது?
15. கொக்கோ விதையிலிருந்து செய்யப்படும் உணவுப் பொருள் எது?
16. கருப்பஞ்சாறு அல்லாத வேறு என்ன பொருள்களிலிருந்து சீனி செய்யப்படுகின்றது?
17. தகரம் என்பது யாது?
18. பாதரசம் என்னும் உலோகம் எவ்வகையினது?
19. பாதரசம் பயன்படுத்தப்படும் இரண்டு கருவிகள் கூறுக.
20. சூரியன் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தன்னைத் தானே சுற்றி வருகின்றது?
21. கல்கத்தா இருட்டறையைப் பற்றி என்ன அறிவாய்?
22. அல்பக்கா என்பது யாது? அதன் பயன் என்ன?
23. கிறின்விச் நேரத்திலிருந்து நம் நேரம் எத்தனை மணி முந்திப் போகிறது?
24. சீன ஆண்கள் விடும் “பன்றிவால்” என்பது யாது?
25. ஆரோட்டுமா என்பது எச் சொல்லின் சிதைவு? அதற்கு அப்பெயர் ஏன் வந்தது?
49
1. காய்ச்சல் ஏன் உண்டாகிறது?
2. அமெரிக்காவில் அடிமையை ஒழித்தவர் யார்?
3. சீனர் எழுதும் முறை யாது?
4. காகிதத்தினால் வீட்டுச் சுவர் முதலியவற்றைச் செய்யும் நாடு எது?
5. ஆப்பிரிக்காவின் தெற்கு முனைக்கு ‘நன்னம்பிக்கை முனை, எனப் பெயர் வந்ததன் காரணம் என்ன?
6. கைகுலுக்கும் வழக்கம் எப்படி உண்டாயிற்று?
7. பட்டுப்பூச்சி வளர்க்கப்படும் இடங்கள் எவை?
8. சான்சிபாரின் சிறந்த விளைபொருள் யாது?
9. கடல் நீரில் நூற்றுக்கு எத்தனை மடங்கு உப்பு இருக்கிறது?
10. முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் மிருகம் எத் தேசத்திலுண்டு? அதன் பெயர் என்ன?
11. (ஒட்டகத்தைப்போன்ற) இலாமா என்னும் மிருகம் எத்தேசத்தில் காணப்படுகின்றது?
12. “யாத்திரிக பிதாக்கள்” (Pilgrim fathers) என்போர் யார்?
13. இரட்டையர் என்னும் புலவர்களைப் பற்றி என்ன அறிவாய்?
14. கனடா தேசத்தில் மிகுதியாக விளையும் தானியம் எது?
15. கனடாவில் ஏற்படும் காட்டுத்தீ ஏன் பயங்கரமானது?
16. இத்தாலியிலுள்ள “வெனி°” நகரத்திலுள்ளவர் எப்படிப் போக்குவரவு செய்கின்றனர்?
17. உலகத்தில் வைரத்துக்குப் பேர்போன இடம் எது?
18. நயகரா நீர்வீழ்ச்சி எங்கே உள்ளது? அதன் உயரம் என்ன?
19. பிரான்சு தேசத்தில் அதிகம் கிடைக்கும் பழம் யாது?
20. (1) ஆழ்வார் (2) சமயக் குரவர் (3) சந்தான குரவர் எனப்படுவோர் யார்?
21. எகிப்து நாட்டில் பிரயாணிகள் எவ்வாறு பயணம் செய்கின்றனர்?
22. உலகில் பழய சிவன் கோயில் எங்கிருக்கிறது?
23. இலங்கையிலே சிவனொளிபாத மலையிலுள்ள அடிச்சுவட்டின் நீளம் என்ன?
24. சென்னைக்குச் சமீபத்திலுள்ள மகாபலிபுரத்திலுள்ள சிறப்பு யாது?
25. திருக்கழுக்குன்றம் என்னும் தலத்தின் சிறப்பு யாது?
50
1. சீனப் பெருஞ்சுவரின் நீளம் யாது?
2. நோபெல் பரிசு என்பது யாது?
3. மனம்போன ………….. ………….. கீறிட்ட இடங்களை நிரப்பு.
4. (1) ஒருநாளில் எத்தனை நாழிகைகள்? (2) எத்தனை நாழிகை ஒருமணி?
5. “தார்வேந்தர் கெட்டாலும் மனஞ்சிறிய ராவரோ மற்று” என முடியும் செய்யுளை எழுதுக.
6. அளவுக்கு மிஞ்சினால் ………. ………… கீறிட்ட இடங்களை நிரப்பு.
7. தீப் பறவை வேட்டைக்காரரால் துரத்தப்பட்டுக் களைத்ததால் மணலில் தலையைப் புதைக்கின்றது என்பது உண்மையா?
8. (1) குதிரை எப்படி எழுந்திருக்கிறது? (2) மாடு எப்படி எழுந்திருக்கிறது?
9. இந்தியாவில் உள்நாட்டுப் பார்சல் கட்டணம் என்ன?
10. காராச்சியிலிருந்து ஆகாயமார்க்கமாக இலண்டனுக்குச் செல்ல எத்தனை நாட்கள் செல்லும்?
11. எக்° ரே (X-Ray) என்னும் பெயர் எப்படி வந்தது?
12. ஒரு காலன் தண்ணீரின் நிறை என்ன?
13. குரங்கினத்தில் பெரியது எது?
14. பைபிளின் பழைய ஏற்பாடு எந்த மொழியில் எழுதப்பட்டது? புதிய எற்பாடு எந்த மொழியில் எழுதப்பட்டது?
15. இருதயத்துக்கு இரத்தத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் உறுப்புகளெவை?
16. உலகத்தில் எந்த இடத்தில் மிகுந்த பஞ்சு விளைவிக்கப்படுகின்றது?
17. சீத வெப்ப நிலைப்பற்றிப் பூமி எத்தனை மண்டலங்களாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது?
18. கூவுதல், கனைத்தல், ஊளையிடுதல், கத்துதல், இவற்றைச் செய்கின்ற விலங்கு அல்லது பட்சிகளின் பெயர்களை எழுது.
19. மாட்டுச் சண்டை எத் தேசத்தில் நடத்தப்படுகிறது?
20. மனித உடம்பில் எந்த உறுப்பு பித்தத்தை உண்டு பண்ணுகிறது?
21. வீட்டின்மேல் உலாவக்கூடிய இடத்துக்குப் பெயர் யாது?
22. ஆகாய விமானங்களிலிருந்து எப்படிக் குதிக்கலாம்?
23. தொழிற்சாலைகளில் புகைபோக்கிகளை ஏன் உயரமாக அமைக் கின்றார்கள்?
24. உடலில் உணர்ச்சியை மிக விரைவில் அறியும் உறுப்பு எது?
25. புகை ஏன் மேலே செல்கிறது?
51
1. மகாவம்சம் என்பது யாது?
2. “மகாவீரர்” என்பவர் யார்?
3. எரியும் விறகில் ஏன் வெடிக்கும் சத்தம் உண்டாகிறது?
4. ஜூரிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவரின் தகுதி யாது?
5. பால் பொங்கினால் ஏன் அதனை அகப்பையால் ஆற்றுகின்றோம்?
6. மூட்டைப் பூச்சியில் எத்தனை வகை உண்டு?
7. கப்பலின் இருபக்கங்கள் ஏன் கூராக இருக்கின்றன?
8. (1) இலங்கையில் உயர்ந்த மலை எது? (2) அதன் உயரம் என்ன?
9. இலங்கைத்தீவின் பெரிய நீளம் அகலம் யாவை?
10. மக்கள் தொகை மதிப்பு (Census) எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது?
11. பாம்பு தனது நஞ்சினால் இரையைக் கொல்கிறது?
அவ்(நஞ்சு)விடம் பாம்பைக் கொல்ல மாட்டாதா?
12. பனிக்கட்டி (ஐ°கட்டி)க்கு ஏன் மரத்தூள் போட்டு வைக்கிறார்கள்?
13. தேயிலை ஊறவிடும் பாத்திரத்தின் மூடியில் ஏன் சிறு துவாரம் இருக்கிறது?
14. செலுலாயிட் எப்படிச் செய்யப்படுகிறது?
15. பூச்சிகளுக்கு ஏன் இரு கொம்புகள் இருக்கின்றன?
16. பீங்கான் பாத்திரம் (China Ware) என்பது என்ன?
17. டார்வின் என்பவர் மனிதரின் உற்பத்தியை எப்படிக் கூறி இருக்கிறார்?
18. “ஆல்ப்°” மலை எத்தேசத்தில் உள்ளது?
19. பனிக்கட்டி உறைந்து கிடக்கும் தேசங்களில் மக்கள் எவ்வாறு நடக்கின்றனர்?
20. உலகில் பெரிய நாடக ஆசிரியராகக் கருதப்படுபவர் யார்?
21. ஒரு திமிங்கிலத்திலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெய் எவ்வளவு?
22. நாம் ஏன் கோயிற் கேணிகளில் குளித்தல் கூடாது?
23. மத்திய இரேகையில் பூமியின் சுற்றளவு என்ன?
24. காற்று வீசுவது எதனால்?
25. கண்ணீர்ப் புகை என்பது என்ன?
52
1. ஒரு இராணித் தேனீ எத்தனை ஆண்டுகள் வாழும்?
2. எப்பொழுதும் இராப்பகல் சமமாக இருக்கும் தேசங்கள் எவை?
3. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஆகாயப் போக்குவரவு எவ்வாறு நடத்தப்படுகின்றது?
4. ஒலி ஆகாய வெளியில் பார்க்கத் தண்ணீரில் எத்தனை மடங்கு வேகம் அதிகமாகச் செல்லும்?
5. ஒரு பரிசோதனை விளக்கு (Search Light) எவ்வளவு தூரம் வெளிச் சத்தைப் பரப்பக்கூடும்?
6. எ (a) விட்டமின் எந்த உணவுப் பொருள்களில் உண்டு? அதனால் என்ன பயன்?
7. பி. (b) விட்டமின் என்ன பொருள்களில் உண்டு. அதனால் என்ன பயன்?
8. ‘நடுக்கடலிற் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்’ இப் பழமொழியின் கருத்து என்ன?
9. நாம் ஒரு நாளில் சுவாசிக்கும் காற்று எவ்வளவு என்று கணக்கிடப் படுகிறது?
10. குசேல உபாக்கியானம் செய்த புலவரின் பெயர் யாது?
11. சி (c) விட்டமின் எந்த உணவுப் பொருள்களில் உண்டு? அதனால் என்ன பயன்?
12. நீராவிச் சக்தியைக் கண்டுபிடித்தவர் யார்?
13. வச்சிரம் என்னும் பசை எப்படிச் செய்யப்படுகிறது?
14. மூன்று வயதில் பியானா வாசித்த ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறாயா?
15. மனிதனால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் எது?
16. இலங்கைக்குப் பௌத்த சமயத்தைக் கொண்டு சென்றவர் யார்?
17. யாருடைய ஆட்சியின்கீழ் ஏதென்° நகரம் சிறப்புடன் விளங்கியது? அக் காலத்தில் விளங்கிய தத்துவ ஞானியரில் சிறந்தவர் யார்?
18. பண்டைக் காலத்தில் தென் இந்தியாவில் இருந்த இராச்சியங்களின் பெயர்கள் என்ன?
19. ஆட்ச்மிடீ° (Archmedes) என்பவர் யார்?
20. தொடக்கத்தில் விலங்குகளும் பறவைகளும் ஏன் வளர்க்கப்பட்டன?
21. பெர்னாட்ஷா என்பவர் யார்?
22. சார்ள்ளி° சாப்ளின் என்பவர் யார்?
23. கி.மு. என்றால் என்ன? கி.பி. என்றால் என்ன?
24. லெமூரியாக் கண்டம் என்பது எப் பகுதியைக் குறிக்கும்?
25. சேர, சோழ, பாண்டியர்களின் பழைய தலைநகரங்கள் எவை?
53
1. தமிழ் மூவேந்தரின் கொடிகள் யாவை?
2. தமிழ் மூவேந்தரின் மாலைகள் எவை?
3. எப்படிப்பட்ட நிலத்தில் தென்னை செழிப்பாக வளரும்?
4. கிரகங்களில் பெரியது எது?
5. கிரகங்களில் சிறியது எது?
6. அரிசி முக்கிய உணவாக இருக்கின்ற ஐந்து பிரதான நாடுகள் கூறுக.
7. இந்தியாவின் தலைநகரம் எது?
8. நாம் எத்தொழில்களுக்கு நிலக்கரியைப் பயன்படுத்துகின்றோம் ?
9. எத் தேசத்திலிருந்து ஆட்டு உரோமத்தைப் பெறுகின்றோம்?
10. மார்கோப் போலோ காலத்தில் பட்டு முதலிய பொருள்கள் சீனாவி லிருந்து ஐரோப்பாவுக்கு எவ்வாறு கொண்டு போகப்பட்டன?
11. எ°கிமோவினரின் வாழ்க்கை முறையில் வெப்ப நிலை என்ன மாற்றல்களைச் செய்து விட்டது?
12. இயற்கையாகவுள்ள தொற்று நிவாரணிகள் எவை?
13. நமக்குத் தேகாப்பியாசம் ஏன் இன்றியமையாதது என்பதை ஒரு வாக்கியத்தில் கூறுக.
14. நாம் உண்ணும் உணவு எளிதில் சீரணிப்பதற்கு இன்றியமையாத இரு ஏதுக்கள் எவை?
15. ஒரு வீதியின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்குப் போகுமுன், நீர் கவனிக்க வேண்டியவை யாவை?
16. விதை முளைத்தற்கு வேண்டிய மூன்று முக்கிய ஏதுக்கள் எவை?
17. தண்ணீரிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட மீன்கள் இறப்பது ஏன்?
18. செஞ்சட்டையினர் (Reds) என்பது யாரைக் குறிக்கும்?
19. சூலை (July) நாலாம் திகதியில் என்ன கொண்டாட்டம் நடத்தப்படுகிறது?
20. உரோமன் கத்தோலிக்கரால் அல்லது சைவசமயத்தினரால் பரிசுத்தமாக எண்ணப்படும் 3 இடங்களின் பெயரை எழுது.
21. யூதரின் தாய் நாடு எது?
22. கான்பூர் எத்தொழிலுக்குப் பேர் போனது?
23. குருமாரால் ஆளப்படும் ஒரு நாடு கூறு.
24. நாம் ஆகாய விமானத்தில் மேலே சென்றால் அதை விட்டுப் பூமி சுழன்று சென்று விடாதா?
25. வானக் கல்கள் எரிந்து விழுவது ஏன்?
54
1. எண்ணெய் நீரில் மிதப்பது ஏன்?
2. இப்பொழுது கண்டு பிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதங்களில் மிகப் பயங்கரமானது எது?
3. அணுக்குண்டு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் உலோகம் எது?
4. பாலை மிகச் சூடாகக் காய்ச்சுவதால் என்ன கெடுதி உண்டாகிறது?
5. “சாக்” என்னும் சுண்ணாம்புப் பாறை எப்படி உண்டாகிறது?
6. விமானங்களைக் கொண்டுச்செல்லும் கப்பல் (air craft carrier) எவ்வகையினது?
7. நியுயார்க்கில் ஏன் பல அடுக்குமாடி வீடுகள் கட்டுகிறார்கள்?
8. ஒரு யானையின் உயரம் என்ன?
9. உலகில் பெரிய தொலைவு நோக்கி எங்குள்ளது? அதன் குறுக்களவு என்ன?
10. தகரப் புட்டிகளில் உணவுகளை அடைத்துப் பக்குவப்படுத்துமுன் என்ன செய்யப்படுகிறது?
11. காகிதம் அதிகம் உற்பத்தியாக்கும் நாடு எது?
12. உயிர்போன உடல் ஏன் நீரில் மிதக்கிறது?
13. விலங்குகளும் பறவைகளும் இடம் விட்டு இடம் செல்வதற்கு மூன்று காரணங்கள் எவை?
14. ஓர் மோட்டார் வண்டி விபத்து நேரிட்டால் நீர் செய்ய வேண்டிய மூன்று காரியங்கள் எவை?
15. புழுதியிலிருந்து பரவும் இரு நோய்கள் எவை?
16. தண்ணீரில் மூழ்கியவனை வெளியில் எடுத்தவுடன் செய்ய வேண்டிய முதல் 3 செயல்கள்?
17. தண்ணீர் உறையும்போது விரிகிறதோ? சுருங்குகிறதோ?
18. நீரினால் பரப்பப்படும் 3 தொற்று நோய்கள் எவை?
19. காட்டுச் சுரத்தைத் தடுக்க 3 முறைகள் எவை? பின்வரும் சந்தர்ப்பங் களில் என்ன செய்வீர்?
20. பக்கத்தில் நின்றவரின் கால்விரலில் நீர் மிதித்து விட்டால்?
21. உம்முடைய தகப்பனார், வீட்டில் இல்லாத சமயம் அவரைக் காண வந்தவர் உம்மை விசாரித்தால்?
22. உம்முடைய பாடசாலையின் தலைவரை நீர் வழியில் கண்டால்?
23. நிற்கும் வண்டிக்குப் பின்னால் ஏன் உரோட்டுக்குக் குறுக்கே ஓடக் கூடாது?
24. நிற்கும் மோட்டார் வண்டியின் பின் பக்கத்தில் ஏன் விளையாடக்கூடாது?
25. எதிர்ப் பக்கமாக ஓடிக் கொண்டிருக்கும் இரு மோட்டார் வண்டிகளிடை யில் நீர் அகப்பட்டுக் கொண்டால் என்ன செய்வீர்?
55
1. ஒரு கூட்டிலுள்ள தேனீக்கள் எத்தனை வகைப்படும்?
2. பயிரிடுவோர்க்கு விரோதமான மூன்று பறவைகளின் பெயர் கூறு?
3. நேதாஜி என்ற பெயர் யாரைக் குறிக்கும்?
4. வேம்பு, நாவல், இலுப்பை எம் மாதங்களில் பூவிடுகின்றன?
5. உலகில் உயரமான மலை எது?
6. நட்சத்திரங்களைப் பற்றிக் கூறும் நூலுக்குப் பெயர் யாது?
7. தூர கிழக்குத் தேசம் என்னும் தேசங்கள் எவை?
8. நான்கு பருவ காலங்கள் எவை?
9. இந்துக்கள் ஒரு ஆண்டை எத்தனைப் பருவ காலங்களாகப் பிரித்தனர்?
10. 8 மணி நேர உடல் உழைப்பு எத்தனை மணிநேர மூளை உழைப்புக்குச் சமன்?
11. குதிரை, பசு, எருமை, நாய் இவற்றின் பிள்ளைகளுக்குப் பெயர் என்ன?
12. “வெள்ளை யானை வளர்த்தல்” என்றால், அதன் கருத்தென்ன?
13. அறிவைக் குறிக்க வழங்கும் பட்சி எது?
14. துப்பாக்கிச் சத்தம் கேட்குமுன் வெளிச்சம் தெரிவது ஏன்?
15. வெள்ளை மாளிகை (White House) என்பது என்ன?
16. யானைகளை அகப்படுத்த அடைக்கப்பட்ட இடத்துக்குப் பெயரென்ன?
17. ஓடு மீனோடி உறுமீன் வருமளவும்………………… கீறிட்ட இடங்களை நிரப்பு.
18. மயிர் ஏன் நரைக்கிறது?
19. நீந்த அறியாத விலங்கு எது?
20. சனத் தொகையின்படி உலகில் பெரிய மூன்று பட்டினங்களைக் கூறு?
21. கடிகாரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் எப்படி நேரம் அறியப்பட்டது?
22. மாட்டின் வயது அறிவது எப்படி?
23. அபின் என்பது என்ன?
24. மாமிச பட்சணம் செய்யும் தாவரங்கள் என்றால் என்ன?
25. மண்ணெண்ணெய்த் தகரத்தில் தீப்பிடித்தால் எப்படி அணைக்க வேண்டும்?
56
1. நெப்போலியன் இறந்த தீவின் பெயர் யாது?
2. உலகத்தைச் சுற்றி முதன் முதல் பயணஞ் செய்தவர் யார்?
3. விக்டோரியா கிரா° (Victoria Cross) என்பது யாது?
4. ஆதியில் பாரதம் யாரால் செய்யப்பட்டது?
5. முதல் முதல் இங்கிலாந்தில் குடை எப்போது பிடிக்கப்பட்டது?
6. உயர்ந்த கட்டடங்களின் உச்சியில் கிளையுள்ள இரும்புக் கம்பிகள் தெரிகின்றன; அவை என்ன?
7. கிறித்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையை ஏன் புனிதமாகக் கொள்கின்றனர்?
8. உலகத்தில் பெரிய கட்டடம் எது?
9. எகிப்தில் தூதன் காமனுடைய சமாதியைப் பற்றி என்ன அறிவாய்?
10. தொடக்கத்தில் கோழி எங்கு வளர்க்கப்பட்டது என்று நம்பப்படுகிறது?
11. இயந்திரத்தில் குத்தின அரிசியைவிடக் கைக்குத்தல் அரிசி ஏன் சிறந்தது?
12. வெப்ப நாடுகளில் வாழ்பவர்களின் தோல் நிறம் கறுப்பாக இருக்கிறது? இதனல் நன்மையுண்டா?
13. யானைக்கால் நோய் எப்படிப் பரவுகிறது?
14. ஒரு சிறுவனின் ஆகாரத்தில் நாள் ஒன்றுக்குக் குறைந்தது எவ்வளவு பால் சேர்க்க வேண்டும்.
15. அழுக்கை எப்படி அகற்றலாம்?
16. “டாக்டரின்” அனுமதியின்றி எவ்வகையான குயினையினை உட் கொள்ளல் ஆகாது?
17. குயினையினை எங்கே குறைந்த விலையில் பெறலாம்?
18. குதிரை, மாடு இவற்றுக்கு இலாடம் அடிப்பது ஏன்?
19. ரவிந்திரநாத் தாகூரைப் பற்றி என்ன அறிவீர்?
20. பூச்சிகள் எவ்வாறு சுவாசிக்கின்றன?
21. சிலந்திகள் எவ்வாறு சுவாசிக்கின்றன?
22. எதிரொலி எழுவதன் காரணம் என்ன?
23. நீலகிரி மலையின் சிறப்பு யாது?
24. சௌராஷ்டிரர் வழங்கும் மொழி எது?
25. டெலிவிஷன் என்பது யாது?
57
1. கிராமபோனை முதல் முதல் செய்தவர் யார்?
2. அசுணமா என்பது யாது?
3. திபேத்தின் புத்த குருமாரின் பெயருள்ள ஒரு விலங்கு கூறு.
4. நாற்கவிராச நம்பி செய்த நூல் என்ன?
5. தஞ்சைவாணன் கோவை யாரால் செய்யப்பட்டது?
6. பூச்சிகளுக்கு எவ் வகையான கண்கள் இருக்கின்றன?
7. பூச்சிகளின் உடல் அமைப்பிலுள்ள மூன்று உறுப்புக்கள் எவை?
8. பழைய கற்காலம் என்பது எதை?
9. தவளைகள் எவ்வாறு பெருகுகின்றன?
10. புதிய கற்காலம் என்பது எதை?
11. இக்கால ஏழு அதிசயங்கள் யாவை?
12. மகமதிய ஆண்டு, எந்த நாளிலிருந்து கணக்கிடப்படுகிறது?
13. வண்ணாத்திப் பூச்சிகள் வளரும்போது அடையும் மாறுதல்கள் எவை?
14. இப்போது இந்தியாவிலுள்ள இரண்டு அரசியல் தலைவர் யார்?
15. தொலைவு நோக்கியைக் கண்டு பிடித்தவர் யார்?
16. “சாரணர்” (Scouts) என்பவர் யார்? இவர்களின் வேலைகள் என்ன?
17. சிலேடை என்பதன் கருத்து என்ன?
18. உலகத்தில் வயிரமான பொருள் யாது?
19. கண்ணாடியை எதனால் வெட்டலாம்?
20. சமவெளியைவிட மலையிடங்கள் ஏன் குளிரானவை?
21. சாம்பலினால் பல் துலக்குதல் ஏன் கூடாது?
22. கவர்னருடைய மோட்டார்காருக்கு எப்படி நம்பர் இடப்படுகிறது?
23. சினிமாப் பிலிம் நிமிஷத்துக்கு எத்தனை அடி ஓடும்?
24. பால் தயிராக மாறுதல், மாப்புளித்தல் முதலியன எதனால் உண்டா கின்றன?
25. தமிழ் நாட்டின் வடக்கு எல்லை எது?
58
1. மிகக் குறைந்த போ°டல் ஆடர் (Postal Order) எவ்வளவு?
2. மிக உயர்ந்த போ°டல் ஆர்டர் எவ்வளவு?
3. போ°டாபீ° சேமிப்பு வங்கியின் வட்டி என்ன?
4. ஐக்கிய அமெரிக்காவில் எத்தனை நாடுகள் உண்டு?
5. சரிந்த கோபுரம் எங்கே இருக்கின்றது?
6. பாரிசில் மிக உயர்ந்த கட்டிடம் எது?
7. மயில் செய்வது போல தீக்கோழி செய்யமாட்டாதது எது?
8. என்ன பறவை மற்றொரு பறவையின் கூட்டுள் முட்டையிடுகிறது?
9. எகிப்தில் கி°சா (Ghizeh) விலுள்ள சிறப்பு என்ன?
10. இத்தாலியிலுள்ள பேர்போன எரிமலை எது?
11. உயிர் போன உடல் எவ்வளவு நேரத்தில் விறைக்கிறது? எவ்வளவு நேரம் விறைப்பு இருக்கும்?
12. கடலின் சிலபகுதிகள் ஏன் பச்சையாக இருக்கின்றன?
13. சோடியம் குளேரைட் என்பது என்ன?
14. நீர் வாழ் உயிர்களின் மூச்சு விடும் உறுப்புக்குப் பெயர் என்ன?
15. தண்ணீர் எப்படி உண்டாகிறது?
16. பிரிட்டிஷ் குடியேற்ற நாட்டு முத்திரைகளில் (Stamps) என்ன அடை யாளம் காணப்படும்?
17. எத்தனை வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு அரைக் கட்டணப் புகை வண்டிப் பிரயாணச் சீட்டு கொடுக்கப்படும்?
18. கிருமியன் போரோடு சம்பந்தப்பட்ட பெண் யார்?
19. M.P.H. என்பதன் பொருள் என்ன?
20. மிக உயர்ந்த மலையின் உயரமென்ன? கடலின் மிகப் பெரிய ஆழம் என்ன?
21. கடல் நீர் எத்தனை கன மைல் (Cubic mile) என்று கணக்கிடப்படுகிறது?
22. (1) பூமியின் வயது (2) உயிர்கள் தோன்றிய காலம், (3) மனிதன் தோன்றிய காலம், நாகரிகம் தோன்றிய காலம் இவற்றை ஆராய்ச்சியாளர் எவ்வாறு கூறுகின்றனர்?
23. இப்பூமியில் வாழும் மக்களின் எண் எத்தனை என்று கணக்கிடப் படுகிறது?
24. ஒருவன் நாள் முழுவதும் வேலை செய்யாமல் இருந்தாலும் எத்தனை இராத்தல் அளவு குறைவான் என்று சொல்லப்படுகிறது?
25. தென்னமெரிக்காவுக்கு மேற்கிலுள்ள தீவுகளுக்கு ஈ°டர் தீவுகள் என்று பெயர்; இப் பெயர் எப்படி உண்டானது?
59
1. பூச்சிகள் எப்படி மோப்பம் பிடிக்கின்றன?
2. தும்பியின் கண்கள் எப்படிப்பட்டவை?
3. ஊங்காரப் பறவையின் பருமை என்ன? அதன் முட்டையின் பருமை என்ன?
4. தாவரங்களில் தற்காப்பு ஆயுதங்கள் சில கூறு.
5. உலக முழுமையிலுள்ள இரேடியம் எவ்வளவு என்று சொல்லப் படுகிறது?
6. தங்கமோ பிளாட்டினமோ எது கனமானது?
7. பாதரசம் தண்ணீரைவிட எத்தனை மடங்கு பாரமானது?
8. பித்தளை எப்படிச் செய்யப்படுகிறது?
9. எப்பொருள்களைக் கொண்டு தீக்குச்சி செய்யப்படுகிறது?
10. கிருமிகளைக் கொல்லப் பயன்படுத்தும் சில மருந்துகள் கூறு.
11. விலங்குகள் எவ்வளவு பெரிதாக வளரும்?
12. இரும்பு எவ்வாறு துருப்பிடிக்கிறது?
13. கல்நார் (Asbestos) எப்படிக் கிடைக்கிறது? அதன் பயன் என்ன?
14. வெப்பமானியில் (தேமாமீட்டர்) நோயாளியின் உடல் வெப்பத்தை அளப்பது எப்படி?
16. கலிக்கோ என்னும் பெயர் எப்படி வந்தது?
17. வாரன் ஹேயிட் வெப்பமாணி (Faherenheit thermometer) என்னும் பெயர் எப்படி வந்தது?
18. பி°ரோல் (Pistol) என்னும் பெயர் எப்படி வந்தது?
19. வால்ட் (Volt) என்னும் பெயர் எப்படி உண்டானது?
20. பெற்றோமாக்° திரி ஏன் வெல்°பாச் (Welsbach mantle) எனப்ப டுகிறது?
21. மனித உடலில் எத்தனை வியர்வைச் சுரப்பிகள் (Perspiration glands) இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது?
22. இரத்தம் ஏன் சிவப்பாக இருக்கிறது?
23. சராசரி ஒரு மனிதனின் மூளை நிறை என்ன? பெண்ணின் மூளை நிறை என்ன?
24. கடலில் எத்தனை பாகங்களுக்குக் கீழ் தாவரங்கள் காணப்படமாட்டா?
25. கோழிகளில் எத்தனை நல்ல இனங்கள் உண்டு என்று சொல்லப்படுகிறது?
60
1. காய்கறிகளையும் கறிவகைகளையும் அதிகம் சூட்டில் சமையல் செய்தாலும், சமைக்கும்போது திறந்து வைத்தாலும் என்ன நிகழ்கிறது?
2. சமைக்கும்போது உணவில் சோடாத் தூளைச் சேர்த்தால் என்ன உண்டாகிறது?
3. காய்ச்சல் நோய்வாய்ப்பட்டிருப்பவர்களுக்குத் தாகத்துக்கு நீர் கொடுக்கலாமா?
4. நாம் அதிகம் தண்ணீர் உட்கொள்ளுதல் நன்மையாகுமா? தீமையாகுமா?
5. குழந்தை மயக்கம் அடைந்தால் என்ன செய்தல் வேண்டும்?
6. ஒருவனுடைய சாதாரண நாடித்துடிப்பு நிமிடத்துக்கு எத்தனை?
7. சமுத்திரங்களில் மிக உப்புத் தன்மையுடையது எது?
8. ஒரு கிராம் (Gramme) இரேடியத்தின் விலை என்ன?
9. 12-அடி நீளமுள்ள மண்புழு எங்கு காணப்படுகிறது?
10. ஓணான் எவ்வளவுக்குத் தனது நாக்கை நீட்ட முடியும்?
11. “வாக்குண்டாம்” என்னும் நீதிநூல் யாரால் செய்யப்பட்டது?
12. “கடன்பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” எனப் பாடிய புலவர் யார்?
13. சம்பா நெல் வகையில் 10 கூறு
14. பெருநெல் வகையில் 10 கூறு
15. மிகவும் சாதாரணமான ஊக்கிகள் (Stimulants) எவை?
16. பூமியினுள் எத்தனைப் பாகை வரையில் வெப்பமுள்ளதென்று கணக் கிடப்படுகிறது?
17. பூமியின் கீழ் ஒவ்வொரு 600 அடி ஆழத்துக்கும் எத்தனை பாகை வெப்பம் அதிகரிக்கிறது?
18. உலகம் முழுவதிலும் ஆண்டில் எவ்வளவு இரேடியம் உற்பத்தியாக்கப் படுகிறது?
19. நியுயார்க்கில் 20 மாடிக்கு மேற்பட்ட கட்டிடங்கள் எத்தனை உண்டு?
20. ஒலி காற்றின் மூலம் செல்வதைவிட இரும்பின் மூலம் எவ்வளவு அதிக வேகமாகச் செல்லும்?
21. வெட்டுக்கிளி எங்கே முட்டை இடுகிறது?
22. ஒரு வீட்டு ஈ ஒரு முறையில் எத்தனை முட்டை இடும்?
23. ஆந்தைக்கும் கூகைக்கும் என்ன வேறுபாடு?
24. லெனின் (Lenin Nicolai) என்பவர் யார்?
25. வெள்ளை அறிக்கை (White Paper) என்பது என்ன?
61
1. சந்திரன் இருக்கும் தூரத்துக்குப் பூமி வந்தால் என்ன நேரும்?
2. சந்திரன் ஐக்கிய அமெரிக்கா அளவு பருமையுடையதாக இருக்குமா?
3. தேனீக்களை உண்ணும் விலங்கு இருக்கிறதா?
4. பூசனிக்காய் காய்கறி வகையைச் சேர்ந்ததா?
5. உலகில் எத்தனை வகைப் பறவைகளிருக்கின்றன?
6. மிக உரத்த சத்தம் போடக்கூடிய பறவை எது?
7. மிக வேகமாகப் பறக்கும் பறவை எது?
8. பறவைகளுக்கு அதிக பசி உண்டா?
9. ஒரு இராத்தல் வெண்ணெயெடுக்க எவ்வளவு பால் வேண்டும்?
10. எத்தனை முக்கிய சுவைகளுண்டு?
11. ஒரு மோட்டார் வண்டியில் எத்தனை பகுதிகள் (Parts) உண்டு?
12. கிரீன்லாந்தின் எவ்வளவு பகுதியைப் பனி ஆறு மூடி இருக்கின்றது?
13. மகெலன் (Magellan) பூமியைச் சுற்றிப் பிரயாணஞ் செய்தானா?
14. வெனீ° நகரில் ஏன் அதிக வெட்டு வாய்க்கால்களிருக்கின்றன?
15. தென்னமெரிக்காவோ ஐரோப்பாவோ பெரியது?
16. ஒரு திமிங்கிலக்குட்டி நாளொன்றுக்கு எத்தனை இராத்தல் வளரும்?
17. இரண்டு பூகண்டங்களிலுள்ள ஒரு நகரமுண்டா?
18. மீனம்பர் என்பது என்ன?
19. மிகப்பெரிய நாணயங்கள் எங்கு வழங்குகின்றன?
20. நிக்கல் நாணயத்தில் எவ்வளவு நிக்கல் இருக்கிறது?
21. மிக வேகமாக வளரக்கூடிய தாவரமெது?
62
1. ஐக்கிய அமெரிக்காவில் அதிகம் பயிரிடப்படும் பயிர் எது?
2. மிகச் சுத்தமான விலங்கு எது?
3. ஒரு போதும் நீர் குடியாத விலங்கு எது?
4. எங்கு சூரியன் பச்சை நிறமாகத் தோன்றுகிறது?
5. அரிக்கன் (Harricane) புயல் என்பது என்ன?
6. பிரயரி நாய் என்பது என்ன?
7. நன்கு வளர்ந்த சிங்கத்தின் எடை என்ன?
8. மனித இதயத்தின் எடை என்ன?
9. உலகில் எத்தனை வகை மீன்களிருக்கின்றன?
10. சுறா மீன்களுக்கு இழந்து போன பற்கள் வளர்கின்றனவா?
11. வெள்ளை மாளிகைக்கு (White House) ஏன் வெள்ளை நிறம் தீட்டப் பட்டது?
12. சோளம் ஏன் பொரிகிறது?
13. ஒரு யானை எவ்வளவு நீர் குடிக்கும்?
14. பிறந்தவுடன் யானைக் கன்றின் எடை எவ்வளவிருக்கும்?
15. ஒட்டக மயிர் புருஷ் (Brush) ஒட்டக மயிரினால் செய்யப்படுகிறதா?
16. இந்தியன் மை (Indian Ink) என்பது முதலில் இந்தியாவில் செய்யப்பட்டதா?
17. மனிதர் உணவில்லாமலோ நித்திரை இல்லாமலோ அதிக நாள் வாழ முடியும்?
18. முகச்சவரஞ் செய்யும் வழக்கத்தைக் கிரீ° நாட்டில் தொடங்கியவர் யார்?
19. நைலோன் (Nylon) என்னும் பெயர் எப்படி வந்தது?
20. கூடாரம் அடிக்கும் போது வாயில் எப்புறத்திலிருக்க வேண்டும்?
21. இரண்டு அங்குலக் கயிறு என்னுமிடத்து அது குறுக்களவையோ சுற்றளவையோ குறிக்கிறது எது?
22. நேபாளத்தில் வாழும் எந்தச் சாதியார் இராணுவ சேவைக்குப் பேர் போனவர்?
23. இந்தியாவுக்கும் மேற்குப் பாகி°தானுக்குமிடையில் எந்த வனாந்திர மிருக்கிறது?
24. சீனரின் பெரிய தத்துவ ஞானி யார்?
25. ஜப்பான் சக்கரவர்த்தியைக் குறிக்க அன்னிய நாட்டவர் வழங்கும் பெயரென்ன?
63
1. ஜப்பானில் வழங்கும் ஒருவகை மல்யுத்தம் என்ன பெயரால் அறியப்படும்?
2. எந்த ஆண்டில் சீனா குடியரசானது; எந்த அரசு பரம்பரை வீழ்ச்சியுற்றது?
3. நான்கிங் (Nanking) உடன்படிக்கையால் பிரிட்டனுக்கு என்ன நன்மை கிடைத்தது?
4. 1900-இல் சீனாவில் அன்னிய சாதியினர் கொல்லப்பட்டார்கள். இக் கலகம் எப்பெயரால் அறியப்படும்?
5. சீனர் தலைமயிரைப் பின்னித் தொங்கவிடும் வழக்கமென்ன?
6. தென்னமெரிக்காவிலுள்ள நீண்ட ஆறு எது?
7. அர்சந்தைனாவிலுள்ள மரங்களில்லாச் சமவெளிக்குப் பெயரென்ன?
8. தென்னமெரிக்காவிலுள்ள பெரிய மலைத்தொடர் எது?
9. அமேசான் கழிமுகத்தில் காடுகளுள்ள சமவளிக்குப் பெயரென்ன?
10. பிரேசில், வெனிசுவெலா முதலிய குடியரசு நாடுகளின் அரசாங்க மொழிகளெவை?
11. ஒரு சாதாரண இலெட் பென்சிலினால் எவ்வளவு நீளக்கோடு இழுக்க லாம்?
12. ஆப்பிரிக்க பெரிய நத்தையின் பருமை என்ன?
13. அணுக்குண்டு வெடிக்கும்போது அதன் ஆற்றலில் எவ்வளவு வெளிவருகிறது?
14. மிகப்பெரிய தொப்பி அணியும் பெண்கள் யார்?
15. அமெரிக்க இந்தியர் எத்தனை மொழிகள் பேசுகின்றனர்?
16. வெள்ளிக்கிரகம் ஏன் அதிக பிரகாசமாக இருக்கிறது?
17. மிகச் சிறிய குரங்கு எது?
18. ஒரு திமிங்கிலக் குட்டி பிறந்தவுடன் அதன் எடை எவ்வளவிருக்கும் ?
19. எந்த விலங்கு அதிக சத்தமிடும்?
20. உலகில் எந்த நாட்டில் அதிக இரப்பர் கிடைக்கிறது?
21. மலேயாவில் எப்பகுதி பிரம்புக்குப் புகழ் பெற்றது?
22. பர்மாவின் புதிய தலைநகர் எது? பழைய தலைநகர் எது?
23. பப்புவ சாதி மக்கள் பெரிதும் வாழும் பெரிய தீவு எது?
24. வெள்ளை யானை நாடு என்பது எது?
25. எந்த ஆண்டில் மலாயா சுதந்திரம் பெற்றது?
26. மலாயாத் தீபகற்பம் முதல் மொலுக்காங் வரையில் நீண்டு கிடக்கும் கிழக்கிந்திய தீவுக் கூட்டங்களுக்குப் பெயரென்ன?
27. ஒட்டிப் பிறக்கும் இணைப்பிள்ளைகளுக்கு சயம் இரட்டைகள் (Siam Twins) என்னும் பெயர் எப்படி வந்தது?
64
1. விசூவிய° மலை அடிவாரத்தில் எந் நகரத்தின் அழிபாடுகள் கிடக் கின்றன.
2. எத்தனை சிலுவைப் போர்கள் நடந்தன? அவற்றின் நோக்கமென்ன?
3. மிகப்பெரிய கிறித்துவ தேவாலயமெது?
4. ஆக்டிக், அத்லாந்திக், இந்திய, பசிபிக்கடல்களைப் பருமைப்படி ஒழுங்கு படுத்துக?
5. நியுபவுண்லாந்துக் கரையில் மிகுதியாகக் காணப்படும் மீன் எது?
6. போனோகிராவைக் கண்டு பிடித்தவர் யார்?
7. வயிரம், காரீயம், கரி என்பவற்றுக்குப் பொதுவான ஒரு பொருளுருண்டு. அது என்ன?
8. உருக்கு என்பது ஒரு பொருள் சேர்க்கப்பட்ட இரும்பு. அது என்ன?
9. பஞ்ச தந்திரம் என்னும் நூலைச் செய்தவர் யார்?
10. இரேடீயம் என்னும் உலோகம் என்ன உலோக மண்ணிலிருந்து எடுக்கப் படுகிறது?
11. நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்வோரை ஆபத்தினின்றும் காப்பது என்ன?
12. அலெக்சாண்டர் பிளெமிங் கண்டுபிடித்த அற்புத மருந்து எது?
13. கப்பல் ஓடும் வேகத்தை அளக்கும் அளவை அலகின் பெயரென்ன?
14. இந்தோனேசியாவில் எத்தனை தீவுகளிருக்கின்றன?
15. கினியா பன்றி என்னும் எலி எந்நாட்டுக்குரியது?
16. தார் ஏரி எங்கு இருக்கிறது?
17. பாக்கு நீரிணை என்னும் பெயர் எப்படி வந்தது?
18. மாலைத் தீவுக்கு தென்னிந்திய கல்வெட்டுகளில் எப்பெயர் காணப்படு கின்றது?
19. கோவாவுக்குப் பழைய பெயர் என்ன?
20. இந்தியாவில் முதல் புகை வண்டிப் பாதை எப்போது போடப்பட்டது?
21. மின்சாரக் கதிரையில் இருத்தி மரண தண்டனை நிறைவேற்றுவது எங்கு ஆரம்பமானது?
22. முற்காலத்தில் மரண தண்டனைகள் எவ்வகைகளில் நிறைவேற்றப் பட்டன?
23. மிகச் சிறிய நாய் எங்கு காணப்படுகின்றது?
24. தடித்த கண்ணாடித் தமிளரில் சூடான நீரை ஊற்றினால் சில சமயங்களில் தமிளர் வெடிக்கிறது. ஏன்?
25. கண்ணாடிக் கூசாவிலிருக்கும் நீரைவிட மண் கூசாவிலுள்ள நீர் குளிராக இருக்கிறது. ஏன்?
26. தரை வழியே வரும் சத்தத்தைவிட நீர் வழியே வரும் சத்தம் நன்றாகக் கேட்கிறது ஏன்?
65
1. துப்பாக்கி எப்படி வெடிக்கிறது?
2. கரோஷ்தி என்னும் மொழி இந்தியாவின் வடமேற்கு மூலையில் பழங்காலத்தில் வழங்கிற்று. மற்ற மொழிகளிலும் பார்க்க அதற்கு என்ன வேறுபாடு உண்டு?
3. இந்தியாவில் எந்த இடம் வைரத்துக்குப் புகழ்பெற்றது?
4. ஆர்சந்தைனா அதிகம் ஏற்றுமதி செய்யும் பொருளென்ன?
5. B.C.G. என்பது எதைக் குறிக்கும்?
6. 19-ஆம் நூற்றாண்டில் திமிங்கில எண்ணெய் எதற்குப் பயன் படுத்தப்பட்டது?
7. ஒரு குதிரை எவ்வளவு காலம் உயிர் வாழும்?
8. அண்டீ° மலையிற் காணப்படும் கொண்டோர் என்னும் கழுகின் சிறப்பு என்ன?
9. இக் காலம் சாயங்கள் எப்படிச் செய்யப்படுகின்றன?
10. அந்தமான் தீவு இப்பொழுதும் குற்றவாளிகளைக் குடியேற்றும் தீவா?
11. கிரேக்க மாதிரியில் அமைக்கப்பட்ட இந்தியச் சிற்பக்கலை என்ன பெயர் பெறும்?
12. யுசீ° (Yue-Chis) என்னும் அரசர் இந்தியச் சரித்திரத்தில் எப்பெயர் பெறுவர்?
13. ஐக்கிய அமெரிக்காவில் அடிமையை ஒழித்தது வாசிங்டனோ? ஆபிரகாம் லிங்கனோ?
14. ஆண்டில் சூரியன் பூமிக்கு மிகக் கிட்டவரும் நாள் எப்போது?
15. டௌணிங் வீதி (Downing Street) 10 என்பது என்ன?
16. மே பிளவர் (May Flower) என்பது என்ன?
17. எவரெ°ட் சிகரம் முதன் முதல் யாரால் எப்போது எட்டப்பட்டது?
18. S.O.S. என்பதற்குப் பொருள் என்ன?
19. எந்தச் சாதியார் நெருப்பை வணங்குகின்றனர்?
20. கருங்கடல் என்னும் பெயர் ஏன் வந்தது?
21. வெடி மருந்து ஐரோப்பாவில் முதன் முதல் எப்பொழுது பயன்ப டுத்தப் பட்டது?
22. ஏற்பு வலி என்பது எப்படி உண்டாகிறது?
23. மீனுக்குக் கண்ணிமை இருக்கின்றதா?
24. மிதிவண்டியை கண்டு பிடித்தவர் யார்?
66
1. உரோசெட்டாக் கல் (Rosetta Stone) என்பது என்ன?
2. காகித விளையாட்டு எங்கு ஆரம்பித்தது?
3. சேக்°பியர் எத்தனை ஆங்கிலச் சொற்களைத் தமது நூல்களில் ஆண்டிருக்கிறார்? மில்டன் எத்தனைச் சொற்களை?
4. ஓடும் புகைவண்டியிலிருந்து குதிப்பவன் முன்புறம் விழுவானா பின்புறம் விழுவானா?
5. சீமேந்து (Cement) எப்படிச் செய்யப்படுகிறது?
6. காலகரி வனாந்தரத்தில் வாழும் மக்கள் யார்?
7. °காத்லாந்து யார்ட் (Scotland Yard) என்னும் பெயர் எப்படி வந்தது?
8. நார்வே ஏன் நள்ளிரவு வெயில் நாடு (Land of midnight Sun) எனப்படு கிறது?
9. மின் விளக்குக் குமிழிலுள்ள திரி எப்படி வெளிச்சம் கொடுக்கிறது?
10. இத்தாலியில் பெரிய பியட்கார் தொழிற்சாலை எங்கிருக்கிறது ?
11. பாரசீக அரசன் எப்புனை பெயரால் அறிப்படுவான்?
12. கொரியாவையும் ஜப்பானையும் பிரிக்கும் கடலெது?
13. சண்டர்பான் (Sunderbans) எங்கிருக்கிறது?
14. தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலத்தைத் தவிர வேறு எம்மொழிகள் அரசாங்க மொழிகளாக விருக்கின்றன?
15. கோல் கோ°ட் என அறியப்பட்ட நாட்டுக்கு இப்பொழுது என்ன பெயர்?
16. ஆ°திரேலியாவில் நீர் எவ்வகையிற் பெரிதும் கிடைக்கிறது?
17. ஆ°திரேலியாவில் அதிக உரோமங் கொடுக்கும் ஆட்டுச்சாதி எது?
18. பிராணிகளில் ஐந்து பிரிவுகள் யாவை?
19. ஒரு கலன் சுத்த நீரின் எடை என்ன?
20. U.N.E.S.C.O. என்பது எதைக் குறிக்கிறது?
21. W.H.O. என்பது எதைக் குறிக்கிறது?
22. பால°தீனத்தில் அழும் சுவர் (wailing wall) என ஒன்று இருக்கிறது . அது எந்தக் கட்டிடத்தின் பகுதி எனக் கருதப்படுகிறது?
23. உணவு உடம்பினுள் எரிவதாலுண்டாகும் வெப்பம் அளக்கும் அலகின் பெயரென்ன?
24. இலேசான ஒருவகை கார் சீப் (Jeep) எனப்படுகிறது. இப் பெயரெப்படி வந்தது?
25. முதன் முதல் பொய் மயிர் அல்லது முடி மயிரைப் பயன்படுத்தியவர் யார்?
67
1. நார்வேயில் காணப்படும் பிராணிகளில் எது கூட்டமாகச் சென்று தற்கொலை புரிந்துகொள்கின்றது?
2. வனாந்தரங்களில் எவ்வகைத் தாவரங்கள் வளர்கின்றன?
3. கசகசாச் செடியிலிருந்து என்ன மருந்து எடுக்கப்படுகிறது?
4. பீருக்கு சுவையூட்ட என்ன வேண்டும்?
5. தேனீக்களில் குத்தும் கொடுக்கில்லாததெது?
6. மிக நீண்ட பவளப் பாறைத் திட்டுகள் எங்கு காணப்படுகின்றன?
7. கிரேக்கரின் கல்வித் தெய்வம் எது? அத்தெய்வத்தின் பறவை எது?
8. திரோசன் (Trojan) போர் எத்தனை ஆண்டுகள் நடந்தது?
9. கிரேக்கத் தெய்வங்கள் எம் மலையில் உறைந்தன?
10. விஞ்ஞானத்தில் பழமையுடையது எது எனக் கருதப்படுகிறது?
11. பிராண வாயுவைக் கண்டுபிடித்தவர் யார்?
12. விலையுயர்ந்த (Precious) உலோகங்கள் எவை?
13. மிகப் பாரமான தனிமம் எது?
14. சாதாரண வெப்ப நிலையில் நீர்மயமாக இருக்கும் உலோகமெது?
15. சாக், சலவைச் சோடா, எப்சம் சால்ட் என்பவற்றின் விஞ்ஞானப் பெயர்க ளென்ன?
16. சோடியம் குளோரைட் (Sodium Chloride) - சுக்றோ° (Sucrose) சோடியம் -பை-கார்பனேட், (Sodium**i-Carbonate) என்னும் விஞ்ஞானப் பெயர்கள் சாதாரணமாக எப்படி அறியப்படும்?
17. இலித்ம° (Litmus) தாளில் அமிலம் பட்டால் என்னவாகும்?
18. வினாகிரியில் என்ன அமிலம் இருக்கிறது?
19. எலுமிச்சம்பழம் ஏன் புளிக்கிறது?
20. வெடி மருந்தில் என்ன பொருள்கள் இருக்கின்றன?
21. கூழ்முட்டை ஏன் கெட்ட மணம் வீசுகிறது?
22. தண்ணீர் தடிப்பானது என்று எப்பொழுது சொல்லுகிறோம்?
23. மோட்டார் வண்டியில் குழாய் மூலம் வெளிவரும் புகையில் (Exhaust fumes) என்ன நச்சு வாயு இருக்கிறது?
24. இரும்பு ஏன் துருப்பிடிக்கிறது?
25. வெள்ளி நாணயங்கள் இப்பொழுது எப்படிச் செய்யப்படுகின்றன?
26. தண்ணீரிலிருந்து என்ன உலோகம் எடுக்கப்படுகிறது?
68
1. காற்றிலிருந்து என்ன உரம் (Fertiliser) எடுக்கப்படுகிறது?
2. என்ன உலோக மண்ணிலிருந்து இரேடியம் எடுக்கப்படுகிறது?
3. நிலக்கரியில் என்ன முதன்மையான தனிமம் இருக்கின்றது?
4. படமெடுக்கும் தட்டில் (Photographic Plate) என்ன உலோகம் பூசப் படுகிறது?
5. “டார்ச் பாட்டரி” (Torch Batteries)களுக்கு மேல் என்ன உலோகத் தகடு போடப்படுகிறது?
6. மின்சாரச் சாதனங்களுக்குக் கம்பிகள் என்ன உலோகத்தால் செய்யப் படுகின்றன?
7. மின்சாரக் குமிழ் (Bulb) களுக்குத் திரிக்கப்பிகள் என்ன உலோகத்தினால் செய்யப்படுகின்றன?
8. சவுக்காரம் எப்படிச் செய்யப்படுகிறது?
9. வானவில்லில் என்ன நிறங்களிருக்கின்றன?
10. தெர்மோ பிளா°க்கைக் கண்டுபிடித்தவர் யார்?
11. பனிக்கட்டி ஏன் நீரில் மிதக்கிறது?
12. கடல் நீர் நல்ல நீரிலும் பார்க்க அதிக சூடேறும். ஏன்?
13. கடல் மட்டத்தில் சத்தம் செல்லும் வேகம் என்ன?
14. என்ன உலோகங்களில் காந்த சக்தி உண்டு?
15. சாதாரண மின்சார கலத்தில் (Cell) என்ன பொருள்களிருக்கின்றன?
16. மின்சார ஓட்டத்தை அளக்கும் கருவிக்குப் பெயரென்ன?
17. இடிமுழக்கம் செய்யும் முகிலில் மின்சாரம் செலுத்தப்பட்டுள்ளதென் பதைக் கண்டு பிடித்தவர் யார்?
18. முதல் முதலில் அணுவைப் பிளந்தவர் யார்?
19. மெகாபோன் (Megaphone) என்பது என்ன?
20. இ°தான்புல், ஒ°லோ, இலெனின் கிராட், அயர், தைலண்ட் என்னும் இடங்களின் பழைய பெயர்களென்ன?
21. புயலைக் குறிக்கும் அரிக்கேன் (Hurricane) என்னும் பெயர் எப்படி வந்தது?
22. பழைய மெசபடேமியா இன்று எப் பெயரால் அறியப்படுகிறது?
23. பெரிய உள்நாட்டுக் கடலெது?
24. எந்த ஆறுகளில் அசுவான் அணை, போல்டர், உலாயிட் (Loyd) அணைகளிருக்கின்றன?
25. °காட்லாந்து, சுவிட்சர்லாந்து, போர்ச்சுக்கல், த°மேனியா, பிரேசில், இந்தியா, ஈராக், சில்லி, ஆர்கன்டைனா முதலியவற்றின் தலை நகர்களெவை?
69
1. பூமியின் மத்திய இரேகையிலுள்ள குறுக்களவோ துருவங்களில் குறுக்களவோ, நீளமானது?
2. பூமியின் சுற்றள வெவ்வளவு?
3. சுவிட்சர்லாந்திலுள்ள நாலு அரசாங்க மொழிகளெவை?
4. சோவியத் உருசியாவில் எத்தனைக் குடியரசு நாடுகள் சேர்ந்துள்ளன?
5. இலிரா (Lira), சில்லிங் (Schilling), பெசிதா (Peseta), உரூபிள் (Rouble) என்னும் நாணயங்கள் எங்கு வழங்குகின்றன?
6. பம்பா°, கோபிஜி (Kopje), இ°டெப்°, வெல்ட் (Veld) எங்குள்ளன?
7. இங்கிலாந்து என்பதன் பொருளென்ன?
8. வெ°ட்மின்°டர் அபேயைக் கட்டியவர் யார்?
9. டூம்°டே புக் (Domesday Book) என்பது என்ன?
10. அல்சிபிரா, ஆல்கஹால் என்பன என்ன மொழிச் சொற்கள்?
11. மத்திய காலத்தில் சீனா என்ன பெயராலறியப்பட்டது?
12. புகையிலையையும் உருளைக்கிழங்கையும் இங்கிலாந்திற்குக் கொண்டு சென்றவர் யார்?
13. புகையிலைச் சுருட்டு பிடிப்பதை ஆட்சேபித்த ஆங்கில அரசன் யார்?
14. புகையிலைச் சுங்கான் (pipe) செய்யப் பயன்படுத்தப்படும் மரம் என்ன?
15. கிரிக்கட் பாட் (Bat) செய்யப் பயன்படுத்தப்படும் மரம் எது?
16. வெள்ளைக்காரன் பெயரால் வழங்கும் ஆப்பிரிக்க நாடு எது?
17. உலகில் மிக நீண்ட கப்பலோடும் வெட்டு வாய்க்காலெது?
18. மிகப் பெரிய மீன் எது?
19. கெனியாவின் தலைநகர் எது?
20. மிக ஆழ்ந்த வாவி எது?
21. நாய்க்கு எத்தனை பற்களுண்டு?
22. மீனைப் பழக்கி ஆமை பிடிக்கலாமா?
23. மீன் பிடித்தொழில் அதிகம் நடைபெறும் நாடெது?
24. எப்பறவை மீன் பிடிக்கப் பழக்கப்படுகிறது?
70
1. பழங்காலத்தில் இரசாயன சாத்திரம் எப்பெயர் பெற்றது?
2. கிரேக்கரின் வெளிப்பாடு (Oracle) கூறும் அப்பாலோ கோயில் எங்கிருந்தது?
3. ஒரு பட்டுப் புழுவின் கூட்டில் எவ்வளவு நூலிருக்கும்?
4. உரோமரின் உடற்சுகத்துக்குரிய தேவதை (Goddess of Health) எது ?
5. மிக அகன்ற நீர்வீழ்ச்சி எது?
6. அலுமினியமெடுக்கப்படும் உலோக மண்ணுக்குப் பெயரென்ன?
7. ஹெர்குலிசின் தூண்கள் (Pillars of Hercules) என்பவற்றுக்கு இப்பொழு துள்ள பெயர்களெவை?
8. எவரெ°ட் என்னும் பெயர் எப்படி வந்தது?
9. திமிங்கிலத்தின் எப்பகுதியிலிருந்து எண்ணெயெடுக்கப்படுகிறது?
10. டான்யூப், வொல்கா, (உ)ரோன், கொங்கோ, மக்கன்சி ஆறுகள் எங்கு விழுகின்றன?
11. செங்கடல், யெல்லோ°டோன்பாக், மஞ்சளாறு, நீலமலை, சிவப்புச் சதுக்கம் (Red Square) என்பன எங்குள்ளன?
12. பக்மி, எ°கிமோ, கிர்கிக் (Kirgig) பெடோனியர் (Bedoans), மயோரி, இன்காக்கள், கொசக்° (Cossachs), அச்ரெக்° (Aztecs), செவ்விந்தியர், பின்னியர் எங்குள்ளார்கள்?
13. இக்லு (Igloo), விக்வாம் (Wigwam), தோணி வீடுகள் (House Boats), மரத்தின்மேல் வீடுகள் (Tree houses) எங்குள்ளன?
14. W.H.O. என்னும் எழுத்துக்கள் எதைக் குறிக்கின்றன?
15. நீதிபதி எப்பொழுது கருப்புத் தொப்பி அணிகிறார்?
16. உலகின் மிக உயர்ந்த தலைநகர மெது?
17. மிக வேகமாக ஓடக்கூடிய விலங்கு எது?
18. கிரேக்கப் பழங்கதைகளில் உலகத்தைச் சுமந்துகொண்டு நிற்பவராகச் சொல்லப்படுபவர் யார்?
19. தென்னாப்பிரிக்க போயர் (Boers) எந்த ஐரோப்பிய சாதியாரின் சந்ததியினர்?
20. பனாமா, சூய° கால்வாய்களின் நீளமென்ன?
21. வெளிச்சம் செல்லும் வேகத்தை அளந்தவர் யார்?
22. மிகப் பாரங்குறைந்த வாயு எது?
23. காஞ்சோன்றி ஏன் சுணைக்கிறது?
24. இலேசான உலோகங்களென்பவை எவை?
25. உயிரைக் காப்பாற்றும் உலோகமென்பது எது?
விடைகள்
1
(1) பிலிப்பைன் தீவுக் கூட்டத்திலுள்ள மின்டானோ தீவுக்கு (Mindanao) அப்பால்; ஆழம் 35,400 அடி. (2) 1,500 அடி வரையில். (3) கிறி°துநாதரின் பூஜை (mass of Christ). (4) இத்தாலிய மொழியில் நாவல் (novel) என்னும் சொல்லுக்குக் கதை என்ற பொருள். (5) 1752 - ஆம் ஆண்டின் ஜனவரி 1 -ஆம் தேதிக்குமுன் அவ்வாறு இருந்து வரவில்லை. (6) பூமி 365 1/4 நாளில் ஒரு முறை சூரியனைச் சுற்றிவந்துவிட்டதென்பது. (7) வரிக் குதிரை கொரிலா, ஆபிரிக்கா; லாமா ஆர்மடிலோ தென்னமெரிக்கா; கீரி ஆசிய நாடுகள்; துருவக்கரடி ஆர்க்டிக் பகுதிகள். (8) தீக்கோழி.
(9) முன்னமே பெற்றுக் கொண்ட பணத்துக்காக வேலை செய்வது. (10) 19 செக்கண்டு. (11) அமேசான்° (amazons) (12) மணி ஒன்றுக்கு 75 மைல். (13) 24. (14) நீரில் கோடிக்கணக்கான நுண்ணிய சிவப்புத் தாவரங்கள் கிடந்து நீரைச் செந்நிறமாக்குவதால். (15) வாசனை மரங்களிலிருந்து கிடைக்கும் வாசனைப் பிசின். (16) ஆர்டிக், அண்டார்டிக், வடபசிபிக், தென்பசிபிக், வட அத்லாந்திக், தென் அத்லாந்திக், இந்தியக் கடல், (17) கிரேக்க மொழியில் கிரி°ம° என்பதை எழுதும் போது முதல் இரண்டு எழுத்துக்களும் சேர்ந்தது X என்று எழுதப்படுவதால்.
(18) பசிபிக் கடலில். (19) இமயமலை எவரெ°ட் சிகரம் 29, 202 அடி உயரமுள்ளது, (20) கான்°தாந்தினோப்பில் (Constantinople). அது இப்பொழுது இ°தான்புல் எனப்படுகிறது. (21) பாலைவனைப் பசுந்தரை. (22) 500 இராத்தல்; நாளொன்றுக்கு 70 மைல். (23) ஊதா, நீலம், கருநீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சுப்பழ நிறம், சிவப்பு (violet, indigo, blue, green, yellow, orange & red). (24) பழுது அடைந்தால் அவற்றைத் திருத்தியமைக்க முடியாது. (25) அத்லாந்திக் கடலையும் வட கடலையும்.
2
(1) நிலம் கடல்மட்டத்தின்கீழ் இருப்பதால். (2) மெழுகு திரி வெளிச்ச அளவையால் (candle power). (3) சிலுவை, நங்கூரம், இருதயம் என்னும் அடையாளங்களை. (4) 1/48 அங்குலம் (5) ஒட்டகம், பன்றி. (6) வெள்ளையில் கறுப்பு. (7) 150 அடி முதல் 160 அடி வரையில், ஆபிரிக்காவில். (8) வெ°ட்மின்ரர் ஆலயத்தில் (Westminster Abbey). (9) அது பின்னோக்கிப் பறக்க முடியும். (10) இங்கிலாந்து, அமெரிக்கா. (11) 4; மான் ஆடுகளுக்கும் இவ்வாறே. (12) பெண்களுக்கு குட்டிகளைக் கொண்டு திரியும் அடிவயிற்றுப்பை. (13) காட்டுப்பன்றி, நீர்யானை, (Hippopotamus) வால்ர° (Walrus). (14) நாய், ஒட்டகம், யானை, துருவமான், லாமா. (15) ஆம், அவை ஒன்றைஒன்று எதிர்நோக்கி நிற்கின்றன.
(16) நாய்க்கு வியர்வை நாக்குவழியாய் மாத்திரம் வெளியேவருதலால் (17) °ரேடியம் என்பது 600 அடிகொண்ட கிரேக்க அளவை (18) பாதரசம். (19) வெளிச்சம் ஒலியிலும் பார்க்க வேகமாகச் செல்லுவதால். (20) உரோசாப்பூவின் இதழ்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். (21) அது உரோமாபுரியிலுள்ளது; இது போப்பாண்டவரின் நகர். (22) போப்பாண்ட வர் மாளிகையில் 1100 அறைகள் உண்டு. (23) 144. (24) நல்ல முட்டை நீரில் தாழும்; அழுகிய முட்டை மிதக்கும். (25) அதில் அதிக உப்பு இருப் பதால்.
3
(1) பசு, வெள்ளாடு, செம்மறியாடு, ஒட்டகம், எருமை, லாமா, துருவமான், யாக் (yak). (2) அரிசி (3) விட்டமின் டி (D). (4) கொக்கோ விதைகளிலிருந்து. (5) சகாரா. (6) மெக்கா (7) அத்லாந்திக், பசிபிக், இந்தியக்கடல், ஆர்டிக், அண்டார்டிக். (8) பாரசீகம். (9) வட இரசியாவில். (10) ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையில். (11) வடதுருவத்தில். (12) மத்திய தரைக் கடலையும் செங்கடலையும். (13) எகிப்திய பிரமிட்டுகள். (14) மார்ச் 21 செப்டம்பர் 23. (15) வளர்க்கப்படும் புலிகளைத் தவிரக் காட்டில் இல்லை (16) கரும்பு, பீற் (sugar, beet). (17) தாய்ப்பால். (18) பின்னங்கால்களால்.
(19) முசுக்கட்டை (mulberry). (20) எல்லாம் மிதக்கும். அவை பாதரசத்தி லும் பார்க்கப் பாரங் குறைந்தவை. (21) பதிய (22) வாலுள்ள நட்சத்திரம். (23) பிதகோர° (Pythagoras). (24) பெருக்குள்ள இடத்திற்கு. (25) பிரான்°.
4
(1) பெரும்பாலும் அணில் மயிரினால் (2) வாசினை, எழுத்து, கணக்கு. (3) பொதுவான கறியுப்புப்போல. (4) மேற்கிலிருந்து கிழக்கே. (5) 12 சோடி. (6) 33 ஆண்டுகள். (7) சிவப்பு, மஞ்சள், நீலம். (8) அழுத்தமாயிருந்தால் ஓரங்களை அராவி எடுத்துவிட முடியும். (9) சட்டப்படி கருமம் நடத்துவதற்குப் போதுமான அங்கத்தவரின் கூட்டம். (10) நான் தடுக்கிறேன். (I forbid) என்னும் பொருள் தரும் இலாத்தின் சொல். (11) இரசாயனம் (Chemistry) பிசிக்° (Physics) இலக்கியம், மருந்து முதலியவைகளின் முன்னேற்றத்துக்காக. நோபலின் நிதியிலிருந்து கொடுக்கப்படும் பரிசு. (12) இறந்தவர் உயிர்த்தெழுங்காலம் வரையில் உயிரைப் பத்திரப்படுத்தி வைக்க.
(13) புலியின் கண்பர்வை நிறுதிட்டமாக விருக்கும்; சிங்கத்தின் கண் வட்டமாகவிருக்கும். (14) இரண்டு நிமிடம். (15) அண்டாட்டிக் பகுதிகளில். (16) சூய°கால்வாய் 108 அடி அகலம் 31 அடி ஆழம்; பனாமாக் கால்வாய் 300 அடி அகலம் 45 அடி ஆழம். (17) 13-ஆம் பாப்கிரிகரியால் (Pope Gregory XIII) 1582இல். (18) விட்டமின் சி (C). (19) குயினைன். (20) அவை ஒரு கண்ணை அசையாமல் மற்ற கண்ணை வேறு பக்கமாக அசைக்கமுடியும். (21) கிசே (ghizeh) சமாதி. இக் கட்டிடம் கட்டுவதற்கு 50 இலட்சம் டன் நிறையுள்ள கற்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. (22) சாதாரணமாக இரண்டு அங்குலம். (23) சாதாரணமாக 25 அடி. (24) 2 3/4 அங்குலம். (25) கடவுள் உன்னோடு இருக்கட்டும் (god be with you).
5
(1) லூயி° என்னும் பிரான்சிய அரசன் (King Louis of France) அளவில் குறைவாக விற்பவர்களைச் சிரச்சேதம் செய்வதாகக் கட்டளையிட்டான். ஆகவே தாம் பத்திரமாக இருக்கும் பொருட்டு வியாபாரிகள் தாம் கொடுக்கும் டசன் பண்டங்களோடு ஒன்றை மேலதிகமாகக் கொடுத்து வந்தார்கள். (2) சேர் வால்டர் ரலி. (3) பகை மலிந்த முற்காலத்தில் தமது கையில் வாள் இல்லை, என்பதை அறிவிப்பதற்கு வலக்கையைப் பிடித்துக் குலுக்கி னார்கள்.
(4) காற்று வரும் திசையை அறிந்து அதற்கு எதிராக மூக்கை வைத்துப் படுத்து எதிரியின் வாடையை அறிவதற்கு. (5) முற்காலத்தில் பிரபுக்கள் (knights) சண்டைக்குப் போகும்போது தமது மனைவியரின் கைக்குட்டையைத் தொப்பியில் கட்டுவது வழக்கம். (6) எதிரிகள் தாடியைப் பிடித்துக்கொண்டு தலையை வெட்டி விடாதிருக்க. (7) முதலை தனது இரையைத் தின்றவுடன் அழுவதாகக் கற்பனைக் கதையிருப் பதால். (8) பெரிய பெடரிக் என்னும் அரசன் (Frederic the Great), போர்வீரர் முன்சட்டையால் மூக்கைத் துடையாமல் இருப்பதற்கு. முன்சட்டையில் தெறி வைத்துத் தைக்கும்படி கட்டளையிட்டான். (9) முதன்முதல் செய்யப்பட்ட பாத்திரங்களின் அடி, கூராக அல்லது வட்டமாக இருக்க வில்லை; ஆகவே, தண்ணீர் விட்டபின் அவை நிற்கமாட்டா. ஆகவே, அவை தமிளர் (tumblers) எனப்பட்டன. (10) தொடக்கத்தில் சிறிய கத்திகள் இறகுப் பேனாவைச் சீவிச் சரிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டன.
(11) திருடன் பிறர் அறியாமல் களவெடுப்பவன், கொள்ளைக்காரன், வலிமையால் அடித்துப் பறிப்பவன். (12) நீர் வழியாக நொடிக்கு 4700 அடியும், காற்று மூலம் நொடிக்கு 1090 அடியும் செல்லுகிறது. (13) கிரிமியன் போரில் (Cremean war) கைப்பற்றிய துப்பாக்கி உலோகத்தினால். (14) புள்ளி. (15) ஆபிரிக்காவிலுள்ள சுப்பீரியர் வாவி (Lake Superior). (16) இரேடியம். (17) அதற்குக் கண் இமையில்லை. (18) பால்கன் என்னும் கழுகு (falcon). (19) ஆவி, கட்டி, இளகிய வடிவு. (20) வெள்ளை உடை வெப்பத்தை வெளியே விடுகிறது. கறுப்பு உடை வெப்பத்தை வாங்கி வைத்துக் கொள்கிறது. (21) முடியாது. (22) சர் பிரான்சி° டிரேக் (Sir Francis Drake). (23) இது ஆங்கில அரசரது முடியில் 1849-ல் பதிக்கப் பட்ட பெரிய இரத்தினக்கல். (24) நியுயாக் (1785 - 1790). (25) பாம்பி (Pompie)
6
(1) தெற்கே மாத்திரம். (2) காட்டுப்பன்றி, வால்ர°, நீர் யானை. (3) வாங்குவது என்ன என்று அறியாமல் வாங்குவது. (4) தென்துருவம். (5) இலாத்தின். (6) 24. (7) பாதஇரசம். (8) பட்டு. (9) தாள் உற்பத்தி செய்பவர்களால் தாளில் இடப்படும் அடையாளம். (10) முன்பின் 120 வரையில். (11) 178 அடி உயரம் 14 அடி சாய்வு. (12) காக்கேசியஸிலுள்ள எல்புரு° (Elbrus in Caucasus). (13) ஒரு சதுர அங்குலக்காற்றின் பாரம் 15 இராத்தல். (14) 53 ஆண்டுகள். (15) இலண்டன் பாளிமேந்துக் கட்டிடத்திலுள்ள மணிக்கூட்டின் மணி.
(16) 33,000 இராத்தல் பாரத்தை ஒரு அடிக்கு ஒரு நிமிடத்தில் உயர்த்தக் கூடிய சவி. (17) சிவப்புச் சீடார் (Red Cedar). (18) சிபிரால்டர் நீரிணைக்கு இரு புறங்களிலுமுள்ள உயர்ந்த மலைகள். (19) அரச குடும்பத்தினர். (20) காட்டு விலங்குகள் பறவைகளைக் காட்சிக்காக வைத்திருக்கும் இடம். (21) இடது பக்கத்தில். (22) பெப்பிருவரி. (23) இலண்டன். (24) குச்சியைத் தீப்பெட்டியில் மாத்திரம் தட்டிப் பற்றவைக்கக்கூடியது.
7
(1) பெறமுடியாததை நினைத்து ஆசைப்படுதல். (2) மிசூரிமிசுப்பி. (3) இறகினால், எழுத்தாணியால். (4) அப்படியிருக்கட்டும். (5) யான்மில்டன். (6) சூன் 27. (7) டிசம்பர் 23. (8) பனாமா. (9) குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கும்போது. (10) இத்தாலியில் நேப்பிள்° குடாவுக்கு மேல். (11) எப்போதும் நன்மை அடைவதில்லை. (never do well). (12) மோட்டார் கார் ஓடும் வேகத்தை அளக்கும் கருவி. (13) பிராணவாயு கரியமிலவாயு. (14) மிகநீண்ட காலத்தின் முன் நிலத்தில் புதையுண்ட தாவரங்கள்.
(15) நீரோ (Nero). (16) வெனீ°. (17) அதன் இறகுகளில் எண்ணெய்ப்பற்று இருப்பதால். (18) பர்மிங்காம் (Birmingham). (19) மாட்டுச் சண்டை. (20) அவை இடப்படும் புல்பூண்டில்லாத பாறைகளிலிருந்து உருண்டு விழுந்துவிடாதபடி. (21) அவற்றின் மகரந்தம் இரவிற் பறக்கும் பூச்சி களால் பரப்பப்படுவதால் அவற்றைக் கவர. (22) அவை செய்யும் துவாரங் களால் காற்றும் நீரும் கீழே செல்கின்றன. (23) 30,000 முட்டைகள் வரை யில். (24) சுடுமணலில் புதைக்கப்பட்டிருப்பதால் சூரிய வெப்பத்தால். (25) ஐம்பதுக்கும் அறுபதுக்கும் இடையில்.
8
(1) அறுகோணம். (2) சுறா. (3) ஆறு. (4) மலைப்பாம்பு. (5) கீரிக்கு. (6) பத்து. (7) ஆறு முதல் எட்டு வரையில். (8) கொம்புகளின் நுனியில். (9) ஊங்காரப்பறவை (humming bird). (10) வாலிலிருந்து சொண்டு வரையும் 2 1/2 அங்குலம் வரையில் (11) அராபியரிடமிருந்து, அராபியர் சீன ரிடமிருந்து. (12) சீனர். (13) சீனர்; சீனரிடமிருந்து அராபியரும், அராபிய ரிடமிருந்து ஐரோப்பியரும் அறிந்தனர். (14) மிளகுக்கு யவனப்பிரியா என்பது வேறொரு பெயர்.
(15) இது தென்னமெரிக்க செடி. இதன் காய் மிளகுபோலக் காரமாகவிருப்பதால் மிளகாய் (மிளகு+காய்) எனப்பட்டது. (16) வழுதுணங்காய். (17) மேற்கு இந்தியத்தீவுகள், அமெரிக்கா. (18) இந்தியா (1499-இல்) (19) கத்தோலிக் கிறித்துவமதத் தலைவர். (20) தாவர இனத்தை. (21) 60,000 வரையில். (22) முன்பின் 60,000 வரையில். (23) 35,000 அடி பசிபிக்கடல்). (24) 70%. (25) குறைந்தது முந்நூறு மைல்.
9
(1) ஐந்து மைலுக்குமேல். (2) சென் பால்° தேவாலயம் (St. Pauls Cathedral). (3) பெரிய லியோ (Leo the Great - 440 - 461.) (4) இது பறக்கும் குண்டு அல்லது ரொபொட்பிளேன் (Robot Plane) எனப்படுகிறது. இது இரேடியோ அலைகளால் இயக்கப்படுவது. இது முதல் முதல் செர்மனியரால் 16-6-1944-ல் உபயோகிக்கப் பட்டது. (5) 1862. (6) முதலாம் நெப்போலியன். (7) 5 மைல் சதுரத்தில் 25 சதுரமைல். (8) இலாத்தின். (9) ஹிபுரு, கிரேக்கு. (10) 1,700,000,000. (11) 20 பங்கு இரத்தம். 80 பங்கு நீர். (12) 50 இலட்சம் சிவப்புக் கோளங்களும், இருபதினாயிரம் வெள்ளைக் கோளங்களும். (13) மிருகக் கொழுப்பு, பால், வெண்ணெய், பாலாடை, மீனெண்ணெய் முதலிய வற்றில் உண்டு. தாவரப் பொருளில்லை, விட்டமின் ஏ இல்லாவிடில் கண்ணில் மாறுபாடு உண்டு. கண்ணீர் வராது. (14) பூமியின் கவரும் சக்தியினால். (15) பூமி பொருள்களைத் தன்னை நோக்கி இழுப்பது.
(16) 160,000 மைலில். (17) பூமியின் கவரும் சத்தியினால். (18) தண்ணீர் வீட்டு மட்டத்திலும் உயரமான இடத்திலிருந்து வருவதால். (19) உள்ளும் புறம்பும் அதே பாரமுள்ள அமுக்கம் சமமாக இருப்பதால். (20) வெடிக்கும், மேலே செல்லச் செல்ல காற்று அமுக்கம் குறைந்திருப் பதால். (21) கீழே உள்ளகாற்று உள்ளே செல்லும் பொருட்டு மேல் நோக்கி அமுக்குவதால். (32) எல்லா இடங்களிலும் காற்றின் அமுக்கம் ஒரே மாதிரியில்லை. ஓரிடத்தில் காற்று அமுக்கம் அதிகமாகும்போது அதிக அமுக்குமுள்ள இடத்திற் காற்று அதிக அமுக்கமில்லாத இடத்திற்குத் தள்ளப்படுகிறது. அதனால் காற்று உண்டாகிறது. (23) நீண்ட வட்டவடிவு.
(24) செவ்வாய்க்கும், வியாழனுக்குமிடையில் தமது பாதையை உடைய சிறிய கிரகங்கள் பல்லாயிரமாகும்; இதுவரையிலும் அறியப்பட்டவை 1300. (25) சந்திரன் மிகக்கிட்ட இருக்கும் போது 222,000 மைல், மிகத் தொலைவிலிருக்கும்போது 252,000 மைல். அதன் சராசரி தூரம் 238,000 மைல்.
10
(1) 9,000 வரையில் (2) அங்கு பிராணவாயு இல்லாததால் உயிர்கள் வாழ்தல் முடியாது. அங்கு கீழ் நிலையிலுள்ள தாவரங்கள் இருக்கலாமென்று கருதப்படுகின்றது. (3) தொலைவு நோக்கியால் பார்க்கும்போது 500,000,000 வெளிச்ச ஆண்டு தொலைவில், தெரிகிற ஒரு சூரியனும் அதன் குடும்பமும் (An island universe) எனத் தெரிகிறது. (4) நட்சத்திரம் தனது சொந்த ஒளியைக் கொண்டு விளங்கும் சூரியன். கிரகங்கள் சூரியனைச் சுற்றிச் சுழன்று சென்று சூரிய ஒளியைப் பெற்று விளங்குவன.
(5) சூரியனும் வேறொரு நட்சத்திரமும், ஒன்றை ஒன்று முட்டிய போது அல்லது ஒன்றுக்குக்கிட்ட ஒன்று வந்தபோது இரண்டு சூரியர்களுடைய கவரும் சக்தியினால் சூரியனிடத்திருந்த சடப்பொருள் வெளியே தள்ளப்பட்டுச் சுழன்று கொண்டிருந்து, சூரியனைச் சுற்றியோடும் கிரகங்களாயின. (6) அது வெள்ளி என்னும் கிரகம்; நட்சத்திரம் அன்று. (7) அண்டாரீ° (Antares) என்னும் நட்சத்திரம். இதன் குறுக்களவு சூரியனது குறுக்களவிலும் 450 மடங்கு அதிகம் - 400,000,000 மைல். (8) புரொக்சிமாசென்ருரி (Proxima Centauri) இதன் தொலைவு 4-1 வெளிச்ச ஆண்டு (25,000,000,000,000) மைல். (9) தென்மேற்கு அமெரிக்காவில் நிலத்துள் புதைந்துகிடப்பது; 50 முதல் 70 டன் பாரமுடையது. இதன் மேற்பாகம் மாத்திரம் வெளியே தெரிகின்றது. (10) புலுட்டோ (Pluto). இது 249 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றிவருகின்றது.
(11) இவர், பூமியை மையமாகக் கொண்டு மற்றக் கிரகங்கள் சுற்றிவருகின்றன என்னுங் கொள்கையுடையவராக விருந்தார். இவர் அலக்சாந்திரியாவில் கி.பி. 150-ல் வாழ்ந்தவர். (12) ஒவ்வொரு இருபத்து நான்கு மணி நேரத் திலும் இலட்சகோடி (Billion)-க்கு அதிகமானவை விழுகின்றன. இவை பெரும்பாலும் பூமிக்கு வராது வானத்தில் எரிந்து போகின்றன. (13) 859,000 மைல். (14) வியாழனின் குறுக்களவு 88,000 மைல். (பூமியின் குறுக்களவி லும் பார்க்க 11 மடங்கு அதிகம், பருமையில் இது பூமியிலும் பார்க்க 1300 மடங்கு அதிகம். (15) 1851-ல் வோகல்ட் (Foucault) என்பவரால் பாரி° நகரில் நிரூபித்துக்காட்டப்பட்டது. (16) 1,300,00 மடங்கு. இதன் குறுக்களவு 864,000 மைல். (17) பதினொன்று. யூராணசுக்கு 4 நெப்தியூனுக்கு ஒன்று. (18) சூரியனுடைய ஒளி 600,000 பூரணசந்திர ஒளிக்குச் சரி.
(19) வெள்ளை நீலநிறங்கள் மிக்க வெப்பத்தையும், சிவப்பு அதிக சூடின்மையையும் காட்டும். (20) சூரிய ஒளியின் அமுக்கம் (Pressure) வால் வெள்ளியின் தலையிலுள்ள வாயுவையும் அதனிடமுள்ள சில பொருள்களையும் வெளியே தள்ளி அதன் வாலை உண்டாக்கு கின்றபடியால். (21) ஒரு குண்டூசித் தலையளவு. (22) சந்திரனுடைய ஆதிக்கம் அதிகம்; சூரியன் பெரியதாயிருந்தபோதும் சந்திரன் சூரியனிலும் பார்க்க 400 மடங்கு தூரம் பூமிக்குக் கிட்ட இருக்கிறது. (23) வெள்ளிக்கிரகம். இது இரண்டுகோடி ஆறுலட்சம் மைல் தூரத்துக்கு வருகின்றது. (24) அவை பூமியை நோக்கிவரும் வேகத்துக்குத் தக்கவாறு நிறம் மாறுபடுகிறது. மிக வேகமாக வருவன வெள்ளை அல்லது நீலமாகவும், மெதுவாக வருவன மஞ்சள் அல்லது சிவப்பாகவும் தோன்றும். (25) இரண்டாம் சார்ல்° என்பவரால் (Charles II) 1875இல்.
11
(1) 23½. (2) நொடிக்கு 18½ மைல். (3) 30,000 (4) 9,000 F பாகை. (5) அழகிய பொருள்களைச் செய்தல்; மனம் செல்லும் வழி சிந்தித்தல்; புதிய காரியங்களைக் கண்டுபிடித்தல்; சமூக வாழ்க்கைக்கு உகந்த விதிகளை அமைத்துக்கொண்டு, அவற்றின் படி நடத்தல். (6) பூமி சூரியனைச் சுற்றி வருகின்றது என்று சொல்லியதற்காகப் பாப்பாண்டவரின் கட்டளையால் விசாரணைக்குக் கொண்டு வரப்பட்டார். (7) இரும்புத் தட்டை வளைத்துச் செய்யப்படுவதால் அதனுள்ளே வெளி அதிகம் இருப்பதால்.
(8) கற் களில் படிந்து கிடக்கும் பழங்கால உயிர்களின் வடிவங்கள். (9) முன்பின் 14 அடிவரையில்; இவ்வகைத் தந்தமொன்று சைபீரியாவி லிருந்து இலண்டனுக்குக் கொண்டுபோகப்பட்டது. (10) இது நியுயாக் துறைமுகத் தில் பெட்லோ° (Bedloes) தீவில் நாட்டப்பட்டுள்ளது. இது ஒரு கையில் சூளையும், மற்றக் கையில் ஒரு புத்தகம் போன்ற கல்லையும் வைத்திருக் கிறது. அதில் அமெரிக்கா ஆங்கிலரிடமிருந்து விடுதலை யடைந்த நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பாதம் முதல் சூள்வரையும் 151 அடி உயரம். அது நிற்கும் பீடத்தின் அடி முதல் சூள்வரையில் 305 அடி 6 அங்குலம். அது சூளை நீட்டிப் பிடித்திருக்கும் வலக்கை 42 அடி நீளம். இச்சிலை 1886ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் நாள் திறக்கப்பட்டது.
(11) பூமி அடியிலுள்ள பாறை கீழ் உள்ள நெருப்பால் சூடடைதலாலும். அதன் அருகிலுள்ள நீர் ஆவியாக வெடிப்புகளால் வந்து குளிர்ந்த நீரூற்றைச் சந்திப்பதாலும் குளிர்ந்த நீரூற்றுகள் வெந் நீரூற்றுகளாகின்றன. (12) வட அமெரிக்காவில் கொலரடோ ஆற்றிலுள்ள போல்டா அணை (Boulded dam). இதன் உயரம் 550 அடி. இது உலகில் உயர்ந்த அணை. (13) பசிபிக்கடல் 50,309,000 சதுர மைல். (14) இது எண்ணெயைக்கொண்டு இயங்கக்கூடியது. ருடல்வ் டீசல் (Rudaloph Diesel) என்பவர் 1893இல் இதனைக் கண்டுபிடித்தார். (15) இது அடி அழிந்து மறைந்துபோன ஒருவகை யானைக்கு வழங்கும் சைபீரிய பெயர்.
(16) போர்த்துக்கேயர். 1500-இல் இது பிரேசில் நாட்டுக் கடற்கரையில் உண் டாவதை அறிந்து, மற்றிடங்களுக்குக் கொண்டு சென்று பரப்பினார்கள். (17) 2,000,000 வரையில் இன்னும் சிலவற்றுக்குப் பெய ரிடப்படவில்லை. (18) 500,000 வரையில் (19) 10 ஆண்டு, 10 ஆண்டு, 12 ஆண்டு, 20 ஆண்டு, 30 ஆண்டு, 100 ஆண்டு, 1000 ஆண்டு, 150 ஆண்டு, 19 அடி நீளமும், 350 பவுண்டு நிறையும் உள்ள ஒரு மீன், 1497இல் சேபியா (Saubia) வில் பிடிக்கப்பட்டது. அதன் கழுத்தில் ஒரு வளையம் காணப்பட்டது. அதில் “I am the fish which was first of all put in to the lake by the hands of the governor of the universe Frederick the second 5th October 1230” என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் அம்மீனுக்கு 267 வயது எனத் தெரிகிறது. ஆமை 150 ஆண்டும், சில 500 ஆண்டும் வாழ்ந் துள்ளன. (20) ஏழு ஆண்டு.
(21) 15 ஆண்டு வரையில் (22) ஆண்டில் 20,000 டன். (23) 5 அடி. 10 அங்குலம். (24) இவற்றின் குறுக்களவு இருபத் தையாயிரத்தில் ஒரு அங்குலம்; 64,000,000,000 பக்டீரியாக்களை ஒரு மிக்கப் போட்டால் ஒரு தானிய எடையாகும். ஒன்றை அரைப்பென்னி அளவுக்கும். ஒரு மனிதனை அதே அளவுக்கும் (Proportion) பெருப்பித் தல் மனிதன் எவற°ட் மலையிலும் பார்க்க ஆறு மடங்கு பெரியவ னாகத் தோன்றுவான். (25) இவர் ஆக°ர° என்னும் உரோமன் சக்கர வர்த்தி காலத்தில் வாழ்ந்தவர். இவர் பூமி சாத்திரநூல் ஒன்று செய் துள்ளார்.
12
(1) அணுக்கள் இலெக்ரன்கள் என்னும் நுண்ணணுக்களாலானவை. ஒரு ஹைடோசின் அணுவில் 1700 இலெக்ரன்கள் உள்ளன. (2) இது இந்தியா வில் தொடங்கிய விளையாட்டு. இது 6ஆம் நுhற்றாண்டில் பாரசீகத் துக்குச் சென்றது. அங்கிருந்து அது அராபியாவுக்குக் கொண்டு போகப் பட்டது. (3) டாக்டர் சிம்சன் (Dr.Simpson) என்பவரால் 1847 - நவம்பர் மாதம் 4-ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்டது. (4) பூவிலுள்ள தேன் ஈக் களைக் கவர்கின்றது. அதின் நிறமும், மணமும், பூக்களைக் கண்டுபிடிக்க உதவி புரிகின்றன.
(5) புதன் 88 நாள், வெள்ளி 225 நாள், பூமி 365 நாள், செவ்வாய் 687 நாள், வியாழன் 12 ஆண்டு, சனி 29 ஆண்டு, யூரானஸ் 84 ஆண்டு, நெப்தியூன் 165 ஆண்டு. (6) இரேடியத்தோடு வைக்கப்படும் உப்பு இரேடியத்தின் தன்மை அடைகின்றது. இவ்வகை இரேடிய உப்பு கடிகாரங்களுக்குப் பூசப்படுகின்றது. (7) கல்லை உருக்கக்கூடிய வெப்ப முள்ள பூமியின் உட்பகுதியில் கிடக்கும் கற்களோடு சில நிறப்பொருள்கள் சேர்வதால்.
(8) உருகும் கண்ணாடிக் குழம்பில் நிறச்சாயங்களைக் கரைத்துவிட்டு. (9) விறகில் போதிய பிராணவாhயு செல்லும்படி விடாமையாhல், மணலும் இதே காரணத்தினால் நெருப்பை அணைக்கும். (10) எண்ணெய் தண்ணீரில் மிதப்பதால் அது மிதந்து மேலும் எரிவதற்கு வேண்டிய பிராண வாயுவைப் பெறும். (11) சுண்ணாம்பு, இரும்பு, பா°பர°. (12) ஏ, சீ. (A&C) (13) அரைப்புழுக்கிய அரிசியல். (14) பங்க் விட்டமின் (Funk vitamin). (15) ஒரு மீன். (16) பால், ஆரேஞ்சுச் சாறு, மீனெண்ணெய்.
(17) எருமைப் பாலில். (18) விட்டமின் பி, (B) ( 19) 30,00,000 டன். (20) காற்று மேலே அமுக்குவதால். (21) ஒரு கப்பல் மிதக்கும்போது எவ்வளவு தண்ணீரை வெளியேற்றமுடியுமோ அத் தண்ணீரின் பாரமே கப்பலின் பாரமாகும். (22) 3/4 (23) 7/10. (24) தசையை வளர்க்கும் பொருள்கள் வெப்பமளிக்கும் பொருள்கள், இரத்தத்தைச் சுத்தி செய்யும் பொருள்கள். (25) குடிக்கும் நீர் வழியாகவும் உணவு வழியாகவும்.
13
(1) பால், வெண்ணெய், தயிர்க்கட்டி, முட்டை, பாலாடை. (2) இரண்டு அல்லது மூன்று வாரங்கள், சில 90 நாட்களுக்கும் வாழும். (3) 131,000,000,000, 000,000,000. (4) தெற்கு ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் ஐந்து ஆறு அங்குல நீளமுள்ள நல்ல தண்ணீரில் வாழும் ஒருவகை மீன் உண்டு, இது தண்ணீருக்கு வெளியிலும் மூச்சுவிடும். இது தனது செவிள், வால், சிறகுகளின் உதவியைக் கொண்டு ஓரிடத்திலிருந்து ஓரிடத்துக்கு நடந்து செல்லும்.
(5) தேனீ, சலசலப்புப் பாம்பு (Rattle snake). (6) நைட்ரோசின் சம்பந்தமான பொருள்கள் 4%, கொழுப்புச் சம்பந்தமானது 4%, சர்க்கரை 4%, உலோக உப்பு 1%, நீர் 86%. (7) இதில் நைட்ரோசின் சம்பந்தமான பொருள் அதிகம் இல்லை. இது உடலை வளர்ப்பதிலும் பார்க்க வலுவை அளிக்கின்றது. (8) 14% நைரோசின் சம்பந்தமான பொருள் 10% கொழுப்பு, 1 முதல் 1 1/2% உப்புச் சத்து. இதில் உடல் வளர்ச்சிக்கு வேண்டிய எல்லாப் பொருள்களுமுள்ளன.
(9) தானியங்கள் சம்பந்தமானவை, (farinaceous) எண்ணெய்ச் சத்துள்ள விதைகள் சம்பந்தமானவை, கிழங்குகள் சம்பந்தமானவை. (10) தவிடு போக்காத கோதுமையை இடித்த மாவினால். (11) அதிகம் மீன் இறைச்சி உணவு கொள்பவர்கள் வெள்ளை உரொட் டியையும், சிறிது மீன் இறைச்சி உணவு கொள்பவர் பிரவின் உரொட்டி யையும் உண்ணல் வேண்டும். (12) கோதுமை மாவிலிருந்து. (13) அதில் அற்ப கொழுப்புச் சத்து இருப்பதால். (14) இரத்தத்தைச் சுத்தி செய்வதால். (15) கட்டியான உணவை நீராளமாகச் செய்வதால். (16) விரைவில் ஆவியாகக் கூடிய ஒரு எண்ணெய்; தேயிலையில் தீனின் (thenine) என்னும் ஒருவகை காடிச் சத்தும், காப்பியில் கபைன் (caffine) என்னும் காடிச்சத்தும் உள்ளன. தேயிலையில் காப்பி கொக்கோவிலும் பார்க்க மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகம் காடிச் சத்து (alkaloid) உள்ளது. இச்சத்து உற்சாகத்தை மூட்டிக் களையை தணிக்கிறது, நித்திரையைக் குறைக்கிறது.
(17) அதிக நேரம் ஊறினால் தானின் (thenine) என்னும் ஒரு கசப்புப் பொருள் உண்டாகிறது. தானின் என்பது தோலைப் பதனிடுவதற் காகக் கருவாலி மரப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் ஒருவகைப் புளிப்பு. இதனால் தானின் குடலை எவ்வளவுக்குப் பழுதுபடுத்துமென நாம் அறியலாம். புதிதாக இறக்கிய தேயிலைச் சத்திலும் சிறிதளவு தானின் உண்டு. தேநீரை மாமிச உணவோடு உட்கொள்ளுதலாகாது. குடற்றசை நார்களை வயிரமாக்கிச் செரியாக் குணத்தை உண்டு பண்ணும். (18) காப்பியில் கபைன் (caffine) என்னும் அல்க்கலோயிட் உள்ளது. தானின் இல்லை. ஆகவே காப்பியை உணவுக்குப் பின் பருகலாம். (19) இது கறிச் சரக்குகளில் ஒன்று. காயிலிருந்து கிடைப்பது கறுப்பு மிளகு. பழத்தி லிருந்து கிடைப்பது வெள்ளை மிளகு. இதில் ஒரு வகை எண்ணெயிருக் கிறது. இது உணவு சீரணிப்பதற்கு உதவி புரிகின் றது.
(20) கடுகு கறிச் சரக்குகளில் ஒன்று. கடுகில் ஒருவகை எண்ணெ யுண்டு. இதை அளவாக உணவோடு கலந்தால் பசியை உண்டாக்கும்; செரிக்கச் செய்யும். அதிகம் உட்கொண்டால் தீமை விளைக்கும். (21) இது இறைச்சி உணவையும், தாவர உணவையும் அழுகாமல் பாதுகாக்கும். வின்னாரியில் ஊறவிட்ட உணவு ஊறுகாய் எனப்படும். வின்னாரி, இறைச்சியை மெதுப்படுத்து கின்றது. (22) தோல் உரோமங்களாலான உடைகள்; இவை வெப்பத்தை வெளியேவிடமாட்டா (23) லினன் பஞ்சு பட்டு. (24) சாதாரணமாக ஒருநாளில் ஒருபைண்டு (pint). (25) முப்பத்து மூன்று.
14
(1) 206. (2) தட்டையாகவும் வட்டமாகவும் பாதிவளைவுள்ளனவாயும் இருப்பன. ஓரங்களை பார்க்கிலும் மத்தியில் மெல்லிதாயிருக்கும். அவற்றுள் நடுப்புள்ளி ஒன்றும் கிடையாது. இவை நிலையான வாழ்க்கை உடைய வனவல்ல; உடம்பில் அடிக்கடி அழிவுபட எலும்பின் சத்திலுண்டாகின்ற புதுக்கூடுகள் அவற்றுக்குப் பதிலாக நிலைபெறுகின்றன. இவை ஒரு வகையான நீரில் மிதக்கின்றன. (3) இவை 500 செங்கூடுகளுக்கு ஒன்றாக இரத்தத்திற் கலந்திருக்கும். இதற்கு நடுப்புள்ளி உண்டு. இவை இரத்தத்துட்புகும் நோய்க் கிருமிகளையும், அழுக்குகளையும் அழித்து விடுகின்றன. (4) தோலின் துவாரங்கள் அழுக்கு புழுதி, வியர்வை தோற் சிதைவு முதலியவற்றால் அடைபடாதபடி காப்பாற்றிக் கொள்வதற்கு,
(5) எண்ணெய் பொருள்களை அழுத்தமுள்ளதாயும், வழுக்குந் தன்மை யுள்ளதாயும் ஆக்குகின்றது. அதனால் உரைஞ்சுந்தன்மை (friction) குறைவுபடுகின்றது. (6) தண்ணீர் கடுதாசியில் பரவி விரலையும் கடுதாசியையும் கிட்டக் கொண்டு வருகிறது. (7) மீன்கள், நிலத்திலும் நீரிலுமாக வாழும் உயிர்கள், ஊர்வன என்பன குளிர்ந்த இரத்தமுடை யவை. பறவைகளும் குட்டியீனும் விலங்குகளும் வெப்ப இரத்தமுடை யவை. (8) ஆகாயத்திலுள்ள நீர்த்துளிகளில் சந்திர ஒளிபட்டுப் பிரதிபலிப் பதால். (9) ஒரு முகிலிலிருந்து ஒரு முகிலுக்கு அல்லது முகிலிலிருந்து மரம், வீடு அல்லது நிலத்தில் மின்சாரம் பாய்வது.
(10) மின்சாரம் காற்றுக்கு ஊடாகப்பாயும் போது பின்புறத்தில் காற்றில்லாத வெறும் வெளியை உண்டாக்குகின்றது. எல்லாப் பக்கங்களிலுமுள்ள காற்று அங்கு சடுதியாக ஓடிவந்து மோதுகிறது. பின்பு அது பின்னோக்கி செல்லுகின்றது. இதனால் காற்றில்லாத வெளி விடப்படுகின்றது. மறுபடியும் காற்று அவ்வெளிக்கு ஓடிச்சென்று மோதிப் பின்னடைகின்றது. இதனால் காற்றில் அசைவு உண்டாகிச் சத்தமுண்டாகிறது. இச்சத்தம் முகிலிலிருந்து முகிலுக்கு எதிரொலி செய்து மறுபடியும், பூமிக்கு வருகிறது. இது முழக்கம் எனப் படும். (11) அதன் முனை, வடக்கு நோக்கி நிற்கும். (12) சுடாமலிருப்பதற்கு. (13) ஈரக்கையால். (14) இரப்பரில் மின்சாரம் பாயாது. (15) ஒரு பெரிய விலங்கின் நீளம் 14 அடி, நிறை 4 டன். ஐம்பது வளர்ந்த ஆட்களின் நிறையளவு. (16) வெய்யில், கிருமிகளைக் கொன்று விடுகிறது.
(17) இது முகமதிய உலகத்தைக் குறிக்க வழங்கும். அரபு மொழியில் இதற்குச் சமாதானத்தை உண்டாக்குபவன் என்று பொருள். குரானில் இது முகமது சமயத்தை குறிக்க வழங்கப்பட்டுள்ளது. (18) இவள் (1412-1431) பிரான்சு நாட்டின் வீரப்பெண். இவள் 1431இல் ஆங்கிலேயரால் சூனியக்காரி என்று குற்றஞ் சாட்டப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டாள். (19) 78 அடி நீளம் 36 அடி அகலம். (20) புண்களில் இரத்தத்தை உறிஞ்ச. (21) இவர் உரோமன் வரலாற்றாசிரியர். (கி.மு. 59-கி.பி. 17) இவர் உரோம் நாட்டு வரலாற்றை 142 புத்தகங்களாக எழுதினார். (22) இது கெட்டகாற்று என்னும் பொருள் தரும் இத்தாலியச் சொல். (23) ஆபத்துக் காலங்களில் இராணுவத்தினரால் நடத்தப்படும் ஆட்சிச் சட்டம். (24) 1400 முதல் 1607 பாகை (F) சூடாக்கினால் வைரம் எரியும். (25) அதின் உணவில் 90 பகுதி காற்றிலிருந்தும் 10 பகுதி மண்ணிலிருந்தும் வருகிறது.
15
(1) கருப்பத்திலுள்ள குழந்தையின் நெஞ்சப்பை நிமிடத்தில் 120 முதல் 160 தரம் துடிக்கிறது. இரட்டைப் பிள்ளைகளாயின் இரண்டு இருதயத் துடிப்புத் தெரிகிறது. (2) நாளொன்றுக்கு முப்பது ஏக்கர்; வருடத்தில் 15 மைல் காடு அழிக்கப்படுகிறது. (3) அது பூமியைச் சுற்றிவர எடுக்கும் அதே கால அளவு. (4) 5,000,000 வரையில்; சில வால் வெள்ளிகளின் வால் 100,000,000 மைல் வரையில் உண்டு. (5) சில வால் வெள்ளிகள் பூமியிலும் பார்க்கப் பெரியவை. 1811இல் தோன்றிய வால் வெள்ளி சூரியனிலும் பார்க்கப் பெரியது. அதன் குறுக்களவு 1,000,000 மைல். (6) 2500 F பாகை வரையிலிருக்குமென்று கருதப்படுகிறது. (7) 15 ஆண்டுகள். (8) 50,000 மைல் குறுக்களவுள்ள மறுக்கள் சாதாரணமானவை. (9) ஐந்து மணி. (10) சந்திரனில் காற்று இருக்க முடியாதென்று கருதப்படுகின்றது. (11) ஒன்பது.
(12) 12 மைல். (13) 2,000,000 வரையில் என்று கருதப்படுகின்றது. (14) 100,000,000 வரையில். (15) பூமியிலுள்ள காற்று அலைகளினால். (16) பூச்சி களைக் கொல்லும் நஞ்சு. (17) இது பட்டால் ஈக்கள் அரைமணி நேரத்தி லும், கரப்புப் பூச்சி இனங்கள் ஒரு வாரத்திலும் இறந்து விடும். (18) உலகப் படைப்பு 4004 B.C. அக்டோபர் 26ஆம் நாள் காலை ஒன்பது மணியில் உண்டானதென்று. (19) பெண்கள். (20) மருந்துக்காக. (21) அது பசை ஒட்ட முடியாத ஒருவகை எண்ணெயைத் தனது உடலிலிருந்து வெளிப் படுத்திப் பயன்படுத்துவதால். (22) பிரயோபிலம் (Bryophyllum) என்னும் செடியின் இலையிலிருந்து கன்றுகள் வளரும். (23) டோக்கியோ. (24) அது திபெத்திலுள்ளது; உயரம் 22,028 அடி. (25) குடித்தால் நஞ்சு; உணவுப் பொருள்கள் மீது படுதல் ஆகாது.
16
(1) 6,000,000,000,000,000,000,000 டன். (2) இரண்டு மைல். (3) அங்கு பொங்கும் வெந்நீருற்றுக்கள். (Geyesters) உள்ளன; வட அமெரிக்காவில். (4) புதன், வெள்ளி, புளிட்டோ. (5) 3/4 மைல் குறுக்களவு, 600 அடி ஆழம். (6) 67,129 சினிமாச் சாலைகள் உண்டு என்றும் அவை நாளொன்றுக்கு 40,000,000 மக்களுக்குக் காட்சியளிக்கின்றன என்றும் கணக்கிடப்பட் டுள்ளன. (7) தேயிலைப் பானம் செல்வர்களால் 1657இல் பயன்படுத்தப் பட்டது. அப்பொழுது பவுண்டு தேயிலையின் விலை 10 பவுன்.
(8) பல்நோய், மலச் சிக்கல், தொண்டைநோய்கள் இருப்பதால். (9) இதில் ஓரளவு கொழுப்புச் சத்துள்ளது. இது காப்பி அல்லது தேனீரைப் போலக் களையை ஆற்றத்தக்கதன்று. இதில் அதிக போஷிப்புச் சத்து (Nourishment) உள்ளது. சிறுவருக்கு ஏற்றது. (10) வெள்ளையர், மங்கோலியர், நிகிரோவர், மலாயர், செமித்தியர், செவ்விந்தியர். (11) 100 ரூபா. (12) சிவப்பு, மஞ்சள், நீலம். (13) நெப்போலியன் பொனபாட் என்னும் வீரன் நாடு கடத்தப்பட்டு அங்கு இறந்தமையால் (14) கலோரி (calorie) (15) ஆறடி. (16) வ°கோடிகாமா - 1498. (17) இறந்த அரசரை அடக்கம் செய்ய. (18) தூக்கியை (pendulam) சிறிது உயர்த்திவிட வேண்டும்.
(19) மனிதனுக்கு 32 பற்கள் உண்டு; நாய்க்கு 40 பற்கள். (20) இந்தியா நேரம் 5 1/2 மணிமுன்; (21) பற்பசை சம்பந்தமான நோய். (22) உயர்ந்த உத்தியோகத்தன் அல்லது தலைவன் இறந்து போனதை. (23) மலேரியா கொசுவாலும், பிளேக் எலிகளிலுள்ள தெள்ளினாலும், நெருப்புக் காய்ச்சலும், காலராவும் அசுத்த நீராலும் பரப்பப்படுகின்றன. (24) அவற்றுக்கு நரம்புகள் இல்லாதிருப்பதால். (25) கிறித்துவும் அவர் சீடரும் கடைசி இராப் போசனத்துக்கு இருந்தபோது 13 பேர் இருந்தனர் என்பதால்.
17
(1) இலண்டன், நியுயார்க், டோக்கியோ, பெர்ளின், சிகாகோ. (2) 4,500,000 கனமைல் உப்பு. (3) பசுபிக் கடல். (4) மாரிக்காலத்தில். (5) 6 மாதம். (6) அராபியாவி லுள்ள மொச்சா (Mocha) விலிருந்து. (7) சிந்து 1975 மைல். (8) வல்கா 2325 மைல். (9) தென் ஆபிரிக்கா. (10). மிகப்பெரியது வியாழன் குறுக்களவு 86,500 மைல், சிறியது புதன் குறுக்களவு 3.303 மைல். (11) தென்துருவம்; அது அதிக உயரமாக இருப்பதால்.
(12) இரும்பு வழியாக 16,800 அடி ஒரு செகண்டில். (13) உள்ளே உள்ள பொருள் வாயுவாக மாறி ஓட்டின் சிறு துவாரங்கள் வழியாக வெளியே செல்வதால் பாரம் குறைந்து. (14) 440 இராத்தல் தங்கமிருக்கிறதென்று கணக்கிடுகிறார்கள். வியாபார முறையாக தங்கத்தைப் பெறமுடியாது; தங்கத்தை எடுக்கும் செலவு தங்கவிலையிலும் அதிகமாகும். (15) ஒரு மணிநேரத்தில் 120 கிராம் (Gram) எரிகின்ற மெழுகுதிரி வெளிச்சம். (16) மூன்று இராத்தலுக்குச் சிறிது குறைய. (17) ஆபிரிக்க யானை இந்திய யானையைவிடப் பெரியது; அதன் காதுகளும் தந்தங்களும் பெரியவை; அதன் தும்பிக்கை நுனியில் இரண்டு விரல்கள் உண்டு; இந்திய யானைக்கு ஒருவிரல் உண்டு.
(18) ஒரு யானை 200 ஆண்டுகளும். ஒரு கடலாமை 300 ஆண்டுகளும் வாழ்ந்திருக்கின்றன: திமிங்கிலமும் முதலையும் இதிலும் அதிக காலம் வாழுமென நம்பப்படுகின்றது. (19) தேரைக்குப் பற்களில்லை. (20) ஒட்டைச் சிவிங்கி (giraffe). (21) மணலோடு பொட்டாஷ் முதலியவற்றைக் கலந்து; இது பலவகையான வடிவங்களாக ஊதிச் செய்யப்படுகிறது. (22) தீக்கோழி. (23) இது 850 சொற்கள் அமைந்த ஆங்கில மொழி; இது சொற்கள் மூலம் எல்லாக் கருத்துக்களையும் தெளிவாக உணர்த்த முடியும் என்று கொள்ளப்படுகின்றது.
(24) இது விளையாட்டுப் பொருள்கள், விளையாட்டுகள் பாடல்கள் போன்று பிள்ளைகளுக்கு இயல்பாக இன்பம் தருவனவற்றின் மூலம் கல்வி கற்பிக்கும் முறை; இது பிரோபல் (F. Froebel) என்பவரால் 1873-ல் தொடக்கப்பட்டது. (25) இது இரண்டு துருவங்களுக்கும் இடையில் பூமியைச் சுற்றி வருவதாகக் கருதப்படும் இரேகை; இதன் நீளம் 24,932 மைல்.
18
(1) தாத்தாரியரின் படையெடுப்புக்குப் பயந்து. (2) முகமது மதத்தினர். (3) முகமது நபிக்குப் பிற்பட்ட அரசர். (4) இந்து, இ°லாம், கிறித்துவம், சைனம்.
(5) வறட்சியுள்ள இடங்களில் வளரும் செடிகளின் இலையிலுள்ள நீர் ஆவியாக மாறிவிடாதபடி கடினமாக இருப்பதற்காக, விலங்குகள் தின்று விடாதபடி. (6) மரத்திலிருந்து; முசுக்கட்டைச் செடி இலையை அரைத்து. (7) மீனம்பாக்கம். (8) மனிதனுக்குத் தீமைவிளைக்கும் புழு பூச்சிகளை அழிக்கின்றன; பயிர்களைக் கெடுக்கும் களைப்புல்லின் விதைகளை உண்கின்றன; சில பறவைகள் அழுக்கை உண்கின்றன. (9) சித்திரை, வைகாசி. (10) காற்று, நீர், வெப்பம்.
(11) ஆணி வேரில்லாத (கிளை வேருடைய) நெல், தென்னை, பனை போன்றவை. (12) காற்று, நீர், பறவை, விலங்கின் மூலம். (13) கோரை, அறுகு, தொட்டாற் சுருங்கி. (14) இலுப்பைப் பூ, புற்றுத் தேன், பழம் இறைச்சி முதலியன. (15) பூரணை நாளில் பூமி, சந்திரன், சூரியன் என்னும் மூன்றும் ஒரே நேரில் வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைத்தலால். (16) வாழை, தாளிப்பனை, மூங்கில், கரும்பு. (17) அசோக சக்கரவர்த்தியின் புதல்வி. (18) தாளிப் பனை. (19) குறுகியது. (20) தாவரம் உண்ணும் விலங்குகளின் குடல் போன்று நீளமானது. (21) காகம். (22) நரி. (23) உள்ளே ஒன்றும் இல்லாததாய். (24) கருடன், கீரி. (25) காக்கையின் கூட்டில்.
19
(1) விக்கிரமாதித்தன் காலத்தில்; காளிதாசன் என்னும் புலவரால். (2) வெள்ளி. (3) காற்றுப் புகவும் மண் நொய்தாகவும். (4) சூரிய வெளிச்சத்தின் உதவியால் உணவை உண்டாக்க முடியாதபோது. (5) மக்கள் கற்களால் ஆயுதங் களைச் செய்து பயன்படுத்திய காலத்தை. (6) பால°தீன் நாட்டில் வாழ்ந்த மக்கள். (7) கண்ணகிக்கு ஆலயம் கட்டியது. (8) சலவாயுக்குண்டு (Hydrogen Bomb). (9) 98 1/2 பாகை. (10). பர்மா, பர்சிபா, சுமத்திரா, காக்கேசியா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ, சிரியா.
(11) தடைப்பட்டு நிற்பதாலும் ஆடுமாடு குளிப்பதாலும். (12) வடிகட்டி, சூடாக்கி. (13) தாவரங்களின் உணவு உரம் ஆதலால். (14) அமாவாசைக் காலங்களில் சந்திரன் சூரியனை மறைப்பதால். (15) கி.பி. 712. (16) மெக்கா, கபிலவா°து, பெத்தகேம். (17) காலாள், குதிரை, யானை, தேர். (18) காரீயம் அல்லது கிரபைட் என்னும் உலோகத்தால். (19) முந்திரிகை இரசத்திலிருந்து (20) ஆ°திரேலியா, சுவிட்சர்லாந்து. (21) அங்கிளிசியா. (22) மெக்சிகோக்குடாவில் தொடங்கு கின்றது. (23) மான்செ°டர். (24) அனோபிலி° என்னும் கொசு. (25) ஐக்கிய அமெரிக்கா.
20
(1) கறுப்பு நிறம் சூட்டை வாங்கி உள்ளே விடாது வைத்துக் கொள்ளும் ஆதலால் (2) பனை. (3) “மெதென்” என்னும் ஒரு வகை வாயு எரிவதால். (4) திறந்த வெளிகளில். (5) சூரிய வெளிச்சத்தின் உதவியால் உணவை உண்டாக் கும் பொருட்டு அந்நிறம் பயன்படுவதற்கு. (6) விழ ஒன்றும் இல்லா திருப்பதால். (7) ஹலி° வால் வெள்ளி. (8) அயோடின், பொறித் துhள், பொறித் திரவகம், எண்ணெய். (9) கெட்ட வாயு வெளியேறுதல், கிருமிகள் இறத்தல். (10) பாறைகள் நொறுங்கியதால் உண்டான சிறிய துண்டுகள். (11) இருபத்திரண்டு மைல். (12) மயிர்ப் புழுக்களிலிருந்து. (13) 7000 வரையில் அவற்றில் 4000 வரையில் இந்தியாவில் உண்டு.
(14) மேட்டூர் அணை. (15) இது இலங்கையிலே அனுராதபுரத்தில் உள்ளது. இது துட்டகமுணு என்பவனால் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புத்த மடம். (16) ட்ரூமன். (17) 30,000 மெழுகுதிரி ஒளி வேகம் (candle power). (18) கி. பி. 622. (19) மூன்று. (20) காய்க்கும் பூ, காயாத பூ. (21) இலைகளால், பகலில் கரியமில வாயுவையும் இரவில் பிராணவாயுவையும். (22) அவை பிராணவாயுவை உட்கொண்டு கரியமில வாயுவை வெளியே விடுதலால். (23) சனிக் கிரகத்தின் கிட்டச் சென்றமையால் உடைந்து ஆவியாக மாறிய அதன் சந்திரர்கள் என்று. (24) நீரை வெளியே போகும்படி செய்து உடம்பை அசைத்து மூச்சு வரச் செய்தல் வேண்டும். (25) களி மண்ணை அச்சிலிட்டு கற்களாக அரிந்து சூளையிலிட்டு.
21
(1) தேங்காய், தேங்காயெண்ணெய், கொட்டைப் பாக்கு. (2) உடும்பு, பல்லி. (3) பலா, அத்தி, ஆல். (4) 2240 ஆண்டு, புத்தர் யோகத்திலிருந்து ஞான மடைந்த வெள்ளரசின் கிளையாதலால். (5) மா°கோ. (6) ஆறாம் ஜார்ஜ். (7) ஐக்கிய அமெரிக்கா. (8) தவளை, பாம்பு, ஆமை, முதலை. (9) 13-ஆம் நூற்றாண்டில். (10) 3 முதல் 4 இராத்தல். (11) அம்மை நோய் வராமல் இருப்பதற்கு. (12) அரப்பா, மொஞ்சதரோ. (13) 5000 ஆண்டுகளுக்கு. (14) ஒரு சொல்லைக் குறிக்க ஒரு எழுத்து, ஓவிய வடிவுடையது.
(15) திராவிட மக்கள். (16) சிறுவரின் வளர்ச்சி குன்றும். (17) பத்தரை மாற்று. (18) பர்மா, சீயம். (19) ஒலியைவிட ஒளி வேகமாகச் செல்வதால். (20) பத்து மாதத்தில். (21) வண்டினங்கள், ஈக்கள். (22) இருபத்திரண்டு காரட் (இரண்டு காரட் செம்பு) (23) மைசூர், மலையாளம். (24) நீர்க் கரையில், வெய்யிற் சூட்டினால். (25) பூமியின் உள் இருக்கும் நெருப்பு குழப்பம் அடைவதால்.
22
(1) சுத்தி செய்யப்பட்ட மண்ணெண்ணெய். (2) மண்ணெண்ணெய் நன்றாகச் சுத்தஞ் செய்து மெல்லிதாக்கப் படாதது. (3) கோதுமை. (4) நிறையை. (5) சித்திரை - 8, புரட்டாசி - 8. (6) ஆ°திரேலியா, கலிபோர்னியா, ஜப்பான், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள். (7) கொசுவைப் போக்குதல். (8) குயினா மருந்து. (9) புதர், செடி, சதுப்பு நிலம். (10) 1776. (11) வரைகளைக் கொண்டு. (12) மூக்கினால்; வாயினால் சுவாசித்தல் ஆகாது. (13) தரையில் உருண்டு சாக்கு முதலிய பாரமான போர்வையால் மூடவேண்டும். (14) நச்சுக் காற்று இருப்பதால். (15) சிரங்கு, சின்ன அம்மை, அம்மை. (16) ஐயா, தாங்கள், நீங்கள்.
(17) தொலைவில் வரும் கப்பலின் பாய்மரம் முதலில் தெரிதல், கிரகண காலத்தில் பூமியின் நிழல் வட்டமாக இருத்தல். ஓரிடத்திலிருந்து கிழக்கு நோக்கி அல்லது மேற்கு நோக்கிப் பிரயாணஞ் செய்தால் அதே இடத்துக்கு வருதல் முதலியன. (18) 1819 (19) 1869. (20) கி. மு. 44. (21) பற்புழு. பல்வலி முதலியன உண்டாகும். (22) சீவசத்துக்காகவும், சுகத்துக் காகவும். (23) சுகாதாரப் பகுதியினருக்கு அறிவித்தல், தொற்று நோய் நிவாரணிகளைப் பயன்படுத்துதல். (24) உடம்பிலுள்ள அழுக்கு வியர்வை யாக வழியும்படி. (25) இரத்தம் வராதபடி இறுக்கிப் பிடித்து ஆரம்ப சிகிச்சை செய்வேன்.
23
(1) அதற்கு மறைந்து நின்று, மற்றவர்களுக்கு அறிவித்து அதனைக் கொல்ல வேண்டும். (2) கொசுக்கடியினால் பரவும். (3) குட்டியீனுகிறது. (4) அது சிவனொளிபாத மலையைத் தரிசிக்க வந்த அராபியரால் முதன் முதல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது; பின்பு அங்கிருந்தும் இந்தியா வுக்குக் கொண்டுபோகப்பட்டது. அது ஆபிரிக்க செடி; (5) அற்பமான பஞ்சு ஆடை (6) கால் வழியே காலைத் துளைத்துக் கொண்டு. (7) மிதியடி இட்டு நடத்தல் வேண்டும். (8) மார்க்கோனி என்னும் இத்தாலியர் இவர் 1937-ல் மரணமானார். (9) நன்றாகப் பழுக்காதனவும், அழுகியனவும். (10) ஒரு இராணி ஈ நாள் ஒன்றுக்கு 3000 முட்டையிடும். அது 5 ஆண்டு வரை உயிர் வாழும்; வாழ்நாளில் 1,000,000 முட்டைகள் இடும்.
(11) எ (A) விட்டமின் இல்லாமையால். (12) மூன்று மாதத்தில். (13) எகிப்திய அரசரின் சமாதிக் கட்டடங்கள். (14) அசோக சக்கரவர்த்தி. (15) எகிப்தியர், பாபிலோனியர், அசீரியர், பால°தீனியர், கிரேக்கர், உரோமர், கரதேசியர் தேனீ வளர்த்தலைப்பற்றி அறிந்திருந்தனர். அரி°டோட்டில் காலத்தில் தேனீ வளர்த்தலைப்பற்றிய 200 அல்லது 300 புத்தகங்களிருந்தன. (16) சீனதேசத்துப் பெரிய ஞானி. (17) திசையறி கருவியைக் கொண்டு.
(18) பாத பங்கயமலை, சீபாதம்; ஆதம் மலை. (19) ஐக்கிய அமெரிக்காவி லுள்ள அரசினர் கட்டடம் (Empire State Building) 1498 அடி உயரமும், 102 மாடிகளும் உடையது. (20) எறிந்த திசையை நோக்கி வந்து குளவிகள் கொட்டும். (21) குரங்கு, கரடி, பூனை. (22) அராபிய வியாபாரிகள் குடியேறி யும், அவர்கள் இந்தியப் பெண்களைப் மணந்தும் சந்ததி உண்டாகி. (23) சந்திரகுப்த மயூரன் காலத்தில் (கி.மு. 305). (24) அவர் கொலைத் தீர்ப்பு அடைந்து நஞ்சு குடித்து. (25) கூலி இன்றி அரசினருக்குச் செய்யும் வேலை
24
(1) துளைக்காது. (2) தோல்காது. (3) வில், அம்பு, கேடகம், ஈட்டி, வாள். (4) போர்த்துகீசியர் வந்த பின்பு. (5) கத்தோலிக்க கிறித்துவ மதம். (6) புரொத்து°தாந்து கிறித்துவமதம். (7) மாட்டிலிருந்து. (8) பீ (B) சீவசத்து. (9) மூன்று மாதங்களில். (10) வைகாசி முதல் ஆவணி வரையும். (11) ரேடியம். (12) கஞ்சா. (13) நீராவி. (14) நயினார் தீவுக் கடல், கச்சாய்க் கடல், மறிச்சுக் கட்டி. (15) பெட்ரோல். (16) அது கரியமில வாயுவை வெளியே விடுதலால். (17) விழுப்புரம், திருச்சி, மதுரை, மானாமதுரை, திண்டுக்கல். (18) எப்பொழுதும் வெப்பத்தைக் கக்கிக் கொண்டிருக்கும்; ஆனால் உலோகத்தில் யாதும் குறைவு ஏற்படாது.
(19) அவர்கள் வேளாண்மை செய்ய அறியாமையால், உணவின் பொருட்டு. (20) க்ஷயரோகமுள்ள வர்கள் துப்பும் எச்சிலில் க்ஷயரோகத்தை உண்டு பண்ணும் கிருமிகள் இருக்கும்; அவை காற்றில் பரவி மற்றவர்களுக்கும் அந்நோயை உண்டு பண்ணும். (21) பழங்கால மக்கள் குகைகளில் வசித்தமையால். (22) வார்ணிஷ் பூச வேண்டும். (23) எண்ணெய் அல்லது கொழுப்பு பூச வேண்டும். (24) அமெரிக்கா. (25) அங்கத்தவருக்கு குறைந்த வட்டிக்குப் பணம் கொடுக்கும்.
25
(1) அக°த° சீசர், கொன°தந்தீன். (2) அலக்சாந்தர். (3) டாரிய°. (4) கத்தோ லிக்க மதத்துக்கு. (5) சிங்கத்தைச் சொற்பனத்தில் கண்ட யானை திடுக் கிட்டு ஓடும். (6) சுறுசுறுப்பு, பிற்காலத்துக்குப் பொருள் சேமித்து வைத்தல். (7) உணவைப் பரப்புவதற்கு. (8) பாலி (மகத மொழி). (9) தொடர்ந்து நீர் இறைத்து வந்து, பின் சிலநாள் நீர் இறையாவிடின் பட்டுவிடும். (10) சூரியனைக் கண்டு. (11) கூம்பி. (12) வேர்கள் பூமியி லிருந்து உணவை உறிஞ்சுகின்றன. (13) இராசஇராசன் என்னும் சோழனால், உச்சியில் 80 டன் நிறையுள்ள தனிக் கல் வைக்கப்பட்டுள்ளது. (14) அரேபியா, ஆ°தி ரேலியா.
(15) வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் பிரிக் கிறது. பசிபிக் கடலையும், அட்லாந்திக் கடலையும் தொடுக்கிறது. (16) உப்பு இருப்பதால். (17) செம்பு, வெள்ளி, பொன், இரும்பு, ஈயம். (18) வியர்வை யினால், கழுவிப் போக்காவிடில் மேலும் வியர்வை வரமாட்டாது நோயுண்டாகும். (19) தனுஷ்கோடி, இராமேசுவரம், மன்னார்குடி, புதுச்சேரி, காரைக்கால், அறந்தாங்கி, திருவனந்தபுரம், திருச்செந்தூர். (20) வெக்கை, கோமாரி, குன்றிநோய். (21) ஓடும்போது தம்மைச் சமமாக வைத்துக் கொள்வதற்கு, ஈக்களை ஓட்ட. (22) மயக்கம் அடைதல், இருதயம் பலவீன மடைதல். (23) தூக்கணங் குருவி. (24) நண்டு. (25) திமிங்கிலம், சுறா.
26
(1) ஆந்தை, கோட்டான், வெளவால். (2) ஒருவர் செய்த தீமையை மறவாதிருந்து பழிவாங்குதல். (3) மேலே எறியும் பொருள் கீழே விழுதலால். (4) பள்ளிவாசல். (5) புன்செய் நீர் பாய்ச்சாது விளைவது; நன்செய் நீர் பாய்ச்சி விளைவது. (6) 1863ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில். (7) முதலாம் கயவாகு. (8) நாணல் தண்டுகளைப் பிளந்து ஒட்டிய பைபிர° என்னும் தாளில். (9) நாணல். (10) சுவிட்சர்லாந்தின் கொடி சிவப்புத் துணியில் வெள்ளை சிலுவைக் குறி இடப்பட்டது. இச் சங்கம் முதல் முதல் தொடங்கிய நாட்டுக்கு மதிப்புக் கொடுப்பதற்காக எல்லாச் சாதியாரும் அவ்வடை யாளத்தைப் பயன்படுத்துவர்.
(11) பிடித்தது விடாமை, முற்காலத்தில் போர்களில் மதிலில் ஏறுவதற்குக் கயிற்றில் உடும்பைக் கட்டி, மதிலில் எறிந்து கயிறு வழியே வீரர் ஏறுவர். (12) சீரணமின்மை, நோய். (13) பாலில் இருக்கும் நோய்க் கிருமிகள் இறப்பதற்காக. (14) கன்னண். (15) இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு, கெந்தக திராவகத்தால். (16) சுவாசிப்பதால், அழுகிய பொருள்களிற் படுவதால். (17) பூமியின் கவரும் சத்தியினால். (18) ஆற்றோரங்களில்.
(19) மகா வீட்டை தேவைக்கு அதிகப்பட்ட பெரிதாகக் கட்டவேண்டாமென்பது. (20) பனிப்புகார் திரளான மீன்கள் அகப்படுதல். (21) தலையை நிமிர்த்தி வைத்துக் கொண்டு மூக்குத் தண்டில் அல்லது பிடரியில் குளிர்ந்த நீரைவிட்டு. (22) இரண்டுக்கும் இடைப்பட்ட உயிர். (23) சுற்றத்தை அழைத்து உண்ணல். (24) வெப்பமாக இருக்கும். (25) காற்றின் அடர்த்தி குறைந்திருப்பதால்.
27
(1) தென்னாப்பிரிக்கா. (2) தென்னமெரிக்கச்செடி, அது மிளகு போல் உறைப்பாக இருத்தலால் மிளகாய் எனப்பட்டது. (3) ஒரு படி நீராகவே இருக்கும். (4) தண்ணீரிலும் பாரம் குறைந்தது. (5) ஆவணி புரட்டாசி. (6) அந்தந்தத் தொழில்காரருக்கு அவரவர் பெருமை தெரியும்; கால் புற்று. (7) களைத்த குதிரையை அடித்து ஓட்டுவது போல. (8) நிலம் சடுதியில் அளவு கடந்து சூடாகிச் சடுதியில் குளிர்வதால். (9) பா°பர° என்னும் ஒளிதரும் பொருள் இருப்பதால் (10) நாட்டின் சனங்களே தலைமை வகித்து நாட்டை ஆளுதல். (11) பட (சித்திர) எழுத்துக்கள். (12) சணல் நூலிலிருந்து, அவ்வாடை ‘லினன் ஆடை’ எனப்படும்.
(13) கபிலவா°து. (14) சீனர். (15) இலண்டன், நியூயார்க், டோக்கியோ, மா°கோ, பெர்லின். (16) ஒட்டக சாதியைச் சேர்ந்தவை. (17) 186,000 மைல். (18) இரண்டிலும் வெவ்வேறு வகை அணுக்கள் அடங்கியிருப்பதால். (19) உப்பு நீரானமையினால். (20) உயர்ந்த மலை இடங்களில். (21) மூவாயிரம் வெண் தாதுக்கள். ஐம்பது இலட்சம் செந்தாதுக்கள். (22) மகாவீரர். (23) அழுக்குகளைப் புசித்து சுத்தம் செய்வதால். (24) மரங்கள் ஒன்றோடு ஒன்று உராய்தலால். (25) ஆந்தை, கோட்டான், பூனை, வெளவால்.
28
(1) வெண்பா. (2) சர்க்கரை சத்து, ஊன்சத்து (Proteins) கொழுப்புச் சத்து (Fats) உப்புச் சத்து (Mineral salts) விட்டமின், தண்ணீர், காற்று. (3) மாசி, பங்குனி. (4) மணிக்கு 66,600 மைல். (5) பறந்துவிடும். (6) டாக்டர் வில்லியம் ஹார்வி (Dr. William Harvy) 1578 - 1655). (7) அலக்சாந்தர் கிரகாம்பெல் (Alexander Graham Bell 1847 - 1922). (8) எலிகளைப் பிடிப்பதால். (9) துதிக்கைப் போன்ற நாக்கினால் உறிஞ்சி. (10) சிரங்கு உண்டாக்கும் கிருமிகள் தோலின் கீழ் இருந்து முட்டையிட்டுப் பெருகுவதால்; கெந்தகம்.
(11) இரும்போடு குரோமியம் என்னும் உலோகத்தைச் சேர்த்து உருக்கி. (12) மரவிறகு, நிலக்கரி. (13) நிலக்கரி. (14) ஆடை வெண்ணெயாதலாலும் அது நீரிலும் பாரம் குறைந்ததாலும். (15) பழுதுபட்டுவிடும். (16) நீலகிரி. (17) நைல்.
(18) எகிப்திய அரசரை அடக்கம் செய்துள்ள சமாதிகள். (19) கொலம்ப° 1503. (20) இத்தாலியிலுள்ள வெனி°. (21) பிரிட்டன், சுவீடன், செர்மனி, ஐக்கிய அமெரிக்கா, பிரான்°. (22) மிகப் பழங்காலத்தில் காடுகள் மண்ணால் மூடப்பட்டு, மரங்கள் பாரத்தினால் சூடேறுவதால். (23) ஆ°திரேலியா. (24) புறா 14 நாட்களில் அடைகாத்து குஞ்சுபொரிக்கும். (25) சீனா.
29
(1) அவை தொலைவில் இருப்பதால். (2) வெப்பநிலை மாறுபடுதலாலும் பாக்டீரியா என்னும் கிருமிகள் விருத்தியாவதாலும். (3) ஆவணி, புரட்டாசி. (4) சந்திரனின் கவர்ச்சியால். (5) கரியமிலவாயுவைப் பகலிலும், இரவில் பிராணவாயுவையும். (6) செம்மறியாடு, மான், யானை. (7) மாடுகளை அடையாளத்தினால் அறிய திருட்டுப் போகாமல். (8) பனிக் காலத்தில் வைக்கோலால் வேய்ந்த வீடுகள் இரவில் வெப்பமாக இருக்கும்.
(9) ஒட்டகம் (10) இரேடியோக் கருவி மூலம் செய்திகளையும் சங்கீதத் தையும் வெளியிடுவதை. (11) புழு வெட்டுதல், இலைகள் சுருளுதல். (12) மரத்தை வட்டிலிருந்து அடிவரையும் நடுவால் துளைத்து. (13) வைகாசி, ஆனி. (14) நல்ல இன மரங்களைப் பெறவும், விரைவில் காய்க்கவும்; வெட்டு ஒட்டு, பிளவு ஒட்டு, முகை ஒட்டு. (15) கற்பாளையிலிருந்து ஊற்றுவரும் கிணறுகளில். (16) நிலத்தின் உவர்ப்புத் தன்மையால். (17) அரசு, மகோகனி, ஆல், வாகை, வேம்பு. (18) முட்டை, புழு, மயிர்ப்புழு, வண்ணாத்திப்பூச்சி.
(19) மேற்கு ஆசியாவில்; அவ்வாறுகள் ஒன்று சேர்ந்து பாரசீகக்குடாக் கடலுள் விழுகின்றன. (20) அரசாங்க நிர்வாக உபசார விதிகளைக் கடுமையாகப் பின்பற்றுதல் (too strict observance of official formality). (21) தைகிர° யூபிராதி° நதிகள் ஒன்று சேரும் கீழ்ப்பாகங்களில். (22) பூமிக்கு கீழ் பாறைகள் உருகியிருக்கும் போது நிறப் பொருள்கள் சேர்வதால். (23) திருக்கேச்சுரம், திருக்கோணமலை. (24) அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா. (25) கண்ணாடி உருகி யிருக்கும்போது அதோடு நிறத்தைக் கலந்து.
30
(1) 15000 அடிவரையில் இதற்கு இருமடி ஆழத்தில் நீர் நீராவியாக மாறும். (2) இரத்தினபுரி. (3) சீனியைக் கரைத்து வைத்த பாத்திரத்தினுள் நூல்களைத் தொங்கவிட்டு மெல்லிய நெருப்பு எரித்துக் காய்ச்சி. (4) ஒட்டகம். (5) ஒட்டைச் சிவிங்கி. (6) மைசூர், நீலகிரி. (7) கலிலியோ கலிலி (1564 - 1642) இத்தாலியர். (8) வாக்குண்டாம், நல்வழி, மூதுரை. (9) சர°வதி. (10) நாலடியார், திருக்குறள். (11) உப்பைக் கரைத்துவிடுவேன். (12) கமுகு, பனை, தென்னை, தாளிப்பனை, ஈந்து. (13) மாடு, ஆடு, குதிரை. (14) க°தூரிமானிலிருந்து வடஇந்தியா, திபெத்து. (15) அது கண்ணையே செவியாகப் பயன்படுத்துகின்றது எனக் கருதப்படுவதால்.
(16) இடிச் சத்தத்தினால் அதன் காதுச் சவ்வு உடைந்து இறந்துபோகும் என்று சொல்லப்படுகிறது. (17) நிலத்தில் இருந்து எழும்பும் நீராவி முகிலாகாது குளிர்ந்து நிலத்துக்கு வருவதால். (18) நீராவியிலுள்ள நீரைக் காற்று கவர்ந்து கொள்வதால். (19) குளத்தை வெட்டிவிட்டால் தவளை தானே வரும் என்றவாறு. (20) சொல்லாமற் செய்வர் பெரியர், சொல்லிச் செய்வர் சிறியர், சொல்லியும் செய்யார் கயவர். (21) பனங்கிழங்கு போன்றது. (22) நீரிலிருந்து பாலைப் பிரிக்கக் கூடியதென்று சொல்லப்பட்டுள்ளது. இது இங்கிலாந்திலே தேம்° ஆற்றில் வாழுவதாகச் சொல்லப்படுகின்றது. (23) அரிச்சந்திரன். (24) சைர°. (25) நெருப்பு.
31
(1) திறந்த வெளிகளில். (2) கிரேக்கர் அராபியர் உரோமர் (3) கி .பி. இரண்டாம் நூற்றாண்டு. (4) கிரேக்கர். (5) வெய்யில், மழை காற்று. (6) கங்காரு, அமெரிக்காவில் காணப்படும் அப்பாசும் (opossum) என்னும் பூனை அளவுள்ள விலங்கு. (7) பாலி மொழியில். (8) ஆ°திரேலிய மாடு. (9) மாம்பூக்களைப் பெரிதும் கோதுவதால். (10) அழகுக்கு, சுத்தமான காற்று வருவதற்கு. (11) தொற்று நோய்களைப் பரப்புவதால். (12) தேன், காய், கனி, கிழங்குகள். (13) உழுது எரு இட வேண்டும். (14) திங்கள், பூமி, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, யூரான°, நெப்தியூன், புளுட்டோ. (15) இரண்டு முட்டையிட்டு ஆணும் பெண்ணுமாகிய இரண்டு குஞ்சுகள் பொரிக்கும்.
(16) ஆறுவிழும் பக்கத்தை நோக்கி நிற்கும்போது வலக்கைப் புறம் வலக்கரை இடக்கைப்புறம் இடக்கரை. (17) நன்கு சீரணமாகாது. (18) சர்க்கரை, கற்கண்டு, சீனி. (19) செம்போடு தகரத்தைக் கலந்து. (20) நீர்க் கடிகாரம், மணற்கடிகாரம், சூரியநிழல், நட்சத்திரங்கள் மூலம். (21) விளக்குமாறு போல். (22) மழை பெய்யும் நீர் பாறைகளில் தங்கியிருப்பதால். (23) இரும்பு. (24) நச்சுக் காற்றை மூச்சுவிடநேரும், அதனால் நோயும் சீவ மோசமும் உண்டாகும். (25) கடற்கரைத் தாழங்காய் கீழே தூங்கினாலென்ன மேலே தூங்கினாலென்ன.
32
(1) காரீயம். (2) நெருப்பு எரிவதற்குப் பிராணவாயுவைப் பெறமுடியாமல் தடைசெய்து. (3) மேற்படி (4) இது லைதியா (Lyidia) தேசத்திலே மாக்நிசியா என்னும் இடத்தில் கிடைப்பதால். (5) 1. பால°தீனத்தில் 2. கெந்தகமும் உப்பும் கலந்த நீர். (6) எகிப்தை ஆசியாவினின்றும் பிரிக்கிறது. செங்கடலையும் மத்தியதரைக் கடலையும் தொடுக்கின்றது. (7) மெ°மர் என்னும் ஆ°திரிய டாக்டரால் கி.பி. 1744 - 1815. (8) ஷெல், சோக்கானி, கால் டெக்°. (9) ஐக்கிய நாடுகள். (10) தொற்று நோய் இருக்கிறதோ என்று சோதனை பெற. (11) அம்மைப்பால் கட்டுவிக்க வேண்டும்; 15 நாட்களுக்கு டாக்டருக்குத் தன்னைத் காட்டவேண்டும். (12) தீயணைக்கும் படை.
(13) பயர் பிரிகேட் (fire brigade) (14) தண்ணீர்த் தொட்டி, தண்ணீர் எடுக்கும் குழாய் முதலியன அமைக்கப்பட்டது 2 நெருப்புப் பிடிக்கமாட்டாதது, சிவப்புமை பூசப்பட்டது. மணி அடித்துக் கொண்டு செல்லும். (15) பகலில் அதிகம் தூசி வானத்தில் எழுகின்றது. சூரிய கிரகணம் செங்குத்தாக விழுவதிலும் பார்க்க மாலையில் அதிக தூரம் தாண்டி வருகிறது. சாய்வாய் வருவதால் அப்போது தூசி, புகை முதலியன சூரியனின் சில ஒளிகளைக் கவர்ந்து கொண்டு சில நிறங் களையே நமக்கு வரவிடுகின்றன. அதனால் பல நிறங்கள் தோன்றுகின்றன. (16) பொருள்களை முட்டி அறிவதற்கும், அம் மயிர்கள் நீண்டிருக்கும் அகலத்திலும் பார்க்கச் சிறிய ஈவுகளால் போக முடியாதென அறிவ தற்கும். (17) கடலில் சந்திரன் ஒளியால் விளையும் ஒருவகை உப்பு, மருந் துக்குப் பயன்படுவது. (18) மயிர் நீப்பின் வாழமாட்டாது எனச் சொல்லப் படுகிறது.
(19) டிராம் பாதையைக் கண்டு பிடித்தவருக்கு அப் பெயர் உள்ளமையால். (20) காணமயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி தானு மதுவாகப் பாவித்து ஆடியதற்கு. (21) வெய்யில் எறிக்கும்போது மழை தூறினால் சூரியனுக்கு எதிர்ப்புறத்தில் வானவில் தோன்றும் (22) நிறம் இல்லை. (23) தண்ணீரிலும் பாரம் குறைவாதலால். (24) எண்ணெய் நீரில் மிதக்கத்தக்கது ஆதலின் தண்ணீர் ஊற்றினால் எண்ணெய் மிதந்து பிராணாவாயுவோடு கலந்து ஒன்றாய் எரியும். (25) மனுச்சோழன்.
**33
1. பறவைகளின் கால் நிலத்தில் முட்டுவதில்லை; நாமும் நிலத்தில் கால் முட்டாமல் நின்று பிடித்தால் அபாயம் நேராது. (2) 600,000 தங்கப்பவுனாக விருந்தது; காங்கோவில் இரேடியம் கண்டுபிடிக்கப்பட்டபோது 300,000 பவுனாகக் குறைந்தது. (3) ரேடியத்தோடு வைக்கும் சாதாரண உப்பு, இரேடியத்தின் தன்மையை அடைகின்றது. இவ்வுப்பே கடிகாரங்களுக்கு எழுத்தெழுதப் பயன்படுத்தப்படுகிறது. (4) வேப்பங்கனி. (5) பத்து. (6) ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர். (7) கல்வி. (8) வாலை ஆட்டி, குரைத்து. (9) இனிப்பு, உறைப்பு, புளிப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு. (10) 1835-ம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி.
(11) மனிதனின் உடம்பு வளர்ச்சிக்கேற்ற எல்லாச் சத்துக்களுமுள்ள உணவு. (12) இராமாயணம், பாரதம், நைடதம், சிலப்பதிகாரம், சிந்தாமணி. (13) ஆபத்துக்கு உட்பட்ட வருக்கு வைத்திய உதவிபெற முன் செய்யப்படும் சிகிச்சை. (14) பங்குனி, சித்திரை, வைகாசி. (15) பத்துப்பாட்டு, அகநானூறு, புறநானூறு, ஐங்குறு நூறு, குறுந்தொகை, (16) நச்சினார்க்கினியர், சேனாவரையர், இளம்பூரணர், பேராசிரியர், பரிமேலழகர். (17) உடல் வளர்ச்சிக்கேற்ற எல்லாச்சத்தும் இருப்பதால். (18) மனித வளர்ச்சிக்கு வேண்டிய சில சத்துப் பொருள்கள்; அவை ஏ.பி.சி.டி.இ. என நான்கு வகைப்படும். (19) காசாலேசா-, காசா-இலேசா. (20) ஐயமிட்டுண். மருந்தே ஆயினும் விருந்தோடுண்.
(21) 6,080 அடி கொண்ட கப்பலோடும் தூரம். 20 நொட் 23 மைலுக்குச்சரி. (22) நிகிரோவர், மங்கோலியர், காக்கேசியர். (23) ஒரு முகிலிலிருந்து இன்னொரு முகிலுக்கு மின்சாரம் பாயும்போது மின்சக்தி நிலத்தில் பாய்தல். (24) சொரசொரப்புள்ளதாய். (25) தாவரம் உணவுகொள்ளும் விலங்கின் நாக்குப் போன்று சொரசொரப்பு இல்லாததாய்.
34
(1) சுவாசப்பை சுருங்காமல் இருப்பதற்கு. (2) முப்பத்திரண்டு. (3) சோம்பலும் வெப்பமும் அதிகரிக்கும். (4) இலையைக் கழுவுவதற்கு. (5) உண்டி, நெற்றி, ஊர். (6) ஒருபொருள் மிகுதியாகக் கிடைக்கும் இடத்துக்கு அதே பொருளை விற்கக் கொண்டுபோதல். (7) அப்பிரகம் (mica) இது உலகமுழுமையிற் கிடைப்பதில் 80% இந்தியாவில் கிடைக்கிறது. (8) கல்வி. (9) கோட்டான். (10) குறைவற்ற செல்வம். (11) சூரியனிடமிருந்து. (12) பூமி நெருப்புக்கோளமாயிருந்தபோது அதின் ஒருபகுதி தெறித்து விழுந்து. (13) இருட்டு இடங்களில். (14) மைனா, செண்பகம், காகம். (15) நீந்துவதற்காக. (16) இராக்காலத்தில்.
(17) சங்கம் இருக்கும் எல்லைக்குள் சொத்து உள்ளவர்கள். (18) நிலத்தில் உருண்டு பாரமான சாக்கு அல்லது கம்பளியால் மூடுவேன். (19) இது இந்துச் சீனாவில் கம்போதியாவி லுள்ளது. இங்கு இந்திய நாகரிகத்தைக் காட்டும் பழைய இடிபாடுகள் உள்ளன. (20) கொக்கிப் புழுவால். (21) சேற்று நிலத்திலும், நீர், செடி, புல்லிலும். (22) மண்ணெண்ணெய் தெளித்தல், செடிகள் வெட்டல், நீரைக்கட்டுப்படுத்தாது விடுதல். (23) குயினா மருந்து எடுத்தல். (24) கம்மாளர் தம்மை விசுவப் பிராமணர் எனக் கூறுவர். பூணூலும் தரிப்பர். (25) ஊரில் சமாதானத்தைக் கவனித்தல்.
35
(1) புகைவண்டி, மோட்டார், மாட்டுவண்டி, ஜட்காவண்டிகள். (2) கச்சியப்ப சிவாசாரியார். (3) எண்சாண். (4) தானும் பயன்கொள்ளாது பிறரையும் பயன்கொள்ள விடாதிருத்தல். (5) பாலில் நீரில்லாத வேறு பொருள்கள் இருக்கின்றன. அவை பால் நீராவியாகும்போது மேலே எழ விடுவ தில்லை. அதனால் பொங்குகின்றது. (6) ஓட்டிலிருக்கும் துவாரங்களால். (7) முட்டைக் குள்ளிருக்கும் வெண்கரு, மஞ்சட்கரு, (8) தொலைவு நோக்கி அமைக்கப்பட்ட உயர்ந்த கட்டிடம் (9) மார்க்கோனி என்னும் இத்தாலியர் 1895-ல், இவர் 1937-ல் காலமானார். (10) ஆபிரிக்காவில் எகிப்துக்கு மேற்கே. (11) பாலை வனங்களினிடையே நீர் நிலையும் மரஞ்செடிகளுமுள்ள இடம்.
(13) நாலு மைல். (14) 18 (15) அதிலுள்ள காற்று வெளியேறுவதால். (16) அஞ்ஞானம், அவிவேகம், தட்பம். (17) ஒருவர் செய்வதைப் பார்த்துத் தானும் அதுபோல செய்வது. (18) முன்னறி தெய்வம். (19) …… (20) தாராவைக் காலில் பிடித்துத் தலைகீழாகத் தூக்கி னால் இறந்துவிடும். (21) வடக்கு நோக்கி, (22) இரும்பைக் காந்தக் கல்லில் ஒரே திசையை நோக்கிப் பலமுறை உரைஞ்சுவதால். (23) மின்சாரம் தாக்காமல், ரப்பரில் மின்சாரம் பாய மாட்டாது. (24) மின்சாரம் தாக்குவதால் சிவமோச முண்டாகும். (25) காற்றோடு உள்ளே செல்லும் அசுத்தங் களைத் தடுப்பதற்கு.
36
(1) துருவ நட்சத்திரம். (2) ஆசியா. (3) மத்திய இரேகைப் பகுதிகளிலும் ஆர்ட்டிக் கடல் பகுதிகளிலும். (4) புறா. (5) திபேத்திலுள்ள புத்த குருமார், இவர்களே நாட்டை ஆளுகிறார்கள். (6) இது குட்டியீனும், குட்டிக்குப் பால்கொடுத்து வளர்க்கும். (7) அதில் பறக்கவிடும் கொடியினால். (8) இலங்கை, பர்மா, சீயம், சீனம், ஜப்பான். (9) சத்தத்தைத் தொலைவில் கேட்கும்படி ஒலிக்கும் கருவி. (10) பாரமில்லாதிருப்பதற்கு. (11) தாழ்ந்த வகுப்பினர், ஐந்தாவது சாதி என்பது பொருள். (12) வெய்யில் காலத்தில் தண்டவாளம் நீள்வதால் அவை மிதந்து விடாதபடி. (13) வலப்பக்கத்தால். (14) வடஇந்தியாவில் புத்தர் ஆலயத்துக்குப் பேர்போன இடம்.
(15) ஆபிரிகாக்கண்டத்தில்; இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. (16) யூகலிபிட° என்னும் மரம். இது 480 அடிவரையில் வளர்கிறது. (17) அலுமினியம் (18) ஆறு. (19) பெருந்தேவனார் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு. (20) உலக்கைப் போகும் இடம் பாரார். (21) குலத்துக்குரிய கல்வி தானாகவரும். (22) முக்கோண வடிவம். (23) ஆ°திரேலியா, அமெரிக்கா. (24) பக்கிங்காம் பாலே°. (25) தாய்க்குப் பதில் பிள்ளையை வளர்ப்பவள் (ஆயா).
37
(1) மாதம் 50 ரூபாயும் அதற்கு மேற்பட்ட வருமானம் உடையவர்களுக்கு. (2) ஹாலிவுட். (3) கெட்டுப்போன முட்டையுள் வாயு உண்டாகி வெளியே போவதால் மிதக்கிறது. (4) ஒட்டகம். (5) அலக்சாந்திரியா. (6) சயங் கொண்டார். (7) சுத்தத்தங்கம் 24 காரட். 18 காரட் என்றால் 6 பங்கு செம்பு. (8) கள்ளத்துறவு. (9) காண்டாமிருகக்கொம்புச்சிமிழில் ஊற்றிக்குடிக்கும் பானங்களில் நஞ்சிருந்தால் வேலை செய்யமாட்டாது என்று முன்னுள்ளவர்கள் நம்பினார்கள்.
(10) பசிபிக்கடல். (11) வா°கோடிகாமா கி.பி. 1498. (12) நான்கு (13) முன் இரண்டுவிரலும், பின் இரண்டு விரலுமாக. (14) கொச்சி, திருவிதாங்கூர், புதுக்கோட்டை, மைசூர், ஹைதராபாத், (15), போர்த்துக்கேயர் பிரான்சியர். (16) கலப்பை, கத்தி, மண்வெட்டி, களைக் கொத்தி, கடப்பாரை, அரிவாள். (17) ஆங்கிலரை. (18) இரண்டு பக்கங்களி லும் ஆபத்து. (19) இது கிறித்துநாதர் உயிர்த் தெழுந்ததைக் குறிக்கும் கொண்டாட்டம். இது ஏப்பிரல் மாதத்தில் வரும் இரண்டாம் சனிக் கிழமைக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவது. (20) ஊதா, கருநீலம், பச்சை, ஆரஞ்சுப் பழநிறம், சிவப்பு, நீலம்.
(21) காற்றிலுள்ள கந்தகச்சத்துப் படிவதால் அதனுள் கோழி முட்டையை வைத்தால் கறுக்கும். முட்டையில் கந்தகச் சத்து உண்டு. (22) நீர் நீரினும் பார்க்கப் பனிக்கட்டி பாரம் குறைவு. (23) வெளிச்சம் நொடிக்கு 186, 300 மைல். ஒலி நொடிக்கு 1,120 அடி. (24) பிரயாணிகள் விழுந்துவிடாமல். (25) துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.
38
(1) பெரிய பிரயாசை எடுத்துச் சிறுபயன் கொள்ளுதல். (2) விட்டம். (3) குறைவற்ற செல்வம். (4) கேய்சர். (5) பொருள்களை ஊடுருவிப் பார்க்கக்கூடிய ஒளி. (6) ஒளவையார். (7) விசூனிய°. (8) விடாமுயற்சி வெற்றிதரும். (9) ஒருவர் சொல்வதன் பயனை அறியமாட்டாதவர்களுக்கு அதனைப் போதித்தல் ஆகாது என்பது. (10) குறடு. (11) டோக்கியோ. (12) தொலைவில் வரும் எதிரிகளுக்குத் தெரியாதிருக்க. (13) பூமியைத் துளைத்து கீழே வெளிச்சமும் காற்றும் புகும்படி செய்தல். (14) முதலாவது பெரிய யுத்தம் நின்ற நாள். (15) வறியவன், வள்ளல், அபகீர்த்தி. (16) ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது. ஞாயிறு கிரகமன்று; நட்சத்திரம்.
(17) வெளவால். (18) மழைக்காலங்களில். (19) பாதங்களில் மெத்தை போன்ற சதை இருப்பதால். (20) ஐந்து தோலாவுக்கு 3/4 அணா. (21) பின்புறத்திலுள்ளது. தோணியை நினைத்த திசைக்குத் திருப்ப. (22) இரண்டு தடிகளால் உணவைத் தட்டி. (23) இரவு ஆறுமாதம்; பகல் ஆறு மாதம். (24) கிளி, பறவை, கிழி, கிழித்தல், துணியில் வைத்து முடிந்த முடிச்சி. (25) எகிப்து, அரேபியா.
39
(1) பவணந்திமுனிவர். (2) குரங்கு எழுவாய், வசிக்கும் பயனிலை. (3) இரையை அகப்படுத்தி. (4) தொலைவில் இருப்பவர் ஒருவர் நினைப்பதை மற்றவர் அறிதல் (5) கன்டன்பெர்க் (Guntenberg) (1400-1468) என்னும் ஜெர்மனியர். (6) மரக்கறி, அமிர்தம், சோம்பல், விவேகம் (7) கம்பர். (8) கண் பாவையை அகலச் செய்து. (9) இன்று வருவது சிறிதாயினும் நிச்சயமானது; நாளை வருவது அதிகமாயினும் சந்தேகமானது. (10) சிறப்புடையன்.
(11) பைபிள், திரிபிடகம், குர் ஆன். (12) சூய°. (13) சுல்தான். (14) ஆபிரிக்காவில், ஒரு கொம்பு. (15) ஏழு. (16) மீன்கள் இடும் முட்டைகள் பல உயிர்களால் சேதம் அடைகின்றன. பறவைகளின் முட்டை அவ்வாறு சேதம் அடைவ தில்லை. (17) காமதேனு (18) பஞ்சாப், சிந்து, வங்காளம், பம்பாய், சென்னை, மத்திய மாகாணம், ஐக்கியமாகாணம், பீஹார், அ°ஸாம், ஒரிஸா, வடமேற்கு எல்லைப்புற மாகாணம், லாகூர், கராச்சி, கல்கத்தா, பம்பாய், சென்னை, நாகப்பூர், லக்ஷ்மணபுரி, பாட்னா, ஷில்லாங், கட்டாக், பெஷாவர்
(19) ஓரிடத்தில் முளைத்து நெருங்கி வளர்ந்தால் போதிய உணவும் வெளிச்சமும் கிடையாது. (20) எச்சரிப்பதற்காக (21) -215- (22) 5 - ஆண்டு. (23) மாதம் 150 ரூபாய். (24) ரூ.1500. (25) பன்னிரண்டு வார்த்தைகளுக்கும் உட்பட்டதற்கும் ஒரு ரூபாய்.
40
(1) விலாங்கு. (2) ஆயிரத்தக்கு மேற்பட்டவகை. (3) எழுபந்தைந்து வரையில் தீங்குள்ளவை. (4) வளர்ந்து ஒன்று இரண்டாகப் பிரியும்; பின்பு இரண்டு நான்கு எட்டாகும். (5) நெருப்புக் காய்ச்சலை உண்டாக்கும் நோய்க்கிருமி யால். (6) அதைத் தடுக்கும் மருந்தை ஊசியால் ஏற்றுவிக்கவேண்டும்.
(7) காற்று நன்றாய் உலாவக் கூடிய இடத்தில். (8) நரம்பு வேலை செய்யும் போது சில கழிவுப்பொருள்கள் உண்டாகின்றன. அவை இரத்தத்தில் கலந்திருக்கும் பிராணவாயுவால் எரிகின்றன. அதிகவேலை செய்யும் போது எரிவதற்கு அதிக கழிவுப் பொருள்கள் திரளுகின்றன. அதனால் நரம்புகள் தாக்கப்படுவதால் களை உண்டாகிறது, (9) களைத்தபின் ஓய்ந் திருந்தால் இரத்தம் கழிவுப் பொருள்களை அப்புறப்படுத்திவிடுகிறது. அப்போது உடம்பு ஆறுதல் அடைகிறது.
(10) மிருகங்களுக்கு அம்மை நோய்வரச் செய்து அவ்வம்மைப் பாலை எடுத்துச் சுத்தஞ் செய்த அம்மைப்பால்; அம்மைப்பால் கட்டுவதால் அது உடம்பில் செறிந்து உடம்புக்கு அந்நோய் உண்டாகாமல் எதிர்க்கக்கூடிய வல்லமையை அளிக்கிறது. (11) கோழி காட்டுக் கோழியாயிருந்த காலத்தில் அது முட்டையிட்டபின் வெளியே வந்து கொக்கரித்தால் அதன் சத்துருவாகிய நரி அதைத் துரத்திச் செல்லும் முட்டைகளைக் கண்டுபிடித்துத் தின்று விடமாட்டாது. அது காட்டுவாழ்க்கையில் செய்ததையே இன்றும் செய்கிறது. (12) திருவள்ளுவர். (13) புண்ணியந்தெரியும். (14) அதனால் மரணம் நேரும்.
(15) சைவ மடங்களுக்குத் தலைவராயிருக்கும் துறவியாகிய ஒருவர். இவர் இறக்குமுன் இன்னொருவரைத் தனது இடத்துக்கு நியமிப்பார். இவர்கள் பிராமணரல்லாதார். (16) 2 சோடி. (17) செகண்டுக்கு 1500 அடிகள் வரையில் (18) இராணி ஈ, வேலைக்கார ஈ, சோம்பேறி ஈ (19) கொழுப்பு. (20) சிலுவை (21) திருநெல்வேலியில் ஆதிச்சநல்லூர், ஹைதரபாத், பல்லாவாரம், மலையாளம். (22) சைபிர°, கலிபோர்ணியா, ஆ°திரேலியா, மத்தியதரை வெப்பநிலையுள்ள நாடுகள் (23) கம்பியில்லாத் தந்தி மூலம் அபாய அறிவிப்பு சிவப்புக் கொடி தூக்குதல் (24) சுண்ணாம்புக் கற்களையும் சுத்தமான களிமண்ணை யும் அளவுப்படி கலந்து சூளையிட்டுப் பின் இயந்திரத்தினுதவியால் அரைத்து (25) °பெயின் நாட்டின் குடியரசுத் தலைவர்.
41
(1) கொலைக்குற்றம், இராசத் துரோகம் (2) அரசினர் கட்சிக்காக வாதாடும் வழக்கறிஞர் (வக்கீல்) (3) ஐம்பது இராத்தல். (4) சிந்துவெளி (அரப்பா மொகஞ்சதரோ) சாஞ்சி (5) புழலேரி, பூண்டித்தேக்கம் (6) கீழ்ப்பாக்கம் (7) கி.பி. 1498 (8) கி.பி. 1819 (9) பூச்சிகள் துணியை உண்டுவிடாமல் நெப்த லின் மருந்து பூச்சியைக் கொல்லும் (10) இரண்டு பக்கங்களிலுமுள்ள செவுள்களில் இருக்கும் துவாரங்களின் வழியாக நீரை உள்ளே புகும்படிவிட்டு (11) திருத்தக்கதேவர் (12) கெட்டிக்காரனா யிருந்தாலும் வீரம் பேசுதல் ஆகாது (13) அணைகோலிக் கொள் (14) ஒரு சாதியாரின் செழிப்பான காலத்தை (15) சிறுமூளையை (பின்புறத்திலுள்ளது)
(16) வீதி பழுதுபார்க்கப்படுகிறது, அபாயம் என்பதை அறிவிக்க (17) ராயப் பேட்டை, நுங்கம்பாக்கம் (18) பைத்திய நாய் கடிக்காக அரசினர் ஏற்படுத்தியுள்ள ஜில்லா வைத்தியசாலைகளில் (19) வாழ்கின்றன (20) நீர் பானைக்கு வெளியே சுவறி பானை நீரிலுள்ள வெப்பத்தைக் கவர்வதால் (கவர்ந்து அது நீராவியாக மாறுகின்றது) (21) குளோரைனால் சுத்தம் செய்யப்படுகிறது. (22) அதில் உப்பு அதிகமானமையால் நீர் பாரமானது (23) ஆண்கள் (24) கன்று, குட்டி, குட்டி, கன்று. (25) ஒருவன் மற்றவனுக்கு கொடுப்பதைத் தடுத்தல் ஆகாது.
42
(1) இரத்தம் குடியாவிடில் முட்டைகள் வளரமாட்டா. (2) - 7075 வரையில். (3) தாஜ் மகால். (4) மணலில் நடப்பதற்காக. (5) கையினால் நூல்நூற்றுக் கைத் தறியில் நெசவு செய்யப்படும் ஆடை. (6) பகலில் தரை வெப்பமடையும் போது நிலத்தின் மேலுள்ள காற்றுச் சூடேறி மேலே எழுகிறது. அப் பொழுது கடலிலுள்ள குளிர்ந்த காற்றுத் தரையை நோக்கி வருகின்றது. இரவில் தரை விரைவில் குளிர்கின்றது. அப்போது கடலிலுள்ள வெப்ப மான காற்று மேலே எழுகின்றது. தரையிலுள்ள குளிர்ந்த காற்றுக் கடலை நோக்கிச் செல்கின்றது.
(7) தென் அமெரிக்கச் செடிகள் (8) பூச்சிகளுக்குத் தலை, மார்பு, வயிறு என்றும் மூன்று உறுப்புக்களும், ஆறு கால்களும் உண்டு. சிலந்திக்குத் தலையும் உடலும் எட்டுக்கால்களும் உண்டு. (9) நல்லவற்றை ஒழுகவிட்டுக் கூடாதவற்றை எடுத்துக்கொள்வதால். (10) விழ ஒன்றும் இல்லாமையால். (11) கடல் அடியில் மலை உண்டு : அம் மலை களைக் கடல் நீர் சிறிது சிறிதாக உடைக்க, அலைகள் அவைகளைக் கரையில் கொண்டுவந்து சேர்ப்பதால், (12) கறுப்பு நிறப்பொருள் வெப்பத்தை விரைவில் வாங்குமாதலாலும், தலையில் கறுப்பு மயிர் இருப்பதாலும். (13) சுவ°திகம். (14) வேகும்போது வாங்கி வைத்திருக்கும் சூட்டைக் கக்குவதால்.
(15) மலையாளம். (16) இரவிவர்மா. (17) க°பியன்கடல். (18) விலாங்கு. (19) மூஞ்சூற்றின் முகம் நீளமாக இருக்கும், மூஞ்சூறு அளைந்த பொருள்கள் ஒருவகைக் கெட்ட நாற்றம் வீசும். (20) நாம் கையினால் உணவு கொள்வதால். (21) கண்ணுக்குக் கெடுதி உண்டாகும். (22) எலியினால்; பிளேக் நோய் எலிக்கு முதலில் வருகிறது, அக் கிருமிகள் மனிதருக்குத் தொற்றுவதால். (23) நீரின் கீழே அமிழ்ந்துக் கொண்டு செல்லக்கூடிய கப்பல். (24) பேச்சில் சுகமில்லை, செய்கை வேண்டும். (25) இது அமெரிக்கப் பறவை. இது இங்கிலாந்துக்கு முதன் முதல் கொண்டுபோகப்பட்டபோது, அது ரேக்கிலிருந்து கொண்டுவரப் பட்டதெனப் பிழையாகக் கருதப்பட்டமையால் அப்பெயர்பெற்றது. வான்கோழி இந்தியப் பறவையுமாகும். ‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ எனப் பாடல் உள்ளது.
43
(1) நேபாளத்திலும் திபெத்திலும், இம்மான் காணப்படுகிறது. நரை நிறமுடையது; கொம்பில்லாதது; இரண்டடிக்கும் குறைந்த உயரமுடையது. (2) மணிக்கு 650 மைல் வரையில். (3) இலண்டன். (4) 18 அடி முதல் 24 அடி. (5) செடியை விலங்குகள். தின்னாதபடி காப்பதற்கு. (6) ஆண்டில் ஒரு குறிப் பிட்ட தொகைக்கு மேல் வருவாய் பெறுபவர்கள். (7) நீண்ட மிளகைக் குறிக்கும் திப்பிலி என்னும் சொல் கிரேக்கில் பிப்பிலி எனப்பட்டது. பிப்பிலி பின் பெப்பர் ஆயிற்று. (8) ஆ°திரேலியாவில் காணப்படுகிறது. அதன் வால் யாழின் வடிவுடையதாதலால் இதற்கு இப் பெயர். இது ஆங்கிலத்தில் (Lyer Bird) எனப்படும். (9) இருநூறு வரையில்.
(10) எதிரிகளை எச்சரிக்க. (11) சைன முனிவர்களால். (12) தக்கயாகப்பரணி. (13) நபுச் சட்நேசர் என்னும் பழங்கால பாபிலோனிய அரசனால் தூண் களின் மீது எழுப்பிய கட்டடத்தில் உண்டாக்கப்பட்ட தோட்டம். இது ஏழு உலக அதிசயங்களில் ஒன்று. (14) சிறியவர் செல்வரானால் அதனைத் தக்கவாறு பயன்படுத்த அறியார். (15) குளிர் தேசங்களில். (16) எலுமிச்சம் பழச்சாற்றால். (17) கம்பளி வெப்பத்தை வெளியில் விடாது. அதனால் வெப்பம் உண்டாகும். (18) நல்ல பழங்களைப் பெறலாம். (19) அவை எதிரிகளின் கண்ணிற்படாது தப்புவதற்காக. (20) எரிய மாட்டாது. நெருப்பு எரியப் பிராணவாயு வேண்டும்.
(21) அண்மையில் மலக்கூடம், மாட்டுத் தொழுவம் இருந்தால், இறையாது விட்டால், அண்மையில் மரங்கள் நின்றால். (22) நிழலுக்காக. (23) மின்சாரம் தாக்குவதால் நரம்புகள் சூடேறும்; அதனால் வலியுண்டாகும். தாக்குதல் கடுமையானால் நரம்புகள் வெந்துபோகும். (24) மின்சார பல்பிலுள்ள உலோகம் சூடாகும்போது சிவப்படைகிறது. (25) ஒரு அடி (12 அங்குலம்).
44
(1) தண்ணீர். (2) பன்னிரண்டு முதல் பதினான்கு ஆண்டு வரையில். (3) தம்மை (விழாது) சமமாக வைத்திருப்பதற்கு. இது விலங்குகளுக்கு வால் பயன்படுதல்போன்ற உபயோகம். (4) 388, 997, 955; இது 1941-இல். (5) மரக்கறி இலைகள் சாப்பிடுபவை, மாமிசங்களைச் சாப்பிடுபவை. (6) பிராணவாயு. (7) ஈ, மூட்டைப்பூச்சி, பேன், தெள்ளு. (8) தண்ணீர், மணல். (9) ஏழு நாட்களில். (10) தீயணைக்கும் படையால். (11) 24 புட்டி (4 காலன்). (12) வலப்புறமாக; இடப்புறமாக வண்டி செல்லும், (13) பசு, ஆடு, மான். (14) 1800 மடங்கு. (15) °டீவன்சன் என்னும் ஆங்கிலேயர். (16) உடம்பில் வெப்பம் இருப்பதற்காக. (17) உணவுக்காக, சந்ததிகளைப் பெருக்க.
(18) வாழை, மூங்கில், கரும்பு. (19) அதன் கால் நுனியில் ஒருவகையான பசைப்பொருள் இருப்பதால். (20) அவிந்துபோன எரிமலைகள். (21) பல விதைகள் உண்டானால்தான் அவைகளில் சில விதைகள் முளைத்து மரமாகும். மற்றவை பலவாறு அழிவடைகின்றன. (22) நகம், மயிர். (23) வெளிச்சம் படாமையால். (24) அமெரிக்கா தேசத்தவர்களால் அவர்கள் முற்காலத்தில் அடிமைகளாக வாங்கப்பட்ட ஆபிரிக்கர். அடிமை ஒழிப்புச் சட்டம் வந்தபோது அவர்கள் விடுதலை அடைந்தனர். (25) ஆபிரிக்கர்.
45
(1) கொச்சி திருவிதாங்கூர்ப் பகுதிகளில். (2) கண்போன்ற இடங்களிலிருந்து முளைகள் உண்டாகின்றன. கிழங்கை வெட்டிக் கண்ணுள்ள பகுதிகளைப் புதைத்தால் முளைக்கும். (3) வெளிச்சத்தை நோக்கி. (4) ஆ°திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா. (5) முகத்தில் தெரியும். (6) கண் வாய், கணவாய் ஆயிற்று. (7) ஒரு துளி நீரைப் பூமி அளவு பெருப்பித்து ஒரு அணுவையும் அதே பரிமாணத்துக்குப் பெருப்பித்து ஒப்பிட்டுப் பார்த்தால் அணு ஒரு துப்பாக்கி குண்டு அல்லது கிரிக்கட் பந்து அளவு இருக்கும். (8) மூங்கில், மரக்கூழ். (9) பூமி சுழல்வதால். (10) திமிங்கிலம், சுறா. (11) ஆ°திரேலியா, நியுசிலாந்து, தென்னாப்பிரிக்கா.
(12) காங்கோ ஆறு; அமேசான் ஆற்று வெளிகள், மலேயா, இலங்கை; கிழக்கு இந்தியத் தீவுகள். (13) புல் வெளிகள் சைபீரியா, வட அமெரிக்கா, தென்னமெரிக் காவிலுள்ளன. (14) வாடகை மோட்டாரில் முன்புறத்தில் வாடகைக்கு விடுவது (Hire) என்று சிவப்பு நிறத்தில் எழுதியிருக்கும். இலக்கம் கறுப்பு நிறத்திலிருக்கும். (15) சூரியனைச் சுற்றிவரும்போது சூரியவெளிச்சம் அதிக நேரம் படக்கூடியவிதமாக பூமி சாய்ந்திருக்கும் காலம் கோடை யாகும். மாரிக் காலத்தில் பூமியின் சரிவு இதற்கு மாறாக இருக்கும். (16) இருக்கு, எசுர், சாமம் அதர்வணம்; கிரேத, திரேத, துவாபர, கலியுகம்; யானை, தேர், குதிரை, காலாள்.
(17) வெப்பமண்டலம். (18) கொலம்ப° (புதிய உலகம் - அமெரிக்கா) (19) அது எகிப்திலுள்ளது. அதன் நீளம் 3,400 மைல். (20) சடுதியாக நிலம் அதிக வெப்பமடையும் போது, நிலத்தின் மீதுள்ள காற்று மேலே எழ, விரைவாக அவ்விடத்தை நிரப்பவரும் குளிர் காற்று அதனூடே புகுந்து துளைத்துச் செல்வதால். (21) பம்பா°, பிரேயரி°, °டெப்°. (22) இந்தியா, இலங்கை, தென்னமெரிக்காவிலுள்ள ஆறுகள். (23) கடலில் எங்கேயாவது ஒரு இடத்தில் காற்று வீசிக்கொண் டிருக்கும்; அதனால். (24) வட துருவநாடுகளில் (வட அமெரிக்காவில்). (25) தமிழர், சிங்களவர், சோனகர்.
46
(1) திரை நீரில் காற்று புகுந்து குமிழிகள் கொள்வதால். (2) வெளிச்சத்தை ஒரு பருப்பொருள் மறைத்தால். (3) செவ்வீல்ட். (4) நிகண்டு. (5) அருணகிரி நாதர். (6) பிச்சைபுகினும் கற்கை நன்றே. (7) மா, பலா, வாழை. (8) திருமணி என்னும் இடத்தில். (9) வெள்ளை ஆடை வெப்பத்தை விரைவில் கவராது. (10) அதனுள் காற்று இருப்பதாலும் அது வெளியேபோக முடியா திருப்பதாலும். (11) தனித்தனி புழுக்களாக வளரும். (12) இருபது ரூபாய்க் கும் அதற்கு மேற்பட்டதற்கும் இரண்டு அணா. (13) எ°கிமோவர். (14) 20 ஆட்பலம். (15) சர்க்கரைச் சத்து (Carbohydrates), ஊன் சத்து (Proteins), கொழுப்புச் சத்து (Fats), உப்புச் சத்து (Mineral Salts) வைட்டமின் (vitamin), தண்ணீர், காற்று.
(16) வைட்டமின் உடம்புக்கு வேண்டிய துணை ஆகாரங்களில் ஒன்று. இது எ, பி, சி, டி, இ என ஐந்து வகைப்படும்; பால், வெண்ணெய், அரிசி, பருப்பு, ஆரஞ்சுப்பழம், வாழைப்பழம், மீனெண் ணெய் முதலியவைகளிலுண்டு. (17) இருமுறை. (18) வீரமாமுனிவர் என்னும் இத்தாலியர். இவருக்கு பாதர் பெ°கி. என்பது இயற்பெயர். (19) சாதாரண கறி உப்பிலிருந்து. (20) புத்தர். (21) பாரி°. (22) 150,000 வரை என்று. (23) காதேஜ் நகரின் (ஆப்பிரிக்காவில்) அரசன். (24) பூமியின் கவர்ச்சியினால். (25) கண்புருவம் வியர்வையைக் கண்ணுக்குள் செல்லாமல் தடுக்கிறது. கண்ணிமை கண்ணைப் பாதுகாப்பதோடு கண்ணை அடிக்கடி மூடி அதற்கு ஓய்வு கொடுக்கின்றது.
47
(1) இங்கு இருந்த வெள்ளரசின் கீழ், புத்தர் ஏழுநாள் உண்ணாது இருந்து ஞானம் அடைந்தார். இன்று அங்குப் புத்தகோயில் உண்டு. (2) மெக்கா மெதீனா. (3) பல் நரம்புக்கும் கண் நரம்புக்கும் தொடர்பு இருப்பதால். (4) முகமதியர், கிறி°தவர். (5) ஜூலிய° சீசர் (கி.மு. 50). (6) சுயநாட்டைக் காப்பாற்றும் பொருட்டு. (7) வளையத்தைச் சூடாக்கும்போது விரிந்து பெரிதாகும்; குளிரும்போது சுருங்கி இறுகிக்கொள்ளும். (8) வடக்கு நோக்கி. (9) அருந்ததி, கற்புக்கு அருந்ததி. (10) தாவர உணவில் கொழுப்புச் சத்து இல்லாமையால் கொழுப்புக்குப் பதில் (11) ஏர்க்கால், மேழி, படவாள், கொழு. (12) கறுப்புநிறம், பதிந்த மூக்கு, சுருட்டை மயிர், தடித்த இதழ்.
(13) சொற்றிறம்பாமை. (14) உடம்பு இளக்கமாக இருப்பதால். (15) உடம்பிலுள்ள கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப்படுவதால். (16) அதன் கொடுக்கில் உள்ள விஷத்தினால். (17) ஆறாம் சார்ள்° என்னும் பிரான்° அரசனின் மனக்கவலையைப் போக்க 1340-ல். (18) இற்றைக்கு 5,000 ஆண்டுகளுக்குமுன் (19) பெரிய பிரமிட்டின் நீளம் 746 அடி, உயரம் 450 அடி. இது 13 ஏக்கர் நிலப்பரப்பில் நிற்கின்றது. (20) உடம்பில் அடிப்பட்டால் நரம்புகள் பழுதடைந்து இரத்தம் ஒரு இடத்தில் தங்கி வீங்குகிறது. உரைஞ்சுவது இரத்தத்தை ஓடச் செய்வதற்காக.
(21) அவை தேடும் உணவுக்குத் தகுந்தவாறு. (22) ஆ°திரேலியா. (23) கொடுக்கு இல்லை. (24) இங்கிலாந்தில் வேல்°, கார்ன்வால், இந்தியாவில் கடப்பாவில், இது பூமிக்குக் கீழ் இருந்து நெருங்கிக் கல்லான களிமண். (25) அது முதல் முதல் பபுல° என்னும் நாணல் தாளில் எழுதப்பட்ட படியால்.
48
(1) அது ஒரு வகைக் கடற் பிராணியின் ஓடு, கடற்பஞ்சு கடல் ஆழத்தில் பாறை களில் ஒட்டிக்கொண்டிருக்கும்; கடலின் ஆழத்திற் சென்று அதனைப் பாறைகளிலிருந்து பறித்து எடுப்பார்கள். மத்தியதரைக்கடலில் அதிகம் உண்டு. (2) பூச்சிகளைத் தேடி. பொந்து இருக்கிறதோ என்று அறிய. (3) பறவைகள் அவைகளைப் பிடித்து உண்ணமாட்டா. (4) முதலில் உணவை நன்றாக மென்று உண்ணாத படியால். (5) எறிந்தால் இலக்கில் பட்டுத்திரும்பி வரும். பூமராங் வளைதடி எனப்படும் - இதனைப் புதுக்கோட்டையிலுள்ள கள்ளர்ச் சாதியினரும் பயன்படுத்துவர். (6) 14% வீதத்தினருக்கு, திருவிதாங்கூரில் 41%.
(7) டைக்° என்னும் கடல் அணையால்; காற்றாடிகள் நீரை வெளியே இறைக்கும். (8) அரசகேசரி. (9) தென்னமெரிக்காவிலுள்ள காட்டு ரப்பர் மரப்பால். (10) இரப் என்பதற்கு அழிப்பது என்று பொருள்; ஆதியில் இது லெட்பென்சில் கறையை அழிக்கப் பயன்படுத்தப்பட்டபடியால் (11) வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கைக் குறிக்கும் நார்த், ஈ°ட், வெ°ட், சௌத் என்னும் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துக்கள், அத் திசைகளிலிருந்து வரும் செய்திகளைக் குறிக்க வழங்கின. அவை சேர்க்கப்பட்ட போது (News) ஆயிற்று. (12) அழுத்தஞ் செய்யப்பட்ட உலோகத்துண்டு. (13) கொழுப்புப் போடாவிட்டால் சக்கரங்கள் நன்றாய் உருள மாட்டா.
(14) சோடா, சுண்ணாம்பு, எண்ணெய் என்பவைகளைச் சேர்த்து. (15) சாக்லெட். (16) பீட்ருட் என்னும் ஒருவகைக் கிழங்கு, பேரீச்சம்பழம் முதலியவை களிலிருந்து. (17) வெள்ளிபோன்று வளையக்கூடிய உலோகம். இது வெள்ளீயம் எனப்படும், மலாய் தேசத்தில் இது அதிகம் கிடைக்கிறது. (18) இது இத்தாலியில் அதிகம் கிடைப்பது. வெள்ளிபோன்ற திரவமான ஒரு வகை உலோகம். (19) வெப்பமறியும் கருவி தெர்மா மீட்டர், காற்று அமுக்கம் அளக்கும் கருவி, பாலில் தண்ணீரிருக்கிறதோ என்று அளக்கும் கருவி. (20) 25. (21) இதில் வெள்ளையர்கள் அடைக்கப்பட்டு மாண்டார்கள். (22) தென்னமெரிக்காவில் காணப்படும் ஒருவகைக் கம்பளி ஆடு. அதன் மயிரால் ஆடை நெய்யப்படும். அவ்வாடை குடைத் துணிக்கு பயன்படும்.
(23) 5 1/2 மணி. (24) பின்னி முதுகில் தொங்கவிடும் மயிர். (25) (Arrow-root) என்னும் ஆங்கிலச் சொல்லின் திரிபு. இது தென்னமெரிக்காவிற் காணப்படும் ஒரு வகைச் செடியின் கிழங்கிலிருந்து எடுக்கும் மா. இக்கிழங்கு அம்பு ஏறுண்ட காயத்துக்கு கட்டப்படுவதால் இப்பெயர் பெற்றது.
49
(1) நோய்க்கிருமிகள் உடலில் புக முயல்கின்றன. அப்போது உடலிலுள்ள வெள்ளைக் கிருமிகள் அக் கிருமிகளை எதிர்த்துப் போராடுகின்றன. அப்போது காய்ச்சல் உண்டாகின்றது. (2) ஆபிரகாம் லிங்கன். (3) வலப்புறத்திலிருந்து இடப்புறமாக மேலிருந்து கீழாக. (4) ஜப்பான். (5) அதைக் கண்டபின் அப்பாலுள்ள இடங்களைக் காண்பதில் நல்ல நம்பிக்கை இருக்கிறதென்னும் பொருளில். (6) முற்காலத்தில் இங்கிலாந்து முதலிய நாடுகளிலும் ஒவ்வொருவரும் தமது உயிருக்காகப் போராட வேண்டியிருந்தது. ஒருவனை ஒருவன் எதிர்பட்டபோது தான் பகைவனல்லன்; கையில் ஆயுதமில்லை என்று காண்பிப்பதற்கு இரு வரும் கையை விரித்துக் குலுக்கினர். இதுவே கைகுலுக்கும் வழக்கமாக மாறிற்று.
(7) சீனா, ஜப்பான், இந்தியா, பிரான்°, இத்தாலி. (8) கிராம்பு. (9) நூற்றுக்கு 3 1/2 சதவீதம். (10) ஆ°திரேலியாவில்; நீர் அகழான் (Duck Mole) (11) தென்னமெரிக்காவில் இது சுமை தூக்கப் பயன்படுத்தப்படும். அல்பக்கா, லாமா என்பன ஒரு இன விலங்குகள். (12) முதல் முதல் வட அமெரிக்காவில் (கனடா) சென்று குடியேறிய ஆங்கிலர். (13) இவர்களில் ஒருவர் குருடர், மற்றவர் முடவர், குருடரின் தோள்மீது முடவர் இருந்து செல்வர். குருடர் இரண்டு அடிபாட, முடவர் அடுத்த இரண்டடியைப் பாடி முடிப்பர். (14) கோதுமை. (15) வேகமாகப் பரவிக் கிராமங்களை அழித்து விடும். (16) வெட்டு வாய்க்கால்கள் வழியே படகுகளில்.
(17) தென்னாப்பிரிக்கா. (18) அமெரிக்கா; 160 அடி உயரம். (19) முந்திரிகைப் பழம். (20) ஆழ்வார், நாலாயிரப் பிரபந்தம், திருவாய்மொழி செய்தோர். சமயக் குரவர், தேவார திருவாசகம் செய்தோர். சந்தான குரவர், சித்தாந்த சாத்திரம் செய்தோர். (21) கழுதைகளில். (22) அமெரிக்காவில் கொலரடோ என்னும் ஆற்று முகத்துவாரத்திலுள்ள பீடபூமியில். (23) ஐந்தரை அடி நீளம். (24) அங்குப் பல்லவ அரசர் காலத்தில் மலையில் செய்யப்பட்ட சிற்ப வேலைகள் பல காணப்படுகின்றன. (25) அங்கு இரண்டு கழுகுகள் வந்து தினமும் பூசாரிடயிடம் பொங்கல் உண்டு பறந்து போகின்றன.
50
(1) 1,500 மைல், உயரம் 20 முதல் 35 அடி. (2) டைனமைட் என்னும் வெடி மருந்தைக் கண்டுபிடித்த நோபெல் என்பவர் விட்டுச் சென்ற மூலதனத்திலிருந்து கொடுக்கப்படும் பரிசு. (3) போக்கெல்லாம் போக வேண்டாம். (4) 60 நாழிகை; 2½ நாழிகை (5) - (6) அமிர்தமும் நஞ்சு. (7) வேட்டைக்காரரால் துரத்தப்பட்டுக் களைத்துவிட்டால் தலையை நீட்டிக்கொண்டு மணலில் பதுங்கிக் கொள்கிறது. (8) முன்னங்காலைத் துhக்கி; பின்னங்காலை தூக்கி. (9) 40 தோலா எடைக்கு 50 ந.பை.; அடுத்த 40 தோலாவுக்கு 50 ந.பை. (10) 4 முதல் 6 நாட்கள். (11) அவ்வொளி கண்டுபிடிக்கப்பட்டபோது அதைப் பற்றி ஒன்றும் அறியப்படாதிருந்தமையில் அவ்வாறு பெயரிடப் பட்டது. எக்° (X) என்பது அறியப்படாததைக் குறிக்கும்.
(12) பத்து இராத்தல். (13) சிம்பன்சி என்னும் குரங்கு. (14) எபிரேய மொழியில்; கிரேக்க மொழியில். (15) இரத்தக் குழாய்கள். (16) ஐக்கிய அமெரிக்கா. (17) மூன்று மண்டலங்கள்; வெப்ப, மத்திய வெப்ப, குளிர். (18) கோழி; குதிரை, நரி, கழுதை. (19) °பெயின். (20) ஈரல். (21) நிலா முற்றம். (22) பாரசூட் என்னும் விமானக்குடை வாயிலாக. (23) புகை கீழே வராமல் வெப்பம் உண்டாகாமல். (24) நாக்கின் நுனி. (25) புகையும் நீராவியும் அதோடு சேர்ந்துள்ள கரித்தூள்களும்; நீராவி காற்றிலும் நொய்யது; ஆதலின் மேலே செல்கிறது.
51
(1) சிங்கள அரசரின் சரித்திரத்தைக் கூறும் நூல். இது பாலிமொழியில் பௌத்த குருமாரால் எழுதப்பட்டது. (2) சமண மதத்தை தோற்றுவித்தவர். இவர் விருத்தராயிருக்கும்போது புத்தர் இளைஞராயிருந்தார். (3) விறகு கட்டைகளின் உள்ளே ஈவுகளில் காற்றுத் தங்கி நிற்கிறது. விறகு சூடேறும்போது காற்று விரிந்து கட்டையை உடைத்துக் கொண்டு வெளியேறுகின்றது. அதனால் வெடிக்கும் சத்தம் உண்டாகிறது. (4) 100 ரூபாய்க்குக் குறையாத மாத வருமானம் பெறுபவர்கள்…… (5) நீராவி வெளியேறாமல் பாலிலுள்ள நீரல்லாத பொருள்கள் தடுக்கின்றன. அதனை ஆற்றுவதால் நீராவி வெளியேறிவிடும். பால் பொங்காது.
(6) 20,000 வரையில் இவற்றுள் சில தாவரச் சத்தையும், சில இரத்தத்தையும் உறிஞ்சி வாழும். (7) நீரைக் கிழித்துக்கொண்டு செல்ல. (8) பீதுருதால காலை; 8292 அடி. (9) 271½ மைல் நீளம், 137½ மைல் அகலம். (10) பத்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை. (11) பாம்பின் நஞ்சு பாம்பைக் கொல்லாது. (12) மரத்துள் காற்றிலுள்ள வெப்பத்தை வாங்கி பனிக் கட்டிக்குக் கொடுக்க மாட்டாத இயல்புடையது. மரத்தூள் போட்டு வைப்பதால் ஐ° உருகிவிடமாட்டாது. (13) நீராவி வெளியே செல்ல. (14) செலுலாயிட், வெடி பஞ்சோடு (Gun Cotton) கற்பூரமும் வேறு சில பொருள்களும் கலந்து செய்யப்படுகிறது. சாதாரண பஞ்சை நைட்டிரிக் அசிடில் (Nitric Acid) ஊறவிடுவதால் அது வெடி பஞ்சாக மாறுகின்றது.
(15) அவைகளால் பொருள்களை முட்டி அறியவும் மோப்பம் பிடிக்கவும். (16) இது இரும்பு சம்பந்தப்படாத ஒருவகை வெள்ளைக் களி மண்ணால் செய்யப்படும் பாத்திரம். இது முதலில் சீனாவிற் செய்யப்பட்டது. இப்பொழுது ஐரோப்பிய நாடுகளிலும் செய்யப்படுகிறது. (17) குரங்குகளும் மனிதரும் ஒரே முன்னோரிலிருந்து தோன்றினார்கள் என்று. (18) சுவிட்சர்லாந்தில். (19) மரத்தினால் செய்த நீண்ட மிதியடிகளை இட்டுக்கொண்டு. (20) வில்லியம் சேக்°பியர் (1564 - 1615). (21) சராசரி 2,000 காலன் அளவில். (22) அதில் பலரும் குளித்துக் கால் கழுவி வாயலம்பி அழுக்குச் செய்வதால். (23) 23,901 மைல். (24) வெப்பமான காற்று மேலே எழ அந்த இடத்தை நிரப்பக் குளிர்ந்த காற்றுச் செல்வதால். (25) கண்ணிற் பட்டால் கண்ணீரை உண்டாக்குவது; இது பெரும்பாலும் கூட்டங்களைக் கலைக்க அரசினரால் பயன்படுத்தப்படுகிறது.
52
(1) ஏழு ஆண்டு வரையில். (2) மத்திய இரேகை நாடுகள். (3) மீனம்பாக்கத்தி லிருந்து இரத்மலானைக்கு (கொழும்பு) தினமும். (4) ஒலி காற்றிலும் பார்க்க நீரில் நாலு மடங்கு அதிக வேகமாகச் செல்லும். (5) 100 மைல் வரையில். (6) இது மீனெண்ணெய், வெண்ணெய், பால், முட்டையின் மஞ்சள் கருவிலும், தாவர உணவில் சிறிதளவும் காணப்படுகிறது. இது குழந்தைகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயனுடையது. (7) இது தண்ணீரில் கரையக் கூடியது. கேழ்வரகு, அரிசி முதலிய தானியங்களின் தவிட்டில் அதிகம் உள்ளது. வெண்காயம், உருளைக் கிழங்கு, முட்டை முதலியவைகளிலுமுண்டு. பி (B) வைட்டமின் உடம்பில் இல்லாவிடில் பெரி பெரி என்னும் நோய் உண்டாகும்.
(8) அவர் அவர்களுக்குக் கிடைக்கும் அளவுக்கு அதிகம் கிடைக்காது. (9) 36 இராத்தல். இது ஒருவன் உட்கொள்ளும் நீர், உணவு என்பவைகளின் நிறையிலும் பார்க்க, 6 மடங்களவில் அதிகம். (10) வல்லூர் தேவராச பிள்ளை. (11) பழங்களி லும் தாவர உணவுகளிலும், ஆரஞ்சு, எலுமிச்சம் பழம், கீரை வகைகளில் இது அதிகம் உண்டு. (12) ஜேம்°வாட் என்னும் ஆங்கிலேயர். (13) மாட்டின் குளம்பு, தோல்களைப் பக்குவமாக காய்ச்சி. (14) மொசார்ட் (Mozart) என்னும் ஹங்கேரியர். இவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். (15) செம்பு. (16) மகிந்து (அசோகச் சக்கரவர்த்தியின் மகன்). (17) பெரி கிளி°, சாகரிட்டி°. (18) சேர சோழ பாண்டிய இராச்சியங்கள், பல்லவர், சாளுக்கியர், கங்கர் ஆட்சிகளும் பிற்காலத்தில் இருந்தன.
(19) கிரேக்கர். (20) வேட்டை ஆடாது இறைச்சியைப் பெறுவதற்காக. (21) சமீபத்தில் காலமான ஆங்கில மகாகவி. (22) இப்பொழுது உள்ள சிரிப்பூட்டும் விதமாக நடிக்கக் கூடியவர். இவர் ஆங்கிலர். (23) கிறித்துவுக்கு முன், கிறித்துவுக்குப் பின். (24) கன்னியாகுமரிக்குத் தெற்கேயிருந்து கடலில் மறைந்துபோன நிலப்பரப்பு, லெமு என்பது தேவாங்கைக் குறிக்கும். அங்கு தேவாங்குகள் அதிகம் இருந்தமையால் அந்நிலப் பரப்புக்கு இப்பெயர் இடப்பட்டது. (25) கரூர் (திருவஞ்சைக்களம்) புகார், மதுரை.
53
(1) பாண்டியனுக்கு மீன், சோழனுக்குப் புலி, சேரனுக்கு வில். (2) பாண்டியனுக்கு வேம்பு, சேரன் பனங்குருத்து. சோழன் ஆத்தி. (3) கடற்கரையில். (4) வியாழன். (5) புதன். (6) இலங்கை, இந்தியா, ஜப்பான், சீனா, மலேயா. (7) தில்லி. (8) புகையிரதம், கப்பல்கள் , துணி ஆலை. (9) ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசீலந்து. (10) கரவன் பாதையாக (மங்கோலியாவி லிருந்து சின்ன ஆசியா வழியாக) (11) பனிக்கட்டி வீடுகளில் வாழ்பவர் களாயும், வேட்டையாடுபவர்களாயும். (12) மாட்டுச் சாணி, வேப்பிலை, மஞ்சள். (13) சுகத்துக்கு. (14) நன்றாக மெல்லுதல். உமிழ் நீர். (15) முன், பின் வண்டிகள் வருகை. (16) நீர், காற்று, வெப்பம்.
(17) மூச்சுவிட முடியா மல். (18) புரட்சிக்காரர், கம்யூனி°டுகள். (19) இது 1776-ல் அமெரிக்கா விடுதலை அடைந்த நாளின் கொண்டாட்டதினம். (20) காசி, இராமேச்சு வரம், சிதம்பரம்; கோவா, மடு, பால°தீனம். (21) பால°தீனம். (22) கம்பளிக்கு. (23) திபெத்து. (24) விடாது, பூமியின் கவரும் சக்தி அதனை யும் உடன் கொண்டு செல்கிறது. (25) விழும் சிறிய கிரகங்கள் நொடிக்கு 30 முதல் 50 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வருகின்றன. அப் பொழுது காற்றோடு அவை உராய்வதால் சூடேறி வெளிச்சமுண்டாகிறது.
54
(1) எண்ணெய் நீரைக்காட்டிலும் இலேசானதால். (2) அணுகுண்டு. (3) உரேனியம் (Uranium) (4) அதிலுள்ள வைட்டமின் சத்துக்கள் வெளியேறி விடுகின் றன. (5) சிப்பிகள் கடல் ஆழத்தில் சேர்ந்து பின் மணலால் மூடுண்டு நெரிந்து சுண்ணாம்பாவதாலும், பின்பு பூமி அதிர்ச்சி போன்ற இயற்கைக் குழப்பங்களால் அது மேலே எழுவதாலும். (6) இது விமானங்கள் மேல் தட்டினின்று பறக்கவும், வந்து இறங்கவும் கூடியதாக அமைக்கப்பட்ட கப்பல். இக் கப்பல் முப்பது முதல் நாற்பது விமானங்கள் வரையில் கொண்டு செல்லும்.
(7) அங்கு நிலம் அதிக விலை, ஒரு சதுர அடி நிலத்தின் விலை, 20 பவுண் வரையில். ஆனால் ஒரு சதுர அடி கட்டடம் கட்டும் பொருளின் விலை இரண்டு ஷிலிங் வரையில் உள்ளது. (8) பதின்மூன்றடி. (9) அமெரிக்காவில்; அதன் குறுக்களவு 200 அங்குலம். (10) உள்ளேயுள்ள காற்று வெளியேற்றப்படுகிறது; சூடேற்றிக் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. (11) கனடா. (12) அதனுள் வாயு உண்டாவதால் (13) இரைக்கு. சந்ததியைப் பெருக்க. வெப்ப நிலை மாற்றமடைவதால். (14) முதல் உதவி மருத்துவருக்கு அறிவித்து அழைத்து வருதல். போலீ சாருக்கு அறிவித்தல். (15) தடிமன், க்ஷயரோகம்.
(16) தண்ணீரை வெளியே போக்கி வெப்பம் உண்டாக்கி மூச்சு வரச்செய்தல். (17) விரிகிறது. (18) காலரா, வயிற்றுளைவு, நெருப்புக் காய்ச்சல். (19) குயினா, கொசு வலை, கொசு பெருகாமல் தடுத்தல். (20) மன்னிப்பு. (21) ஆசனமளித்து, வந்த கருமம் வினாவுவேன். (22) வணக்கஞ் செய்வேன். (23) முன்னால் வரும் வண்டிகள் தெரியமாட்டா; ஆதலின் அபாயம் உண்டாகும். (24) பின்னோக்கி வருமானால் அபாயம் நேரும். (25) அசையாமல் நிற்பேன்.
55
(1) மூன்று வகை. (2) கோழி, கிளி, புறா. (3) சுபாஷ் சந்திரபோசை. (4) வைகாசி, ஆனி. (5) எவரெ°ட், இமயமலையில். (6) வானநூல். (7) சீனா, ஜப்பான். (8) மாரி, கோடை, இலை உதிர் காலம், துளிர் காலம். (9) ஆறு, இளவேனில். முதுவேனில், கார், கூதிர், முன் பனிக்காலம், பின்பனிக்காலம். (10) 4 மணி மூளை உழைப்புக்குச் சரியான களைப்பை உண்டாக்கும் எனச் சொல்லப்படுகிறது. (11) குட்டி, கன்று, கன்று, குட்டி. (12) வருவாய் கொடாத ஒன்றுக்காக அதிக பொருள் செலவிடுதல். (13) ஆந்தை. (14) ஒலியிலும் பார்க்க ஒளி வேகமாகச் செல்லுதலால். (15) வாஷிங்டனில் குடியரசுத் தலைவர் (President) தங்கும் அரசாங்க மாளிகை.
(16) கரால். (17) வாடியிருக்குமாம் கொக்கு. (18) மயிர் வேரில் பிக்மெண்ட் (Pigment) என்னும் ஒருவகை நிறம் இருக்கிறது. அது கெட்டுப் போகும்போது மயிர் நரைக்கிறது. (19) ஒட்டகம் (20) டோக்கியோ, இலண்டன், நியூயார்க். (21) நாழிகை வட்டங்கள் (ஒரு பாத்திரத்திலிருந்து மணலை அல்லது நீரை ஒழுக விடுதல்) சூரிய நிழல், நட்சத்திரங்களைக் கொண்டு. (22) பற்களைக் கொண்டு. (23) கசகசாச் செடிக் காயின் பால். (24) இலையிலோ பூவிலோ வந்திருக்கும் பூச்சி புழுக்களை அகப்படுத்தி அவைகளின் சத்தை உறிஞ்சும் தாவரங்கள். (25) ஈரச் சாக்கை மேலே போட்டு.
56
(1) செய்ண்ட் ஹெலினா (2) சர் பிரான்சி° டிரேக் (Sir Francis Drake). (3) விக்டோரியா இராணியால் ஆரம்பிக்கப்பட்ட வீரருக்கு அளிக்கும் பதக்கம் (1862 பிப்ரவரி 10). (4) வியாசரால் (5) 1786இல் (Jonas Hanway) என்பவரால். பலர் அவர்மீது கல் எறிந்து பரிகாசஞ் செய்தனர். குடை பிடித்தல் பெண்களுக்குரியதாகக் கருதப்பட்டது. (6) இடிவாங்கும் கருவி. (7) கடவுள் ஆறு நாட்களும் படைக்கும் தொழில் செய்து, ஏழாவது நாள் ஓய்ந்திருந்தார் என நம்புவதால்.
(8) அமெரிக்காவில் உள்ள அரசாங்க கட்டடம். அதில் 102 மாடிகள் உள்ளன. (9) அச் சமாதியைத் திறந்து பார்த்த போது பல ஆயிரக்கணக்கான தங்க நாணயமும் விலையுள்ள பழங் காலப் பொருள்களும் கிடைத்தன. (10) இந்தியாவில். (11) யந்திரத்துக்கு அரிசியிலுள்ள தவிடு போய்விடுவதால் அதில் சீவசத்து (வைட்டமின்) போய்விடுகிறது. (12) உண்டு. கருப்புத் தோல் உஷ்ணத்தைத் தாங்கும். (13) கொசுக்கடியால். (14) அரைப்படி பால். (15) புதைத்தல், எரித்தல், எருக் குழியில் இட்டு வைத்தல். (16) அற்ற பறின் அல்லது பிளா°மோ. (17) ஆ°பத்திரி, போ°டாபீ°. (18) அவைகளின் குளம்புகள் தேய்ந்து போகாமல். (19) பெரிய இந்தியக் கவியாக விளங்கினார்.
(20) உடம்பிலுள்ள சிறு துவாரங்களால். (21) மூச்சுப்பை மூலம். (22) ஒலியைக் கொண்டு செல்லும் காற்றுத் தடைபடுவதால். (23) குளிர்ச்சியுள்ளது; சுகவாசம். (24) ஒரு வகைக் கூர்ச்சர மொழி. (25) தொலைவிலுள்ள சத்தத்தை இழுக்க வும் காட்சியைக் காட்டவும் கூடிய இரேடியோ போன்ற கருவி.
57
(1) தாம° ஆல்வா எடிசன் (2) இசையறியும் விலங்கு; இனிமையில்லாத ஒலியைக் கேட்டால் இறந்து விடும் என நம்பப்படுகிறது. (3) லாமா என்னும் தென்னமெரிக்க விலங்கு. (4) நம்பி அகப்பொருள். (5) பொய்யாமொழிப் புலவரால். (6) கூட்டமான கண்கள். (7) தலை, மார்பு, வயிறு. (8) மக்கள் முரடான கற்களால் செய்த ஆயுதங்களைப் பயன்படுத்திய காலம். (9) முட்டையிட்டு. (10) மக்கள் அழுத்தமான கல்லாயுதங்களைச் செய்து பயன்படுத்திய காலம்.
(11) கம்பியில்லாத தந்தி, டெலிவிசன், ஆகாய விமானம், ரேடியம், எக்°ரே, டெலிபோன், ஒளிக்கதிர்களிலுள்ள நிற ஆராய்ச்சி. °புட்நிக். (12) முகமது மெடினாவுக்குச் ஓடிச் சென்ற நாள் முதல். கி. பி. 628. (13) தவளைகள், தலைப்பிரட்டைகளாகிப் பின் தவளை களாகும். (14) ஜவஹர்லால், ராஜாஜி. (15) கலிலியோ (16) ஆபத்துக்கு உதவி செய்பவர்களும், ஒற்றுக் கேட்பவர்களும். (17) இரட்டைக் கருத்துள்ள வாக்கியங்கள். (18) வயிரம். (19) வயிரத்தினால். (20) மலைகளில் காற்று நெருக்கமில்லாதிருப்பதால். (21) நாக்கையும் முரசையும் சுட்டுவிடும். (22) இராசமுடி. (23) தொண்ணுhறு அடி. (24) பாக்டீரியா என்னும் கிருமிகளால். (25) திருப்பதி (வேங்கடம்).
58
(1) அரைரூபாய். (2) பத்து ரூபாய். (3) 2½%. (4) 48. (5) இத்தாலியில் பைசாநகரில். (6) எய்பெல்கோபுரம் (Eiffel Tower) 985 அடி; மதுரைக் கோபுரம் 152 அடி; (7) பறக்கமாட்டாதது. (8) குயில். (9) இங்கு பெரிய பிரமிட்களும் மனித முகச் சிங்கமுமுள்ளன. (10). விசூவிய°. (11) நாலுமணிநேரம் முதல் ஆறுமணி நேரத்தில்; இரண்டு மூன்று நாட்களுக்கு. (12) நுண்ணிய தாவர வகைகளும், உலோக சம்பந்தமான நுண்ணிய பொருள்களும், மீன் முட்டைகளும் நீரிலிருந்து நீரைப் பச்சை நிறமாக்குகின்றன. (13) சாதாரண கறி உப்பு. (14) செவிள். (15) ஹைடிரசினும் ஆக்ஜிசனும் சேர்ந்து. (16) முடியும். C.A. என்னும் எழுத்துக்களும் தனியே அல்லது ஒன்று சேர்ந்து.
(17) 12 வயதுக்குட்பட்ட. (18) பிளோரன்° நைட்டிங்கேல். (19) ஒருமணிக்கு இத்தனை மைல் வேகம். (20) எவரெ°ட் சிகரம் 29,002 அடி உயரம், மிகக்கூடிய ஆழம் பசிபிக் கடல் 35,000 அடி. (21) 300,000,000 கன மைல். (22) (1) 3,000,000,000 ஆண்டு. (2) 1,000,000,000; 10,000,000 ஆண்டு. 10,000 ஆண்டு. (23) ஏறக்குறைய 1,700,000,000. (24) எட்டு இராத் தல். இதில் ஆறு இராத்தல் நீர். (25) இத் தீவுக்கு ராபாநுய் (Rapanui) என்று பெயர். இத் தீவுகள் 1721-இல் ஈ°டர் பெருநாளன்று கண்டு பிடிக்கப் பட்டமையால் இவற்றுக்கு இப்பெயர்.
59
(1) தலையில் இருக்கும் உணர் இழைகளால். (2) 25,000 சிறிய கண் இணைக்கப் பட்டது. அது தலையை அசையாமலே எல்லாப் பக்கங்களிலும் பார்க்கக் கூடும். (3) வாலிலிருந்து அலகு இறுதியாக 2 3/4 அங்குலம் வரையில்; முட்டையின் பருமன் பயறு அளவு. (4) முள், நஞ்சு, கெட்டமணம், கெட்ட சுவை, சுணை. (5) 26 அவுன்° (6) பிளாட்டினம் தங்கத்தைப் பார்க்கிலும் கனமானது. இதில் துருப்பிடிப்பதில்லை. அமிலங்களும் இதைக் கெடுக்கமாட்டா.
(7) 13 1/2 மடங்கு. (8) செம்பையும், துத்தநாகத்தையும் கலந்து. (9) கந்தகம், பா°பர°, குளோரேட் உப்பு, சிறு குச்சிகள். (10) கார்பலிக் அசிட், மெர்குரிக் பேர்குளோரைட், பினைல், பொடாசியம் பேர் மாங்கனேட். (12) பிராண வாயுவும் காற்றிலுள்ள நீரும் படுதலால். (13) இது நிலத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இது நார் நாராகப் பிரியும்; தீ பிடிக்காது. ஆகையால் இதை ஆடையாக நெய்து தீ அபாயமுள்ள இடங்களில் வேலை செய்பவர் பயன்படுத்துவர். இதைச் சிமிண்டு முதலியவற்றோடு கலந்து பலகைகள் செய்யப்படுகின்றன.
(14) மனித உடலில் 95° க்கு கீழும் 110° க்கு மேலும் ஒரு போதும் வெப்பம் இருப்ப தில்லை. வெப்பமானியைப் பயன்படுத்துமுன் சிறிது உதறிப் பாதரசம் 98 டிகிரிக்கு கீழே வரும்படி செய்து கொள்ளவேண்டும். வெப்பமானியின் பாதரசம் அடங்கிய பாகத்தை நோயாளியின் நாக்குக்கு அடியிலாவது பக்கத்திலாவது முன்பின் இரண்டு நிமிடம் வைக்கவேண்டும். பின் வெப்பமானியை எடுத்துப் பாதரசம் எத்தனை டிகிரியில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஆரோக்கியமுள்ளவன் உடலில் வெப்பம் 98.4 டிகிரியில் இருக்கும். (15) இது கள்ளிக்கோட்டையில் செய்து இங்கி லாந்துக்கு அனுப்பப்பட்ட வெள்ளைத் துணி. முற்காலத்துக் கள்ளிக் கோட்டை கலிக்கோ (Calicow and Caleo) என்று வழங்கப்பட்டது. இப் பெயர் சிறிது எழுத்துகூட்டும் வேறுபாட்டோடு இத்துணிக்கு இடப் பட்டது.
(16) இவ்வெப்பமானி பாரன்ஹேயிட் என்னும் செர்மனியரால் கண்டுபிடிக்கப்பட்டது. இக் கருவிக்கு இ°பிரிட் ஆவ் வைன் (Spirit of Wine) என்னும் சாராயத்துக்கு பதில் பாதரசம் பயன்படுத்தப்பட்டது. இவர் உறையும் நிலை (Freezing Point) 0° க்குப் பதில் 32° என இக் கருவியில் அமைத்தார். (17) இது செர்மனியில் 1,500இலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது பி°டோலா (Pistola) என்னுமிடத்தில் தொடக்கத்தில் செய்யப்பட்டது. (18) இது மின்சக்தியின் விசை அலகுக்கு (unit) வழங்கும் பெயர். அலசென்ரோ வொல்ட்டா (Alessendro Volta) என்பவரால் இவ்வளவு கொண்டுவரப்பட்டது. இவர் 1774இல் பிறந்தார்.
(19) இது ஆயுர்வன் வெல்பாச் (Alur von welbach) என்னும் செர்மனியரால் கண்டு பிடிக்கப்பட்டது. (20) 2,000,000 வரையிலுண்டு என்றும் இவைகளைத் தொடுக்கும் குழாய்களை ஒன்று சேர்த்து நீட்டினால் முழு நீளமும் பத்து மைல் அளவு ஆகுமென்றும் சொல்கின்றனர். (21) இரத்தம் நிறமில்லாதது. இதில் மிக நுண்ணிய செங்கூடுகள் இருப்பதால் சிவப்பாகத் தெரிகிறது. (22) ஆணின் மூளை நிறை 49.5 அவுன்°; பெண்ணின் மூளை நிறை 44 அவுன்°. (23) 100 பாகங்களுக்குக் கீழ் (24) 127 நல்ல இனங்கள்.
60
(1) அதிக வெப்பத்தில் சமைப்பதாலும் திறந்து விடுவதாலும் A வைட்டமின் சத்துப் போய்விடுகிறது. (2) சோடாத்தூள் பயன்படுத்துவதினாலும் தண்ணீரை வடிய விடுவதினாலும் வைட்டமின் B இல்லாமல் போய்விடுகிறது. (3) கொதிக்க வைத்து ஆறிய நீரைக் கொடுக்கலாம். நீர் உடம்பிலுள்ள நஞ்சுத் தன்மையுள்ள பொருள்களை வெளியே கழியச் செய்யும். (4) நாள் ஒன்றுக்கு ஆறுமுதல் எட்டு கிண்ணம் நீர் வரையில் பருகலாம். நீர் அருந்துவதால் யாதும் கெடுதி நேராது. காலையில் ஒரு கிண்ணம் நீர் அருந்துதல் உடல் நலத்துக்கு ஏற்றது.
(5) காலிலும் பார்க்க தலையைப் பதிவாக வைத்துக் கொண்டு காற்றுபடும்படி விட வேண்டும். சனங்கள் கூட்டங்கூடிக் காற்றைத் தடைசெய்ய விடுதல் கூடாது. கடற்பஞ்சைக் குளிர்ந்த தண்ணீரில் தொட்டு முகத்தைத் தடவ வேண்டும். (6) வளர்ந்தவர்களுக்குச் சாதாரண சராசரி நாடித் துடிப்பு நிமிடத்துக்கு 72; வளர்ந்த ஆண்களுக்கு 60 முதல் 70 வரை; பெண்களுக்கு 65 முதல் 80 வரை; 7 வயதுள்ள குழந்தைகளுக்கு 80 முதல் 90; 1 வயதுள்ள குழந்தைக்கு 110 முதல் 120; பிறந்த குழந்தைக்கு 120 முதல் 140 வரை. தேக வெப்பம் ஒரு டிகிரி அதிகரித்தால் 10 வீதம் நாடித் துடிப்பு அதிகரிக்கும்.
(7) அத்லாந்திக் கடல் அதற்கு அடுத்தது இந்து சமுத்திரம். (8) 1926இல் ஒரு கிராம் இரேடியத்தின் விலை 24,750 பவுனாகவிருந்தது. 1928இல் 14,440 பவுணாக விலை இறங்கி விட்டது; இரேடியத்தின் தன்மையுள்ள மெசதோரியம் (mesothorium) என்னும் உலோகத்தின் விலை ஒரு கிராம் 6,000 பவுன். (9) ஆ°திரேலியாவில் தென் கிப்°லாந்து (South Gipsland) மாகாணத்தில் 12 அடி நீளமுள்ள மண்புழு காணப்படு கிறது. இதன் மொத்தம் ஒரு அங்குலம். இது ஒரு அங்குலம் நீளமுள்ள முட்டைகளை இடுகிறது. (10) தனது உடலின் நீளத்துக்கு அதிகம். அது வாலால் மரக்கிளையைப் பிடியாவிடில் தூக்கி எறியப்படும்.
(11) வாக் குண்டாம் எனத் தொடங்குவதால் இப் பெயர் பெற்ற நூல் ஒளவையாரால் செய்யப்பட்டது. (12) கம்பர் இராமாயணத்தில் இவ்வாறு ஓரிடத்தில் பாடியுள்ளார். (13) சீரகச்சம்பா, சிறுமணிச்சம்பா, சன்னச் சம்பா, ஊசிச் சம்பா, இலுப்பைப் பூச் சம்பா, மல்லிகைச் சம்பா, கோடைச் சம்பா, புனுகு சம்பா, குங்குமச்சம்பா, முத்துச் சம்பா. (14) செம்பாளை, பூம்பாளை, முட்டைக்கார், கடப்புக்கார், யானைக் கொம்பன், சொர்ணவாரி, வெள்ளைக்கார், இறங்கமேட்டான், இளங்கலையன், பூங்கார்.
(15) தேயிலை, காப்பி, சாராய வகைகள். (16) 7,000°F முதல் 27,000°F வரையில். (17) 6°F. (18) 4 அவுன்சு. (19) 5,000-க்கு மேல். (20) காற்றில் செல்வதைவிட செகண்டில் 15 மடங்கு வேகம். காற்றில் செகண்டில் 1,100 அடி செல்லும். (21) மணலில் முட்டையிட்டு வெய்யில் சூட்டில். (22) 120. (23) கூகை ஆந்தையிலும் பெரியது. அது பேராந்தை எனப்படும். (24) °டாலினுக்கு முந்திய சோவியத் உருசியத் தலைவர் 1870 - 1924. (25) அரசாங்கம் குறிக்கப்பட்ட கேள்வி அல்லது செயலைப்பற்றி தெளிவுபடுத்தி வெளி யிடும் அறிக்கை.
61
(1) சமுத்திரங்கள் நீராவியாக மாறிவிடும். (2) ஐக்கிய அமெரிக்காவைப் போல 4½ மடங்கு பருமையுடையது. (3) அமெரிக்காவில் °கங்க் (Skunk) என்னும் ஒருவகைப் பூனை காணப்படுகிறது. அது தேனீக்கள் கொட்டு வதைப் பொருட்படுத்தாது அவற்றை உண்டுவிடும். (4) தாவர இயலின் படி அது பழ வகைகளைச் சேர்ந்தது. (5) ஏறக்குறைய 20,000 வகைகள். (6) பிரேசில் நாட்டில் மணிக்குருவி (bell bird) என்னும் பறவை காணப் படுகிறது. இதன் ஓசை ஒரு மைலுக்கு அப்பாற் கேட்கும். (7) தாராவல்லீறு (duck hawk) ஒரு மணி நேரத்தில் 180 மைல்; சுவிவட் Swift என்னும் பறவை 200 மைல் பறக்கக் கூடும் எனச் சொல்லப்படுகிறது.
(8) சில பறவைகள் தனது எடையிலும் 50% அதிக உணவை உண்ணும். (9) 15 போத்தல். (10) இனிப்பு, கைப்பு, உவர்ப்பு, புளிப்பு என்னும் நான்கு. மற்றவை இவற்றின் கலப்பு. (11) ஏறக்குறைய 15,000. (12) ஏழில் ஐந்து பகுதிக்கு (5/7) மேல் அங்குப் பனிக்கட்டி ஆறுகள் 6,000 முதல் 9,000 அடித் தடிப்புடையன. (13) இவன் பூமியைச் சுற்றிக் கடற்பயணஞ் செய்த போது பிலிப்பைன் தீவில் மரணமானான். இவனுடன் சென்ற 18 பேரும் தொடர்ந்து பயணஞ் செய்து பூமியைச் சுற்றிவந்தனர். (14) இந் நகரம் நூற்றுக்கு மேற்பட்ட, தீவுகளிற் கட்டப்பட்டிருப்பதால். (15) தென்னமெரிக்கா ஐரோப்பவைப் போல் இருமடங்கு பெரியது.
(16) ஏறக்குறைய 200 இராத்தல்; நன்றாக வளர்ந்த திமிங்கிலம் 100 அடி நீளமும் 100 தொன் எடையுடையதாயிருக்கும். (17) இ°தான்புல்; இது பாதி ஐரோப்பிய துருக்கியிலும் பாதி ஆசியாவிலுள்ள ப°போர° நீரிணைக்கு ஊடாகவுமுள்ளது. (18) இது °பேம் திமிங்கிலத்தின் வயிற்றினின்றும் வெளிவரும் நரை நிறமான வாசனைப் பொருள். இது தங்கத்தைப் போல் ஐந்து மடங்கு விலையுள்ளது. (19) பசிபிக் கடல் தீவுகளில் ஒன்றான யாப் (Yap) தீவில்; அவை 2 அடிமுதல் 12 அடி விட்டமுள்ள கல் தகடுகள். (20) 25 பகுதி நிக்கல் மீதி செம்பு. (21) சாத்தாவாரி (asparagus) இது ஒரு நாளில் 6 அங்குலத்துக்கு மேல் வளர்ந்த அறியப்பட்டது; மூங்கிலும் இதைப்போல் வளரக்கூடியது.
62
(1) சோளம். (2) இராக்கூன் (raccon) என்னும் பூனை; இது உண்பதன் முன் உணவை நீரில் கழுவுகிறது. (3) ஆ°திரேலியாவில் யூகாலிப்ட° மரங்களில் வாழும் கோலாக்கரடி. இது வேண்டிய நீரை இலையிலிருந்து பெற்றுக் கொள்கிறது. (4) அண்டார்டிக்கில் ஞாயிறு படும் நேரத்தில் உண்டாகும் இயற்கை நிலைமையால் பிரகாசமான பச்சை நிறமாகத் தோன்றும். (5) மணிக்கு 75 மைல் வேகத்தில் வீசும் சுழல் காற்று. (6) வட அமெரிக்கப் புல்வெளிகளில் வாழும் ஒருவகை அணில்; இது நாய் குரைப்பது போலச் சத்தமிடுவதால் பிரயரி நாய் எனப்படும். (7) 500 இராத்தல் நன்கு வளர்ந்த சிங்கம் 3½ அடி உயரம் மூக்கு முதல் வால் நுனிவரை 11 அடி நீளம்.
(8) சராசரி எடை 11 அவுன்சு. அது 5 அங்குல நீளமும் 3½ அங்குல அகலமும் 2½ அங்குலத் தடிப்புமுள்ளது. (9) ஏறக்குறைய 20,000. (10) ஆம். (11) பிரிட்டிசார் 1814இல் தீமூட்டி எரித்த கறைகளை மறைப்பதற்கு. (12) வறுக்கும் போது உள்ளிருக்கும் ஈரம் நீராவியாக மாறி விரிவடைவ தால். (13) ஏறக்குறைய 15 கலன். (14) ஏறக்குறைய 400 இராத்தல். (15) சைபீரிய அணிலின் வால் மயிரினால். (16) அது கி.மு. 1200-இல் சீனாவிற் செய்யப்பட்டது.
(17) சிலர் ஆறுவாரம் உணவில்லாமலிருந்திருக்கிறார்கள். 5 நாட்களுக்கு மேல் நித்திரை இல்லாதிருக்கவில்லை. (18) அலக்சாந்தர்; போர் வீரரின் தாடியை எதிரிகள் பிடிக்காதிருக்கும்படி. (19) அது முதலில் செய்யப்பட்ட நியுயார்க், இலண்டன் என்னும் இடப் பெயர்களிலிருந்து (New York, London). (20) காற்று அடிக்கும் திசைக்கு மறுபக்கத்தில். (21) சுற்றளவை. (22) குறுக்கர். (23) தார். (24) கொன்பியூச°. (25) மிக்காடோ (Mikkado).
63
(1) யு - யுற்சு (Iu-iutsu also Gudu). (2) 1911; மஞ்சு. (3) 1842-இல் ஹொங்ஹொங் கிடைத்தது. (4) குத்துச் சண்டைக்காரர் கலகம் (Boxer Rebellion). (5) ஏவல் செய்வன் என்பதற்கு அடையாளமாக 17 -ஆம் நுhற்றாண்டில் வழங் கியது. பின்பு தன்மானம் என்னும் மதிப்புக்குரியதாக மாறிற்று. (6) அமே ஸான். (7) பம்பா° (8) அண்டீ° 5,000 மைல் (9) செல்வா° (Selvas). (10) பிரேசில்-போர்ச்சுக்கீசியம்; வெனிசுவெலா - °பானியம்.
(11) ஒரு தொடர்பில் 38 மைல் நீளம். (12) 6 முதல் 9 அங்குல நீளம்; ஒரு ஆரஞ்சுப் பழம் அளவு. (13) 1/1000 பகுதியை. (14) கொரியா நாட்டுப் பெண்கள். (15) நூற்றுக்கு அதிகம். (16) அதனைச் சூழ்ந்து முகில்போல் வாயு நெருங்கியிருப்பதால். (17) பிரேசில் நாட்டில் 6 அங்குல உயரமுடைய ஒரு குரங்கு காணப்படுகிறது. அது ஒரு கரண்டிக்குள் நன்றாக குந்தியிருக்கும். (18) அரை இராத்தலுக்குக் குறைவு. அது 300 இராத்தல் எடைக்கு அதிகம் வளரும்.
(19) சிங்கம்; அதன் கர்ச்சனை பத்து மைலுக்கு மேல் கேட்கும். (20) மலாயா. (21) மலாக்கா. மலாக்காப் பிரம்பு கைத்தடிகளாகப் பயன்படும். (22) இரங்கூன்; மண்டலாய். (23) நியுகினி. (24) சீயம் (தைலாந்து). (25) 1957. (26) சுண்டா (Sunda) தீவுகள். (27) இவ்வாறு ஒட்டிப் பிறக்கும் பிள்ளைகள் முதன் முதல் இங்கு தான் அவதானிக்கப்பட்டார்கள்.
64
(1) பொம்பே. (2) ஏழு; பால°தினைக் கிறித்துவர்களுக்காக்கும் பொருட்டு. (3) உரோமாபுரியிலுள்ள சென் பீற்றர் (St. Peters) கோயில். (4) பசிபிக், அத்லாந்திக், இந்தியன், ஆக்டிக். (5) கொட்மீன். (6) எடிசன். (7) கார்பன். (8) கார்பன். (9) விஷ்ணுசன்மா. (10) பீச்பிளெண்ட் (Pitchblende). (11) டேவி யின் சுரங்கக் காப்பு விளக்கு. (12) பெனிசிலின். (13) நொட் (Knot) 6,080 அடி. (14) ஏறத்தாழ 2,000. (15) கினியா என்பது கயனா (Guiana) என்பதன் திரிபு. தென்னமெரிக்காவிலுள்ள இவ்வெலி பிரிட்டிஷ் கயனாவிலிருந்து கொண்டு போகப்பட்டது. இது (guinea pig) எனப்படுகிறது. (17) இது சென்னை கவணர் (Robert Park - 1755 - 1763) பெயரால் அறியப்படுகிறது.
(18) பழந்தீவு பன்னிராயிரம். (19) இரேபதித் தீவு. (20) 1853இல் பம்பாயி லிருந்து தானா என்னுமிடத்துக்கு; 21 மைல். (21) ஐக்கிய அமெரிக்காவில் அபேண் மறியற் சாலையில் (Auburn prison) 1890இல். (22) அங்கங்களை வெட்டுதல், நீரில் அமுக்குதல், காட்டு விலங்குகள் கொல்லும்படி விடுதல், உயரத்திலிருந்து கீழே தள்ளுதல். சிரச்சேதஞ் செய்தல், தூக்கிலிடுதல். (23) மெக்சிகோவில் காணப்படுகிறது. இது சிசோகுவா° (Chichuahuas) எனப்படுகிறது. நன்றாக வளர்ந்த நாய் தேய்க்கிண்ணத்தில் வசதியாக இருக்கக் கூடியது; நாய்களுள் சிறியது.
(25) நீர் கூசாவின் வெளியே சென்று நீராவியாகச் செல்கிறது. நீராவியாகச் செல்லும் நீர் உள்ளேயிருக்கும் நீரின் வெப்பத்தை வாங்கி விடுகிறது. (26) நீர் வழியே வரும் சத்த அலைகளைத் தடுக்க தடைகளில்லாமையால்.
65
(1) மருந்து நெருப்புப் பற்றும் போது மருந்தைப் போல பல நூறு மடங்கு வாயு உண்டாகிறது. வாயு விசையோடு வெளியேறுவதால் வெடிச் சத்தம் உண் டாகிறது. (2) அது வலம் இருந்து இடமாக எழுதப்பட்டது. (3) கோல் கொண்டா. (4) இறைச்சித் தொழில்; இங்கிருந்து இறைச்சி பிற நாடு களுக்கு அதிகம் ஏற்றுமதியாகிறது. (5 ) T.B. தடுப்பு மருந்து. (6) விளக்கு எரிப்பதற்கு. (7) 20 முதல் 30 ஆண்டு. (8) இது மிக உயரப் பறக்கிறது. இது 20 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தது அறியப்பட்டுள்ளது. இது பருந்து வகையில் மிகப் பெரியது. 4 அடி நீளமுடையது.
(9) நிலக்கரித் தாரிலிருந்து. (10) புதிய குற்றவாளிகள் இப்பொழுது இங்கு அனுப்பப் படுவதில்லை. (11) காந்தாரக்கலை. (12) குசான்கள். (13) ஆபிரகாம் லிங்கன். (14) 23 டிசெம்பர். (15) இங்கிலாந்தின் முதலமைச்சர் இருக்கும் கட்டடம். (16) யாத்திரைப் பெரியார் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்குப் பயணஞ் செய்த மரக்கலம். (17) எட்மண்ட் ஹில்லாரியும் தென்சிங் நோர்கேயும்; மே 29, 1953. (18) அபாய அறிவிப்பு [எங்கள் உயிர்களைக் காப்பாற்றும் (Save our souls)].
(19) பாரசீகர். (20) சடுதியில் புயலும் பனிப்புகாரும் தோன்றுவதால். (22) ஏற்புவலியை உண்டாக்கும் நுண் கிருமிகளால் (tetanus bacillus). (23) மீனுக்குக் கண்ணிமைகளில்லை. (23) மாக்மில்லான் (Macmillian) என்னும் இ°கொத்லாந்தியரால்.
66
(1) இது எகிப்திலே ரோசெட்டா என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சாசனக்கல். இச் சாசனம் சித்திர எழுத்து. சாதாரண எழுத்து. கிரேக்க மொழிபெயர்ப் புக்களோடு காணப்பட்டது. இச்சாசனத்தை உதவியாகக் கொண்டு எகிப்திய சித்திர எழுத்துகள் வாசிக்கப்பட்டன. (2) இந்தியாவில் இவ் விளையாட்டு கி.பி. 8-ஆம் நூற்றாண்டிலிருந்ததாகத் தெரிகிறது. (3) பதினையாயிரம் சொற்களை; மில்டன் 8,000; சாதாரண கல்வி கற்றவன் 3,000 முதல் 4,000. (4) முன்புறமாக.
(5) சுண்ணாம்புக் கல்லையும் களி மண்ணையும் சூளையிலிட்டு. (6) புஷ்மன் என்னும் சாதியார். (7) இங்கி லாந்திலுள்ள குற்ற ஆராய்ச்சி (C.I.D) பகுதியினர் நிலையம் பழைய °கொத்லாந்து அரசரின் அரண்மணை இருந்த இடத்தில் இருப்பதால். (8) சூரியன் வடக்கில் நிற்கும்போது 24 மணி நேரமும் சூரியன் தோன்று வதால். (9) திரி தங்°டன் என்னும் வயிரிய உலோகக் கம்பியாலிடப்பட் டுள்ளது. மின்சாரம் பாயும்போது எதிர்ப்பினால் அது சூடேறி வெளிச்சம் கொடுக்கிறது. (10) தூரின் (turin) என்னுமிடத்தில். (11) ஷா. (12) மஞ்சட் கடல். (13) கங்கை ஆற்றிடைக் குறையில் உள்ள காடும் நிலமுமாகவுள்ள பகுதி.
(14) நைரோபி; தார் எ° சலாம் (Dar es salam). (15) கானா (Ghana). (16) ஆட்டீசன் கிணறுகள் மூலம். (17) மெரினோ வகை. (18) பாலூட்டி, பறவை, ஊர்வன, பூச்சிகள், மீன் வகை. (19) பத்து இராத்தல். (20) ஐக்கிய நாடுகளில் கல்வி விஞ்ஞான, பண்பாட்டுச் சபை (United Nations Educational Scientific and Cultural Organizations). (21) உலக சுகாதார சபை (World Health Organizaion). (22) சாலமன் அரசன் கட்டிய கோயில். (23) கலோரி (Calorie). (24) இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க இராணுவத்தினர் இலேசான போக்குவரத்து மோட்டார் வண்டிகளைப் பயன்படுத்தி னார்கள். அவை General service Purpose (Vehicles) எனப்பட்டன, G.P. என்னும் எழுத்துக்களின் உச்சரிப்பிலிருந்து Jeep என்னும் பெயர் வந்தது.
67
(1) இலெமிங் என்னும் எலிகள். (2) கள்ளி வகைகள். (3) அபின். (4) ஹொப்° (Hops); ஹொப்° என்பது ஐரோப்பிய நாடுகளில் பயிரிடப்படும் ஒரு வகைக் கொடியின் பூமொட்டு. (5) இராணி. (6) ஆ°திரேலியாவின் வடபகுதியில். (7) பல°அதின் (மினேர்வா) ஆந்தை. (8) 10 ஆண்டுகள். (9) ஒலிம்ப° மலை. (10) வான சாத்திரம். (11) யோசெப் பிரி°ட்லி (Jospeh Priestly). (12) பொன், பிளாட்டினம், வெள்ளி முதலியவை. (13) உரானியம். (14) பாதரசம்.
(15) கால்சியம் கார்பனேட், சோடியம் கார்பனேட், மக்நீசியம் சல்பேட். (16) சாதாரண உப்பு, கரும்புச் சர்க்கரை, சமையற் சோடா. (17) சிவப்பாக மாறும். (18) அசெட்டிக் அமிலம் (Acetic Acid). (19) சிற்றிக் அமிலம் (Citric Acid) இருப்பதால். (20) கந்தகம், கரி, வெடி உப்பு. (22) (Hydrogen Sulphide) இருப்பதால். (22) அதில் சவுக்காரம் நுரையாது போனால். (23) கார்பன் மொனோக்சைட் (Carbon Monoxide). (24) காற்றில் பிராணவாயுவும் (Oxygen) நீரும் இருப்பதால். (25) செம்பும் நிக்கலும் கலந்து. (26) மக்நீசியம்.
68
(1) அம்மோனியம் நைட்ரேட் (Ammonium Nitrate). (2) பிச்பிளெனெட் (Pichblende). (3) கார்பன். (4) வெள்ளி புரோமைட் (Silver Promide). (5) நாகம். (6) செம்பு. (7) டங்°தின் (Thungsten). (8) கொழுப்போடு கோ°டிக் சோடாவைச் சூடாக்கி. (9) சிவப்பு, ஆரேஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம் (Indigo), ஊதா (Violet). (10) சேர் யேம்° டீவார் (Sir James Dewar). (11) கட்டி யானநீர் நீரிலும் பார்க்கப் பருமை அடைவதால். (12) அதில் கரைந்துள்ள உப்பு கொதி நிலையை அதிகப்படுத்துகிறது. (13) செகண்டுக்கு 1,100 அடி. (14) இரும்பு, நிக்கல், கோபால்ட் (Cobalt). (15) செம்பு, நாகம், கந்தக அமிலம். (16) கல்வனோ மீட்டர் (Galvanometre).
(17) பென்சமின் பிறாங்கலின் (Benjamin Franklin). (18) உருதர் போர்ட் (Lord Rutherford). (19) சத்தத்தை ஒரு திசையாக ஒருமுகப்படுத்தும் (Concentrate) கருவி. (20) கொன்° தாந்தினோப்பிள், கிரி°தியானா, பெற்ரோ கிராட், அயர்லாந்து, சீயம். (21) கரிப் மக்களின் (செவ்விந்தியர்) ஹன்றகின் (Hunraken) என்னும் சொல்லி லிருந்து; அவர்கள் ஹன்றகின் தெய்வம் புயலை உண்டாக்குகிறது என நம்பினார்கள். (22) ஈராக். (23) க°பியன் கடல். (24) நைல், கலரடோ, சிந்து. (25) எடின்பேக், பேணி (Berne), இலி°பன், கோபாட் (Hobart), இரயோ டி செனரோ, தில்லி, பாக்டாட், சந்தியாகோ, பூனா° ஏரீ° (Buenos airies).
69
(1) மத்திய ரேகையிலுள்ளது; ஏறக்குறைய 26 மைல். (2) 24,926 மைல். (3) பிரெஞ்சு, செர்மன், இத்தாலியம், உரோமன் (Romansch). (4) 16. (5) இத்தாலி, ஆ°தி ரியா, இ°பேயின், உருசியா. (6) தென்னமெரிக்கா, தென்னாப்பிரிக்கா (தட்டையான குன்று), உருசியா, தென்னாப்பிரிக்கா. (7) ஆங்கிலரின் நாடு. (8) எட்வாட் பத்திமான். (9) இங்கிலாந்தில் 1886-இல் எழுதப்பட்ட நில அளவை விபரம். (10) அரபு. (11) கதே (Cathey). (12) சர் வால்டர் இரலி. (13) முதலாம் சேம்° அரசன். (14) பயர் (Biar). (15) வில்லோ (Willow). (16) உரொடோசியா (Cecil Rhodes). (17) கோதா வெட்டு வாய்க்கால் (Gota Canal) சுவிடின் 115 மைல். (18) திமிங்கிலச் சுறா (Whale Shark). (19) நைரோபி. (20) பைக்கல் வாவி (Lake baikal) 5,000 அடி. (21) மேல் 20, கீழ் 22. (22) உறிஞ்சும் மீன் (Sucking Fish). (23) அண்டார்டிக் பகுதி. (24) கடல் காகம் (Cormorant).
70
(1) இரசவாதம். (2) டெல்பி (Delphi). (3) 32,500 யார்ட் (கசம்), (4) வெ°டா (Vesta). (5) கோவ் வீழ்ச்சி (Khow Cataracts) இந்தோசீனாவில். (6) பாக்சைட் (Bauxite). (7) சிபிரால்டர், கியூடா (Ceuta). (8) சர் ஜார்ட்° எவரெ°ட் (Sir George Everst 1790 -1866) என்னும் இந்திய சர்வே செனரலின் பெயரால். (9) தோலின் கீழுள்ள கொழுப்பிலிருந்து. (10) கருங்கடல், கா°பியன் கடல், மத்திய தரைக்கடல், அட்லாண்டிக் கடல், ஆர்டிக்கடல். (11) எகிப்துக்கும் அராபியாவுக்கு மிடையில்; (Wyming) ஐக்கிய அமெரிக்காவில்; சீனா, ஆ°திரியா, நியூ சவுத்வேல்° (நீலகிரிமலையும் நீலமலை எனப்படும்); மா°க்கோ.(12) ஆப்பிரிக்க மத்தியரேகைக் காடுகள், கிரீன்லாந்து, மத்திய ஆசியா, அரேபியா, நியூசீலந்து, பெரு, உக்கிரேன், மெக்சிகோ, வடஅமெரிக்கா, பின்லாந்து.
(13) ஆர்க்டிக், வடஅமெரிக்கா, சீனா, சீயம், நியுகினி. (14) உலக சுகாதார தாபனம் (World Health Organization). (15) மரண தண்டனை விதிக்கும்போது. (16) இலாபா° (Le Paz), போல்வியா. (17) சிறுத்தை. (18) அட்ல°. (19) டச்சு. (20) பனாமா 50 மைல்; சூய° 100 மைல். (21) உரோமர் (Romer 1644 - 1710) 1676-இல். (22) ஹைடிரசன். (23) அது சிறிது போர்மிக் அமிலத்தை (Formic Acid) உடலில் செலுத்துவதால். (24) அலுமினியம், மாக்னீசியம். (25) இரேடியம்.
அச்செழுத்துக்களின் புள்ளி: அச்செழுத்துக்களின் அளவு புள்ளி எனப்படுகிறது. 72 புள்ளிகள் ஓர் அங்குல நீளமாகும். சாதாரணமாகப் புத்தகங்கள் 11 அல்லது 12 புள்ளிகளில் அச்சிடப்படுகின்றன.
பிலிப்பைன் தீவுக் கூட்டங்கள்: இக் கூட்டத்தில் 7091 தீவுகளுள்ளன. லூசன், மின்டானா° (Luzon, Mindanas) என்பவை பெரிய தீவுகள்; முழுப்பரப்பு, 114, 830 சதுர மைல்.
பைபிள்: இதில் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு பகுதி களுண்டு. பழைய ஏற்பாடு எபிரேய மொழியிலும் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டிருந்தன. பழைய ஏற்பாடு கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை கிரேக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் பைபிள் முழுமையும் இலாத்தின் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. 14ஆம் நூற்றாண்டின் இறுதியின் வைகிளிவ் பைபிள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பைபிள் ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மிகப் பெரியவை
மிகப் பெரிய அணைக்கட்டு - போல்டர் டாம் (ஐக்கிய - அ).
” ” அரண்மணை - வத்திக்காண்; உரோமிலுள்ளது.
” ” ஆறு - அமேசான் ; இதன் வடிநிலம். 2,702,200 சதுர மைல்.
” ” இராச்சியம் - சோவியத் உருசியா (U.S.S.R)
” ” உப்பு நீர் வாவி - கா°பியன் கடல் 170,000 ச. மைல்.
” ” எரிமலை - மொனலோவா (Manualoa) ஹாவே தீவிலுள்ளது. எரிமலை வாயின் விட்டம் 12,400 அடி.
” ” எரிமலை ஐரோப்பாவில் - எட்னா (Mount Etna) 10,800 அடி உயரம்.
” ” உள்நாட்டுக் கடல் - மத்திய தரைக் கடல்.
” ” கடல் - பசிபிக் கடல் ; 62,968,000 ச.மைல்.
” ” கடற்பறவை - அல் பாற்றஸ் (Albatross)
” ” கட்டடம் - எகிப்திலே கிசே (Gizeh) யிலுள்ள பிரமிட்டுச் சமாதி.
” ” கண்டாமணி - மா°கோவிலுள்ளது; உயரம் 137 அடி; விட்டம் 21 அடி; எடை 200 தொன்.
” ” கப்பல் - குயீன் எலிசபெத்; 83,673 தொன்.
” ” கப்பல் செல்லும் கால்வாய் - பால்டிக் வெண்கடல் கால்வாய் (Baltic white sea canal) 152
மைல்.
” ” கழிமுகத் திட்டு (Delta) - சுந்தர்பன் (Sundan bans) வங்காளத்திலுள்ளது.
” ” கிரகம் - வியாழன் - பூமியைப் போல் 1,300 மடங்குப் பெரியது; 320 மடங்கு பாரமானது.
” ” கிறித்துவ கோயில் - உல்ம் கதீடிரல் (Ulm Cathedral) செர்மனியிலுள்ளது; உயரம் 532 அடி.
” ” குடாநாடு - இந்தியா.
” ” கும்மட்டம் (Dome) - கோல் கும்பாட் (Gole gumbad) பீசப்பூரிலுள்ளது.
மிகப்பெரிய செயற்கை வாவி - மீட் (Lake Mead) போல்டர் அணையி லுள்ளது. (ஐ.அ).
” ” தங்கவயல் - யோகானே° பேக் (Johannesbergh) தென் ஆப்பிரிக்கா.
” ” தனி நாடு - பிரேசில் - ஏறத்தாழ ஐரோப்பாக் கண்டமளவு.
” ” திரைப்பட மாளிகை - உரொக்சி (Roxy) நியுயார்க் கிலுள்ளது.
” ” தீவு - கிரீன்லாந்து; 8,27,300 சதுர மைல்.
” ” தீவுக்கூட்டம் - மலாய தீவுக்கூட்டம்.
” ” தொகை மக்கள் கைக் கொள்ளும் சமயம் - பௌத்தம்
” ” தொலை நோக்கி - பால்மர் (Palmar) மலையில் (ஐ.அ) வைக்க ப்பட்டுள்ளது; இலென்சின் விட்டம் 200 அங்குலம்.
” ” நல்ல நீர் வாவி - சுப்பீரியர்; 31,200 சதுர மைல்.
” ” நீச்சு நீர்வெளி - இங்கிலீஷ் கால்வாய்; கலேய்சிலிருந்து டோவர் 23 மைல்.
” ” நீர்வீழ்ச்சி - ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (Angles Falls in Venezuela).
” ” நூதனப் பொருட் காட்சிச் சாலை - இலண்டன்
” ” நூல் நிலையம் - கில் (Kiev) சோவியத் உருசியாவிலுள்ளது: 7,097,000 நூல்கள்.
” ” பட்டினம் - இலண்டன் 700 சதுர மைல்
” ” பருந்துவகை - கொண்டோர் (Condor) என்னும் கழுகு, அண்டீ° மலையில் காணப்படுவது.
நீளம் 4 அடி.
” ” பவளத்திட்டு - ஆ°திரேலியாவின் வடகிழக்கிலுள்ளது.
” ” பறவை - தீக்கோழி
” ” பாலம் - ஆக்லண்ட் பாலம் (Oakland bridge) சான்பிரான்சி° கோவிலுள்ளது. (ஐ.அ.)
” ” பாலூட்டி - திமிங்கிலம்.
” ” பிராகாரம் - இராமே°வரம் 4,000 அடி
” ” புகைவண்டி நிலையம் - கிராண்ட் சென்ட்ரல் (Grand Central Terminus). நியுயார்க்கிலுள்ளது; 47
மேடைகள்.
” ” பூ கண்டம் - ஆசியா; 16,796,000 ச. மைல்.
” ” பூங்கா - யெல்லோ நேசனல் பார்க் (Yellow National Park); ஐக்கிய அமெரிக்கா.
” ” பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு - சிங்கம்.
மிகப்பெரிய மக்கள் தொகையுள்ள நாடு - சீனா.
” ” மக்கள் தொகையுள்ள - பட்டினம் - டோக்கியோ (8.5 மில்லியன்).
” ” மக்கள் நெருங்கி வாழும் நாடு - ஜாவா; ஒரு சதுர மைலுக்கு 817 பேர்.
” ” மனிதக் குரங்கு - கொரிலா (Gorilla).
” ” முத்து - பெர°போட் ஓப் (Beresford Hope); 1,800 கிராம்.
” ” வடக்குத் தெற்காக நீண்ட நிலப்பரப்பு - வட அமெரிக்காவும் தென்னமெரிக்காவும்;
ஆர்க்டிக் முதல் அண்டார்க்டிக் வரை.
” ” வயிரச் சுரங்கம் - கிம்பர்லி (Kimberly) தென்னாப்பிரிக்காவி லுள்ளது.
” ” வனாந்திரம் - சகாரா 3,000,000 ச. மைல்.
” ” வனாந்திரம் ஆசியாவில் - கோபி 300,000 ச. மைல்.
” ” விலங்கு - யானை.
” ” வைரம் - கலினன் (Callinan) தென்னாப்பிரிக்காவில் எடுக்கப் பட்டது.
மிக நீண்டவை
மிக நீண்ட அணைக்கட்டு - பாகி°தானி
லுள்ள சுக்கூர் பரேச் (Sukkur Barrage); 2 மைல் நீளம்.
” ” ஆறு - மிசிசிப்பி மிசௌரி; 4,502 மைல்.
” ” குடைவு பாதை - துன்னா (Tunna) ஜப்பானில் 13 1/4 மைல்; சுவிற்சலாந்திலுள்ள சிம்பிளோன் (Simplon) 12 மைல் 1,374 அடி.
” ” சுவர் - சீனப் பெருஞ்சுவர்; 1,500 மைலுக்கு அதிகம்.
” ” பகல் - 21 சூன்.
” ” புகைவண்டி நிலையமேடை - பீகாரிலுள்ள சோனிப்பூர் (Sonepur) .
” ” மலைத்தொடர் - அண்டீ° 5,000 மைல்.
” ” மலைத்தொடர் ஐரோப்பாவில் - எல்புரூ° (Elbruz) (காக்சேச°)
” ” வெட்டு வாய்க்கால் - டோர்ட்மண்டெம்° (Dortmundems) 170 மைல்; செர்மனியில்.
” ” கப்பலோடும் வெட்டுவாய்க்கால் கோடா (ழுடிவய ஊயயேட) சுவீடனில் 115 மைல்.
மிக நீண்ட வேலி - ஆ°திரேலியாவில் 1,139 மைல்; முயல்களின் தொல்லைக்காக
இடப்பட்டது.
மிக உயர்ந்தவை
மிக உயர்ந்த அணைக்கட்டு - போல்டர்டாம் (கூவர் அணைக்கட்டு); 726 அடி உயரம்.
” ” உருவச்சிலை - விடுதலைச்சிலை; நியுயார்க்; 150 அடி உயரம்.
” ” கட்டடம் - எம்பயர் °டேட் பில்டிங் (Empire State Building) 1,250 அடி; ஒரு காலத்தில் இஃது உயர்ந்த கட்டடமாக விருந்தது. இப்பொழுது இதனிலும் உயரிய கட்டடங்கள் பல நியுயார்க்கில் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.
” ” கோபுரம் - எய்பெல் (Eiffel) 985 அடி; பிரான்சில்.
” ” நாடு - திபெத்.
” ” நீர்வீழ்ச்சி - துக்லா (Tuegla); தென்னாப்பிரிக்கா; 2,810 அடி.
” ” பட்டினம் - பாரி (Phari); திபெத்; 14,300 அடி.
” ” புகைவண்டிப் பாதை - பெரு நாட்டில்; லிமாவிலிருந்து ஒரயோவுக்கு (Lima to Oroyo); 15,000
அடி உயரம்.
” ” புகைவண்டிப் பாதைப் பாலம் - பிரான்சிலுள்ள பேட்° வியடக்ட் (Fades Viaduct) 324 அடி.
” ” மலை இந்தியாவில் - நந்தாதேவி 25,600 அடி.
” ” மலைச்சிகரம் - எவரெ°ட்; 29,141 அடி.
” ” வாவி - தித்திக்காகா (Titicaca); போல்வியாவில் கடல் மட்டத்துக்குமேல் 12,000 அடி.
” ” விலங்கு - ஒட்டைச்சிவிங்கி.
” ” விழி எரிமலை - செம்பரோசோ (Chemborozo) எக்குடோரில்; உ யரம் 20,702 அடி.
சிறியவை
மிகக் குறுகிய பகல் - 22 டிசம்பர்.
மிகச் சிறிய கிரகம் - புதன்.
மிகச் சிறிய சுதந்திர நாடு - மொனாகோ (Monaco); எட்டுச் சதுர மைல்.
” ” தனிப்பட்டவர் புகைவண்டிப் பாதை - வத்திக்கான் நகரம்; 3/4 மைல்.
” ” பறவை - ஊங்காரப் பறவை (தேன் சிட்டிலும் சிறியது)
மிக்கவை
மிக ஆழ்ந்த கடல் - பசிபிக்கடல்.
மிக ஆழ்ந்த இடம் - பிலிப்பைன் தீவுகளுக்கு அண்மையிலுள்ள மெண்டானோ (Mendano)
தீவுக்கு அருகிலுள்ளது; 35,400 அடி ஆழம்.
” அதிகம் காப்பி விளையும் நாடு - பிரேசில்.
” ஆழ்ந்த வாவி - சைபீரியாவிலுள்ள பைகல் (Baikal) 3,200 அடி ஆழம்.
” உப்பு உள்ள கடல் - சாக்கடல் (Dead Sea).
” ஈரவிப்புள்ள நாடு - அசாமிலுள்ள மனோயேர்மன் (Mano-yourman); ஆண்டில் 499 அங்குல மழை.
” கடல் மட்டத்துக்குக் கீழுள்ள நீர்நிலை - சாக்கடல் 1,312 அடி கடல் மட்டத்துக்குக் கீழ்.
” குளிர்ந்த இடம் - வேர் கோயானி°க் (Verkoyansk) வட சைபீரியாவிலுள்ளது; வெப்பநிலை
சூனியத்துக்குக்கீழ் 85 பாகை.
” நீண்ட காலம் வாழும் பிராணி - புளு வேல் (Blue Whale) என்னும் திமிங்கிலம்; 500 ஆண்டு.
” பல மொழிகளில் அச்சிடப்பட்ட நூல் - பைபிள்; ஏறக்குறைய 200 மொழிகளில்.
” மக்கள் தொகை கூடிய நாடு - சீனா.
” அதிகம் கரும்பு பயிராகும் நாடு - கியூபாத்தீவு.
” வடக்கிலுள்ள பட்டினம் - ஹெமர்பெ°ட்; (Hemmer Fest) நார்வேயில்.
” வறண்ட இடம் - சாப்பள்ளத்தாக்கு (Death Valley); ஆண்டில் 1 1/2 அங்குல மழை. அரிக்கா
வில்லேச்சில் (Arica Village) 1/5 அங்குல மழை.
” விவேகமான விலங்கு - சிம்பன்சி என்னும் குரங்கு.
” வெப்பமான இடம் - சாப்பள்ளத்தாக்கு (கலிபோர்னியாவில்), 1340
டிரிப்ளோய்டானியாவிலுள்ள (Triploitania) அசிசியாவில் (Aziziah) 1330.
” வேகமாக ஓடும் விலங்கு (குறுகிய ஓட்டம்) - சிறுத்தைப்புலி.
” வேகமாகப் பறக்கும் பறவை - சுவிவ்ட் (Swift); மணிக்கு 200 மைல்.
இந்தியாவில் உயர்ந்தவை, பெரியவை, நீண்டவை.
இந்தியாவில் மிக
உயர்ந்த மலைச்சிகரம் - நந்தாதேவி (25,660 அடி).
அதிக சனத்தொகையுள்ள பட்டினம் - கல்கத்தா (40 இலட்சம்)
மிக நீண்ட ஆறு - பிரமபுத்திரா.
உயர்ந்த நீர்வீழ்ச்சி - கெர்சொப்பா வீழ்ச்சி, மைசூர். (Gersoppa Waterfall 600 அடி).
பெரிய வாவி - வுல்லர்வாவி (Wullar Lake) காசுமீரம்.
நீண்ட வெட்டு வாய்க்கால் - சார்தா (Sharda).
பெரிய நிலப்பரப்பு அடங்கிய மாநிலம் - பம்பே.
அதிக சனத்தொகையுள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்.
நீண்ட மின் புகை வண்டிப்பாதை - பாம்பேயிலிருந்து பூனா.
உயர்ந்த உருவச்சிலை - கோமதேசுவரர், மைசூர் (56 அடி).
மிக ஈரவிப்புள்ள இடம் - செராபுஞ்சி (Cherrapunji)
இந்தியாவில் அதிகம்பேர் கல்வி கற்றுள்ள நாடு - கேரளம்.
பெரிய நூதன பொருட் காட்சிச் சாலை - “இந்தியன் மியூசியம்” கல்கத்தா.
மக்கள் மிக நெருங்கி வாழுமிடம் - மேற்கு வங்காளம்; சதுர மைலுக்கு 800 பேர்.
மிகப் பெரிய மிருகக் காட்சிச் சாலை - மிருகச் காட்சி தோட்டம், அலிப்பூர் (கல்
கத்தா).
அதிக காடுள்ள மாநிலம் - அசாம்.
நீண்ட புகைவண்டி மேடை - சோனிபூர் (Sonepur).
மிக நீண்ட ஆற்றிடைக் குறை - சுந்தர்பான்° (Sunderbans); 8000 ச. மைல்.
மிக நீண்ட வீதி - கிராண் ட்ரங்க் வீதி (Grand Trunk Road), 1,500 மைல்.
அதிகம் கரும்பு விளையும் மாநிலம் - உத்தரப் பிரதேசம்.
பெரிய குகைக் கோயில் - எல்லோரா (கைலாசநாதர் கோயில்) பம்பே.
உயர்ந்த கோபுரம் - குதாப் மினார் (Kutab Minar), தில்லி.
மிகப் பெரிய கும்மட்டம் - கொல்கும்பாஜ் (Gol gumbaz) பீசப்பூர்.
பெரிய மிருகச் சந்தை (Animal fair) - Sonepur fair, பீகார்.
பெரிய பிராகாரம் - இராமே°வரம் கோயில் பிராகாரம், (4,000 அடி நீளம்)
பெரிய பள்ளிவாசல் - சமா மாசிட் (துயஅய ஆயளானை), தில்லி.
பெரிய பாலம் - சோனி (ளுடிநே) பாலம்.
இப் பூமியில் ஒரு காலத்தில் வாழ்ந்த வியப்பான உயிர்கள். மத்தியில் காணப்படுவது 100 அடி நீளமுள்ளது.
ஆப்பிரிக்க கட்டழகி
ஸ்டிக்கிள் பாக் என்னும் மீன்
பறக்குமணில் இது மலாயா இலங்கை முதலிய நாடுகளிற் காணப்படுவது
இது தாஸ்மேனிய பசாசு (Tasmanian devil) என்னும் விலங்கு. இது இரண்டடி நீளமுள்ள உடலும் நீண்ட வாலுமுள்ள விலங்கு. கரடி போன்றது. இது ஆடு மாடு கோழி என்பவற்றைக் கொன்று மிக்க அழிவு செய்வதால் இதற்கு இப் பெயர் வழங்குகின்றது. இதற்கு அடிவயிற்றில் கங்காருவுக்கிருப்பது போன்ற பை உண்டு.
புலுட்டை மான். கிழக்கு ஆபிரிக்காவில் அபிசீனியா முதல் தங்க நிக்கா வரை காணப் படுவது. நன்றாக வளர்ந்த மானின் உயரம் 13 அங்குலம்.
கடற்பசு (SEA-COW).
இது கடல் தாவரங்ளை உண்டு கரையை அடுத்த ஆழமில்லாத கடல்களில் வாழ்வது. இதற்கு இனமுடையதே கடற்பன்றி (Dugong) என்பது. இப் பிராணி சம்பந்தமானதே கடற்பெண் (mermaid) தொடர்பான கதைகள். இது திமிங்கிலத்தைப் போன்று வெப்ப இரத்த முள்ளது. குட்டி யீனுவது.
கொளுக்கிப் புழு; பாண்டு நோயை உண்டாக்குவது; கால்வழியாகச் சென்று சிறு குடலில் கடித்துக் கொண்டிருப்பது.
கொளுக்கிப் புழு;
அதன் பருமையின் அளவும்
கடற் சிங்கம்
சிறு பறவைகளைப் பிடிக்கும் சிலந்தி
தடிப்பூச்சி
எறும்புகளின் பால்மாடு
இலைப் பூச்சி
முட்டைகளைக் கால்களில் சிக்க வைத்துக் கொண்டு திரியும் ஆண் தேரை
ஸ்டிக்கிள்பர்க் (Stickleback) என்னும் மீனின் ஆண், நாணலில் கூடு கட்டிப் பெண் இடும் முட்டை களைப் பொரிக்கும் வரையில் பாதுகாக்கும். அது பெண் மீனை யும் கிட்ட அணுகவிட மாட்டாது. பெண்மீன் முட்டைகளை உண்டுவிடும்.
கடற்குதிரை மூன்று அல்லது நான்கு அங்குலப் பருமையுடையது. பெண் இடும் முட்டைகளை வயிற்றிலுள்ள பையுள் கொண்டு திரிவது.
பாக்டீரியா
ஈஸ்ட் என்னும் பக்டீரியா பெருகும் வகை
கொர்மொறண்ட் (Cormorant) என்னும் கடற்பறவை; கூழைக் கடாவின் இனமுடையது. சீனர் இதனை மீன் பிடிக்கப் பழக்கிப் பயன்படுத்துவர். பிடிக்கும் மீனை விழுங்கிவிடாதபடி அதன் கழுத்தில் உலோக வளையமொன்றை மாட்டிவிடுவர்.
தன்னிலும் பார்க்க 40 மடங்கு பாரமுள்ள சாணியை உருட்டிக் கால்களால் தள்ளிக் கொண்டு செல்லும் வண்டு
நீர் நாய் (OTTER)
நீரில் நீந்தியும் சுழியோடியும் மீன்களைப் பிடித்துண்பது. தோலிணைப்புள்ள பாதங்களுடையது. சீனர் இதனை பழக்கி வள்ளங்களிற்கொண்டு சென்று கடலில் மீன்பிடிக்கப் பயன்படுத்துவர்.
நத்தை, இதன் கண்கள் இதன் கொம்புகளின் நுனிகளிலுண்டு. இதன் பார்வை மிகக் குறுகியது.
எகிட்நா (Echidna) இது பெரிய பன்றி எலி (Hedgehog) அளவு பருமையுடையது. இதற்குப் பல் இல்லை. நீண்ட நாக்கு உண்டு. இது எறும்புகளை உண்பது; முட்டையிடுவது; குட்டிக்குப் பால் கொடுப்பது; ஆஸ்திரேலியாவிற் காணப்படுவது.
பிசன் (Bison) என்னும் எருமை; வட அமெரிக்காவிற் காணப்படுவது. சடையும் பெரிய தலையுமுடையது.
அலங்காரக் கழுத்துப் பட்டியுள்ள பல்லி. ஆஸ்திரே
லியாவிற் காணப்படுவது
மலை ஆடு (IBEX)
ஆஸ்திரேலியாவிற் காணப்படும் 12 அடி நீளமுள்ள மண்புழுக்கள்.
கடலின் அடியில் காணப்படும் உயிர்களும்,
நீர்த் தாவரங்களும்
யாழ் பறவை
இது கடலாழத்தில் உலாவும் ஒருவகை மீன்; ஹெரிங் போன்றது; தன்னிலும் பார்க்க மூன்றுமடங்கு நீளமுள்ள இரையை விழுங்கக் கூடியது; இதன் வயிறு விரிந்து கொடுக்கும் அமைப்புடையது.
இது தென் கடற் பக்கங்களிற் காணப்படும் அல்பற்றஸ் (Albatross) என்னும் கடற் பறவை; கடற் பறவைகளுள் பெரியது; ஏறக்குறையப் 16 இறாத்தல் எடையுடையது. இது இறக்கைகளை விரித்தால் ஒரு முனையிலிருந்து மற்ற முனைக்குள்ள நீளம் 12 அடி முதல் 14 அடி வரை.
பல்லிகள் போன்ற ஊர்வன இவ்வாறு வளர்ச்சியடைந்து பறவைகளாயின என்பர் தொல்லுயிர்நூலார். பல்லிகளே கால்களை ஒழித்துவிட்டு பாம்புகளாயின வெனவும் அவர் கூறுவர்.
வீட்டு ஈயின் கால்
வீட்டு ஈ பெருகும் முறை
வெட்டுக்கிளி, இதற்குப் முன்னங்கால் களின் மடக்குக்குக் கீழ் காதுகள் உண்டு.
நடக்கும் மீன்
தூண்டில் மீன்
கல்யானை (Tapir) இது மலாய்த் தீவுகளிலும் தென்னமெரிக்காவிலும் காணப்படுவது. இதன் முகமும் முன்புறமும் இருண்ட கறுப்பாகவும், முதுகும் வயிறும் பின்புறமும் வெண்மையாகவும் இருக்கும்.
சிலோத் (Sloth) என்னும் கரடி; மரங்களில் தலைகீழாக உலாவுவது; இது நித்திரை கொள்வதும் இந் நிலையிலே யாகும். தென்னமெரிக்காவிற் காணப்படுவது.
ஹேர்மிட் கிறாப் (Hermit crab) என்னும் நண்டு. இந் நண்டுக்கு ஓடு இல்லை. இது ஏதும் ஒரு கடற் பிராணியின் ஓட்டுக்குள் நுழைந்து கொண்டு அதனைத் தனது இயற்கை ஓடு போலப் பயன்படுத்தும்.
சொறிமீன் (Jelly-fish)
மனிதரின் தலைமயிரிலிருக்கும் பேன்; மயிரில் முட்டைகள் ஒட்டிக் கொண்டிருக்கும் வகை.
யொக்ககாமாக் கோழி இது ரோசா (Tosa) கோழி எனவும்படும் யப்பானில் காணப் படுவது. சேவலுக்கு 12 அடி நீளம் வால் வளர்கிறது.
நட்சத்திர மீன் (Star-fish)
பறக்கும் மீன்: இதனால் நீருக்கு மேலே சிறிது தூரம் பறக்கமுடியும்.
கிவி (KIWI)
A அடை வைத்துப் 12 மணிக்குப் பின்; B 24 மணிக்குப் பின்; C இரண்டு நாட்களுக்குப்பின்; D நான்கு நாட்களுக்குப்பின்; E பத்து நாட்களுக்குப் பின்; F 21 நாட்களுக்குப்பின்; G முட்டையி னின்று குஞ்சு வந்தவுடன்
சுவர்க்கப் பறவை
காசோவாரி (CASSOWARY)
இலாமா; பேரு (Peru) நாட்டுப் பாரஞ்சுமக்குக்கும் விலங்கு. 50 இறாத்தல் பாரம் சுமத்தினால் விழுந்து படுக்கும்; எழும்பவும் உண்ணவும் மறுக்கும். இதன் இறைச்சி உண்ணப்படுகிறது.
யானை, பன்றி போன்ற ஒரு சிறிய மூதாதைகளிலிருந்து வளர்ச்சியடைந்த தென்பர் தொல்லுயிர் நூலார்.
90
அல்பக்கா தென்னமெரிக்கா விலங்கு உரோமத்துக்காக வளர்க்கப்படுவது. இலாமா என்னும் விலங்குவின் இனமுடையது.
வான்கோழி
மீன் கொத்திப் பறவை
இவள் ஆபிரிக்க நீகிரோவ சாதிக் கட்டழகி; சாரா (Sara) வகுப்பினள்; இதழ்களைத் துளையிட்டு மரத்தால் செய்த நீண்ட இதழ்களை மாட்டியிருக்கிறாள்.
பழங்காலப் போர்களிற் பயன்படுத்தப்பட்ட பரவளை என்னும் ஆயுதம்.
பழங்காலப் போரில் பயன்படுத்தப்பட்ட சக்கரம்; சவரக் கத்தி போன்ற முனையுடையது.
மலேரியாச் சுரம் உண்டாக்காத கொசு
ஆசன்ரைனாவிலுள்ள ஆடும் பாறை; 700 தொன் எடையுள்ள இப்பாறையை சிறுவன் ஒருவன் ஆட்டி விடலாம். (The rocking stone in the world - Argentina)
மலேரியாச் சுரம் உண்டாக்கும் கொசு (ANOPHOLES)
தகோபா - இது பௌத்தரின் வழிபாட்டுக்குரியது. பிரமிட்டுச் சமாதி போன்று, உள்ளே வெளியின்றிக் கட்டப்படுவது. பௌத்த குருமார் தங்கும் மடங்கள் விகாரை எனப்படும்.
ஒட்டைச் சிவிங்கி
சிரங்கு கிருமி
நீர் யானை
மேரிகூரி
இரத்தத்தில் காணப்படும் சிவப்பு அணுக்களும் வெள்ளை அணுக்களும்; சிவப்பணுக்கள் தட்டையாய் நடுபள்ளமாக விருக்கும். வெள்ளை அணுக்கள் உடலுக்கு அபாயம் விளைக்கக் கூடிய நோய்க் கிருமிகள் உள்ளே நுழையாத படி அவற்றை எதிர்த்துப் போராடிக் கொன்று விடுகின் றன. அல்லது அவற்றை விழுங்கி விடுகின்றன. 500 சிவப்பு அணுக்களுக்கு ஒரு வெள்ளை அணு இருக்கிறது. ஒரு கன அங்குல இரத்தத்தில் 82,000,000,000 செங் கூடுகளும், 164,000,000 வெண் கூடுகளுமுள்ளன.
35 அடி
1, 3, 9, 5 இவை மறைந்து போன பல்லி இனங்கள்; 2. இடியேற்றுப் பல்லி (Diplodocus) 105 அடி நீளம்; 4. கடல் தேள்; 6. மம்மத் என்னும் யானை; 7. டொடோ என்னும் கோழி.
மனிதருக்கு நோய்களைப் பரப்பும் ஈ, தெள்ளு, பேன், மூட்டைப் பூச்சி, நுளம்பு (கொசு) எலி முதலியன.
எவ்வெல் கோபுரம்
மனிதன் தோன்றுவதன் முன் இவ்வுலகில் வாழ்ந்த மிகப் பெரிய பல்லிகள். நீண்ட வாலுடன் காணப்படும் இடியேற்றுப் பல்லியின் நீளம் 100 அடி.
கிளியப்பத்திராவின் ஊசி
எம்பயர் ஸ்ரேட் பில்டிங்
காந்த துருவங்கள்
மலைப் புறாவினின்றும் தோன்றிப் பல இனங்களாக வேறுபட்ட புறாக்கள்.
கொசுவின் (நுளம்பின்) தோற்ற வளர்ச்சி உருமாற்றம் முதலியன
தாராமூக்கு உலி
(duck-mole
(Lacto meter) லக்ரோ மீட்டர்; பாலில் நீரைரைக் கண்டுபிடிக்கும் கருவி; பால் சுத்தமாக விருந்தால் M அடையாளம் பால் மட்டத்தில் இருக்கும். நீர் கலந்திருந்தால் M அடையாளம் கீழே போகும்.
பூஞ்சு; இது பச்சயம் இல்லாத தாவரம்; காளானினத்தைச் சேர்ந்தது. அணுத்தன்மையுள்ள இதன் விதைகள் நமது கண்ணுக்குப் புலப்படாமல் காற்றோடு பறந்து செல்கின்றன. அழுகிப்போன பொருள்களிலும் ஈரலிப்புள்ள பொருள்களிலும் இவை தங்கி வளறும். அறையில் வைக்கப்பட்ட பொருளில் பூஞ்சு பிடிப்பது பூஞ்சு விதைகள் அங்கு இருப்பதாலாகும்.
வெப்பமானி தேமாமீட்டர்; 320 F உறையும் நிலை; 98.4 உடலின் சாதாரண வெப்ப நிலை; 1040 உடலின் மிகக் கூடிய வெப்பநிலை; 1100 மரணம் விளைக்கக் கூடிய அபாயமான நிலை
வனாந்தரங்களி லுண்டாகும் கள்ளி
வாக்கப் புட்டி யின் அமைப்பு
யூகிளிட்டி
ஆர்ச்மிடீஸ்
சாக்கிரட்டிஸ்
பிளேட்டோ
(கி.மு. 427-347)
அரிஸ்டாட்டில் மகா அலக் சாந்தரின் உபாத்தியாயர் (கி.மு. 384-322)
ஊங்காரப் பறவை
பெங்குவின்: இது அண்டார்ட்டிக் கடல்களில் காணப்படும் நீர்ப்பறவை. பறக்க மாட்டாதது.
தென்னமெரிக்காவிற் காணப்படும் எறும்பு தின்னும் கரடி.
இந்நூலில் வரும் கீழ்க் குறிப்பிட்டுள்ள சொற்கள் தரும் பொருள்களாவன:
கிடைச்சி - Cork
கெதியாய் - வேகமாய்
காரா - வாத்து
திகதி - நாள்
நிகிரோவர் - நீக்ரோவர்
நெய்யரி - வடிகட்டி
வாவி - நீர்நிலை
சாதியார் - இனம் (Race)
யார் - அடி, கஜம் (Yard)
தொன் - டன் (Ton)
விடம் - நஞ்சு
வனாந்திரம் - பாலைவனம்
மாரிகாலம் - மழை காலம்
பாரம் - எடை
பதிப்பகத்தார்.
பயிற்சி வினாக்கள்
I
1. நோர்வேயில் காணப்படும் பிராணிகளில் எது கூட்டமாகச் சென்று தற்கொலை புரிந்து கொள்கின்றது ?
2. வனாந்தரங்களில் எவ்வகைத் தாவரங்கள் வளர்கின்றன ?
3. கசகசாச் செடியிலிருந்து என்ன மருந்து எடுக்கப்படுகிறது ?
4. பீருக்குச் சுவையூட்ட என்ன வேண்டும் ?
5. தேனீக்களில் குத்தும் கொடுக்கில்லாததெது ?
6. மிக நீண்ட பவளப் பாறைத் திட்டுகள் எங்கு காணப்படுகின்றன ?
7. கிரேக்கரின் கல்வித் தெய்வம் எது ? அத்தெய்வத்தின் பறவை எது?
8. திரோசன் (Trojan) போர் எத்தனை ஆண்டுகள் நடந்தது ?
9. கிரேக்க தெய்வங்கள் எம்மலையில் உறைந்தன ?
10. விஞ்ஞானத்தில் பழமையுடையது எது எனக் கருதப்படுகிறது?
11. பிராணவாயுவைக் கண்டுபிடித்தவர் யார் ?
12. விலையுயர்ந்த (Precious) உலோகங்கள் எவை ?
13. மிகப் பாரமான தனிமம் எது ?
14. சாதாரண வெப்ப நிலையில் நீர்மயமாக இருக்கும் உலோக மெது ?
15. சோக், சலவைச் சோடா, எப்சம் சால்ட் என்பவற்றின் விஞ்ஞானப் பெயர்களென்ன ?
16. சோடியம் குளோரைட்(Sodium chloride)-சுகிறோ° (Sucrose) சோடியம்-பை-கார்பனேட், (Sodium**i-Carbonate) என்னும் விஞ்ஞானப் பெயர்கள் சாதாரணமாக எப்படி அறியப்படும் ?
17. இலித்ம° (Litmus) தாளில் அமிலம் பட்டால் என்ன வாகும் ?
18. வினாகிரியில் என்ன அமிலம் இருக்கிறது ?
19. எலுமிச்சம்பழம் ஏன் புளிக்கிறது ?
20. வெடி மருந்தில் என்ன பொருள்கள் இருக்கின்றன ?
21. கூழ்முட்டை ஏன் கெட்டமணம் வீசுகிறது ?
22. தண்ணீர் தடிப்பானது என்று எப்பொழுது சொல்லுகிறோம்?
23. மோட்டார் வண்டியில் குழாய் முலம் வெளிவரும் புகையில் (Exhaust fumes) என்ன நச்சு வாயு இருக்கிறது ?
24. இரும்பு ஏன் துருப்பிடிக்கிறது ?
25. வெள்ளி நாணயங்கள் இப்பொழுது எப்படிச் செய்யப்படுகின்றன ?
26. தண்ணீரிலிருந்து என்ன உலோகம் எடுக்கப்படுகிறது ?
II
1. காற்றிலிருந்து என்ன உரம் (Fertiliser) எடுக்கப்படுகிறது ?
2. என்ன உலோகத்திலிருந்து இரேடியம் எடுக்கப்படுகிறது ?
3. நிலக்கரியில் என்ன முதன்மையான தனிம மிருக்கின்றது ?
4. படமெடுக்கும் தட்டில் (Photographic plate) என்ன உலோகம் பூசப்படுகிறது?
5. “ரோச் பாட்டரி” (Torch batteries) களுக்கு மேல் என்ன உலோகத் தகடு போடப்படுகிறது ?
6. மின்சார சாதனங்களுக்குக் கம்பிகள் என்ன உலோகத்தால் செய்யப்படு கின்றன ?
7. மின்சாரக் குமிழ்(Bulb)களுக்குத் திரிக்கம்பிகள் என்ன உலோகத்தினால் செய்யப்படுகின்றன ?
8. சவுக்காரம் எப்படிச் செய்யப்படுகிறது ?
9. வானவில்லில் என்ன நிறங்களிருக்கின்றன ?
10. தேமோபிளா°க்கைக் கண்டுபிடித்தவர் யார் ?
11. பனிக்கட்டி ஏன் நீரில் மிதக்கிறது ?
12. கடல் நீர் நல்ல நீரிலும் பார்க்க அதிக சூடேறும். ஏன் ?
13. கடல் மட்டத்தில் சத்தம் செல்லும் வேகம் என்ன ?
14. என்ன உலோகங்களில் காந்த சக்தி உண்டு ?
15. சாதாரண மின்சார கலத்தில் (Cell) என்ன பொருள்களிருக்கின்றன ?
16. மின்சார ஓட்டத்தை அளக்கும் கருவிக்குப் பெயரென்ன ?
17. இடிமுழக்கம் செய்யும் முகிலில் மின்சாரம் செலுத்தப் பட்டுள்ள தென்பதைக் கண்டுபிடித்தவர் யார் ?
18. முதல் முதலில் அணுவைப் பிளந்தவர் யார் ?
19. மெகாபோன் (Megaphone) என்பது என்ன ?
20. இ°தான்புல், ஓ°லோ, இலெனின் கிராட், அயர், தைலண்ட் என்னும் இடங்களின் பழைய பெயர்களென்ன ?
21. புயலைக் குறிக்கும் அரிக்கேன் (Harricane) என்னும் பெயர் எப்படி வந்தது ?
22. பழைய மெசபெதேமியா இன்று எப்பெயராலறிப்படுகிறது ?
23. பெரிய உள்நாட்டுக் கடலெது ?
24. எந்த ஆறுகளில் அசுவான் அணை, போல்டர், உலோயிட் (Loyd) அணைகளிருக்கின்றன ?
25. (இ)°கொத்லாந்து, சுவிற்சர்லாந்து, போர்ச்சுக்கல், த°மேனியா, பிரேசில், இந்தியா, ஈராக், சில்லி, ஆர்சன்தைனா முதலியவற்றின் தலைநகர்களெவை?
III
1. பூமியின் மத்திய இரேகையிலுள்ள குறுக்களவோ துருவங்களில் குறுக்களவோ, நீளமானது ?
2. பூமியின் சுற்றள வெவ்வளவு ?
3. சுவிற்சர்லாந்திலுள்ள நாலு அரசாங்க மொழிகளெவை ?
4. சோவியத் உருசியாவில் எத்தனை குடியரசு நாடுகள் சேர்ந்துள்ளன ?
5. இலிரா (Lira), சில்லிங்(Schilling), பெசிதா (Peseta), உருபிள் (Rouble) என்னும் நாணயங்கள் எங்கு வழங்குகின்றன ?
6. பம்பர°, கோபிஜி (Kopje), இ°டெப்°, வெல்ட்(Veld) எங்குள்ளன ?
7. இங்கிலாந்து என்பதன் பொருளென்ன ?
8. வெ°ட்மின்°டர் அபேயைக் கட்டியவர் யார் ?
9. டொம்°டே புக் (Domesday Book) என்பது என்ன ?
10. அல்சிபிரா, அல்கஹால் என்பன என்ன மொழிச் சொற்கள்?
11. மத்திய காலத்தில் சீனா என்ன பெயராலறியப்பட்டது ?
12. புகையிலையையும் உருளைக்கிழங்கையும் இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றவர் யார் ?
13. புகையிலைச் சுருட்டுப் பிடிப்பதை ஆட்சேபித்த ஆங்கில அரசன் யார் ?
14. புகையிலைச் சுங்கான் (Pipe) செய்யப் பயன்படுத்தப்படும் மரம் என்ன ?
15. கிரிக்கட் பாட் (Bat) செய்யப் பயன்படுத்தப்படும் மரம் எது ?
16. வெள்ளைக்காரன் பெயரால் வழங்கும் ஆப்பிரிக்க நாடு எது?
17. உலகில் மிக நீண்ட கப்பலோடும் வெட்டு வாய்காலெது ?
18. மிகப் பெரிய மீன் எது ?
19. கெனியாவின் தலைநகர் எது ?
20. மிக ஆழ்ந்த வாவி எது ?
21. நாய்க்கு எத்தனை பற்களுண்டு?
22. மீனைப் பழக்கி ஆமை பிடிக்கலாமா ?
23. மீன் பிடித்தொழில் அதிகம் நடைபெறும் நாடெது ?
24. எப்பறவை மீன் பிடிக்கப் பழக்கப்படுகிறது ?
IV
1. பழங்காலத்தில் இரசாயன சாத்திரம் எப்பெயர் பெற்றது ?
2. கிரேக்கரின் வெளிப்பாடு (Oracle) கூறும் அப்பாலோ கோயில் எங்கிருந்தது?
3. ஒரு பட்டுப் புழுவின் கூட்டில் எவ்வளவு நூலிருக்கும் ?
4. உரோமரின் உடற்சுகத்துக்குரிய தேவதை (Goddess of Health) எது ?
5. மிக அகன்ற நீர்வீழ்ச்சி எது ?
6. அலுமினிய மெடுக்கப்படும் உலோக மண்ணுக்குப் பெயரென்ன?
7. ஹேர்கூலிசின் தூண்கள் (Pillars of Hercules) என்பவற்றுக்கு இப்பொழு துள்ள பெயர்களெவை ?
8. எவரெ°ட் என்னும் பெயரெப்படி வந்தது ?
9. திமிங்கிலத்தின் எப்பகுதியிலிருந்து எண்ணெயெடுக்கப் படுகிறது?
10. டான்யூப், வொல்கா, (உ)றோன், கொங்கோ, மக்கன்சி ஆறுகள் எங்கு விழுகின்றன ?
11. செங்கடல், யெல்லோ°டோன்பாக், மஞ்சளாறு, நீலமலை, சிவப்புச் சதுக்கம் (Red Square) என்பன எங்குள்ளன ?
12. பிக்மி, எ°கிமோ, கிர்கிக் (Kirgig) பெடோனியர் (Bedoans), மயோரி, இன்காக்கள், கொசக்°(Cossachs), அச்ரெக்° (Aztecs), செவ்விந்தியர், பின்னியர் எங்குள்ளார்கள் ?
13. இக்லு (Igloo), விக்வாம் (wigwam) தோணி வீடுகள் (House Boats), மரத்தின் மேல் வீடுகள் (Tree House ), எங்குள்ளன ?
14. W.H.O. என்னும் எழுத்துகள் எதைக் குறிக்கின்றன ?
15. நீதிபதி எப்பொழுது கறுப்புத்தொப்பி அணிகிறார் ?
16. உலகில் மிக உயர்ந்த தலைநகரமெது ?
17. மிக வேகமாக ஓடக்கூடிய விலங்கு எது ?
18. கிரேக்க பழங்கதைகளில் உலகத்தைச் சுமந்துகொண்டு நிற்பவராகச் சொல்லப்படுபவர் யார் ?
19. தென்னாப்பிரிக்க போயர் (Boers) எந்த ஐரோப்பிய சாதியாரின் சந்ததியினர்?
20. பனாமா, சூய° கால்வாய்களின் நீளமென்ன ?
21. வெளிச்சம் செல்லும் வேகத்தை அளந்தவர் யார் ?
22. மிகப் பாரங்குறைந்த வாயு எது ?
23. காஞ்சோன்றி ஏன் சுணைக்கிறது ?
24. இலேசான உலோகங்களென்பவை எவை ?
25. உயிரைக் காப்பாற்றும் உலோகமென்பது எது ?
பயிற்சி வினாக்களுக்கு விடை
I
1. இலெமிங் என்னும் எலிகள். 2. கள்ளி வகைகள். 3. அபின் 4. ஹொப்° (Hops); ஹொப்° என்பது ஐரோப்பிய நாடுகளில் பயிரிடப்படும் ஒருவகைக் கொடியின் பூமொட்டு. 5. இராணி 6. ஆ°திரேலியாவின் வடபகுதியில் 7. பல° அதின் (மினேர்வா) ஆந்தை 8. 10 ஆண்டுகள் 9. ஒலிம்ப° மலை 10. வான சாத்திரம் 11. யோசெப் பிரி°ட்லி (Joseph Priestly) 12. பொன், பிளாட்டினம், வெள்ளி முதலியவை 13. ஒ°மியம் (Osmium) 14. பாதரசம் 15. கல்சியம் கார்பனேட், சோடியம் கார்பனேட், மக்நீசியம் சல்பேட் 16. சாதாரண உப்பு, கரும்புச் சர்க்கரை, சமையற்சோடா 17. சிவப்பாக மாறும் 18. அசெட்டிக் அமிலம் (Acetic Acid) 19. சிற்றிக் அமிலம் (Citric Acid) இருப்பதால் 20. கந்தகம், கரி, வெடியுப்பு 21. (Hydrogen Sulphide) இருப்பதால் 22. அதில் சவுக்காரம் நுரையாது போனால் 23. கார்பன் மொனோக்சைட் (Carbon Monoxide) 24. காற்றில் பிராணவாயுவும் (Oxygen) நீரும் இருப்பதால் 25. செம்பும் நிக்கலும் கலந்து 26. மக்நீசயம்.
II
1. அம்மோனியம் நைட்ரேட் (Ammonium Nitrate) 2. பிச்பிளென்ட் (Pitchblende) 3. கார்பன் 4. வெள்ளி புறோமைட் (Silver bromide) 5.நாகம் 6. செம்பு 7. துங்°தின் (Tungsten) 8. கொழுப்போடு கோ°டிக் சோடாவைச் சூடாக்கி 9. சிவப்பு, ஆரேஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கரு நீலம் (Indigo), ஊதா (Violet) 10. சேர் யேம்° டீவார் (Sir James Dewar) 11. கட்டியான நீர் நீரிலும் பார்க்கப் பருமை அடைவதால் 12. அதில் கரைந்துள்ள உப்பு கொதிநிலையை அதிகப்படுத்துகிறது 13. செக்கண்டுக்கு 1,100 அடி 14. இரும்பு, நிக்கல், கோபால்ட் (Cobalt) 15.செம்பு, நாகம், கந்தக அமிலம் 16. கல்வனோ மீட்டர் (Galvanometre) 17. பென்சமின் பிறங்லின் (Benjamin Franklin) 18. உருதர்போர்ட் (Lord Rutherford) 19. சத்தத்தை ஒரு திசையாக ஒருமுகப் படுத்தும் (Concentrate) கருவி 20. கொன்°தாந்தினோப்பிள், கிரி°தியானா, பெற்ரோ கிராட், அயர்லந்து, சீயம் 21. கரிப் மக்களின் (செவ்விந்தியர்) ஹன்றகின் (Hunraken) என்னும் சொல்லிலிருந்து ; அவர்கள் ஹன்றகின் தெய்வம் புயலை உண்டாக்குகிறது என நம்பினார்கள். 22. ஈராக் 23. க°பியன் கடல் 24. நைல், கலரடோ, சிந்து 25. எடின்பேக், பேணி (Berne), இலி°பன், கோபாட் (Hobart), இரயோ டி செனரோ, இடில்லி, பாக்டாட், சந்தியாகோ, பூனா°ஏரீ° (Buenos airies)
III
1. மத்திய ரேகையிலுள்ளது; ஏறக்குறைய 26மைல் 2. 24,926 மைல் 3.பிரெஞ்சு, சேர்மன், இத்தாலியம், உரோமன் (Romansch) 4. 16. 5. இத்தாலி, ஆ°திரியா, இ°பேயின் உருசியா 6. தென்னமெரிக்கா, தென்னாப்பிரிக்கா (தட்டையானகுன்று), உருசியா, தென்னாப்பிரிக்கா 7. ஆங்கிலரின் நாடு 8. எட்வாட் பத்திமான் 9. இங்கிலாந்தில் 1886இல் எழுதப்பட்ட நில அளவை விபரம் 10. அரபு 11. கதே(Cathey) 12.சேர்வால்டர் இரலி 13. முதலாம் யேம்° அரசன் 14.பயர்(Biar) 15. வில்லோ(Willow) 16.உரொடோசியா (Cecil Rhodes) 17. கோதா வெட்டுவாய்க்கால் (Gota canal) சுவிடின் 115மைல் 18. திமிங்கிலச் சுறா(Whale shark) 19. நைரோபி 20. பைக்கல் வாவி (Lake baikal) 5000 அடி 21. மேல் 20 கீழ் 22. 22. உறிஞ்சும் மீனை (Sucking fish) 23. அண்டாக்டிக் பகுதி 24. கடல் தாரா (Cormorant).
IV
1. இரசவாதம், 2. டெல்பி(Delphi), 3. 32,500 யார் (கசம்), 4. வெ°டா (Vesta), 5. கோவ் வீழ்ச்சி (Khow Cataracts) இந்தோசீனாவில், 6. பொக்கைட் (Bauxite), 7. சிபிரால்டர், கியூடா (Ceuta), 8. சேர் ஜோட்° எவரெ°ட் (Sir George Everest 1790-1866) என்னும் இந்திய சேர்வே செனரலின் பெயரால், 9.தோலின் கீழுள்ள கொழுப்பிலிருந்து, 10. கருங்கடல், கா°பியன் கடல், மத்தியதரைக் கடல், அத்லாந்திக்கடல், ஆக்டிக்கடல், 11. எகிப்துக்கும் அராபியாவுக்கு மிடையில்: வைமிங் (Wyming)ஐக்கிய அமெரிக்காவில் ; சீனா, ஆ°திரியா, நீயூ சவுத்வேல்° (நீலகிரி மலையும் நீலமலை எனப்படும்); மொ°க்கோ, 12. ஆப்பிரிக்க மத்தியரேகைக் காடுகள், கிரீன்லந்து, மத்திய ஆசியா, அராபியா, நியூசிலந்து, பேரு, உக்கிரேன், மெக்சிக்கோ, வட அமெரிக்கா, பின்லாந்து, 13. ஆக்டிக், வட அமெரிக்கா, சீனா, சீயம், நியுகினி, 14. உலக சுகாதார தாபனம் (World Health Organisation), 15. மரண தண்டனை விதிக்கும்போது, 16. இலாபா° (Le Paz), போல்வியா, 17. சிறுத்தை, 18. அட்ல°, 19. இடச்சு, 20. பனாமா 50 மைல்; சுய° 100மைல், 21. உரோமர் (Romer 1644-1710) 1676-ல் 22. ஹைடிரசன், 23. அது சிறிது போர்மிக் அமிலத்தை (Formic acid) உடலில் செலுத்துவதால். 24. அலுமினியம்,மாக்னீசியம், 25. இரேடியம்.
தனிமங்கள் - ELEMENTS
அத்தரத்தீன் (Astatine)
அத்தினியம் (Actinium)
அந்திமனி (Antimony)
அபினியம் (Hafnium)
அமெரிக்கியம் (Americium)
அயடீன் (Iodine)
அலுமினியம் (Aluminium)
ஆகன் (Argon)
ஆசனிக்கு (Arsenic)
இத்திரியம் (Yttrium)
இத்தேபியம் (Yttrbium)
இந்தியம் (Indium)
இரசம் (Mercury)
இரிடியம்(Iridium)
இரும்பு (Iron)
இரேடன் (Radon)
இரேடியம்(Radium)
இரேனியம் (Rhenium)
இலந்தனம் (Lanthanam)
இலிதியம்(Lithium)
இல்லினியம் (Illinium)
ஈயம் (Lead)
ஈலியம் (Helium)
உருதேனியம் (Ruthenium)
உருபிடியம்(Rubedium)
உரேணியம்(Uranium)
உரேடியம் (Rhodium)
உலுற்றீசியம் (Lutecium)
ஏபியம் (Erbium)
ஒசுமியம் (Osmium)
ஒட்சிசன் (Oxygen)
ஒலிமியம் (Holmium)
ஐதரசன் (Hydrogen)
ஐரேப்பியம் (Europium)
கடோலினியம் (Gadolinium
கட்மியம் (Cadmium)
கந்தகம் (Sulphurmium)
கலிபோணியம்(Californium)
கல்சியம் (Calcium)
கல்லியம் (Gallium)
காந்தியம் (Scandium)
காபன் (Carbon)
கிரித்தன் (Krypton)
குரோமியம் (Chromium)
குளோரின் (chlorine)
கூரியம் (Curium)
கோபாட்டு (Cobalt)
சமேரியம் (Samarium)
சிலிக்கன் (Silicon)
சீசியம் (Caesium)
சீரியம் (Cerium)
செம்பு (Copper)
செலனியம் (Selenium)
செனன் (Xenon)
சேக்கோனியம் (zirconium)
சேமானியம் (Germanium)
சோடியம் (Sodium)
தங்கிதன் (Tungsten)
தல்லியம் (Thallium)
தாந்தலம் (Tantalum)
தாந்தனியம் (Tantanium)
திசுபுரோசியம் (Dysprosium)
துரந்தியம் (Strontium)
தூலியம் (Tullium)
தெகினீசியம் (Technetium)
தெலூரியம் (Tellurium)
தேபியம் (Terbium)
தோரியம்(Thorium)
நாகம் (துத்தநாகம்) (Zinc)
நிக்கல் (Nickle)
நியோபியம் (Niobium)
நெத்தூனியம் (Neptunium)
நெயன் (Neon)
நெயோதிமியம் (Neodymium)
நைதரசன் (Nitrogen)
பலேடியம் (Paladium)
பிசுமத் (Bismuth)
பிரசூதிமியம் (Praseodimium)
பிரான்சியம் (Francium)
பிளாற்றினம் (Platinum)
புரதோவ°தினியம் (Protoaclinium)
புரமேதியம் (Promethium)
புரோமீன் (Bromine)
புளுத்தோனியம் (Plutonium)
புளோரின் (Fluorine)
பெரிலியம் (Beyllium)
பேரியம் (Barium)
பேர்க்கெலியம் (Berkelium)
பொசுபரசு (Phosphorus)
பொலோனியம் (Polonium)
பொட்டாசியம் (Potassium)
பொன் (Gold)
போரன் (Boron)
மக்னீசியம் (Magnesium)
மசுரியம் (Masurium)
மாங்கனீசு (Manganese)
மொலித்தனம் (Molibdenum)
வனேடியம் (Vanadium)
வெள்ளி (Silver)
வெள்ளீயம் (Tin)
பறவை விலங்குகளின் வயது
ஆண்டு ஆண்டு
அன்னம் 100
கோழி 12
ஆந்தை 80
சிம்பன்சி 40
எலி 2 1/2
சுண்டெலி 2 1/2
ஒட்டகம் 40
செம்மறி ஆடு 20
ஒட்டைச் சிவிங்கி 40
தவளை 35
கடலாமை 100
திமிங்கிலம் 500
கடற்சிங்கம் 40
தீக்கோழி 50
கரடி 35
தேனீ இராணி 7
கழுகு 100
நாய் 15
கழுதை 25
நாரை 60
கனரிப்பறவை 20
நீர்யானை 40
காகம் 100
பூனை 13
காண்டாமிருகம் 40
முதலை 40
கிளி 80
முயல் 5
குதிரை 40
யானை 100
குரங்கு 40
வெளவால் 2 1/2